Sunday, December 29, 2013

தென்பொதிகை கைலாயம்

அன்புள்ள   அகத்திய  நெஞ்சங்களை  ஒரு சிறிய  இடைவெளிக்கு  பின்  மீண்டும் சந்திப்பதில்  மகிழ்ச்சியடைகிறேன் .கால சக்கரம்  சுழல சுழல மாற்றம்  ஒன்றன் பின்  ஒன்றாக அரங்கேறுகிறது .எத்தனை தலைமுறை  கர்ம வினைப்பதிவுகள்  அச்சு பிறழாமல் மிக  அழகாக செயல்படும்  விந்தை .செய்த புண்ணியம்  பாவம்  அனைத்தும் சூட்சும  செல்களில்  பதிந்து அதனதன் விளைவுகளை நடத்திக்காட்டும்  அற்புதம் .எப்படி  வாழ்க்கை  இப்படி  உள்ளது ,ஏன்  இந்த உடல்,மனம்  அழுத்தம்  தரும் பதிவுகள் ? யார் இதனை தீர்மானிப்பது?கடந்த கால பதிவுகளுக்கு  யான்  என்ன  செய்ய முடியும் ? எம்  எண்ணம் அறிவு  இவை  மீறியும் வந்து  ஆட்டிப் படைப்பது  ஏன்  ?

அத்தனையையும் அனுபவிக்க  வேண்டியது  தான் .இறைவனின்  ஆணை !இம்மி  பிறழாமல்  நீதி வழங்கும்  ஈசனின்  உத்தரவு !இனி  வரும்  காலங்களில் அமைதி உருவாக்குவோம் ! மனம்  விரும்பி இறை அலைகளை ஏற்றுக்கொள்வோம் .இருக்கும் பதிவுகள் தாக்கம்  குறைய எம்  தந்தையின்  திருவடி பணிவோம் !இளைப்பாற  நிழல்  தரும்  எம் தந்தையின் கருணை  அலைகள்  ,எப்பதிவையும்  அதன்  மூல  வேரையும் உள்நோக்கி ஆராய்ந்து  அதன்  தாக்கத்தை  குறைக்கும் சக்தி மிக்க  அலைகள் .வாழும் வாழ்கையை பயனுள்ளதாக மாற்றும் அற்புத அலைகள் !

பொருள்  தேடும்  உலகத்தில் ,இன்று  அளிக்கப்பட்ட நிகழ்வுகளை திறம்பட எதிர்கொள்வோம் !,செயல்களை  திறம்பட  செய்வோம் !.விளைவு இறைவனின் கையில் !முடிந்த  வரை  தேவைகளை  குறைத்துகொண்டு ,இருக்கும் பொருளில் நிறைவு காண்போம் !மகிழ்ச்சி அடைவோம் !

அருள் தேடும்  உலகத்திற்கு வாருங்கள்  எம்முடன் .எம்  தந்தை வாழும் ஒரு எழில் மிகு அற்புத  மலை!அமைதியின் உறைவிடம் .கட்டி தழுவும்  மேகம் ! ஜில்லென்ற தட்பவெட்பம் !இறைநிலையிலேயே  எப்பொழுதும்  உறைந்து கிடக்கும்  தாவரங்கள் ,மரங்கள், பசுமை  போர்த்திய புற்கள் ,பல வேறு  அதிசய  மூலிகை நிறைந்து  கிடக்கும் தென்பொதிகை  கைலாயம்  என்றழைக்கபடும்  தந்தை ஸ்ரீ அகத்தியர் வாழும் அற்புத மலை !


இங்கே  பல  செவி  வழி செய்திகள் கிடைக்கின்றன. தந்தை  ஸ்தூல  உடலில் வாழ்ந்த  காலகட்டத்தில்  இங்கே இந்த  மலையினை  தேர்வு செய்து  வெகு  நாட்கள்   இங்கே தவம்  செய்வதாகவும்,இங்குள்ள  ஒரு  அதிசயமான கருநெல்லி  மரம் இருகின்றதெனவும் ,இது  பூப்பது ,காய்ப்பது எல்லாம் வெகு  அரிது  என்கிறார்கள் .ஒளவையார் அதியமானுக்கு கொடுத்த   நெல்லிக்கனி இந்த  கரு நெல்லி மரத்திலிருந்து தான்  எடுக்கப்பட்டதும்  என்கிறார்கள் !

