Posts

Showing posts from 2019

சிந்தனைக்கு எட்டாத சிவரூபம்...!!!

Image
பரவெளியில் ஆடி அசைந்து திருத்தாண்டவம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்    மஹாசிவமே !! கோடிக்கணக்கான அண்ட பேரண்ட துகள்கலெல்லாம் நின் அசைவை எதிர் நோக்கியே காலம் காலமாய் காத்துக் கிடக்கிறது . !! எக்காலம் பொற்காலம்   , எது    நன்மை தரும் காலம் , எக்காலத்தில் எந்த நுட்பம் வெளிவரவேண்டும் , எக்காலத்தில் எந்தவொரு உயிரின்   கர்மவினை கலயப்படவேண்டும் ,   என்பனவெல்லாம்   தீர்மானித்து   அ ச்சு பிசகாமால் அற்புதமாய் அருள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தூயஜோதியே !   அருள் தாண்டவமாடும் அற்புத பரப்பிரம்மமே !! ஒளியே ! பேரொளியே !! நாயகனே !! நான்மறையே !! தட்டுத்தடுமாறும் போதெல்லாம் நின் சூட்சும அலையே எம்மை தூக்கிதலைநிமிர்த்தி வாழவைக்கிறது எம்பெருமானே!! ஈசனே !! நேசனே!ஆருயிர் வேந்தே !     நீ இட்ட பிச்சை தானே இந்த உயிர் உடல் உள்ளம் யாவுமே ! .ஒரு அருகதையும் அற்றவன் யாம் .எம்முள்ளும் ஆங்காங்கே அத்திபூத்தார் போல நின் சூட்சும அலைகள்    கொண்டு எம் நெஞ்சத்தை வருடிய    நொடிகள் ,  தருணம்  யாவும்  அலையாய் ஒளியாய் ஆற்றலாய் அற்புதமாய்    நெஞ்சமெங்கும் விரிந்து நின் ஆழ்ந்த பேரமைதியில் சிறிதுநேரம் கண்அயர  வழிவகுத்திருக

இறைபிம்பம் மனம்

Image
தூயோனே !!  துவண்டமனதுள் துளிர் விடும் மாயோனே !! மாசற்ற  மறையோனே !! எம் பெருமானே!! வேயோனே!!  வெட்ட வெளி பெரியோனே!! சேயோனே!!  சிரம்தாழ்கிறேன் நின்திருவடியில். ஒரே பிரம்மம் ,ஒரே வெளி, ஒரே ஒளிவெள்ளம், ஒரே பேரமைதி, எல்லாம் ஒன்றே.ஆயிரம்கோடி அண்டமிருந்தாலும் ஆளுவது  ஒரே இறை.ஒன்றாய் இருக்கும் இறையே. அழுக்காய் அகந்தையாய் யாம் ,பெருவெளியாய் பேரமைதியாய் இறை, அகந்தையை இறையில்  கரைக்க (கர்மாவால் பெற்ற அனுபவத்தை, ஒன்றிற்கும் ஆகாத கற்றறிந்த குப்பையை கரைக்க),ஒளியாய் அலையாய் இறையாய் மிளிர்கிறது மனமென்னும் மாயோனின் இந்த பொய்க்களம் .இறை அமர்ந்தலால்  இதமான அமைதி அலையாய் சூழ்கிறது ,மாசற்ற ஒளியே விரிகிறது ,விரிந்து விரிந்து எங்கெங்கும் வெளியில் கரைகிறது. இலவம் பஞ்சுபோல மனம் எடையற்று போகிறது .யாவற்றையும் ஈர்த்து அரவணைக்கும் நாயகன் இருப்பால் சர்வ வல்லமையும் பெற்றது போல யாவற்றையும் ஈர்க்கிறது .யாவற்றுள்ளும் சூழ்ந்திருக்கும் உணர்வும் பெறுகிறது .இறைக்கு, பேரண்டநாயகனுக்கு என்ன தேவை இங்கே ?! பணமா... ?பாசமா...? பந்தமா ...? எதுவும்இல்லையே எல்லாமே இறையே.ஒன்றுமில்லா ஒன்றிலிருந்து உருவானயாவும் ஒன்றுமில்

சித்தனின் ஆசியில் ஒரு துளி ..!!!

