Posts

Showing posts from 2018

ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சித்தர் -திருக்கழுக்குன்றம்

Image
எம்பெருமானே ..!! ஈசனே ..!! சர்வேஸ்வரனே ..!! காலத்தின் நாயகனே ..!! எம் புயங்கப்பெருமானே ..!! சகலமும் நிறைந்தோனே ..!! தூய வெண்பனி போல  உள்ளத்தை கசியவைக்கும் நின் தார்மீக அன்பெனும் அலைகளால் எம்மை உறையவைத்து, கண்களால் பார்க்கும் தூரம் வரைக்கும்,காதுகளால் கேட்கும் தூரம் வரைக்கும் , ஜடமாகவும் ஜீவனாகவும் காட்சியளித்து ,இன்னும் தாண்டி பார்க்க இயலாத ,கேட்க இயலாத எல்லைகளற்ற  எங்கோ....எங்கெங்கோ....அடர்ந்து படர்ந்த வெளியில் ஊமையாக ,சப்தமற்று ,நிறமற்று ,மொழியற்று கேட்பாரட்று கிடக்கும் ஒன்றுமில்லா ஒன்றோனே..!! அன்பெனும் அலைகொண்டே நின்னை, நின்  பெருமையினை நின் கருணையினை , எல்லா உயிர்களையும் யாவற்றையும் வாரியனைக்கும் நின் மாசில்லா பாசத்தன்மையினை, நுட்பத்தை  அதிநுட்பத்தை ,எண்ணி எண்ணி பெருமை கொண்டு ,விம்மி விம்மி, விழிகள் பிதிங்கி ,உள்ளம் நெக்குருகி செய்வதறியாது சரணாகதியில் நிற்கின்றோம் ...தூயோனே வெட்டவேளியோனே !!ஜோதியில் ஜோதியே ..!!! ஆதியே ..!! அருள் ஆசிகள் தருவாய் எம்பெருமானே .... என்றென்றும் நின் திருவடியில் வீழ்ந்து வணங்குகின்றோம்.!! எவ்வளவு தான் கற்றறிந்தாலும் அனுபவத்தில் கிடைக்கும்

எமை ஈர்த்த மகான்

Image
இயற்கை தம்மை தாமே சீர் செய்துகொள்ளும் நிகழ்வு .யாரும் கணிக்க இயலாது நடந்தேருகிறது . இயற்கை எனும்  சதிராட்ட காரனுக்கு நாமெல்லாம் நகர்த்துகின்ற காய்கள்.எடுப்பான் அணைப்பான் தூக்கி எறிவான் .யார் அறிவார் இவன் திருவுள்ளம் .அண்மையில் நிகழ்ந்த கஜா எனும் கடும் புயல் ஏற்படுத்திய பேரழிவு ,மனதை நிலைகுலைய செய்துவிட்டது .அகத்திய உள்ளங்கள் பலர் இதிலே சிலர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர்.களத்திலே நேரடியாக இறங்கி உதவி செய்த மற்றும் உதவி செய்துகொண்டிருக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் அகத்தியம் வலைத்தளம் மூலமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எமது இல்லத்திலிலே வளர்ந்த மிக பழமையான  நூறு வயது தாண்டிய மரம் ,சுத்தமாக வேரோடு பிடுங்கி எறியப்பட்டது .இனிமேல் இப்படி ஒரு மரம் வளர்க்க இயலாது.தூக்கி நிறுத்தி மீண்டும் வளர தேவையான வேர்கள் எல்லாம் சுத்தமாக முறிந்துவிட்டது.இனி வரும் தலைமுறை பார்க்க நூறு ஆண்டுகள் ஆகும்.இந்த மரங்களோடு அதன் கிளைகளிலும்,குதித்தும் ஆடி,நிழலிலும் ,ஓடி ஆடியும், விளையாண்ட சிறுவயது நிகழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்கிறது.ஆனால் மரம் மட்டும் தற்போது இயற்கை எடுத்துக்கொண்டது.இதை விட இன்னும்

