Posts

Showing posts from January, 2015

தென்பொதிகை கைலாயம் -அகஸ்தியர் கோவில் ஜெயந்தி விழா -2015 !

Image
ஸ்ரீ அகத்தியமகான் பிறந்த நாள் விழா 8.1.2015 மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை அகத்தியர் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரத்தெட்டு அஷ்ட அதிக ஆழி வெண்  வலம்புரி சங்கினால் அய்யாவிற்கு  பன்னீர் அபிஷேகமும்,பல்வேறு மூலிகைகள் கொண்டு சித்தர் முறைப்படி மகாயாகமும் நடைபெற்றது .அதன் ஒரு சில தொகுப்புகளை இங்கே  கொடுத்துள்ளோம்.விழாவை ஏற்பாடு செய்த கமிட்டி அன்பர்களுக்கும், எவ்விதத்திலேனும் உதவிசெய்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த அகத்தியம் வலைத்தளம் மூலமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எப்பொழுதெல்லாம்  எந்த ஒரு  தெய்வத்தின் ஜெயந்தி விழா வருகிறதோ அல்லது எந்த ஒரு  மகானின் பிறந்தநாள்  விழா  வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அங்குள்ள ஜீவசமாதியிலோ அல்லது  அங்கே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள  விக்கிரகத்திலோ  அதீத தெய்வீக  சக்தி அலை மற்றும்  கருணை  அலைகளின் ஆதிக்கம் மிக அதிகம் இருக்கும் .ஏனெனில் தெய்வமும் ,மகான்களும் தாம் தம் நிலையிலிருந்து சற்று  கீழிறங்கி மக்களுக்காக  தாம் தம் கருணை அலைகளை வாரிவழங்கும் ஒரு உன்னத நாள்.பல முறை இது போல நாட்களில் இந்த அதீத கருணை அலைகளை