Image
கருநீல வண்ணனோ காரிருள் கண்ணனோ பெருஒளி பெருக்கிடும் பேரண்ட நாயகனோ கரும்கும்மிருட்டு சூழ்ந்தீர்த் தணைக்கும் பெருவெளி பிரம்மாண்ட நாயகனே ..!!  என்றும் நின் புகழ் ஓங்குக ! வேதமோ  வேதத்தின் சாரமோ யாமறியோம் நாதமோ நாதத்தின் மூலமோ  யாமறியோம் பாதமோ பனிமலர்  சூழ்ந்திடும் மேரோ  யாமறியோம் அன்பெனும் தேகத்தில்  கசிந்த தெள்ளியநீரே! எம் பெம்மானே!!   என்றும் நின் புகழ் ஓங்குக ! அலையாய் ஆதியாய் ஜோதியாய் வெளியாய் கலையாய் காருண்ய வேதமாய் என்றும் நிலையாய்   பெரும் அருள்ஒளிநிறைந்த  பால்வெளி அலையாய் இருக்கும் பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக ! மெல்லிய அலையினும் மெல்லியது நின் திருவருள் வல்லிய அலையினும் வல்லியது நின்பேராற்றல் வல்லிய ஆணவம் நீக்க  சட்டென நின்திருவருள் மெல்லிய தாண்டவமாடிடும்  பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக! சித்தனின் அருள் பெறுவதெல்லாம் மிக சாதாரண விஷயம்இல்லை.சித்தர்களின் மார்க்கமே மிக கடினமானது தானே.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது.மீன் வடிவில் இருக்கும் மச்சமுனி சித்தரை பார்க்க செல்லவேண்டும் என்றால் ,திருப்பரங்குன்ற மலை மீது கிட்டத்தட்ட்ட  6

ஸ்ரீ ஹனுமான் பாதம் போற்றி !!!

Image
 தூரம் ....தூரம்...தூரம் என எங்கோ செல்கிறது ..சென்றுகொண்டேயிருக்கிறது... மனதால், கற்பனையால், சிந்தனையால் , வேகம் ...வேகம் ...வேகம் என எவ்வளவு வேகமாக சென்றாலும் ,காலம்... காலம் ...காலம் என பிறவிகள் கடந்துகொண்டேயிருக்கிறது.சிற்றறிவிற்கெல்லாம் எட்டாத சகலமும் அறிந்த பெயரிடமுடியா பேரண்ட பிரபஞ்ச பெருவெளியே ..!! வற்றா ஆற்றலே !!அண்டகோடி  சூரியகுடும்பங்களையும் நொடிபொழுதில் இயக்கும் சர்வவல்லமை நிறைந்தோனே ..!! ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள் சென்றாலும் நின் அற்புத இந்த  பிரபஞ்ச திருத்தாண்டவம், படைத்து,காத்து ,அழிக்கும் இரகசிய வித்தை ,அறிந்தவர் யாருளர் ஐயனே !! அற்ப குறுகிய வாழ்க்கை பயணத்தில் ,நின்னை நின் பெருமையினை ,நினது ஆற்றலை எப்படிஇருக்கும் என்று எண்ணுவதற்குள் வாழ்க்கை சட்டென முடிந்துவிடுகிறது.எங்கோ செல்கிறது..நாட்களும் நிமிடங்களும் கரைந்து ஓடுகிறது..ஒரு இடைப்பட்ட காலம் தானே இது !! ..பெருமானே !! நீ இட்ட பிச்சைதானே இந்த வாழ்வு !! . எம் உள்ளத்துள்... ஆழ்ந்து... ஆழ்ந்து அமிழ்ந்து ...அமிழ்ந்து..எமது ஆணவம் மாயை கன்மம் விலக்கி விலக்கி செல்கிறோம்..அணுவில் ஒரு நுனியில் நின் அன்பெனும் தன்மை உறை

குருவைத்தேடி...!!!