எது  எப்படி  இருப்பினும் ஒரு வேண்டுகோள்  இந்த கரு நெல்லி மரத்திலிருந்து  இலையை பிடுங்குவது ,இதன்  பட்டையை எடுப்பது, இதன்  குச்சியை ஒடிப்பது   போன்ற செயல்களில் தயவு செய்து யாரும்  முயற்சிக்க வேண்டாம் !இது போன்ற ஒரு மரம்  வளர எத்தனை ஆண்டு காலம்  ஆகும் ! அதுவும்  இத்தனை புனிதமான  இடத்தில்  உருவாக்குவது என்பது  மிக மிக கடினம் !இதன் அருகே  சென்று அதன் சூட்சும அலைகளை உணர்வதில் கவனம் செலுத்துங்கள் !உங்கள் உயிரோடு இந்த  மரம் ஒட்டி  உறவாடும் !
தந்தையின் அருளாசி  பெற்ற  அன்பர்கள்  வருடம்  தோறும் இங்கே குரு  பூஜை செய்து  வழிபடுகின்றனர் .! நண்பரின் அழைப்பை ஏற்று யாமும்  ஆயத்தமானோம் !திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது  சிறுமலை ,இது  தின்டுக்கல்லிருந்து 25 km  தூரத்தில் உள்ள ஒரு மிக  சிறிய  மலைக்கிராமம் .18 கொண்டை  ஊசி வளைவுகள்  (Hair Pin Bend ) கடந்த பின் , அங்கே ஒரு  மலை  எழில் கொஞ்சி  தவழ்கிறது .தந்தை  அகஸ்தியர்  வாழும்  ஒரு அற்புத  மலை .கடல் மட்டத்திலிருந்து 1600m  உயரத்தில்  இந்த  சிறுமலை ,அங்கிருந்து  கிட்டத்தட்ட  ஒரு  400m  உயரத்தில்  தந்தையின்  கருணை அலைகள்   குடிகொண்டிருக்கும்  ஒரு அற்புத  மலை .இதை ஒரு  மலை  என்று சொல்வதை விட  லிங்கம்  வடிவில் உள்ள சிவமலை  என்றே  சொல்லலாம். இம்  மலையை தென் பொதிகை  கைலாயம்  என்கிறார்கள்  .கைலாய  மலையை  யாரெல்லாம்  காண இயலவில்லையோ  அவர்கள்  இங்கே  வந்து  இந்த  கைலாயத்தின்  முழு  பலனை  பெறலாம் .தந்தை.  இங்கே  சூட்சும  வடிவில் இருக்கிறார் .

மலை அடிவாரத்தில்  ஒரு மிக சிறிய  கோவில் .அங்கே தந்தையும்  ஸ்ரீ போகரும்  சிலை  வடிவில்  பிரதிஸ்டை  செய்யப்பட்டு தரிசனம் அருள்கிறார்கள்  .பல்வேறு  மூலிகை  மரங்கள்  சூழ்ந்துள்ளது .இதன் அருகே  உள்ள  ஒரு  மரத்தின்  இலையை  பிடுங்கி கைகளால்  உருட்டி  அகல்விளக்கில்  திரியாய்  வைத்து  தீபம்  ஏற்றுகின்றனர் .வேத  மந்திரங்கள்  நிரம்ப  இடமே  அருள்  அலைகளால் ஜொலித்தது .எண்கோண  வடிவில்  அக்னி குண்டம் ,மஞ்சள்  ,சந்தனம் , தாமரைப்பூ  சூழ,  ஆயிரத்திற்கும்  மேற்பட்ட  கலசங்களில்  புனிதநீர் வைத்து  ,மா ,பலா ,வாழை  போன்ற  பல்வேறு  கனிகள்  வைத்து  ,சங்காபிஷேகம் ,பால் ,பன்னீர் ,தேன் ,போன்ற பல்வேறு  அபிஷேகம் சித்தர்  முறைப்படி வெகு  விமர்சையாக  நடைபெற்றது .


