ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்
சட்டைநாத சித்தர் ஒரே நேரத்தில் நிறைய இடங்களில் ஜீவசமாதியில் சென்றிருக்கிறார்கள்.திருவேடகத்தில் ஜோதி ரூபமாய் சமாதியில் இருக்கிறார்கள்.எப்பொழுதும் நெய்விளக்கும் எண்ணை விளக்கும் எரிந்துகொண்டிருக்கிறது.இறை அலைகள் நிரம்பி வழிகிறது.அய்யா அவர்கள் வரலாறு சித்தர் பரம்பரை வழியாக நீண்டு தொடர்கிறது.அய்யா சிங்களத்திலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்து விவசாயம் தொழில் செய்தார்கள் எனவும்.விவசாயம் நலிய ,கோவிலில் யாசகம் பெற்று தமது தாய் தந்தைக்கு உணவு அளித்துவந்திருக்கிறார்கள்.ஒரு நாள் கோவிலில் யாசகம் எடுக்கும் போது சங்குபூண்ட முனிவர் வடநாட்டிலிருந்து இங்கே வர,அய்யாவும் அவரிடம் சென்று தமது நிலைமையை கூற ,அவரும் எல்லாம் விதியின் வழிதான் செல்லும்,தாய் தந்தையை காப்பாற்றுவது மிக புண்ணியமான செயலாகவும் ,விரைவில் வழிபிறக்கும் அதுவரை சிவன்பால் சிந்தையைவைத்து கடமையை செய் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் அந்த முனிவர்.பிறகு சிவன்மீது சிந்தைவைத்து செயல் புரிய விவசாயம் நன்கு செழித்துவளர்ந்து ,அதை வைத்து தம்மால் இயன்றவரை ஏழை எளிய மக்களுக்கெல்லாம் உணவு அளித்து தினம் கோவில் சென்று சிவனை வழிபட்டார்கள்.பிறகு திருமணம் நடந்து,இல்லறவாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம் நடத்திஇருக்கிறார்கள்.ஒரு முறை சிவனை வழிபட்டு வெளியே வெற்று உடம்போடு வரும் பொழுது ,சட்டையை அணிய முற்பட , தீடீர் என்று ஒரு குரல் கேட்டதாம் " ஏனப்பா உடுத்துவதில் ஆர்வமாய் இருக்கிறாய் ,உதறிவிட எண்ணமில்லையா ?"
சட்டென திடுக்கிட்ட சட்டைநாதர் ,எதிரே நிற்கும் சங்கு பூண்ட முனிவர் காலில் விழுந்து வணங்கி ,சாமி "வழிகாட்டுங்கள் என கேட்க" ,உதறிவிட ஆயத்தமாக இருக்கிறாயா ? என கேட்க ,சட்டைநாதரும் ,"ஆம் " என்று அணிந்திருந்த சட்டையை உதறினார்கள். "சட்டைமுனியே எம்மோடு வாரும் என " அழைக்க ,அய்யா சங்கு பூண்ட முனிவரோடு கயிலாயம் நோக்கி புறப்ட்டார்கள்.சங்கு முனிவரின் கையை பிடிக்க ,இருவரும் ஆகாய மார்க்கமாக கையிலாயம் சென்றார்கள்.அம்முனிவரோடு எங்கும் திரிந்து ,போகர்,கருவூரார்,அகத்தியர் போன்ற சித்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டு ,விடாமுயற்சியால் ஞானத்தின் உயர்நிலையை அடைந்திருக்கிறார்கள்.சட்டைமுனி பல ஊர் பயணிக்கும் போது ஒரு முறை திருவரங்கம் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் அடைந்து ,பெருமாளை தரிசிக்க ஆயத்தமாகி ,நடைசாத்துவதற்குள் விரைவில் ரெங்கனை தரிசிக்க செல்ல முற்படும்போது ,கோவிலில் பூஜை முடிந்து கோவிலின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாம்.ஏமாற்றத்துடன் கோவிலில் வாசலில் காத்திருந்த சட்டை முனி அரங்கா !! அரங்கா !! அரங்கா !! என கத்திட ,உடனே கதவுகள் தாமாகவே திறந்ததாம்.அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்கு கிடைத்தது.அரங்கனின் ஆபரணம் ஒவ்வொன்றாய் சட்டைமுனியின் உடம்பில் விழ,அரங்கா .!! அரங்கா !! என்ற சத்தம் கேட்டவுடன் ஊர் மக்கள் திரள வியப்புடன் பார்த்துகொண்டிருக்கும்போதே ,அரங்கனுடன் ஒன்றாக கலந்தார்களாம் சட்டைமுனி.இப்படி அய்யாவின் வரலாறு அற்புதமாய் தொடர்கிறது.
