Wednesday, May 24, 2017

ஸ்ரீ பைரவ வாகனம் ..!!!


பிரபஞ்ச நாயகனே!! பெம்மானே !! தூசியினும் தூசியாய் இருக்கும் ,எம்மால் எம் கற்பனையால் கூட ,நின் அருள் தாண்டவ அலைகள் நடத்தும் அற்புத அரங்கேற்றம் சிறு  துளி அளவுகூட  புரிந்துகொள்ளஇயலவில்லை.நித்தம் ஒரு புதுமை என எண்ணில் அடங்கா கோள்கள் உருவாக்கும்  பேராற்றல் கொண்ட நாயகனே ..!! கோடான கோடி ஜீவன்களையும் உருவாக்கி,காத்து,அரவணைத்து ,அழித்து ,புரிய இயலாத விந்தைபுரியும் ஆதி அந்தம் இல்லாத ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!தூயோனே ,,!! மறையோனே ..!!   நிறைந்தோனே ..!! நின் பெருமை எண்ணி ,செய்வதறியாது, நெக்குருகி நெஞ்சம் நிறைந்து ,உள்ளம் உறைந்து நின் தாள் பணிந்து போற்றி வீழ்ந்து வணங்குகின்றோம்,!!அருள் புரிவாய் அய்யனே .!! நின் பாதம் சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!!