மெல்லிய அலைகளை தேடி ...II

Image
ஆதி அநாதி வெட்டவெளி விரிந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம் ,விருப்பு வெறுப்பு ,கோபம் ,பாரபட்சம் என ஏதுமின்றி ,எந்த சலனமும் இன்றி ,நிசப்தமாக ,சோ ....ஹம் ...என ஒரு வித சூட்சும ஒலியில் எங்கும் எங்கெங்கும் வியாபித்து பரந்து விரிந்துகொண்டேசெல்லும்  கேட்பாரட்ற்ற அநாதியின் ஆதி அந்தமில்லா அலைகள்.இந்த அதி சூட்சும அலைகளை  ஒரே ஒரு முறை ,ஒரே ஒரு துளி மனதால் பருக ,மனதால் உள்வாங்க ,ஆழ்ந்த அன்பெனும் தன்மை நிறைந்த அலைகள் அது தாமாகவே ஈர்க்கப்பட்டு ,பேரானந்தம் தந்து ,மித மெல்லிய ஊடுருவிக்கொண்டேயிருக்கும் அலைகள் வழியே எங்கோ இழுத்துச்சென்று ,சொல்ல இயலா நிலைக்கு அழைத்துசென்று ,பேரமைதியில் மிதக்கவைக்கிறது. மெல்லிய அலை பிரபஞ்சமெங்கும் பரவும் அலை ,ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஜீவராசிகளையும் அரவணைத்து கவர்ந்து,உடல்,மனம் ,உயிர் என யாவற்றையும்  ஊடறுவிசென்றுகொண்டேயிருக்கும் புரிய இயலா விந்தை புரியும் அலை.மௌனமாய் ஆழ்ந்து கண்மூடி இந்த மெல்லிய அலைகளோடு நாம் புரியும் பயணம் .....சொல்ல இயலா சுகம் தரும் பேரானந்தம்... மனம் என்பது இறைவன் போல என்றும் பேரானந்தம் கருணை நிறைந்து இருந்தால் அன்பு அலைகள் வழிந்து ஓடுகிறது.அதன் மதிப

இறை தேடும் பயணத்தில் II ....!!!

Image
அன்பெனும் ஈர்ப்பு பசை ஒன்றை ,நீ படைத்த அத்தனை ஆயிரம் ஆயிரம் கோடி உயிருள்ளே அணுவிலும் அணுவாய் நுழைத்து வைத்து ,யாவற்றையும் ஈர்த்து பிடித்து ,காத்து,ஒன்றை மற்றொன்டாய் மாற்றி மாற்றி ,வெட்டவெளியிலிருந்து வந்ததை எல்லாம் மீண்டும் வெட்டவெளி செல்லும் வரை ,அதனுள் நீ நடத்தும் நாடகம் ,பாச  போராட்டம்,அன்பால் அரவணைப்பு ,இன்பம் ,துன்பம்,புகழ், பேரின்பம் ,அமைதி .பேரமைதி என நீண்டுகொண்டே செல்லும்  இந்த மாற்றங்களை நடத்திக்கொண்டிருக்கும் நின் திறம் எண்ணி எண்ணி , வியந்து,வியந்து, எதுவம் நிரந்தமில்லை ,இதுவும் கடந்து போகும் எல்லா பிரச்சினைக்கும் தீர்வும்  அதில் தீர்ப்பாய் வந்து நிற்கும் நின் வியத்தகு ஆற்றலையும் பிரமித்து ,வெட்கி தலைகுனிந்து ,நின் திருவடி வீழ்கிறேன்  பலமுறை...மாபெரும் வற்றா பேராற்றலே ..!! பிரபஞ்ச நாயகனே !! எல்லையில்லா கருணை கடலே ..!! அகன்று விரிந்த சுத்தவெளியோனே !! சூட்சும அலைகள் சூழ்ந்த சுத்த பரப்பிரம்மமே !! சுடர்மிகு ஒளியே ..!! ஜோதியே ..!! ஜோதியில் ஜோதியே..!!! மாணிக்க வாசகனார் கண்டு வியந்த ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ..!! ஆனந்தம் நிறைந்தோனே !!  நின் திருவடி வாழ்க !! என்றென்றும் நின் பாதங்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

