ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை



என்றோ பூத்தவள் யாம் என்றும் புத்தம் புதிதாய் அன்று பூத்த மலர்போல் நறுமணம் என்றும் குறையாது , எம் பிரபஞ்ச உயிர்களை ,எமது கருணை கண்களால் ஆடாது அசையாது என்றும் புன்னகை தவழும் முகத்துடன் வாரிஅன்பால் அனைத்துக்கொண்டு , எவர் வரினும் அவர் எம் மக்களே,ஜடமும் ஜந்துக்களும்  யாம் ஈன்ற எமது அன்புள்ளங்களே, அவை என்றும் எமது அருளாட்சிபுலத்திலிருந்து இம்மி கூட  பிசகாது , என தம் கருணை கண்களால் ஆசிவழங்கி ,அழகிற்கே அழகு சேர்க்கும் கருணைத்தாயவள் அருள்ஆட்சிசெய்யும்  இடமே இந்த  மதுரையம்பதி.

இன்று நாம் கண்டுவியக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் மண்டபவங்கள் எல்லாம் பல் வேறு மன்னர்களால்  தோராயமாக அறுபத்திநான்கு மன்னர்களால் ,பல் வேறு காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டு ,தற்பொழுது மிகப்பிரம்மாண்டமாக உலக ஆன்மீக அன்பர்கள் யாவரையும் ஈர்த்துக்கொண்டேஇருக்கிறது.ஒவ்வொரு அழகிய சிற்பங்களும் ,எழில்மிகு உயர்ந்து அழகிய வேலைப்பாடுடன் நிமிர்ந்து நிற்கும் தூண்களும் இன்று நாம் காணும் தலைமுறைவரை நிமிர்ந்து நிற்கும் தரத்திற்கு உழைத்தோர் ஆயிரம் ஆயிரம் அன்புஉள்ளங்கள் .அவர்களின் கடும் உழைப்பு அதை உருவாக்க திட்டமிட்ட மன்னன் முதல் மக்கள் வரை யாவரும் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்கள். திறத்தால் எழில் செதுக்கி அதை ஏழேழு தலைமுறைகளுக்கும்  நிலைக்கச்செய்த அத்தனை கருணை உள்ளம் நிறைந்த நம் முன் தலைமுறை உள்ளங்களின் பெருமை போற்றி மகிழ்வோம்.படைத்த இறைக்கு நன்றி சொல்வோம் அன்பால் வாழ்த்தி ,அவர்கள் ஆன்மா முக்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கில்  அன்பர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.மிக பழமையும் தொன்மையும் அம்பாளின் தெய்வீக அருள் அலையும் நிறைந்தது மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில்.இன்னும் ஆண்டாண்டு காலம் அதன் எழிலும் தொன்மையும் மாறமால் நமக்கு பின் வரும் தலைமுறைக்களுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்து அவர்கள் வந்து வணங்கும் வண்ணம்,அதன் தாத்பர்யத்தை உணர்த்தப்போகிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

மதுரை தெற்கு வெளி வீதியில் இருக்கிறது ஸ்ரீ குட்டையா அய்யா ஜீவசமாதி.மீனாட்சி அம்பாளே ஐயாவை குட்டையா என்று செல்லமாக அழைத்ததால் ,அய்யாவிற்கு குட்டையா எனும் பெயர் ஏற்பட்டது எனும் செவிவழி தகவல்கள் கிடைக்கிறது.ஏனெனில் அய்யாவின் இயற்பெயர் ஆதப்பன்.மதுரை ,தெற்கு வெளி வீதியில் (தெற்கு வாசலில் இருந்து  கிட்டத்தட்ட ஒரு ஐம்பது அடி தூரத்தில் இடது புறத்தில் பெரியார் செல்லும் வழியில்) சாலையில் இடது புறம் ஒரு சிறிய அய்யாவின் பெயர் பொறித்த பலகை நம்மை அழைக்கிறது.உள்ளே செல்ல சிறிய சந்துபோன்று நீண்டு செல்கிறது.வெளியில் கடைகள் ஆக்கிரமிப்பும் வாகனங்களின் சத்தமும் இருந்தாலும் ,உள்ளே முற்றிலும் வேறுபட்டு அமைதியாக இருக்கிறது.செட்டிநாட்டு அமைப்பில் வீடும்,அதன் வாரமும் ,திண்ணையும் நம்மை செட்டிநாட்டுகே அழைத்துச்செல்கிறது.உள்ளே அய்யாவின் ஜீவசமாதியும் மற்றும் அய்யாவின் சீடர்களின் சமாதியும் இருக்கிறது.


ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் ,காரைக்குடி அருகில் இருக்கும் கோவிலூர் மடாலயத்தில் ஸ்ரீ முத்துராமலிங்க சுவாமிகளின் சீடர் ஆவார்கள்.அய்யாவின் காலம் கி.பி 1842 -1872.அய்யாவின் இயற்பெயர் ஆதப்பன்.நகரத்தார் குலத்தில் பிறந்தவர்.இளமையிலேயே இறை வழியில் அதிக வேட்கைகொண்டு தமது குருவிடம் பிரம்மோபதேசம் பெற்று தம் குருபணியும் இறைபணியும் தொடர்ந்தவர். கோவிலூர்  ஸ்ரீ முத்துராமலிங்க சுவாமிகளை தரிசிக்க வந்த வேம்பத்தூர்ப் புலவர்கள், 'சிவரகசியம்' என்ற நூலில் கூறியவாறு 25 மூர்த்தம் (விக்ரகங்கள் ) வைப்பது சிறந்த சிவப்பணி என்று கூறினர்.  அதைக் கேட்டருளிய ஸ்ரீ முத்துராமலிங்க சுவாமிகள், அச்சிவப் பணியை மதுரையம்பதியில் செய்ய வேண்டும் என்று திருவுள்ளத்து அனைத்துப் புலவர்களிடம், "இது என்ன பிரமாதம்? நமது குட்டையனை அனுப்பினாலும் செய்துவிடுவான்." என்று கூறித் தம் சீடர் ஶ்ரீ குட்டைய சுவாமியை அழைத்து அதனைப் பணித்திருக்கிறார்கள்.

தமது குருவின் கட்டளைபடி  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருபத்தைந்து மூர்த்திகள் வைக்கும் பணியை சிரமேற்கொண்டு ,மதுரை தெற்குவெளிவீதியில் ஸ்ரீ குட்டைய சுவாமிகள் மடாலயம் நிறுவி ,அனைத்து வேலைகளையும் செய்துவந்திருக்கிறார்கள் சுவாமிகள்.சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் கொடிமரத்தில் அருகில் இருக்கும் நந்தி மண்டபம் அதில் உள்ள அற்புதமான வேலைபாடு எல்லாம் பெரும் பொருட்செலவில் அய்யா அப்பொழுதே உருவாக்கிஇருக்கிறார்கள்.நந்தி மண்டபத்தில் விசித்திரக்கல் விஷேடசித்திரவேலை,அம்மை, அப்பர் மூலஸ்தான விமானங்கட்குப் பொன் தகடு வேய்தல், கொடி மரத்திற்குப் பொற்கவசம் அமைத்தல், சுவாமி கோயில் இரண்டாம் பிராகாரத்தில் கல் தள வரிசை அமைத்தல், ஆடி வீதி முன்புறம் கல் தள வரிசை அமைத்தல் முதலிய திருப்பணிகளைச் செய்துவந்திருக்கிறார்கள் அய்யா.  சுவாமி சந்நிதியில் கொடிமரத்தைச் சூழச் சிற்பக் கலை எழிலுடன் அமைந்துள்ள மண்டபமே நந்தி மண்டபம். இம்மண்டபத்தை உருவாக்கியவர் ஶ்ரீ குட்டைய சுவாமிகளே ஆவர். இப்பொழுது இம்மண்டபத்தைக் கம்பத்தடி மண்டபம் என்று அழைக்கிறார்கள்.

ந்த மண்டபத்தில் இருக்கும் 25 விக்ரகங்கள் 

1. கயிலாசரூடர் ,2. சந்திரசேகரர்.3. இடபாந்திகர் 4. இலிங்கோத்பவர்
5. காமதகனர்  6. நடராசர் 7. சுகாசனர்  8. காலசம்மாரர் 9. மார்க்கண்டேயர்
10.சோமசுந்தரர்  11.கலியாண சுந்தரர் 12.திரிபுராந்தர் 13.சங்கர நாராயணர்
14.அர்த்த நாரீசுவரர் 15.இடபாரூடர் 16.ஏகபாத மூர்த்தி 17.சக்ரதாரர் 18.சலந்தரானுகிரஹர் 19.தக்ஷிணாமூர்த்தி
20.கஜசம்ஹாரர் 21.சண்டேசானுகிரஹர் 22.சோமசுந்தரர் 23.கிராதார்சுனர்
24.உருத்திரர் 25.பிக்ஷாடனர்



ஶ்ரீ குட்டைய சுவாமிகள் வேதாந்த நூல்களில் விற்பன்னர்   அவர் மதுரைத் திருமடத்தில் வீற்றிருந்தபோது பிரம்மவித்தாய், பல அன்பர்களுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்துக் கொண்டு அருளாட்சி செய்துவந்திருக்கிறார்கள். அய்யாவின் காலம் காலயுக்தி வருடம், கி.பி.1847 முதல் ஆங்கிரச வருடம், கி.பி. 1872 வரை ஆகும். அய்யா ஆங்கிரச ஆவணி 5 ஆம் நாள் திங்கட்கிழமை, கிருஷ்ண பக்ஷம், பிரதமை திதி, சதய நக்ஷத்திரத்தில் விதேக கைவல்லியமாகிய பிரம்மப் பிராப்தி அடைந்தார்கள்.