ஏழரைநாட்டு சனியே பாடாய் படுத்தும் .அதுவும் ஏழரைநாட்டு சனியில் ஜென்மசனி ஒருவருக்கு நடந்தால் ,சொல்லவே வேண்டாம்.அது உடம்பில் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தும்.ஒரு சாதாரண வேலையை கூட செய்யவிடாமல் சுத்த சோம்பேறியாக்கிவிடும்.எதுவும் புரியவிடாது .எங்கே எப்போ வெளிச்சம் வரும் என தெரியாது.எருமை மாட்டில் மழை பெய்வது போல தான் எந்த ஒரு முயற்சியும் ,பொருளாதார மந்த நிலையும் ஏற்படுத்தும்.எந்த ஒரு முயற்சியையும் எடுக்கும் மன நிலையை வெகு எளிதில் நமக்கு கிட்டிவிடாது இது போன்ற காலகட்டத்தில்.மனதை எக்காரணம் கொண்டும் நடந்த நிகழவுகள் பற்றியோ அல்லது நடக்கபோகும் நிகழ்வுகள் பற்றியோ  எண்ணி எண்ணி ,வருத்தமோ குழப்பமோ செய்து ,இருக்கும் மன ஆற்றலை துவம்சம் செய்யகூடாது.அப்படி செய்தால் அது மேலும் சுத்தமாக நமது மன ஆற்றலை தின்றுவிடும்.நம்மிடம் இருப்பது மனம் ஒன்றே, அதை வைத்துக்கொண்டு தான் எல்லாவிதமான சிக்கல்களையும் சரிசெய்யவேண்டும்,ஆக விழிப்புடன் எக்காரணம் கொண்டும் மன ஆற்றலை துவம்சம் செய்ய இடம் தரமாட்டேன் என்று விடாபிடியாக உறுதிமொழி நமக்கு நாமே எடுத்துக்கொள்ளல் வேண்டும்.எது வரினும் எதிர்கொள்வோம். மனதினை எப்பொழுதும் ஆக்கத்துறையிலேயே செயல் படுத்தல் நலம் உருவாக்கும்.மனதின் திடத்தை அதிகரிக்கும்.ஒரு ஸ்திரத்தன்மையை தரும்.மனம் விரும்பி ஏதேனும் ஒரு ஸ்லோகத்தை சொல்லி அதிர்வு அலைகள் நன்றாக உள்வாங்கிவைத்துகொண்டு உலகவாழ்வாதாரத்தை எதிர்கொள்ளல் அவசியமாகிறது. அல்லது ஏதேனும் ஆகர்ஷன சக்திநிறைந்த ஆலயம்  சென்று மனதினை, நன்கு அதிர்வு அலைகளை நிரப்பி ஸ்திரத் தன்மையை அதிகரித்துக்கொள்ளல் என்பது கட்டாயதேவையாகிறது.  ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி அதிர்வு அலைகளை நன்கு உள்வாங்கலாம் அல்லது ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் சொல்லி நன்கு சக்திமிக்க அலைகளை நிரப்பிக்கொண்டு வாழ்வியலை எதிர்கொள்ளலாம்.அல்லது நமக்கு தெரிந்த வேறு ஏதேனும் ஒரு ஸ்லோகமோ , அல்லது  முயற்சியோ செய்து நல்லஅதிர்வு அலைகளை நிரப்பி எதிர்கொள்ளலாம்.எந்த ஒரு ஸ்லோகமும் மந்திரமும் பைரவபெருமானின் அருள் ஆசி இருந்தால் மட்டுமே அதன் பலன் விரைவில் கிடைக்கும். பைரவரை வணங்கி அவர் ஆசிகள் பெற்றால் தான் சத்தியஉலகத்தின் கதவுகள் திறக்க சாவி (key) கிடைக்கும்.அங்கிருக்கும் அதிர்வு அலைகளை நாம் சொல்லும் அட்சரம்  மூலம் இருக்கும் இந்த உலகத்தில் கொண்டுவந்து நாம் உணரலாம்.எமது அனுபவத்தை பொறுத்தவரை இது  போன்ற சனிதிசை நம்மை பாடாய் படுத்தும்  காலகட்டங்களில், வெகு எளிதில் உறுதுணையாய் இருப்பது எம்பெருமான் பைரவபெருமானே.உள்ளம் நிறைந்த அன்பால் அழைத்தால், அழைத்த உடனே வருவான்.எமக்கு தெரிந்த மிகச்சிறந்த வழி பைரவரை கண்ணை மூடிக்கொண்டு வழிபடுவதே சரியானதாகும்.பைரவ மந்திர உச்சரிப்பும் ,அதன்அதிர்அலையும் இது போன்ற மந்தநிலையை அடித்து விரட்டி ஓட்டிவிடும்.உடலில் உள்ளத்தில் ஒரு சுறுசுறுப்புத் தன்மையை ஏற்படுத்திவிடும்.அந்த அளவுக்கு powerful .பைரவ அதிர்வு அலைகள் நமது உடலில் உள்ள சனியின் receiverஜ நன்கு சுத்தபடுத்தி இதமான அலைகளை உணரசெய்யும்.செய்த பாவத்திற்கு நடக்கும் இந்த கர்மவினை நிகழ்வுகளை அனுபவிக்க வேண்டியது தான் .ஆனால் அதன் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் அல்லவா.இதற்கு பைரவபெருமான் உதவிசெய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஒரு அழகான தூய வெண்ணிறம் கொண்ட பட்டுபோல் மிருதுவான வெண்பஞ்சு போன்ற சூட்சும அலை வடிவில் இருக்கும் ஒரு நாய் எமது அருகே வந்தமருகிறது.யாம் சொல்லும் பைரவ ஸ்லோகங்களால் இது நிகழ்கிறது எனதுணருகிறோம்.இரு கால்களை முன்னால் வைத்துக்கொண்டு ,ஒரு செல்லகுட்டி போல அமர்ந்து மிக அழகாக ,தெள்ளத் தெளிவான அலைஇயக்கத்துடன்அன்பால் எமை ஈர்க்கிறது .கண் திறந்து பார்த்தல் காணவில்லை.கண் மூடி பைரவ ஸ்லோகங்களை சொல்ல மிக அழகாக தெரிகிறது ,எப்படி இங்கே  மிக அற்புதமாக இருக்கிறது இந்த பைரவவாகனம் ,என இந்த சூட்சும தேகத்தில் உள்ள உருவத்தை அறிய முற்பட ஆரம்பிக்கும் போதே , எம்மை மறந்து  யாம்ஆழ்ந்த ஈர்ப்புஅலைஇருக்கும் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டு,எமது நிலை முற்றிலும் மறக்கிறோம். இதன் பார்வையும்,அதன் அழகும், அது இங்கே இருப்பதால் ஏற்படுத்தும் அலை இயக்கமும், மிக அற்புதமாக சொர்க்கலோகம்போல் இருக்கிறது.பைரவ அதிர்வு அலைகள் உள்ளத்தில் இருக்கும் வரை, இந்த பைரவ சூட்சும வாகனம் எம்முடனே இருக்கிறது .எம்முடனே வருகிறது.யாம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் ஒரு பாதுகாப்பு கவசம் போல எமக்கு அருகிலேயே இருக்கிறது.அனைத்தையும் மிக அழகாக கவனித்து எதிர்கொள்கிறது.நேரம் செல்லச்செல்ல  அதிர்வு அலைகள் எம்உள்ளத்தில் குறைந்தவுடன் அது எங்கோ சென்றுவிடுகிறது.இந்த பைரவ வாகனமாகிய நாய் ஒரு சாதரண நாய் போல அல்ல.நாய் என்று சொன்னவுடனே நாம் வேறுமாதிரி எண்ணங்களை மனதில்வைத்துள்ளோம்.இது அப்படி அல்ல.இந்த பைரவ வாகனம் புனிதமானது.சூட்சும அலைகளால் தெள்ளத்தெளிவான அப்பளுக்கற்ற தூய நீர் போல் இறைதன்மை மிகுந்து அன்பால் கவர்ந்து இழுக்கிறது.யாருக்கும் இந்த பைரவவாகனம் பார்த்தஉடனே பிடித்துவிடும்.யார் வேண்டுமானாலும் இதை அழைக்கலாம்.உங்கள் உள்ளத்துள்ளே பைரவ அதிர்வு அலை இருந்தால் போதும், அங்கேயே இது இருக்கும்.உங்கள் உடனே பயணம் செய்யும் .எந்த இன்னல்கள் வந்தாலும் எதிர்கொண்டு உங்களை காக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.யார்  ஒருவர் அன்பால் பைரவபெருமானை பைரவ காயத்ரி ஸ்லோகத்தால் வழிபாடு செய்கிறார்களோ அவர் இருக்கும் இடம் நோக்கி இந்த பைரவ சூட்சும வாகனமாகிய நாய் வந்துவிடுகிறது என்பதை எம்மால் யூகிக்க முடிகிறது,அங்கு இருக்கும் நடக்கும் அனைத்தையும் மிக அழகாக கவனித்து ,தம் இறை பணி ஆற்றுகிறது.எம்பெருமானின் அலைகள் தாங்கி,எம்பெருமானே அருகில் அமர்ந்து இருந்தது போல அனுபவம் தருகிறது. சர்வேஸ்வரனே பைரவர் எனும் தோற்றம் எடுத்தார்.பைரவம் என்றால் ஆனந்தம் .ஆனந்தம் என்றால் எம்பெருமானின் அருள் அலைகள் சூழ்ந்துள்ளது என்று அர்த்தம்.ஆனந்தமாகிய அன்பு மிகுதி அலைகளை நினைத்த நேரத்தில் கிடைக்க செய்பவர். ஸ்ரீபைரவரை வழிபடும் அன்பர்களுக்கு இந்த பைரவவாகனம் ஒரு அசைக்கமுடியா நம்பிக்கையை அளித்து ,எம்பெருமான் அருள் ஆசிகள் அலைகள் சுமந்து ,ஒரு நிறைவுதந்து ,பெருமானே நேரில் வரும்  காலம் வெகு விரைவில் கிட்டும் என்பதையே சொல்லாமல் சொல்கிறது.பைரவபெருமானை அன்பால் நெஞ்சம் நிறைந்து ,ஆழ்ந்து , வணங்கி ,அழைத்து ,பைரவ அதிர்வுஅலைகள் உணர்வோம்.எதிர்வரும் கர்மவினை இன்னல்கள் எல்லாம் பைரவ அதிர்வு அலைகள் எதிர்கொண்டு நமைகாக்கட்டும் ..!!! என அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் சந்திக்கின்றோம்


ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!  

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்  

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி 
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்


ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!Monday, May 8, 2017

சிவாய எனும் அட்சரம்..!!!
ஆயிரம் கோடி சூரிய ஜோதி, எங்கும் நிறைந்து ,எங்கெங்கும் நிறைந்து ,ஆதியாய் அனாதியாய் நிற்கும் அற்புதம்.இதுவே  கூனி குறுகி , எல்லோர் உள்ளங்களிலும் நான் எனும் அகந்தையாய் நின்று,இதன் தன்மை யாதென ஆழ்ந்து செல்ல,இந்த அகந்தையை உடைத்தெறிந்து ,எங்கெங்கும் நீண்டு விரிந்து,அடர்ந்து படர்ந்து, நீக்கமற நிறைந்து,யாவற்றையும் சூழ்ந்து அன்பால் அரவணைக்கும் எம்பெருமானின் நம் பெருமானின் அலைகள் நிறைந்த இருப்பிடம் நோக்கி ஈர்த்துச்செல்கிறது.எம்மால் எதுவும் இல்லை எல்லாம் அந்த எல்லைஇல்லா பேரொளியின் கருணையே என , உடம்பு ,மனம், இவற்றை கடந்து சென்றாலே,இறை அலைகள் முழுவதும் நிறைந்துகொள்ளும் அற்புதம் நிகழ்கிறது.