Image
என்றோ பூத்தவள் யாம் என்றும் புத்தம் புதிதாய் அன்று பூத்த மலர்போல் நறுமணம் என்றும் குறையாது , எம் பிரபஞ்ச உயிர்களை ,எமது கருணை கண்களால் ஆடாது அசையாது என்றும் புன்னகை தவழும் முகத்துடன் வாரிஅன்பால் அனைத்துக்கொண்டு , எவர் வரினும் அவர் எம் மக்களே,ஜடமும் ஜந்துக்களும்  யாம் ஈன்ற எமது அன்புள்ளங்களே, அவை என்றும் எமது அருளாட்சிபுலத்திலிருந்து இம்மி கூட  பிசகாது , என தம் கருணை கண்களால் ஆசிவழங்கி ,அழகிற்கே அழகு சேர்க்கும் கருணைத்தாயவள் அருள்ஆட்சிசெய்யும்  இடமே இந்த  மதுரையம்பதி. இன்று நாம் கண்டுவியக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் மண்டபவங்கள் எல்லாம் பல் வேறு மன்னர்களால்  தோராயமாக அறுபத்திநான்கு மன்னர்களால் ,பல் வேறு காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டு ,தற்பொழுது மிகப்பிரம்மாண்டமாக உலக ஆன்மீக அன்பர்கள் யாவரையும் ஈர்த்துக்கொண்டேஇருக்கிறது.ஒவ்வொரு அழகிய சிற்பங்களும் ,எழில்மிகு உயர்ந்து அழகிய வேலைப்பாடுடன் நிமிர்ந்து நிற்கும் தூண்களும் இன்று நாம் காணும் தலைமுறைவரை நிமிர்ந்து நிற்கும் தரத்திற்கு உழைத்தோர் ஆயிரம் ஆயிரம் அன்புஉள்ளங்கள் .அவர்களின் கடும் உழைப்பு அதை உருவாக்

அன்பின் ஒரு துளி ..!!!

Image
உலகமெல்லாம் நீக்கமற நிறைந்தோனே !!  பூரணத்துவம் நிறைந்த மாபெரும் இறையே !!! .வற்றா பேரொளியே ! கோடான கோடி உயிர்களின் நெஞ்சத்துள் அன்பின் கசிவாய் வெளிப்படும் ,ஈர்ப்பு ஆற்றல் நிறைந்த பெம்மானே ..!!பெருங்கடல்களும் பிரம்மாண்ட மலைகளும் ,ஆர்பரிக்கும் அருவிகளும் பசுஞ்சோலைகளும்  என பரந்து விரிந்தோனே !! பெரும் அதிநுட்பம் நிறைந்தோனே ,பேரண்ட வெளியில் ஆடும் நின் தாண்டவத்தால் பல ஆயிரம் கோடி கோடி மாற்றங்களை உருவாக்கும் நாட்டியக்கூத்தனே !! போற்றுதலுக்குரியோனே !! நின் பொற்பாதம் பணிந்து வீழ்ந்து வணங்குகிறோம் ,நின் திருவருள் என்றும் எம் நெஞ்சத்துள் நிலைக்கச்செய்வாய் ,பெரியோனே !! சான்றோனே !! தன்னிகரில்லா எம் தலைவனே !! ஈசனே !! எம் நேசனே !! எம் நெஞ்சச்தோடு ஒன்றில் ஒன்றாய் உறைந்தோனே !! நின்திருவடி வாழ்க !! நின் திருவடியே என்றும் என்றென்றும்  எம்போன்றோருக்கு சரணாகதி !! அன்பு எனும் ஒரு சொல் ஏதோ கொஞ்சம் அதன் தாத்பர்யத்தை உணர்த்துகிறது.இது ஒருபுறம் பார்த்தால்அலை ஒரு அற்புதமான அலை ஒவ்வொரு ஜீவனுள்ளும்  சரியாக சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு அனுவுள்ளும் ஒவ்வொரு ஜடத்திலும் அதன் மூலகாரணமான ஒன்றாய் பின்னிப்பிணைந்துள்ளத