தாமரை  பூவே   ஒரு அழகான   பூ .இதன்  நிறம்  ,இதழ்  விரிக்கும் போது  இதன்  ஒட்டு மொத்த அழகு ,மெல்லிய   மனம் ,இவை எல்லாம் ஒரு நல்ல அதிர்வு  அலைகளை  உருவாக்க காரணமாகிறது .ஒரு  அழகான  ரோஸ் நிறத்தில் உள்ள  மென்மை மிக்க இளம்  தேவதைகள் ...! இவை  எல்லாம்  இருக்கும்  இடத்தை  மேலும்  புனிதப்படுத்துகிறது. இறை அலைகளை இழுக்கக்கூடிய அதிர்வு  அலைகளை   இவை இருக்கும் இடமெங்கும்   உருவாக்குகிறது.

இது  போன்று  அமைதி  மிகுந்த மலை  உச்சியில்  இப்படி  ஒரு விழா  அமைத்த  committee அன்பர்களுக்கும், அபிஷேகம் முதல் அன்ன தானம்    வரை விழாவில்  எவ்விதத்திலேனும் உதவி செய்த அன்பர்களுக்கும் ,  எம்   நெஞ்சம்  நிறைந்த நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன் .மிக  புனிதமான  விழா.(Only few people  can do  like  this ..very great  people..!! Blessed always by  Father  ). யாக சாலை  மங்களம்  நிறைந்து ஜொலித்தது .விழாவில்  கலந்து கொண்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.சூட்சும  வடிவில்  தந்தையின்  தரிசனம் காண்பவர்கள்  இன்னும்  கொடுத்துவைத்தவர்கள்.

 
.