அலை பிரித்து உணரும் தன்மை இங்கே அவசியம் தேவைபடுகிறது.ஒரு சில ஜீவ சமாதிகலிருந்து தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் அலைகள் ,பிரதோஷ காலங்களில் பழமையான சிவன் கோவில்களில் கருவறையை சுற்றிலும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அருள் அலைகள்,பஞ்சேஸ்டி அகத்தியர் கோவிலில் இருக்கும் ஒருவித தகதக வெனும் யாக அக்னி அலைகள்,திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் சுனை அருகே உள்ள பல்வேறு நறுமணம் தரும் அலைகள், ராகு காலத்தில் மதுரை தெப்பகுளம் அருகில் உள்ள காலபைரவரின் உக்கிரம் நிறைந்த அலைகள்,சிறுமலை அகத்தியர் கோவிலில் மலை மீது என்றும் என்றென்றும் உறைந்துகிடக்கும் ஆழ்ந்த அமைதி அலைகள் , என பல்வேறு அலைகள் இவை யாவும் மனதை செம்மை செய்து , மனதை அதன் இருக்கத்திலிருந்து சற்றே தளர்வு படுத்தி, அமைதியை நோக்கி பயணிக்கவைக்கிறது. இது போன்ற அலைகள் நிரம்பிய இடம் சென்றாலே போதும் , மனம் அதன் சுழலிலுருந்து சற்றே இறங்கி ஒரு வித சலனமற்ற நிலைநோக்கி ,நிறைவை நோக்கி ,இறையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது.கடும் தவமோ அல்லது மந்திர உச்சாடனமோ போன்ற எதுவும் இங்கே தேவையில்லை.அங்கே கொட்டிக்கிடக்கும் அமைதியை லேசாக உணர முற்பட அருள் அலைகள் சூழ்ந்துகொள்கிறது.அன்பால் இதயம் நிறைந்து விடுகிறது. யாருடனும் பேசுவதை குறைத்துவிடுகிறது.ஆழ்ந்த மௌனம் சூழ்ந்து முழுமையை நோக்கி நம்மை பயணிக்கவைக்கிறது.
எல்லாம் இறையே.கற்றது .கேட்டது. படித்தது ,அழுதது ,புலம்பியது,இன்புற்றது,துன்புற்றது,பல் வேறு கமிட்மென்ட் ,என எல்லாம் ஓடி ஒழிந்து , எல்லையற்ற பரவெளி அலையில் கரைந்து ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது.ஒரே மனம் இறை உணரும் தன்மைக்கு முன்னரும் இதே மனம், பல்வேறு மாய அழுக்குகளை பிடித்துக்கொண்டு , ஆற்றலை மொத்தமாக விழுங்கிக்கொண்டு ,துவம்சபடுத்தி ,நாசம் செய்த அதே மனம் தான் தற்பொழுது இறையெனும் ஆனந்த அற்புத அலையில் கரைந்து ,மென்மையாகி , இலவம் பஞ்சுபோல எடையற்று, இறைக்கு உள்ள தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றுக்கொண்டு அடர்ந்து படர்ந்து விரிந்து எல்லைஎல்லா பரவெளியில் தம்மை மூழ்கச்செய்து ,ஆனந்தத்தால் திளைக்கிறது.
சோழவந்தான் ஊரின் பெயரிலே ஒரு கம்பீரம் இருக்கிறது .வைகை ஆற்று கரையோரம் நீண்ட தென்னை மரங்களும் , நெல்லும் கரும்பும் வெற்றிலையும் வாழையும் பயிரிடபட்டு பச்சைபசேல் என காட்சியளிக்கிறது.வண்டியை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு,வெறும் காலால் ஆற்று கரையோரம் நீண்ட தூர நடைபயணம் மேற்கொண்டோம்.வாகனபுகையின்றி ,ஆள் அரவமின்றி , தென்றலாய் அது தாமாய் வந்து மோதும் இயற்கை காற்றையும் ,கரை அருகே இருக்கும் மரங்களோடு பேசிக்கொண்டும் , உமக்குத்தான் ஆயிரம் கமிட்மென்ட் எமக்கோ என்றுமே இறை எம்முள் ஆழப்பதித்துவைத்த சேவை செய்யும் வேலைமட்டுமே ,கிடைக்கும் நீரையும் ,காற்றையும் ,வெளிச்சத்தையும் வைத்துக்கொண்டு ,மஞ்சளும் நீளமும் வெண்மையும் என பல கலவையில் அழகிய முழுமையான சின்னஞ்சிறு பூவாய் மிளிர்கிறேன் பார் என ஆங்காங்கே பசுமையில் பூத்துக்குலுங்குகிறது இயற்கை.அன்று பூத்த சின்னஞ்சிறு பூவும் ,அதன் நறுமணமும் அழகும், ,பசுமையின் அழகோடு செய்த நடை பயணம் ஒரு மிக பெரிய நிறைவையும் மாற்றத்தையும் தந்தது.இவை எல்லாம் நேரடியாக உணர்ந்தால் மட்டுமே அதன் தன்மை புரியும்,
திருவேடகம் ஊரின் எல்லைக்கு அருகிலேயே இருக்கிறது.அய்யா சட்டைநாதர் சித்தர் அய்யாவின் ஜீவசமாதி.அருகிலே இருக்கும் கடையில் சாம்பிராணியும் ஊதுபத்தியும் வாங்க செல்ல,கடையில் இருக்கும் ஒரு வயதான பெண்ணோ அன்பால் மிளிர்கிறார்.எவ்வளவு பணம் என்று கேட்க ,அன்பின் இயல்போடு ...மென்மையான நெகிழ்ந்த குரலில்... அய்யாவுக்கு தானே வாங்குறீங்க ,இருக்கிறதை கொடுங்க ,இல்லையென்ன பராவாயில்லை அய்யா.... என்கிறார்.அய்யா.சட்டைநாத சித்தரின் அருகிலே இருந்து அய்யாவுக்காக சேவை செய்யும் இந்த பாட்டியின் விதம் எம்மை முற்றிலும் கவர்ந்தது.வாழ்கவளமுடன் பாட்டி தொடர்ந்து அன்பால் தங்களது சேவை தொடருங்கள் என்று வாழ்த்திவிட்டு அய்யாவின் ஜீவசமாதிக்கு வந்தோம்.இங்கே அய்யா ஜோதி ரூபமாய் சமாதியில் இருக்கிறார்கள்.எப்பொழுதும் நெய்விளக்கும் எண்ணை விளக்கும் எரிந்துகொண்டிருக்கிறது.அற்புதமான அலைஇயக்கம் ,இறை அலைகள் ததும்பி வழிகிறது.
