Wednesday, June 29, 2016

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!
சென்னை மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்  கோவில்  மிக பழமையான ஒரு அற்புதமான கோவில்.கபில  முனிவர் சிவனை இடது கையால் ஆராதனை செய்ததற்காக  பசுவாக (தேனுவாக) பிறந்து சிவனை வழிபட்டு  இங்கே சாபவிமோச்சனம் அடைந்ததாகவும் ,சோழப்பேரரசர் தம் கனவில்இங்குள்ள ஏரியில்  சுயம்பு லிங்கம் இருப்பதை கண்டு ,இந்த அழகிய கோவிலை கட்டியதாகவும், அருணகிரிநாதர் இத்திருத்தலத்தை "தோடுறுங் குழையாலே...." என பாடியுள்ளதாகவும் வரலாறு சொல்கிறது .இப்படி நீண்ட நெடிய வரலாறு தொடர்கிறது.வலைத்தளத்தில்  நிறைய தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது.படித்து பயன் பெருக .!! இங்கே எமது அனுபவத்தை மட்டுமே எழுதுகிறோம்.


ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் சிறிய சுயம்பு லிங்கமாய் மிக அழகாக  காட்சிதருகிறார்.கருவறை முழுவதும் நல்ல தூய வெண்மையானஆற்றல் நிறைந்த அலைகள் நிறைந்து,தம்மை வந்து வணங்குவோரின் ஆக்னாசக்கரத்தை தொட்டு உரசிச்செல்கிறது.கஜபிருஷ்ட வடிவில் உள்ள கருவறை என்கிறார்கள்.எல்லாம் சிவனின் தார்மீக அலைகள் ஆட்சிசெய்கிறது. கருவறைவிட்டு வெளியே வந்து ஸ்ரீ தேனுகாம்பாள் தாயாரை வணங்கி வெளியே வர ,ஸ்ரீ பைரவர் அற்புதமாக காட்சி தருகிறார்.
பைரவர் சக்திமிக்கவர் .பைரவபெருமானின் அலைகளை உணர ,தூய்மை மிக அவசியம். உடல் மனம் யாவும் மிக  மென்மையாக ,தூய்மையாக,கண்ணாடி போன்று  transparent ஆக வைத்து,ஸ்தூல கண்களால் பைரவபெருமானை அன்பால் வணங்கி,பிறகு ஸ்தூல கண்களை மூடி அதன் உருவத்தை அப்படியே நெஞ்சத்துள் ஆவாகனம் செய்ய,நெஞ்சத்துள் உள்வாங்க ,அதாவது அதன் அலைகளை உள்வாங்க,.பிறகு அந்த அலைகள் உடலில்,உள்ளத்தில், ஏற்படும் மாற்றங்களைமெல்ல மெல்ல பிடித்து உட்செல்ல சூட்சும கதவுகள் திறக்கப்படுகிறது.சூட்சும தேகம் பற்றி உணர்ந்துகொள்ள ஸ்ரீ பைரவ காயத்ரி மந்திரங்களை சொல்லவேண்டும்.இந்த மந்திர அதிர்வலைகள்  கொஞ்சம் கொஞ்சமாக  நம் ஸ்தூல கண்களால் பார்க்க இயலாத சூட்சும நிகழ்வுகளை உணர வழிவகை செய்யும் .விரிவாக தெரிந்துகொள்ள ஸ்ரீ மஹாபைரவர் கட்டுரையை  ஒரு முறை வாசிக்கவும்.யாம் வணங்கிய பைரவர்களில்  இந்த தேனுபுரீஸ்வரர் பைரவர் நேரடியாகவே எம் சூட்சுமதேகத்தை தட்டிஎழுப்பி எம்மை எங்கோ இழுத்துச்செல்கிறார்..பல நூறு வருடங்களுக்குமுன் இங்கே இந்த இடம் ஒரு மிகப்பெரிய இடமாக சுற்று சுவர் இல்லாமல் ,நீண்டு விரிந்து படர்ந்துள்ளது.மஞ்சள்நிற மலர்களும்  மருசெடியும் நிறைந்து உள்ளது.இதே பைரவர் சிலை மிக அற்புதமாக ,கம்பீரமாக காட்சியளிக்கிறது.இதே பைரவர் சிலைக்கு மஞ்சள் நிற மலர்களால் யாம்  முன்னொரு காலத்தில்பூ ஜை செய்ததும்,காட்சிபிம்பமாய்  விரிகிறது.இங்கே சிவனும் இருக்கிறார்,பிரம்மாவும் இருக்கிறார்,விஷ்ணுவும் இருக்கிறார் .இங்கே பரந்து விரிந்த இந்த அழகிய சோலை வனத்திலே ஒரு அற்புதமான தீர்த்தமும் உள்ளது.
. அர்ச்சகர் ஒருவர் இந்த   தீர்த்தத்தை எடுத்துவந்து எமது  தலையில் ஊற்றுகிறார்.தீர்த்தம் மிக சுவையாக அதி உன்னதமாக இருக்கிறது.அப்படியே கொஞ்சம் யாமும் பருகிக்கொண்டே எம் உடலெங்கும் நனைத்துக்கொள்கிறோம். இந்த தீர்த்தம் பல பாவங்களை போக்குகிறது என்பதையும் உணர்கிறோம்.ஆனால்தற்பொழுது இது இங்கே எங்குள்ளது என தெரியவில்லை.இங்குள்ள தூண் மண்டபம் மிக அழகிய வேலைப்பாடுடைய சிற்பங்கள் நிறைந்துள்ளது .அதில் ஒரு தூணில் சரபேஸ்வரர் சிலை உள்ளது.உடம்பே புல்லரிக்கிறது இந்த சிலை பற்றி நினைக்கும் போதே.ஏனெனில் இந்த நொடி பொழுதுகூட இங்கே  சரபேஸ்வரர் அலைகள் சூழ்ந்துள்ளது.அது மட்டுமல்ல சூட்சுமமாக வெண்ணிற அலைவடிவில் குரங்கு முகமும் சிங்கமுகமும் சேர்ந்த ஒரு முக வடிவும் ,அழகான வெண்மை நிறைந்த  வண்ணத்தால் ஆன ரோமஉடம்பும் உடைய, மனிதனை போன்ற தோற்றமும், விலங்கு போல உருவமும், கொண்ட  பல சூட்சும உருவங்கள் இந்த தூண் மண்டபத்தில் ஆங்காங்கே அமர்ந்துள்ளது. ஒரு பத்து பதினைந்து வெண்ணிற சூட்சும தேக உருவங்கள்மிக சாத்வீகமான குணம் கொண்டுள்ளது .இறைவனால்  தாம் எப்பொழுதோ படைக்கபட்டு ,தமது செயல் யாமும் வெற்றிகரமாக செய்து முடித்து,இவை தற்பொழுது இங்கே அமர்ந்து கொண்டு மிக அமைதியாக அருள்அலைகளை வாரிவழங்கிக்கொண்டிருக்கிறது.வருபவர் செல்பவர் என அனைவரும் இந்த வெண்ணிற அலை வடிவ  உருவங்களை தொடாமல்இங்கே செல்ல இயலாது. அப்படி ஒரு தன்மை இங்கே இறைவனால் வகுக்கப்பட்டுள்ளது. யாம் எப்பொழுது வந்தாலும் இந்த சூட்சும உருவங்களை தரிசித்தே செல்கிறோம்.அதில் ஒன்று இங்குமங்கும் சென்று,ஏதோ நிறைய எம்மிடம்  சொல்கிறது,எம்மால்  தான் அது  என்ன வென்று  பிடித்து எழுதஇயலவில்லை, தகுதிகள் நிரப்பி பின் வரும் காலங்களில் எழுதுவோம் என எண்ணுகிறோம் இது போன்ற இன்னும் புரிய இயலா சூட்சுமத்தால் உணரும் நிறைய அற்புதம் இங்கே இருப்பது போலவே யாம் உணர்கிறோம்.உள்ளே சிவனின் அலைகள்.
அருகிலே பைரவபெருமானின் அற்புத அலைகள். தூண்மண்டபத்தில் ஸ்ரீ சரபேஸ்வரின் அலைகள், மிக  அற்புதமாகஉள்ளது.