 பிறகு  அங்கிருந்து இன்னும் மேல்  நோக்கி மலை  உச்சியில் உள்ள  சிவனை  தரிசிக்க நடந்தோம்.மிக  அழகான  மலை  உச்சி .பசுமை போர்த்தியுள்ளது .ஆங்கொன்றும்  இங்கொன்றுமாக  ஓரிரு  மரங்கள் .எப்பொழுதும்  ஒரு  chillness .வெண்பனி  போன்ற  மேகங்கள்  உடலை ஆங்காங்கே  தழுவி செல்கிறது .My Life is meaningful only when I am coming to the  place like this.இங்கே வந்து  பார்த்தால் தான்  தெரியும்  இதன்  மகிமை .மனம்  இங்கே  மென்மையாக  மாறிவிடுகிறது .காரசார  எண்ணமெல்லாம்  திண்டுக்கல்லிலே  உறைந்து விடும் .இங்கமர்ந்து  மந்திரம்  சொல்லவேண்டிய  அவசியம்  இல்லை .வெறுமனே  மன நிலையினை  பார்க்க  ,பிதற்றல்  இல்லாது ,பிதறல் இல்லாது தெள்ளத் தெளிவான   மனமாக திகழ்கிறது .நன்கு  செறிவு ஊட்டப்பட்ட அருள்  அலைகள் மலை எங்கும்  சூழ்ந்துள்ளது .சிறிது  நேரம்  இமை  மூடி  பார்க்க  எங்கோ  இழுத்துச்செல்கிறது .ஒரு  ஜில்லென்ற  குளிர்  அடிக்கடி  உரசி சென்றாலும் ,இது  ஒரு ஆரோக்கியமான  குளிராகவே  தென்படுகிறது.சிறிது  சட்டையை   தொட்டு பார்க்க  குளு குளு  A C ல்  உள்ளது  போல  அவ்வளவு  இயற்கை  தரும்  உன்னத  குளிர்ச்சி .
ஒரு  அருள்  அலைகளால்  சூழப்பட்ட மலை .This place is fully charged by Holy waves and always there is energy particle which is keep floating in this hills ..!! .வீட்டை பற்றியோ ,வேலையைப்பற்றியோ ,குடும்பத்தை பற்றியோ அல்லது  ஏதேனும் மனகுப்பையைப்பற்றியோ சிந்திக்காத  எந்த பிரச்சினையும்  இல்லாத  இழவம்  பஞ்சு  போன்ற எடையற்ற  தன்மை கொண்ட  மனம் . இது  என்னவென்று தெரியாமல் தூங்காமல் தூங்கி  சுகத்தில்  லயிக்கும்   மனம் ..!தந்தையின் அன்பு  அலைகள் எம்மை  சுகமாய், இதமாய், பதமாய்    மனதிற்கு வேண்டிய அருள் அலைகளை  ஊட்டுகிறது ....!  எப்படி  ஒரு  பாசமிகு  தந்தை  தம் பிள்ளைகளுக்கு கருணை  உள்ளத்தோடு கொடுப்பாரோ  அப்படி  எவர்  வரினும்  அனைவருக்கும் அள்ளி அள்ளி வாரி வழங்கும்  தன்மை .!! எப்படி  சொல்வது..? அள்ள அள்ள குறையாத அன்பும் ஆனந்தமும்  நிறைந்த  அலைகள் ! அனுபவிக்க  தான்  அன்பர்கள்  இல்லை  இங்கே ..!
மலையின்  உச்சியின் மையத்தில்   ஒரு  சிவலிங்கம்  அருகே  ஒரு  கருநெல்லி  மரம் .மிக பழமையான  தோற்றம் !  தோள் தட்டி பாராட்டினேன் ! இத்தனை  ஆண்டுகாலம் நிலைத்திருந்து  சேவை  ஆற்றிய  உம்  அன்பு  நெஞ்சம் எம்மை வியக்க  வைக்கிறது  மரமே..!இன்னும் பல ஆண்டு காலம் வாழ்க நீ ! உம் அன்பெனும்  சேவை தொடரட்டும் எம் பாச  மரமே...!இன்னும் சற்று கொஞ்ச தூரம் தள்ளி  ஒரு  சிறிய  நடுத்தரமான   கரு நெல்லி  மரம் .கரு  நெல்லி வீரியம்  மிக்கது .சிறிய  சிறிய  காய்களாய்   காய்த்துள்ளது ஒரு  நெல்லிக்காய்  எடுத்து  வாயில்  வைத்தேன் .சிறிய காயாக  இருந்தாலும்  சாறு  அதிகம்  .கருமையும்  பசுமையும்  கலந்த  கலவை அதன் நிறம் .மிக கொஞ்சமான  புளிப்புடன்   வேறு ஒரு  சுவையும்  கலந்துள்ளது .என்னவென்று  சொல்லத்தெரியவில்லை ..!ஏறிவந்து  வந்த  களைப்பு   சட்டென்று  விலகியது. புத்துணர்ச்சி  நொடிகளில் ........
ஆகா...... I   love  it ...!!!Thankyou  My Father ..!!
பிறகு  அங்கிருந்து  கொஞ்சம்  தள்ளி  இயற்கை  எழில்  ரசிக்க அருகிலே  அமர்ந்தோம்  .மெல்ல மெல்ல  மனம் அமைதியாகிறது .ஒரு  நல்ல  வாலிபமான  நாய் .கொஞ்சம்  கூட  சோடை  இல்லாத ,அதன்  தாடையோ  ஒரு புலியின்  தாடைபோல  உள்ள  ஒரு கபிலை  நிற  நாய், எம்  அருகே  வந்தமர்ந்தது ...நன்றாக  தடவிகொடுத்து யாம்   தினந்தோறும் சொல்லும்  பைரவமந்திரம்  கொஞ்சம்  உச்சரித்தோம் ....பிறகு  I  am  here as well என்று  சொல்வது  போல  சொல்லாமல்  சொல்லி  மறைந்துவிட்டது .