எமது சிற்றறிவிற்கு கிடைத்த ஒரு காட்சி இங்கே.ஒரு அழகான பெருமாள் கோவில் ,பெருமாள் சயனத்தில் இருக்கிறார் .அதில் ஒரு புறமுள்ள சுவரின் வழியே சிறு கதவு ,அதன் வழியே சென்றால் கொஞ்ச தூரத்தில் சித்தரின் இருப்பிடம் வருகிறது அதன் அருகே ஒரு அழகான சுனை ,அதில் கொஞ்சம் நீர் நிரம்பி இருக்கிறது .ஒரு பத்து முதல் இருபது குடம் நீர் மட்டுமே இருக்கிறது ,ஒவ்வொரு நாளும் அதன் ஒரு குறிப்பிட்ட அளவே சுரக்கிறது சுனை .இந்த நீரினை மோந்து அந்த சுனையின் அருகிலே ஒரு சிறிய துவாரம் வைத்திருக்கிறார்கள் .அதில் ஊற்றினால் இந்த நீர் அதன் துளை வழியே சென்று நேராக பெருமாளின் சிலையில் அபிஷேக நீராக மாறுகிறது .கண்ணாடி போன்ற நீர் ,தெள்ளிய சுவை .அற்புதமாக இருக்கிறது .சட்டைநாத சித்தர் எங்குகிருக்கிறாரோ அங்கே அருகே ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது,அதன் அருகிலே ஒரு சுனையோ கிணறோ நீருடன் இருக்கிறது.அதன் நீரே மூலவரின் பிரதான அபிஷேக நீராக இருக்கிறது.
சட்டை முனி ஞானம்
காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப் ...
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.
தானென்ற "மேரு"வைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்;
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்;
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா;
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே.
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்;
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்;
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்;
மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்;
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு;
ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்;
அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.
பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்;
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்தபின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்;
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாற்
காயசத்தி விக்கினங்கள் இல்லை யில்லை;
உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!
மதுரை ஊரைவிட்டு வெகுதொலைவில் சோழவந்தான் செல்லும் வழியில் அதற்கு முன்னரே திருவேடகம் இருக்கிறது.அங்கே ஊரின் நுழைவுப்பகுதியில் முன்னரே இருக்கிறது ஸ்ரீ சட்டைநாதர் சித்தர் அய்யா ஜீவாசமாதி. பௌர்ணமி அமாவாசை நாட்களில் மக்கள் வருகிறார்கள்.ஏனைய நாட்களில் கூட்டமின்றி அமைதியாக இருக்கிறது.ஆழ்ந்து அமர்ந்து தியானம் செய்து அய்யாவின் ஆசிர்வாதங்களை பெற ஒரு அருமையான இடம்.அய்யாவின் அருள் ஆசிகளோடு அகத்திய உள்ளங்களை அடுத்த கட்டுரையில் சந்திக்கிறோம்.
வாழ்க வளமுடன்
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
sir
ReplyDeleteplease explain correct place, bus route, bus stopping, koil timeing, if phoe no available pls.
Madurai to Cholavanthan bus ,getdown at Thiruvedagam busstop .Ayyas place is on the entrance of the village.
ReplyDeleteHope as usual timing .
Here the bus details bur Just check at Bus stand
Bus No. 63, 68, 54, 29A, 29LSS - from Madurai Periyar Bus stand
Bus No. 28 - from Madurai Anna Bus stand
Bus No. 93 - from Madurai Matuthavani Bus stand
om agathisaya namaha
ReplyDelete