எமை ஈர்த்த மகான்
இயற்கை தம்மை தாமே சீர் செய்துகொள்ளும் நிகழ்வு .யாரும் கணிக்க இயலாது நடந்தேருகிறது . இயற்கை எனும் சதிராட்ட காரனுக்கு நாமெல்லாம் நகர்த்துகின்ற காய்கள்.எடுப்பான் அணைப்பான் தூக்கி எறிவான் .யார் அறிவார் இவன் திருவுள்ளம் .அண்மையில் நிகழ்ந்த கஜா எனும் கடும் புயல் ஏற்படுத்திய பேரழிவு ,மனதை நிலைகுலைய செய்துவிட்டது .அகத்திய உள்ளங்கள் பலர் இதிலே சிலர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர்.களத்திலே நேரடியாக இறங்கி உதவி செய்த மற்றும் உதவி செய்துகொண்டிருக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் அகத்தியம் வலைத்தளம் மூலமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எமது இல்லத்திலிலே வளர்ந்த மிக பழமையான நூறு வயது தாண்டிய மரம் ,சுத்தமாக வேரோடு பிடுங்கி எறியப்பட்டது .இனிமேல் இப்படி ஒரு மரம் வளர்க்க இயலாது.தூக்கி நிறுத்தி மீண்டும் வளர தேவையான வேர்கள் எல்லாம் சுத்தமாக முறிந்துவிட்டது.இனி வரும் தலைமுறை பார்க்க நூறு ஆண்டுகள் ஆகும்.இந்த மரங்களோடு அதன் கிளைகளிலும்,குதித்தும் ஆடி,நிழலிலும் ,ஓடி ஆடியும், விளையாண்ட சிறுவயது நிகழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்கிறது.ஆனால் மரம் மட்டும் தற்போது இயற்கை எடுத்துக்கொண்டது.இதை விட இன்னும் நிறைய நிகழ்வுகள் பல மடங்கு பாதிக்கபட்ட தென்மாவட்ட செய்திகள் மனதை உலுக்கி நிலைகுழைய செய்துவிட்டது.பாதிக்கப்பட்ட அணைத்து மக்களுக்கும் நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம் .மீள இயலா துயரங்களிலிருந்து விரைவில் மீண்டு வர தேவையான உதவிகள் செய்வோம்.உதவி இங்கே எவ்விதமேனும் செய்தல் மிக அவசியமான தேவையாகிறது.உதவி செய்யவேண்டும் எனும் உள்ளங்களால் தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.உதவி செய்யும் உள்ளங்கள் கருணை உள்ளங்கள் .அன்பு உள்ளங்கள் அவர்கள் என்றும் இறையின் ஆசிகளுக்கு உட்பட்டவர்கள்.இது போன்ற உள்ளங்களை வாழ்த்தி இறை இவர்களுக்கு என்றென்றும் எல்லாவிதத்திலும் நன்மையளிக்க வாழ்த்துவோம்.மீள இயலா துயரத்தில் இருக்கும் உள்ளங்களுக்கு ,நம்மால் இயன்ற உதவிகள் செய்வோம்.வாழ்கவளமுடன் .!!
இருக்கும் இன்னல்களுக்கு யாராவது மிக சரியானதீர்வு சொல்லமுடியுமா ? என ஏங்கி கர்ம வினை தாக்கத்தில் துவண்டுகிடப்பவர்களுக்கு ,இந்த அய்யா மிகச்சரியானவர்.ஆனால் இவரை சந்திப்பதே மிக கடினம் .அவ்வளவு எளிதள்ள.எம்மிடம் இங்கே ஒரு சில அகத்தியஉள்ளங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு எம்மால் பதில் கூற இயலவில்லை,தீய சக்திகள் வந்து ஆட்டிப்படைக்கிறது,வாழ்வு மிக கடினமாக இருக்கிறது,ஏழரை சனி வாட்டி வதைக்கிறது,இது போன்ற இன்னும் நிறைய பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு சொல்லுங்கள் அய்யா எனும் வினாவிற்கு எம்மிடம் தீர்வு இல்லை .இதற்கு சரியான விடை ,சரியான தீர்வு அளிப்பவர்கள் வெகு சிலரே.இவர்கள் மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ,எல்லாம் துறந்தவர்கள்.இவர்கள் நம்மிடம் பேசுவதே ஒரு பூர்வஜென்ம புண்ணியம்.இவர்களை நாம் தேட கிடைக்கமாட்டார்கள்.அவர்களாகவே நம்மை அழைப்பார்கள் ,அப்பொழுது நாம் சென்று தான் ஆகவேண்டும் .இயற்கையோடு ஒன்றோடு ஒன்று ஒட்டிய நிகழ்வுகள் போல மிக அற்புதமாக நிறைவேறும்.