இந்த  மலை  முற்றிலும்  எமது  தந்தையின்  கட்டுப்பாட்டில் ..மலை  உச்சியிலே  இரவிலே  ஒளி  தரும்ஜோதிபுள்ளும் , lemon  grass ம் , தர்பை  புல்லும்  நிறைந்துள்ளது.எந்தவிதமான  முள் செடியோ  அல்லது  ஒரு  மிகப்பெரும்  புதரோ  இல்லை . எந்த பயமும்  தேவை இல்லை .மெத்தை   போல  நன்கு  வளர்ந்த  புற்கள் .யாரும் எங்கு  வேண்டுமானாலும்  அமரலாம்.அமர்ந்து ,ஆழ்ந்து ,இங்கே கொட்டிகிடக்கும் பேரமைதியை  ரசிக்கலாம்.ஆழ்ந்த  பேரமைதி  குடிகொண்டுள்ளது . இந்த  அமைதியின்  ஒரு  நுனி  பிடித்து செல்ல  இனம்  புரியாத  அலைகள்  எம்மை  கட்டிக்கொள்கிறது .
ஒரு  சுகமான  நிறைவான  கருணை  அலைகள் !....தூய்மையான பளிச்சிடும் வெண்மையான  திருநீர் அணிந்த நெற்றி ..வெள்ளிமுடிபோன்று ,கைலாயவெண்மை   நிறமுடைய  நீண்ட  நெடிய  ஜடா  முடி ,கருணை கண்கள் ...!! வெண்ணிற  ஆடை ..இவை  அனைத்தும்  நிறைந்த  திருஉருவம்  கண்டேன்  கன  நொடியில் ...     கண் இமைப் பதிற்குள்  சட்டென மறைந்தது ..! இன்று  யாம்  நிறைவு பெற்றோம் .....!!நிறைவு ..நிறைவு ..நிறைவு ....முழுமை ...ஆனந்தம் ....ஆனந்தம் .!!....தந்தையே  ஒம்  அகத்தீஸ்வராய  நமக..!!
அனைத்தும்  அறிந்த ..திரிகால  ஞானம் ..இறை அலைகளிலே உறைந்து  ஆழ்ந்து என்றும்  இறைவடிவமாகவே  திகழும்  தன்மை .. ..!அன்பும் கருணையும் ததும்பும் திடமான ஆழமான  கூர்மையான பார்வை ..!எவை  வரினும்  அதனை  துளியும்  அதிர்வின்றி எதிர்கொள்ளும்  திறமை ..! ஒரு துளி  பார்வை  ஊடுறுவி  உட்சென்று  எதையும்  பிரித்து பொருள் காணும்  நுணுக்கம் .சாந்தமும்  கருணையும்  தெளிவும் நிறைந்த முகம் .கைலாய வெண்பனி  போன்ற  வெண்மை  அலைகள் ..! எம்  உயிர் இன்னும் அருள்  அலைகளால்  திணிவு பெற்றது ..! செறிவு பெற்றது !அன்பின்  அலைகளை  அன்பின்  உணர்வுகளை  எம்மை  யாமே  எம்முள்  உணரும்  தன்மை ..!! கனிவும்  பணிவும்  பாசமும் எம்முள்  சேர்ந்தது ..! என்ன  வேண்டும்  எமக்கு ... தெரியவில்லை ..! எதுவும்  தேவையில்லை இப்பொழுது ..!  எல்லாம்  எம்  தந்தை இட்ட   பிச்சை ..!
இங்கே இந்த புனித மலையில் வெறும் கண்களுக்கு உடனே  எதுவும் புலப்படவில்லை .சற்று அமைதியாகி கொஞ்சநேரம்  இருந்து பிறகு இங்குள்ள அதிர்வு அலைகளுக்கேற்ப நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும்.இந்த மலையின் அதிர்வு அலைகளை கொஞ்சம் நம்முடைய அலைகளோடு ஒன்றுகலக்க வேண்டும் .பிறகு தான் சூட்சும இரகசியங்கள் மெல்ல மெல்ல புலப்படும் .ஒரு உதாரணம் ,இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரே மாதிரி  சாதாரண மரமாகவே  எண்ணும் இந்த ஸ்தூல கண்கள் .நம்மில் பலர் இவைகளை எல்லாம் கொஞ்சம் கூட நினைப்பதற்கு கூட   நேரம் இல்லாதவர்கள்.ஏதோ ஒரு பெரும் செயல் செய்யவேண்டும் என்று  நிறைவேறாத  ஆசைகுப்பைகளை  மனத்தால் எண்ணி ,இங்கு  கொட்டிக்கிடக்கும்  அமைதியை  ஆழ்ந்து  உணராமல் ,சட்டென்று  மலையிறங்கி ரெண்டும் கெட்டான் நிலைமைக்கு ஆளாகிவிடுவார் .இது  போன்ற  இடங்களில்  இங்கே உள்ள frquency யோடு ஒன்றுகலக்க வேண்டும் . கொஞ்சம் அமைதியாகி ஆழ்ந்து செல்ல ஒரு விழிப்பு நிலை வரும் ,அப்பொழுது பார்க்க அதே மரங்களின் வேறுபாடுகள் தெரியும் .என்ன இது மரத்தின் நுனியில் ,சிறிய சிறிய உருண்டை காய்கள் ,என்னதான் அது என்று சற்று உற்றுப்பார்க்க ,ஆகா இது நெல்லிகாய் போலல்லவா இருக்கிறது ..! மேலும் கவனிக்க கருமையும் பசுமையும் கலந்த சாம்பல் பூசியது போல் உள்ள கருநெல்லி மரத்தின் நெல்லிக்காய்  என்று தெரியவரும் .இது போல் நிறைய உள்ளது என் CAMERA  விற்கு டிமிக்கி கொடுத்த மூலிகையும் உள்ளது.