Image
எல்லாம் வல்ல பரம் பொருளே !! ஆதி முதல் குருவே..!! கேட்பாரற்று சோவென கிடக்கும் பரவெளியே ..!! எல்லையே இல்லாமல் விரிந்துகொண்டேயிருக்கும் நுண்ணிய அணுக்கள் நிறைந்த  ஆற்றல் உடையோனே!! ஆதியாய் ஜோதியாய் அலையாய் எம்முள் வந்து ,எம் மனதுள் நின்று , எம் உயிருள் நுழைந்து,அழகாய் அற்புதமாய் வந்து, நின்திருத்தாண்டவத்தை நிகழ்த்துவாய் எம் நாயகனே ..!! எம் உள்ளத்துள் நின் அலைகள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எமக்கு பேரின்பமே .!! நின் அருள் அலைகள் தரும் ஒரு இதம், ஒரு சுகம்,யாருமே எமக்கு இப்பிரபஞ்சத்தில் தரஇயலாது எம் பெம்மானே !! நின்  அருள் அலைகளால் தெறித்து ஓடுகிறது எம்மை சூழ்ந்த அஞ்ஞானம் ,நின்  அருள் அலைகளால் புறமுதுகிட்டு ஓடுகிறது எம்மை ஆட்டிபடைத்த கர்மவினைகள் ..!!  நின்னை எம்முள் எம் உள்ளத்துள் கொண்டுவர எதுவும் தேவையில்லை ,எங்கு அழைத்தாலும் வருகிறாய் எங்கெங்கும் இருக்கிறாய்.எங்கெல்லாம் வெளிஇருக்கிறதோ அங்கெல்லாம் நின் அருளும் இருக்கிறது.நின்னை நினைத்த மாத்திரத்தில் ஜிவ்வென பற்றிக்கொள்கிறது எம் உள்ளம் ,உள்ளத்தில் அமுதமழை பொழிகிறது ,ஆனந்தம் நிறைகிறது அமைதி பேரமைதி என அது தாமாய் மிளிர்கிறது.நின் அருள் அலைகள

வேல் விழி நங்கையாள் ..!!!

Image
சர்வ மங்கலம் நிறைந்தவளே !! அழகு வெள்ளமே ..!! அழகின் அழகே ..!! ஜுவாலைத் தீபோன்ற கண்கள் கொண்டு அஞ்ஞான இருளை அகற்றுபவளே!!   கருணையின் பிறப்பிடமே ...!! தேவியே ..!! ஈசனின் நாயகியே !! நின் பார்வை படுமிடமெல்லாம்  என்றென்றும் சுபிக்ஷம் தருபவளே ..!! சுத்த தங்கம் போன்று ஜொலிக்கும் சொர்ணாம்பிகையே ..!!  தாயன்பு எனும் கருணை அலைகள் கொண்டு ஆயிரம் ஆயிரம் கோடி ஜீவராசிகளையும் இயக்கி , காத்து ,அரவணைத்து ,யாவற்றிகும் அமுதுபடைக்கும்  சர்வ வல்லமை பெற்றவளே !! நின் அருள் அலைகள் ஒளி வீசட்டும் என்றென்றும் !! வில்லினை போன்ற புருவங்களை உடையவளே !! வேல் விழியை போன்ற கண்களை உடையவளே !! மஹா மஹா சக்தி நிறைந்தவளே !! அழகிய புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்தவளே !! கருணா ஸாகரமே !!நின் பெருமையும் புகழும்   புராணங்கள் கூறுகிறது அவை யாவும் அளவிடற்கரியது !! நின் பாசம் நிறைந்த அருள் ஒளி பார்வையே கோடான கோடி ஜீவன்களை ஈர்க்கிறது !! ஈர்த்து அமுதமேனும் பாசமழையால்  திக்குமுக்காடசெய்கிறது !! ஜொலிக்கும் பொன்னொளி நிரம்பிய தேகமும் ,நின் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும் ,தாயன்பு நிறைந்த கருணையும் ,அழகிய புன்னகையும் யாவற்றிற்கும் அருள