Posts

Showing posts from 2021

தந்தை அகத்தியர் திருவடிகள் சரணம் !!!

Image
தனுர் மாதம் மார்கழி மாதம்  அதிகாலை பிரம்மமுகூர்த்தம் அதி உன்னதமானது .ஓசோன் படலம் பூமிக்கு இக அருகில் வரும் மாதம் என்கிறார்கள். அதி காலை எழுவது அதி உன்னதம்.உடலில் பிராண சக்தியை  அதிகரிக்கும் முயற்சியினை  தொடர்ந்து செய்யவேண்டியது அவசியமாகிறது. நாடி சுத்தி ,பிரணாயமம் செய்து  கொஞ்சம் கொஞ்சமாக பிராண சக்தியினை அதிகபடுத்த வேண்டும்.இந்த மாதத்தில் பிராண சக்தியினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல் அது  வரும் ஒரு வருடகாலத்திற்கு இந்த உடலை பாதுகாத்து, பல நோய்களிலிருந்து விடுவித்து ,உடலினை ஆரோக்யத்தோடு வைக்க உதவும் ஒரு அற்புத மாதம் இது.  அடிக்கும் குளிருக்கு ஏதாவது ஸ்வட்டர் போட்டுக்கொண்டாவது நம்மை நாமே பாதுகாத்து கொண்டு ,எளிய யோகாசனம் ,பிரணாயமம் செய்வது மிக அவசியமாகிறது.இயற்கையே மிக அதிக அளவில் இறை சக்தியை கொடுக்கும் அதி அற்புத மாதம் .ஏதேனும் ஒரு வழியில் இறை தேடுதல் மிகநன்மை பயக்கும்.இறையை உணர அதி அற்புத மாதம்.இறை மானுடர்களுக்கு உதவும் அதி அற்புத மாதம்.அந்த அளவிற்கு மிக உன்னதமான மாதம் இது. தந்தையின்  அருள் ஆசிகள் பெறுவது எவ்வாறு ..? யாம் உணர்ந்த அனுபவம் இங்கே . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் இருக்கலாம்

ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..!! (பாகம் இரண்டு )

Image
. காலம்  சுழல்கிறது .ஒன்று  மற்றொன்றாய்  மாறுகிறது .மாற்றமே  புத்துயிர்  தருகிறது .ஒன்றுமில்லா  ஒன்றிலிருந்து  ஐம் பெரும்  பூதங்கள்  பிறக்கிறது.மழை  பெய்கிறது .சூழல்  மாறுகிறது  .உயிர்  பிறக்கிறது. புல்லாகிறது  பூடாகிறது  புழுவாகிறது   மரமாகிறது  பல் மிருகமாகிறது  பறவையாகிறது   பாம்பாகிறது  கல்லாகிறது மனிதராகிறது  பேயாகிறது  கணங்களாய் வல் அசுரர் ஆகிறது , முனிவராகிறது  தேவராகிறது  இப்படி  ஒவ்வொன்றாய்  எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்றுவீடு உற்றேன் என்கிறார்  மாணிக்கவாசப்பெருமான் .கால சுழற்சிக்கேற்ப  இறை தம்  உணர்வுகள்  அடங்கிய  கருத்துக்கள்  பாடல்களாய்   வரிகளாய்  ,மெல்லிய  இசையாய்  ,சொல்வதறியா  உணர்வுகளாய்   வந்துகொண்டேயிருக்கின்றது .எவர்  வந்தாலும்  சென்றாலும்  மறைந்தாலும்  இருந்தாலும்  இதுவே எமது  இயல்பு  எம் பாச அரவணைப்பு  எம்முள்  இருந்த  வற்றா ஊற்று யாம் கொடுத்துக்கொண்டேயிருப்போம்  என  காலம்  காலமாய்      இறை  அறிமுகப்படுத்திய  மகான்கள்,  ஞானிகள்,  மகரிஷிகள்  ஆயிரம்  ஆயிரம்  .அவ்வப்போது  எம்மையும்  எம்மைப்போன்ற  உள்ளங்களையும் ஒரு   ச

உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்....!!!