எந்த தெய்வவழி சென்றாலும், அதன் முடிவு எல்லையில்லா பெருமானிடமே அழைத்துச்செல்கிறது.எம் பெருமானே வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு தெய்வங்களாக கோடி கோடி உயிர்களின் உள்ளம் கவர்ந்த தெய்வமாக ஏதேனும் ஒரு வடிவில் பொருளாகவோ,வடிவமாகவோ ,நம்பிக்கையாகவோ ஏதும் அற்ற சூட்சுமமாகவோ இருந்துகொண்டு அருள்ஆட்சி நடத்தும் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது,எளிதில் நம் மீது உரசிச்செல்லும் காற்றே மிக சிறந்த உதாரணம் .காற்று அனைத்திற்கும் பொது,எந்த ஒரு சன்மானமும் கொடுக்கவேண்டாம்.காற்று இருக்கிறது.பார்க்க முடியவில்லை .உரசிச்செல்லும் போது உணரமுடிகிறது.இதன் மூலம் எப்படி எப்படி ...எப்படி இருக்கும் இவை எங்கேயிருந்து வருகிறது.. என ஆழ்ந்து செல்ல செல்ல எம்பெருமானின் ஈர்ப்பு அலைகள் ,கொஞ்சம் கொஞ்சமாக தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் உள்ளத்தை சிறிது சிறிதாய் ஆக்கிரமிக்கும் அற்புதம்  நிகழ்கிறது.பாச அலைகள் கொண்ட காரிருள் நாயகன் ,ஆயிரம் கோடி சூரிய ஜோதிக்கு சொந்தக்காரன்.பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ,இதோ உன் கண்முன்னே யாம் இருக்கிறோம் என,அனைத்தும் யாமே .சற்றே உள்நோக்கி ஆழ்ந்து,ஒரே ஒரு இமை பொழுது ,இருப்பது நான் அல்ல ,எல்லாம் யாமே எனும் தன்மை ததும்பி அன்பால் நெஞ்சுறுகி எம்பெருமானை உணர முற்பட ,வாகைசூடிய பெருமானின் ஆர்ப்பரிக்கும் அலைகள் உள்ளத்துள் நிரம்பும் அதிசயம் நிகழ்கிறது.பல ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களின் ஆத்ம நாயகனே..!! ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஜடத்திற்கும் ஜடமற்ற உயிருக்கும் உள்ளே அன்பாய் இருந்து அருள் ஆட்சிசெய்யும் ஈசனே ..!! சர்வேஸ்வரனே.நினது கருணையும் அன்பையும் எண்ண இயலவில்லை ,ஒரே ஒரு துளி உயிராய் எம்முள் இருப்பதால் ,யாமும் நினது படைப்பின் ஒரு சிறு தூசியென உணர்ந்தோம்,நின் பேராற்றல் எண்ணி எண்ணி நெஞ்சம் அன்பால் நிறைந்து ஆனந்தம் அடைந்தோம்.நின்னை நினைந்து நினைந்து, நின் பெருமை எண்ணி எண்ணி, ஆனந்தம் அடைகிறோம்.எத்தனை கோடி நுட்ப அதி நுட்ப திறம் எம்முள் வைத்தாய் இறைவா .!! அன்பால் விரிந்து,உள்ளம் நிறைந்து, எமது ஆயிரம் ஆயிரம் கற்பனை கைகளால் நின்னை கட்டி அரவணைத்து நன்றி கூறவியல்கிறேன் இயலவில்லை.எம் நாயகனே !!எம்பெருமானே !! சரணாகதி !!! சரணாகதி !!

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய  த்ரயம்பகாய  த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய  நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய  ஸ்ரீமன் மஹாதேவாய நம:
 உள்நோக்கி சிவமாக இருக்கும் நினது காற்றும் யாமே!.உள்ளும் வெளியும் யாமே !! சிவமாகிய  காற்றே..!! நீ வாழ்க !! எம் உள்ளத்துள் நெஞ்சத்துள் நீக்கமற நிறைந்திருக்கும் நின் திருவடி வாழ்க !!நின் பொற்பாதம் வீழ்ந்து வணங்குகிறோம். !!  காற்றே நம்முள்ளே உள்ளும் புறமும் தச வாயுவாக  சொல்ல இயலா விந்தை புரிகிறது.இந்த தசவாயுவில் நமது வாழ்கையே அடங்கி போகிறது.இதில் சிவ வாக்கிய சித்தரின் ஒரு அற்புதமான பாடல் .உண்மையில் சாதாரணமாக இதில் இருக்கும் சூட்சும இரகசியம் தெரிந்து கொள்ளல் மிக மிக கடினம்.அகத்திய உள்ளங்கள் முயற்சிசெய்து பாருங்கள் !!