 தந்தையின்  நோய் அனுகா  விதி முறை ...!!

அகத்திய உள்ளங்களே ! தந்தையின்  கருணை கடல் போல் கொட்டிக்கிடக்கிறது ..!தகுதி என்னவெனில் அன்பும் ,கருணையும் நிறைந்த   உள்ளமே ..! இவை  ஒன்றே  போதும் தந்தையின் சூட்சும  அலைகளை  உணருவதற்கு . இவை  தான்   அதிர்வு குறைந்து ,ஆழ்ந்து ,உட்சென்று  அருள் அலைகளை  உணரும் தன்மை பெற்றவை   எந்த யாகமும்  தேவையில்லை .! எந்த  மந்திரமும்  தேவையில்லை.. .!அன்புள்ளம் கொண்டவர்களுக்கும்  என்றும்  இறைநிலையே நினைக்கும் சிவபக்தர்களுக்கும் ,தம்  கர்ம வினையால் இறைநிலையை  அடைய  ,எதிர்கொள்ளும் அவர்தம்  துயர் துடைக்க,எண்ணற்ற ரகசியங்களை தந்தை கருணையால் கொடுத்துள்ளார் .இவை யாவும் ஒரு நல்ல  அன்புள்ளம்  கொண்டவர்களுக்கே பயனடைய வேண்டும்  என்றும் கூறியுள்ளார் . மீறி  மற்றவர்களுக்கு  உரைப்பின்  தந்தையின்  சாபத்திற்கு  ஆளாக  நேரிடும்  என்று எச்சரிக்கையும்  விடுத்துள்ளார் .

நடக்கில்  மெத்தென  நடப்போ 
          நானாளு  மனவரிந்  துண்போ 

முடக்கலு  வெந்நீர்  குளிதல்ல  துண்னோ 
         மீறிய  மிகப்  பகலுறங் கோம் 

சடக்கென மலமிரண்டை யுங் கழிப்போ 
        தையலார்  புணர்ச்சியில்  சத்தே 
 
யிடக்கைக்  கீழ்படக் கிடப்பினுங்  கிடப்போம் 
    மெமனார் நமக்கென  கிடவாரே

நடக்கும் போது மெதுவாக   சப்தம்  வாராமல் நடப்போம்.தினந்தோறும் பசி அறிந்து  உண்போம் ..! பசிக்காவிட்டால்  ஒரு போதும்  உணவு  கிடைக்கிறதே ,இதை  இங்கு  விட்டுவிட்டால்  ஆகா ..!miss பண்ணிவிடுவேனே  என்ற  எண்ணமெல்லாம்  வேண்டாம் !  அது  போல  அதிகமான இருப்பதால் ,அதையும் சேர்த்து  உண்ணாவிட்டால்  மிச்சமாகி  விடுமே  என்ற  எண்ணமெல்லாம்  அறவே  வேண்டாம் .! ஏத்தனை  உயிர்கள்  உணவின்றி  வாடுகிறது  இவ்வுலகில் ,இருக்கும் மிச்சமான  உணவுகளை திறம்பட   பகிர்ந்தளித்து சரிசெய்வோம் .