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

Image
சட்டைநாத சித்தர் ஒரே நேரத்தில் நிறைய இடங்களில் ஜீவசமாதியில் சென்றிருக்கிறார்கள்.திருவேடகத்தில் ஜோதி ரூபமாய் சமாதியில் இருக்கிறார்கள்.எப்பொழுதும் நெய்விளக்கும் எண்ணை விளக்கும் எரிந்துகொண்டிருக்கிறது.இறை அலைகள் நிரம்பி வழிகிறது.அய்யா அவர்கள் வரலாறு   சித்தர் பரம்பரை வழியாக நீண்டு தொடர்கிறது.அய்யா சிங்களத்திலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்து விவசாயம் தொழில் செய்தார்கள் எனவும்.விவசாயம் நலிய ,கோவிலில் யாசகம் பெற்று தமது தாய் தந்தைக்கு உணவு அளித்துவந்திருக்கிறார்கள்.ஒரு நாள் கோவிலில் யாசகம் எடுக்கும் போது சங்குபூண்ட முனிவர் வடநாட்டிலிருந்து இங்கே வர,அய்யாவும் அவரிடம் சென்று தமது நிலைமையை கூற ,அவரும் எல்லாம் விதியின் வழிதான் செல்லும்,தாய் தந்தையை காப்பாற்றுவது மிக புண்ணியமான செயலாகவும் ,விரைவில் வழிபிறக்கும் அதுவரை சிவன்பால் சிந்தையைவைத்து கடமையை செய் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் அந்த முனிவர்.பிறகு சிவன்மீது சிந்தைவைத்து செயல் புரிய விவசாயம் நன்கு செழித்துவளர்ந்து ,அதை வைத்து தம்மால் இயன்றவரை ஏழை எளிய மக்களுக்கெல்லாம்  உணவு அளித்து தினம் கோவில் சென்று சிவனை வழிபட்டார்கள்.பிறகு திரும

மகான் ஸ்ரீ சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவ சமாதி - கிண்டி சென்னை

Image
இறை எனும் அகண்டாகார பேரொளி தம் அகத்தே கொண்டிருக்கும் கற்பனைகெட்டா ஆற்றலை , அதன் அற்புதத்தை   தாம் படைத்த எண்ணிலடங்கா உலகத்திற்கும் அதில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் தந்துகொண்டேயிருக்கிறது.அன்பும் கருணையும் எங்கெங்கும் நிரப்பி அனைத்தையும் ஆனந்தம் கொள்ளச்செய்கிறது.என்றும் என்றென்றும் மாற்றதை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. எதுவும் நிலையானது இல்லையப்பா இங்கே, மாற்றம் மற்றுமே நிலையானது என்பதை சொல்லாமல் சொல்லி ஒன்றை  மற்றொண்டாய் மாற்றிக்கொண்டேயிருக்கிறது .அன்பு எனும் ஒரே சூட்சுமம் கொண்டு அணு முதல் பேரண்டம் வரையிலும்  அதில் வாழும் கோடான கோடி ஜீவராசிகளையும் நொடி பொழுதில் தொடர்பு கொள்ளும் அதி சூட்சும வித்தையையும் உருவாக்கி ,அன்பாய் ,பேரன்பாய்,அறிவாய்,தெளிவாய் முழுமையாய் யாவற்றையும் ஷன பொழுதுகூட விட்டு பிரியாமல் தமது படைப்பின் திறம் மிளிரும் வண்ணம் , தந்தையாய் ,தாயாய்,சிவமாய் ,சக்தியாய்,விஷ்ணுவாய்,அல்லா,இயேசு என நீளும் பெயர்கொண்டு யாவற்றையும் கட்டியனைத்து கண்ணை இமை காப்பது போல காத்துக்கொண்டும்,அன்பும் கருணையும் வழங்கிக்கொண்டும் இருக்கிறது. இந்த மாபெரும் பிரமாண்ட இறைபயணத்தில் ,தமது அன்பை