ஒரு உண்மையான சித்தன் தான் சித்தன் என்று சொல்லுவதில்லை.ஒரு உண்மையான மகான் தான் ஒரு மகான் என்று ஒரு பொழுதும் சொல்லுவதில்லை.ஒரு பைசாகூட எந்தவிதத்திலும் இவர்கள் வாங்குவதில்லை.இதில் எல்லாம் அவர்களுக்கு கொஞ்சம் கூட ஈடுபாடில்லை.சட்டையில் இருக்கும் தூசி தட்டுவது போல தட்டிவிடுகிறார்கள்.இந்த அய்யாவும் இப்படித்தான் .மாறாக நிறைய அள்ளி அள்ளி வாரி வழங்குகிறார்கள்.அன்பின் ஆற்றல் கரைபுரண்டு ஓடுகிறது அமைதி ,நிதானம் ,பொறுமை முக்கால ஞானம் என எல்லாம் இவர் தேகத்துள் ,முகத்துள் நிறைந்துள்ளது.கண்கள் ஒளி வீசுகிறது.இவர் பார்வையை எம் கண்கள் ஒரு பத்து நொடிக்கு மேல் பார்க்க இயலவில்லை.அந்த அளவுக்கு ஆற்றல் நிரம்பி வழிகிறது.தர்மம் ,புண்ணியம் ,இறைநோக்கிய சிந்தனை,அன்பின் நிலையாய் இருத்தல் என இது போன்ற பண்புநிறைந்தவர்களை வெகு எளிதில் ஈர்த்து அவர்களுக்கு ஆசி வழங்குகிறார்கள்.எமக்கு இந்த அய்யாவுடன் ஏற்பட்ட முதல் அனுபவமே அன்பின் ஆழம் எனும் கட்டுரை.எம் வாழ்வையே மாற்றியது.அகத்தியர் அய்யாவின் சூட்சும தரிசனம் உணரவைத்தது.எமக்கும் எழுதும் தன்மை தந்தது.அகத்திய மகரிஷியின் சீடர் என்று தம் நெஞ்சின் மையபகுதியில்,தம் இரு கைகளை கோர்த்துக்கொண்டு ,இந்த அய்யா சொல்லும் வாக்கு.அருள் வாக்கு.ஆணித்தனமான வாக்கு.மறுப்பு சொல்ல இயலா வாக்கு.அற்புதம் .அற்புதம் இந்த ஐயாவை சந்தித்தது.இறைக்கும் அகத்தியர் அய்யாவுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்பது தெரியவில்லை.அன்பே நிறைகிறது நெஞ்சத்துள்.அங்கே விடுபட்ட ஒரு சில உரையாடல்களை இங்கே கொடுத்துள்ளோம்.
"...எம் தந்தை இறக்கும் நாள் நேரம் குறித்து அதை அவர் வாழ்ந்த காலத்திலே பத்திரிக்கை அடித்தேன் .எல்லாரும் நல்ல நிகழ்வுக்கு தான் பத்திரிக்கை அடிப்பார்கள்.ஆனால் நானோ எம் தந்தை இறக்கும் காலம் முன்னரே அறிந்து பத்திரிக்கை அடித்து பலரிடம் கொடுத்தேன்.இவனுக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதா ?என்றார்கள் பலர். யாம் குறித்த நாளும் நேரமும் வர
என் தந்தை இறந்த பின்பு வாயடைத்துபோய்நின்றார்கள் .
ஒல்லியான தேகம் .நீண்ட முடி .நீண்ட தாடி,அழுக்கும் வெண்மையும் நிறைந்த ஜிப்பா.கிட்டதட்ட ஆறு அடி உயரம்.இவர் தான் யாம் சதுரகிரியில் சந்தித்த முதல் சித்தர்.இந்த அய்யா சொல்லுவதை மட்டும் தான் நாம் கேட்கமுடியும்.யாரும் எந்த கேள்வியும் இவர் முன்னே கேட்க இயலாது. இவர் பேசும் பேச்சை மட்டுமே கேட்க முடியும்.ஆனால் எந்த ஒரு கேள்வி மனதுள் எழுந்தாலும் அதற்கான பதில் கிடைத்துவிடும் .மனித பேச்சுக்கு சுத்தமாக முரண்பட்ட பேச்சு .நாடி நரம்பெல்லாம் சுத்தமாக ஒடுக்கிவிடுகிறார் இந்த மகான்.