சிவாய என்ற அட்சரம் சிவனிருக்கும் அட்சரம்
உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடஅற்ற வாசலை கடந்துபோன வாயுவை
உபாயம்இட் டழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே


சிவாய என்ற அட்சரம் சிவன் இருக்கிற அட்சரம் .உபாயம் தரும் உண்மையான அட்சரம்.உடலில் இருக்கும் தச வாயு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைசெய்கிறது.
உயிர் வாயு (பிராணன்)
 மல வாயு (அபானன்)
தொழில் வாயு (வியானன்)
ஒலி வாயு. (உதானன்)
சத்துகளை உடல் முழுவதும் பரவும் வாயு( சமானன்)
தும்மல் வாயு(நாகன்)
விழிவாயு (கூர்மன்)
கொட்டாவிவாயு(கிருகரன்)
இமை வாயு (தேவதத்தன்)
உடலை வீங்கசெய்யும் வாயு ( தனசெயன்)

இதில் இந்த தனஞ்செயன் எனும் வாயு  ஒருவர்  இறந்தவுடன் அந்த உடலை சுற்றி மூன்று நாட்கள் இருக்குமாம் .அதாவது ஒவ்வொரு செல்களையும்  அதன் இயக்கங்களை நிறுத்தி உடலை வீங்க செய்து பிறகு தான் கிளம்புமாம்.
தனஞ்செயன் கிளம்பியாச்சுன்னா அவ்வளவு தான்.எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம்.அப்படி அந்த கபாடம் அற்று கடந்து போகும் வாயுவாகிய தனஞ்செயனை  அழைத்து ,உபாயம் அருளுமாம் இந்த சிவாய_ _ என்ற அஞ்செழுத்துமே என்கிறார் சிவவாக்கியர் ஐயா.சிவாய என்ற மூன்று எழுத்தும் பிறகு வரும்  டேஸ் டேஸ்  _ _  என்ற இரண்டும் சேர்ந்து மொத்தம் இந்த ஜந்தெழுத்தும்.மூன்று எழுத்தை மட்டும் சொல்லிவிட்டு இரண்டு எழுத்தை நீயே கண்டுபிடித்துக்கொள் என்று பாடல் எழுதிவைத்துள்ளார் சிவவாக்கியர் அய்யா. இந்த சிவனிருக்கும் அட்சரத்தை கண்டுபிடித்து நாள் தோறும் சொல்ல.அடுத்த நொடியே அவனுக்கு உள்ளம் உறைந்து  இறைநிலை கிட்டிவிடுமாம்.அப்படி சொல்லும் அவனுக்கு மரணமே இல்லை என்கிறார்.மரணம் தரும் தனஞ்செயன் எனும் வாயுவை இந்த சிவாய _ _ என்ற அட்சரம் ,நமக்கு உதவிசெய்து மரணமே இல்லாத பெருவாழ்வை அளிக்கும் என்கிறார் சிவவாக்கிய சித்தர் அய்யா.

இந்த எழுத்தை கண்டுபிடித்து உணர்ந்துவிட்டால் ,அவனுக்கு அடுத்த நொடியே மனம் அற்று இறை தன்மை வந்துவிடுமாம்.ஞானி ஆகிவிடுவானாம்.இப்படி உணர்ந்த ஒருவனுக்கு எல்லாம் கைவந்த கலைஆகிவிடுமாம்.எதை பற்றியும் அறியும்  ஞானம் வந்துவிடுமாம்.ஒரு ஞானி என்பவன் இறைநிலையோடு நொடிப்பொழுதும் இறையை விட்டுவிலகுவதில்லை.இப்படி ஆகவில்லை எனில் கண்டுபிடித்த எழுத்து தவறு என்பதே ஆகும். சிவவாக்கியர் அய்யாவை அன்பால் நிறைந்து அவர் பொற்பாதம் பணிய கண்டிப்பாக அய்யா உபாயம் செய்வார் என நம்புகிறோம்.
அகத்திய உள்ளங்களை விரைவில் அடுத்த கட்டுரையில் சந்திக்கின்றோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!!