Posts

Showing posts from May, 2019

குரு தேடல்...!!!

Image
"...சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே...." இறையை பற்றி சிந்திக்க வேண்டும் ,ஒரு துளி அலையாவது உணரவேண்டும் என்ற உன்னதமான சிந்தனை ,எண்ணம் கொண்டோர், இந்த பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ,அது திருவண்ணாமலையோ அல்லது வேறு எங்கோ ,எங்கோ இறை கொடுத்த ஒரு சிறு இடத்தில் ,அமர்ந்துகொண்டு , மாணிக்கவாசக பெருமானார் இறை உணர்ந்து எழுதிய  ".. மாசற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே ...   என தொடங்கும் பாடலில் வரும்   வரியான " சோதியனே துன்னிருளே.... " இந்த இரண்டு வரியை மட்டும் ,கொஞ்சம் ஆழ்ந்து கண்களை மூடிக்கொண்டு இதன் பொருளை ,இதன் தன்மையை உணரமுற்படுங்கள் ,உங்களை வெகு விரைவில் இறை அலைகள் சூழ்ந்து ,முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச்செல்லும். இந்த பிரபஞ்சமே வியக்கும் அளவுக்கு மாபெரும் அக்னிபிழம்பாய் ஜொலிஜொலிக்கும் மாபெரும் ஜோதிமயமானவே..!!! ஜோதி என்றால் எங்கும் எங்கெங்கும் நிறைந்து ,கண் கூசும் மிக பிரகாசமாக நிறைந்து தெறித்து ,பார்க்கும் வெளியெலாம் ஒரே ஜோதிமயமாய் தகதகவென ஒளிர்கிறது.அத்தகைய