Image
உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.  இறை அமிர்தம் பொங்குகிறது மாணிக்க வாசக பெருமானாரின் திருவாசகத்தில் .ஒரு வரியில் மறைபொருளாக மறைந்து அமிர்தத்துளி போல தெறித்து ஓடி அருள் மழை  பெய்யவைத்து  பேரானந்தம் கொள்ளவைக்கிறது.ஏதேனும் மனம் விரும்பும் ஒருவழியில் பாடலாகவோ  உணர்ந்து படித்தல், ஆழ்ந்து சிறிதே அதில் தம்மை  ஈடுபடுத்தி கலந்தால் பெருஒளியின் கருணை ததும்பும் பேரானந்தத்தை  உணரலாம் .மனதால்  எதை வேண்டுமானாலும்  நினைக்க  இயலும்.  ஆனால்   எதற்குமே  புலப்படாத ஒன்று ,உருவமா  அருவமா  சின்னஞ்சிறிய தோற்றமா இல்லை  மாபெரும் வடிவமா என்று  எதுவுமே  தெரியாதே எம் பெருமானை பற்றி  .. துளி அளவும் தெரியாதே  .உள்ளத்திலே நினைக்க இயலாத திருவுருவமாகிய எம்பெருமானை எப்படி  நினைக்க இயலும் ? உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் ---மனத்தால் நினைக்க இயலாத ஒரு மாபெரும் பேராற்றலை எப்படி நினைக்க முடியும் ,உருகி உருகி உன்னுள் ஆழ்ந்து ஆழ்ந்து பெருமானின் பாடல் வரிகளை பிடித்துக்கொண்டு  கொஞ்சம்  கொஞ்சமாக  உள்செல்லச்செல்ல

பேரமைதி நாயகா போற்றி......!!!

Image
இறையின் ஆசிகள் பெற்றவர்கள் தானே இங்கிருக்கும் யாவரும்.யாவருமே ஏதேனும் ஒரு விதத்தில் இறையோடு தொடர்புகள் கொண்டவர்கள் தானே.தன்னிச்சையாக செயல்படுவது போல ஒரு மாய வலையை நமக்கு நாமே வீசிக்கொண்டு ,சுயநலம் சேர்ந்துகொண்டு இறையின் மூல தொடர்புகளை மறந்துவிடுகின்றோம் அல்லவா.காலமெல்லாம் கர்ம வினையில் சுழல்கிறது.அனைவரும் இறையின் பிள்ளைகள் தானே.அன்பால் அடிபனியவேண்டும் .அன்பிற்கு உருகவேண்டும் இளகவேண்டும் .ஆனால் அடிமையாக இருக்ககூடாது.எந்த பழக்கத்திற்கும் எதற்கும்அடிமையாக இருக்கக்கூடாது.இறையோடு என்றும் அதன் தொடர்புகள் இருக்கட்டும்.இறைக்கும் நமக்கும் உண்டான அற்புத இணைப்பு என்றும் பெருகிக்கொண்டேயிருக்கட்டும் .ஒரு உயிரில் இறை அலைகள் உள்சென்றால் மட்டுமே அந்த நாட்கள் படைத்தவனுக்கு பெருமை சேர்க்கும் நாளாக மலர்கிறது .உயிரை இச்சையாக பெற்றவனுக்கும் பெருமை சேர்க்கும்.எத்தனையோ கோடான கோடி ஜீவராசிகளுக்கு கிடைக்காத ஒரு அற்புத பிறவி தானே இந்த மானுட பிறவி.சுழலில் சிக்கி யாவற்றையும் இழப்பதற்கா இந்த அதி அற்புத மானுட பிறவி.எது நடந்தாலும் ஈசனின் ஆணை துளிகூட பிறழாது நடந்தேறுகிறது.நடப்பவை நடக்கட்டும் .இறையோடு வாழ இறை சிந்தனைகள

ஓம் சுந்தர மஹாலிங்காயா போற்றி !!