குடிப்பதற்கும்  ,குளிப்பதற்கும்  வெந்நீரையே   படுத்துவோம் .இன்றைய  மாசுபட்ட காற்றினாலும் ,அதீத Chemical பொருட்களாலும் தண்ணீர் மாசுபட்டுவிட்டது . ஒரு  Travel  செய்யும்  போது  நான்கைந்து  ஊர்களில்  தண்ணீர் மாற்றும் போது ,முதலில்  நம்மை  ஆட்டிப்படைப்பது இந்த
தண்ணீர்   வழியாக நம்முள்  நுழையும்  கிருமிகள் ..!பிறகு  இதுவே பல்வேறு  நோய்களுக்கு  காரணமாகிறது . ஆக வெந்நீரையே  பயன்படுத்துவோம் ..!!

பகலில்  அதிக  நேரம் உறங்காமல்  இருப்போம் !மலம் ஜலம்  இரண்டையும்  அடக்காமல் உணர்ச்சி  வரும் பொழுதே கழித்துவிடுவோம் .இவற்றை  அடக்குவதால்  பல்வேறு  நோய்கள்  பின்னர்  வருமாம் .ஸ்திரீ  போகத்தில் (புணர்ச்சியில்)மிதமாக  இருப்போம் . படுக்கும்  போது  இடது கை  கீழே  இருக்கும் வண்ணம் படுப்போம் .இடது   பக்கம் கீழ் வைத்து படுப்போம் .இவ்வாறு இருப்பதால் எமனார்  நம்மிடம் வரமாட்டார் என்று  சொல்கிறார்   தந்தை .

இது  சாத்தியமானது தான் .நடமுறைப்படுத்துவது  கொஞ்சம்  கூட  சிரமமே இல்லை .எத்தனை முறை  நாம் வருடத்தில்  ஜல தோஷத்திற்காக  டாக்டரிடம் சென்றிருக்கிறோம்.அன்றாட வாழ்வில்  இவை தெரிந்தும்  ஒரு  அலட்சியம் ,ஒரு  carelessness ..பழக்கப்படுத்திவிட்டால் பிறகு  நோய் அணுகாமல்  ஆரோக்கியமாக  வாழலாம் .எதையும்  முளையிலேயே கிள்ளி எறிதல் போல ,நம்மை நாமே தயார் செய்துகொள்வோம் .வரும்  புத்தாண்டு சங்கல்பமாக  தந்தையின்  வேதவாக்காக   இவைகளை எடுத்துக்கொள்வோம் .!பின் வரும்  பதிவுகளில் தந்தையின் பாடல்கள்  மேலும் பல   தொடருவோம் ..!

இதழ் வாசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வரும்  புத்தாண்டும்,  பொங்கலும் ,அமைதியும் ஆனந்தமும் ,நல்ல  ஆரோக்கியமும் தரும்  ஆண்டாக,   நல்ல நிகழ்வாக அமையட்டும்.!தந்தையின்  அன்பு அலைகள்  தங்கள்  வாழ்வில்  பற்பல ஆன்மீக மாற்றங்களை ஏற்படுத்தட்டும்   என  ,தந்தையை  வணங்கி  ,மீண்டும்  அடுத்த  ஒரு நிகழ்வில்  சந்திக்கின்றேன் ..

 ஒம்  அகத்தீஸ்வராய  நமக..!!ஒம்  அகத்தீஸ்வராய  நமக..!!ஒம்  அகத்தீஸ்வராய  நமக..!!