Monday, February 29, 2016

தந்தை தரும் தமிழ் ஞானம் !!!

அய்யாவின் பாடல்களை ஆழ்ந்து படிக்கும் போது ,ஒரு வித அலை எங்கோ இழுத்துச்செல்கிறது .எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமைக்கு அழைத்து செல்கிறது. அது  தமிழ் கொஞ்சிவிளையாடும் காலம் .தமிழ் என்றால்  இன்று நாம் பேசும் தமிழல்ல. தூய தமிழ்,  நுனி நாக்கு பிறழ்கிறது.அந்த தமிழை கேட்கவே ஒரு வித ஈர்ப்பு வருகிறது.இப்படி ஒரு தமிழா என்று வியக்கும் அளவிற்கு ,மிக அழகிய தமிழ் ,பசுமை தமிழ், அன்புத்தமிழ், கொஞ்சும் தமிழ், செந்தமிழ் ,மெல்லிய தமிழ்,அமுதம் சுரக்கும் தமிழ்,இனிமை கொஞ்சும் தமிழ்.ஆழ்ந்து கவனிக்க இறைஅலைகள் வார்த்தைகளாக தமிழ் மொழி மூலம் தெறித்து மொழியாக வார்த்தையாக துள்ளி  உருண்டு ஓடுகிறது. அன்பும் சத்தியமும் நிறைந்த ஒரு காலம்.உண்மை மட்டும் உலகை ஆண்ட காலம்.இயற்கை  நறுமணமும் ,தூய காற்றும் ,மூலிகை வளமும் நன்கு நிறைந்த செல்வ வளம் நிறைந்த ஒரு காலம். எவர் நினைக்கும் எண்ணமும் தூய அலையாக ஆங்காங்கு சுழன்று செல்லும்,அதன் தன்மை பிரித்து இது இவர் உடையது தான்  என்று பிரித்து சொல்லும் அளவுக்கு சூழல் தூய்மையாக உள்ள ஒரு காலம்.எழில்கொஞ்சும் இயற்கையோடு இயற்கையாக இறைநிலைக்கு அடுத்த நிலையாய் உருவான காலம் . தமிழ் மொழியே மிக பழைமையானது.அய்யாவின் பாடல்களும் கிட்டதட்ட அவ்வாறே இருக்கிறது.


எத்தனை பெரும் ஞானி நம் தந்தை.எத்தனை ஞானம் அவர் பெற்றது .எந்த துறையை எடுத்தாலும் அதன் முழுமைவரை சென்று  உணர்ந்து அதன் அதி நுட்ப திறத்தில் ஆழ்ந்து, அதிலே மேன்மைதன்மை பெற்று,தாம் பெற்ற ,அத்தனை ஞானத்தையும்,அத்தனை நுனுக்கங்களையும்  உருமாற்றி, பாடல்களில், தமிழ் மொழிபாடல்களாக எழுதிவைத்துள்ளார்கள்.எந்த ஒரு  காலகட்டத்தில்  வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும், இனிவாழும், மனிதகுலத்திற்கும்  எல்லா வகை தேவைகளையும் ,அதி நுட்ப திறத்தையும் ,அழகிய தமிழில் அற்புதமாக என்றோ எழுதிவைத்துவிட்டார்கள்.எத்தனை ஆயிரம் ஆயிரம் பாடல்கள் ....கண்டிப்பாக  இதற்கு தகுந்த தேவையான நேரம் ஒதுக்கி,இவை யாவையும் முழுமையாக ,பொறுமையாக அமர்ந்து ஆழ்ந்து படித்தால் தான் பொருள் விளங்குகிறது.ஓரிரு பாடல்களை  கீழே கொடுத்துள்ளோம்.இவை எல்லாம் நுனிபுல் மேய்வது போலதான்  எம்முடைய  திறன் இங்கே.சும்மா பின்னர் படிக்கலாம் என ஒதுக்கிவிட்டு செல்லாமல் ,இது போன்ற அய்யாவின் கருத்துகளை முதலில் உள்வாங்க ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துவதே எமது ஒரு முயற்சி என உணர்கிறோம்.

இன்றைய காலத்தில் அனைத்தும்அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.ஆனால் யாரும் அதைமுறைப்படி பின்பற்ற முடியவில்லை.ஒரு சில விசயங்கள் ஒரு சிலர் சொன்னால் மட்டுமே அதை ஆணித்தனமாக உள்வாங்கி பின்பற்ற முடிகிறது.அப்படி ஆணித்தனமாக எமக்கு எம் நெஞ்சத்துள் உணர வைத்தது எம் தந்தையின் ஞானபாடல்கள்,தந்தையின் ஞானத்தமிழ் .இவை எல்லாம் தந்தை அளிக்கும் கருணையின் ஔ சிறு துளி.
உண்ணுங்கால் , "நீரருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார்தம் பேருரைக்கப் போமே பிணி .."  என பிணி அகன்று ,வாழ்வாங்கு வாழ தந்தையின் கருத்துகளை உணர முற்படுவோம் என  கூறி ,மீண்டும் அடுத்த கட்டுரையில் விரைவில் சந்திக்கிறோம் .!!!

ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!