Image
சதுரகிரி ஒரு அற்புத  மலை.சித்தர்களின்  சாம்ராஜ்யம் .சதுரகிரி என்றாலே பசுமையும் ,துள்ளலும் துடிப்பும் நிறைந்த   சிற்றோடைகளும் ,ஆங்காங்கே சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளும்,  வானுயர்ந்து பசுமை போர்த்திய  மரங்களும் மலைகளும் ,இயற்கை அன்னையின் தூய  100%  தூய காற்றும் ,கண்ணாடி போன்ற தண்ணீரும்,வியக்க வைக்கும் மூலிகைகளும் அதன் தாத்பர்யங்களும்,அடர்ந்து விரிந்த பல்வேறு மலைகளும் காடுகளும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய வரலாற்று  நிகழ்வுகளும் என தொடர்கிறது..இந்த மலையை பற்றி  நினைக்க நினைக்க மனதை  ஈர்த்து இனம் புரியா அலைகளை அள்ளி வீசுகிறது மனதுள்.குளுமையும் குளிர்ச்சியும் வாரி  அள்ளி வீசுகிறது.எம் முதல் முதல் பயணம் இந்த மலையோடு எம் மனதோடு ஒட்டி உறவாடிய நிகழ்வுகள், எண்ணங்கள், தருணங்கள்,ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் எண்ணிட ,எண்ணிட , எம் மனதுள் ஒரு புத்தம் புது நறுமண மலர்  பூத்துக்குலுங்கி நறுமணம் வீசுவது போல என்றும் ஒரு அற்புத  சுகம் தருகிறது. பத்து வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகள் ஒரு சித்தர் அய்யாவை பார்த்த நிகழ்வுகள் ,அவராலே இட்ட பிச்சை தான் இந்த எழுதும் தகுதிகள் .எம்மை அழைத்து அருள்வாக்கு சொல்லி , அகத

இறை அருளாசிகள் ..!!!

Image
கேட்பாரற்று ,கேள்விகள் அற்று ,முடிந்து அமிழ்ந்து ,மூழ்கி,மூழ்கி  யுகங்கள் ஆயிரம் ஆயிரம் போனாலும் , எம் பெம்மானே !! இவை யாவும் அழியாத நின்னுள்ளே  நாள்தோறும் நடந்தேறுகிறது!!ஆனந்த கூத்தனே !! எல்லை இல்லானே ! எத்தகைய வலிமை உடையோன் நீ ?   எம்மை மறந்து, நின்னில் கிடந்து ,அழுது புலம்பி  ஆற்றல் பெற்ற காலம்  யாவும் சுகம்  சுகமே ..எம் பெருமானே !! இருந்தும் கிடந்தும் பரந்தும் விரியும் பெரியோனே !!!.நின் பெருமை எண்ணிடல் என்றென்றும் சொல்ல இயலா சுகமே !! மூழ்கின ! முடிந்தன ! மறைந்தன! எழுந்தென !! என்பதெல்லாம்  நீர்மேல் எழுதும் கணக்கு போல சட்டென  மறைகிறது நீ படைத்த ஜீவராசிகளின் வாழ்க்கை ! பேரமைதியில் பரந்து விரிந்த மாயோனே !! அன்பால் இளகினால் மட்டுமே நின்னை சிக்கென பிடிக்க இயல்கிறது எம் பெருமானே !! இளகும் பாகுபோல எம் நெஞ்சம்  இளகி நின்னை நினைந்து ,அன்பால் ,பரந்து விரிந்து சூழ்கிறது எம்பெருமானே !! வந்தமர்மாய் எம்முள் எம் நெஞ்சத்துள் என்றும் நினை இறுக கட்டியணைக்கவியல்கிறேன் !! வருவாய் எம் நாயகனே !!வந்தமர்வாய்  அதி நுண்ணிய நுட்பம் நிறைந்தோனே  !! வருவாய் எமை ஈன்றவளே !! எம் தாயே !! தந்தையே !! சர்வேஸ்வரனே !!  எ