ஶ்ரீ மீனாக்ஷி அம்பாளுக்கு நாள் தோறும் நிகழும் அர்த்தசாமக் கட்டளையில் மூக்குத்தி மாலை ஶ்ரீ குட்டைய சுவாமிகள் மடாலயத்திலிருந்து அனுப்பி அணிவிக்கப்படுகிறது என்கிறார்கள்அய்யாவின் வரலாறு பகிர்ந்த இணைய அன்பர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அய்யாவின் சமாதி அருகே அமர்ந்து கண்கள் மூட ,இடமே காந்த ஆற்றல் அலைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.எல்லாம் அய்யாவின் ஆசியே.எவர் வரினும் அவர் தம் வேண்டுதலுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் அல்லது ஏதோ ஒரு நிகழ்வில் அவர் உணரும் வண்ணம் தெரிவித்துவிடுகிறார்கள்.பொருமையும் அன்பும் மிக அவசியமாகிறது.
சுவாமிகள் ஒரு நட்சத்திரமாக வானில் மிளிர்கிறார்கள்.வெண்ணிற வேஷ்டி மேல்சட்டை எதுவும் அணியவில்லை.கருமையான தாடி மற்றும் முடியுடன் காட்சியளிக்கிறார்கள்.அன்பே வடிவானவர் .அன்பின் ஆற்றல் அதிகம் நிறைந்தவர்.எமக்கு ஒரு ஸ்லோகம் சொல்கிறார்கள்.


அய்யா இருக்கும் இடம் அதிர்வலைகல் நிறம்பி வழிகிறது.எம்முடைய அனுபவத்தில் இங்கு உச்சரிக்கும் ஒவ்வொரு அட்சரமும் மிக அற்புதமாக மிளிர்கிறது.ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணம் இங்கு சொல்வது மிக சிறந்தது.ஒருமுறை யாம் சொல்ல வார்த்தைகள் ஸ்படிகம் போல உருண்டு ஓடுகிறது.ஒவ்வொரு அம்பாளின் நாம அட்சரங்கள் இங்கே இருக்கும் வெளியில் அய்யாவின் முன்னர் இருக்கும் காற்று வெளியில் சுழல்கிறது.உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் இங்கே பலமடங்கு ஆற்றல் பெருக்கம் அடைகிறது என்பதையே யாம் ஒவ்வொரு முறையும் உணர்கிறோம்.பராயணம் முடித்து கண்கள் மூட ,இது வரை சொல்லிய ஸ்லோகங்கள்  மேலும் அது அய்யாவின் முன்னர் இருக்கும் அவர் ஜீவ அலைகள் கலந்த வெளியில் ,மிதக்கிறது.அய்யாவின் அற்புத ஆற்றல் பீடம் இங்கே அருள் அலை வீசிக்கொண்டிருகிறது




அகத்திய உள்ளங்கள் மதுரை வரும் பொழுது ,அய்யாவையும் தரிசித்து பிறகு அய்யா கட்டிய சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு அருகில் இருக்கும் நந்தி மண்டபம் சென்று  ,ஒவ்வொரு சிற்பத்தின் எழில் வியந்து அதன் தன்மையையும் ,அதற்கு மூல காரணமான அய்யாவையும் அவர் உழைப்பையும் மற்றும் அணைத்து நம் முன்னோர்களின் அயரா எழில்மிகு உழைப்பினையும் உணருங்கள்.!!  என அய்யாவின் அருள் ஆசிகளோடு அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம் 
வாழ்க வளமுடன் 

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!



Comments

  1. வாழ்க வையகம், வாழ்க வளமுடன், குரு வாழ்க, குருவே துணை,ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!

    அய்யா மெய்யன்பு கொண்ட அன்பரே,
    நீவிர் மெய் ஞானம் தேடும் அன்பர்களுக்கு ஒரு தூண்டுகோலாய் வழிகாட்டியாய் தங்கள் படைப்புக்களை இணைய தளத்தில் தொகுத்து வழங்குவதற்கு நன்றி.

    என்னைப்போன்று துவக்க நிலையில் இறை நிலையை தன்னுள் உணர வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருப்புவர்களுக்கு இந்த தளம் மிகப்பெரிய உதவியாய் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    தங்கள் சேவை மென் மேலும் தொடர , உள்ளன்போடு தேடும் ஒவ்வொவொரு உள்ளங்கங்களுக்கும் தொடர்ந்து இறைவனினின் கடைக்கண் பார்வை கிடைக்க ,உணரப்பெற்று இவ் வயகத்தில் மெய்யன்பர்களாக, கருணை கொண்டவர்களாக , தங்களை உணர்ந்தவர்களாக வலம் வருகிற , வரபோகிறவர்களுக்கு ஒரு வழி கட்டியாக இந்தத் தளம் அமையுமாக.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்