நீண்டநாட்களாக கடுமையான வயிறுவலிக்கு தேடி தேடி அலைந்து ,கடைசியில் இந்த ஐயா அவரை அழைத்து ,வயிற்றில் தம் கைகளால் வருட அரை நொடியில் அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது .சற்றே கண் அயர்ந்தவன் சட்டென விழித்து ,எழுந்து ஐயாவை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நன்றி மழ்கி சென்றுவிட்டான். அவனுக்கு வலி சரியாகிவிட்டது .சுந்தரமகாலிங்க சன்னதியிலிருந்து மேலே இருக்கும் ஒரு ஐம்பது அடி உயரத்தில் இருக்கும் இடத்திற்கு சட்டென சென்றுவருகிறார்.நாம் சென்றால் குறைந்தது பத்து நிமிடமாவது ஆகும்.ஆனால் இவர் சும்மா பறக்கிறார்.வெறும் கண்ணிற்கு நடப்பதுபோலதான் தெரிகிறது.விரைவில் சென்று வருவது வியக்க வைத்தது.
வாருங்கள் உணவு அருந்தலாம் என்று எங்களை அழைத்து அமரசெய்து,அவர் எங்களுக்கு பரிமாறுகிறார்.ஐயா நீங்களும் உணவு அருந்தளாம் வாருங்கள் என எண்ணம் எழும் போதே ,அங்கிருந்த அப்பளத்தை பாதியாக ஒடித்து , ஒடித்த பாதியில் கொஞ்சம் ஒரு கடி .அவ்வளவு தான் ,தாம் உணவு அருந்திவிட்டோம் என்று சிட்டாய் பறக்கிறார்கள் இந்த ஐயா.சுந்தர மகாலிங்கம் சன்னதியிலிருந்து ஒரு வயது முதிர்ந்த அய்யா இன்று எத்தனை முட்டாள்களை சந்தித்தாய் ? ...என்று இந்த மகானிடம் கேட்பாராம்.ஒரு முறை இந்த மலை பகுதியில் ஓடி வரும் பொழுது ,நூறடி பள்ளத்தில் கால் இடறி விழுந்துவிட்டேன்.இந்த பெரியவர் வந்துதான் என்னை காப்பாற்றினார்..என்கிறார்
நாம் மீண்டும் ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம் ...என்று சொல்லி சென்றுவிட்டார்.அந்த நாள் எப்பொழுது என்று தெரியவில்லை.இந்த அய்யாவின் ஸ்தூல சந்திப்பிற்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்.
மஹாபைரவாஷ்டமி மிகுந்த பலனை தரவல்லது. மஹாபைரவாஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி இது .ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹா ..!! எனும் மந்திரம் உச்சரித்தல் மிகுந்த நன்மை பயக்கும்.எல்லா தேய்பிறை அஷ்டமியிலும் இதை உச்சரிக்கலாம்.இந்த ஹ்ரீம் பீஜம் நம்முள் உறைந்து கிடக்கும் சக்தியை வெட்டவெளியில் இருக்கும் இறை சக்தியோடு இணைத்து ,நமக்கும் இறைக்கும் உண்டான தொடர்பினை பலப்படுத்துகிறது.இன்று நமக்கு உடலாலோ,உள்ளத்தாலோ இன்னல் தரும் செயலுக்கெல்லாம் மூல காரணம் ,நம் கர்மவினை.அதன் தாக்கத்தை குறைக்கவல்லது "ஒம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹா " எனும் தாரக மந்திரம்.
மஹா பைரவரின் அருள் இருந்தால் ,மகான்களை சந்திக்கலாம்.மகான்களை சந்தித்தால் அவர்கள் வாழ்வை மிக எளிதாக்கிவிடுவார்கள்.நம் கர்மவினை சுமையை குறைக்கும் அதிநுட்பம் அறிந்தவர்கள்.இறை கட்டளை மீறாமல் நன்கு அறிந்து ,அதே சமயம் தம்மை நாடி வருபவரின் இன்னல்களுக்கு ,சுமையை எளிதாக்கி ஒரு அழகான வழிசொல்லுபவர்கள்.
மகாபைரவரின் அருளோடும் ,மகானின் ஆசிகளோடும் அகத்திய உள்ளங்களை வாழ்த்தி வணங்கி அடுத்த ஒரு நிகழ்வில் சந்திகின்றோம்
வாழ்கவளமுடன்
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!!
அகத்திய பக்தர்கள் பார்வைக்கு இந்த பதிவை அருள்கூர்ந்து வையுங்கள் ஐயா
ReplyDeletehttp://fireprem.blogspot.com/2018/12/blog-post.html?m=1