Posts

Showing posts from February, 2013

ஸ்ரீ மஹா பைரவர்

Image
ஸ்ரீ மஹா பைரவர்  மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் .ஒரு மிக உக்கிரமான அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு சக்திமிக்க அலை வடிவம் .சிறிது பயபக்தியுடனே இக்கட்டுரை எழுதுகிறேன்.சிவபெருமானின் பூத கணங்களில் மிக முக்கியமானவர் .ஸ்ரீ மஹா பைரவரை வணங்கினால் 100% பலன் கைகூடும் என்பார்கள் .தேய் பிறையில் வரும் அஷ்டமியில் ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவது மிகுந்த விஷேசம். மணி ,மந்திரம், ஓளஷதம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவரின் அருள் இன்றி அறிந்து கொள்ள முடியாது என்பார்கள் .சித்தர்கள் பாதையில் இந்த மணி ,மந்திரம், ஔஸதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது .ஒரு சிறிய மந்திரமாகட்டும் அல்லது  ஔஸதமாகட்டும் அது சித்தி பெற வேண்டும் என்றால் ஸ்ரீ மஹா பைரவர் அருளாசி இன்றி  முழுமைபெறாது .அனுகிரகம் வேண்டும் அது இருந்தால் தான் மணி ,மந்திரம் தெரிந்துகொள்ள முடியும் என்பார்களே ,அந்த அனுகிரகத்தை அருள்பவர் ஸ்ரீ மஹா பைரவர் .காலம் காலமாக நமக்கு முன் எத்தனையோ தலைமுறைகள், பைரவ சக்தியின் அளப்பரிய ஆற்றல் கண்டு வியந்து  வணங்கிய ஒரு காலம் ,அங்கே ஒரு  மிக மிக  பழமையான பாடல் ஒன்று   உரக கங்கணம் தருவன பணமணி உலகடங்கலும் துயிலெ