Posts

Showing posts from June, 2017

மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்

Image
                                                      மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பார்வை  ஒருவர் மீது விழுந்தால் அவருக்கு துரியாதீத நிலை உடனே கிட்டிவிடுமாம்.அத்தகைய ஆற்றல் நிறைந்தவர் அய்யா .மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக புனிதமானது. ஒரு முறை நீர் நிறைந்த  ஒரு தடாகத்தின் அருகில் சிவபெருமான் ,  பார்வதிதேவியிடம் உலகின் பிறப்பு இறப்பு ,உயிர்களின் உருவாக்கம் அழித்தல் என பலவற்றை பேசும் பொழுது ,பார்வதி தேவிக்கு உறக்கம் ஏற்பட்டு கண்அயர்ந்து விட்டார்களாம்,ஆனால் அங்கே உள்ள தடாகத்தில் நீந்திகொண்டிருந்த மீன் அதை கேட்க,அந்த  மீனின் வயிற்றில் உள்ள மீன் குஞ்சும் கேட்டு, பாலகனாய் உருமாறி எழுந்து சிவபார்வதியின் காலில் விழுந்து ஆசிவாங்கியதாம்.இப்படி மச்சமாய் இருந்து சிவ உபதேசங்களை கேட்டதால் அதற்கு மச்சேந்திரன் என்ற பெயர் வந்ததாம்.இப்படி மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக சிறப்பானது. மச்சமுனி சித்தர் மீனாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சுனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.திருப்பரங்குன்றம் முருகனை வணங்கிவிட்டு அதன் அருகில் உள்ள மலை மீது ஏறும் பாதையில் மேல் சென