சரபேஸ்வரர்  எப்பொழுதுமே மிக  உக்கிரம் நிறைந்த சக்திஉடையவர் .இங்கேயும் மிக அதீத சக்தி அலைகள் இருக்கிறது  .மிக கொடிய கடன்  சுமையால் வாடுபவர்கள் ,தீய சக்தியால் பாதிக்கப்பட்டு துயரப்படுபவர்கள் இங்குள்ள ஸ்ரீ சரபேஸ்வரர்  சன்னதி அருகே அமர்ந்து ,உள்ளன்போடு கீழே  உள்ள ஸ்லோகத்தை சொல்ல துயரத்திலிருந்து மீழ வழிபிறக்கும் விரைவில்

ஸ்ரீ சரபேஸ்வரர் மூல மந்திரம்:

ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி 
ஹாஸி, பிராணக்ர ஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய 
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.

ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரீ மந்திரம்:

ஓம் சாலுவேசாய வித்மஹே 
பக்ஷிராஜாய தீமஹி 
தந்நோ சரப ப்ரசோதயாத்.


சூட்சும தேகத்தை உணர ஸ்ரீபைரவரின் அருள்வேண்டும்.அதே சூட்சும தேகம் மேலும் வலுப்பெற  பைரவ மந்திர அதிர்வு அலைகள் நம்முடனேயே  இருத்தல் அவசியம், அகத்திய உள்ளங்களை விரைவில் வேறு ஒரு நிகழ்வில்விரைவில் சந்திக்கிறோம்

ஓம் அகத்தீஸ்வராய நமஹ!!
ஓம் அகத்தீஸ்வராய நமஹ!!
ஓம் அகத்தீஸ்வராய நமஹ!!