Sunday, January 31, 2016

அன்பின் ஒரு துளி !!!
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் எமக்கு   எப்பொழுதெல்லாம் ஒரு சிக்கல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு பெரியவரை சந்திக்க முற்படுவோம்.ஆனால் அவரை பார்ப்பது  என்பது அவ்வளவு எளிதல்ல .பார்த்தவுடனே எதற்காக  நீ இங்கே வந்திருக்கிறாய் ?... ஒ இது தானா விஷயம் , தெளிவான உமது நாட்கள் ....அதோ தெரிகிறது.அது வரை அமைதி காத்திரு , இதோ யாம் சொல்லும் இதை செய் ...சத்குரு அருளினால் துயர் நீங்கும் ..ஜெய் சத்குரு.....என பிரித்து சுக்கு நூறாக கூறு போட்டுவிடுவார்.அவர் தற்பொழுது இல்லை.ஆனால் அவர் எமக்கு சொல்லிகொடுத்த ஒரு பயனுள்ள தகவலை இங்கே பகிர்கிறோம்.

கண்களை மூடிக்கொண்டு உன்னுள் ஓடும் சுவாசத்தை அதன் போக்கிலே எவ்வாறு உள்ளும் புறமும் செல்கிறது என்பதை மெதுவாக அதன் போக்கிலே கவனி, உன் மன ஓட்டம் குறையும்.மனதின் அதிர்வு அலை (frequency) குறையும்.பிறகு அவ்வாறு மேலும் கவனிக்க  சுவாசம் இடதுபுறமும் வலது புறமும் மாறி மாறி செல்லும்,மன அதிர்வு அலை மேலும் குறைய குறைய,சுவாசம் மிக மென்மையாய் மாறிவிடும்,இப்படி சுவாசம் மென்மையாய் (very subtle) மாறிவிடின்,சுழுமுனை ஆரம்பிக்கும் (சுவாசம் இரு புறமும் செல்லும்) எப்பொழுதெல்லாம் இருமுனை சுவாசம் செல்கிறதோ அப்போதெல்லாம் எல்லாவற்றையும்  தூக்கிஎறிந்துவிட்டு  இறைவழியில்  செலுத்துவதே  ஒன்றே நன்மைபயக்கும்.வேறு எது செய்தாலும் அது அப்பொழுது சரியாகவராது.இறைவன் தம்மை உணர மனிதனுக்கு கொடுத்த அருமையான தருணம் இவை போன்ற தருணம்.இறை அருள் உணர முயற்சிக்க அருள் ஆசிகள் விரைவில் கிட்டும். மேலும் நம்முள்ளே இப்பொழுது மனதால் நினைவால், வெளிவிடும் காற்றை உட்புறமே செலுத்த ,அதாவது இயல்பான சுவாசத்தில் ,காற்றை இழுத்து உள்ளே செலுத்தி (மூலாதாரத்த்திலிருந்து தலைஉச்சி   செல்வது  போலவும்),பிறகு வெளிவரும் காற்றை( தலை உச்சிவரை மூலாதாரத்திலிருந்து செல்வது போல , ஒரு  நெருப்பு கம்பிபோல் சுவாசஓட்டத்தை உள்ளே செலுத்துவது போல பழகிகொண்டால் ,ஆற்றல் செலவு மிச்சமாகி,ஆற்றல்' சேமிப்பு தொடங்கும்,ஆற்றல் சேமிக்க சேமிக்க ,எதை பற்றி அறிய முற்படுகிறோமோ அதை பற்றிய நுணுக்கங்கள் இயற்கை இரகசியங்கள்  எல்லாம் கொஞ்சம்கொஞ்சமாக புலப்பட ஆரம்பிக்கும்.(யாரும் தயவு செய்து காற்றை உள்ளே அடக்குதல் வேண்டாம், அதற்கு முழுமையாக வாசியோகம் கற்றுக்கொள்ளவும்.)  ஒரே ஒரு மூச்சில் ,ஒரு சுவாசத்தில் ஒரு நொடி பொழுதில் அன்பின் தன்மையை, அதன் மூலமாகிய  இறைஅலைகளை உணரலாம் .அந்த நொடி எப்பொழுது வரும்.? ஒரு நொடியில் கிடைக்குமா ? அல்லது ஓராயிரம் நொடிகளுக்கு மேல் காத்திருக்கவேண்டுமா ...!?முயன்று பாருங்கள் !! இறைவனின் ஆணை அவை. அப்படி  அந்த சரியான நொடியில் கிடைத்த அன்பு அலைகளை உணர்ந்துவிட்டால் ,பிறகு அவ்வளவு  தான் அனைத்தும் அன்பின் அலைகளால் சூழ்ந்துகொள்ளப்படும்,பார்க்கும் கேட்கும் எதுவும் ஆனந்தமாகி விடும் ,அன்புமயமாகிவிடும்.அருள்பேராற்றல் சூழ்ந்துகொள்ளும்.அந்த நொடிபொழுதில்,கண்ணிமைக்கும் நேரத்தில் ,நெஞ்சத்துள் உள்ள மாயை அகன்று ,இடர் அகன்றுஅருள் ஒளிஅலைகள்  ஆனந்தமாக கரைபுரண்டு ஓடும் .இது வரை  நடந்த  நிகழ்வுகள் அதன் விளைவாக   ஏற்பட்ட இன்னல்கள், இடர்  பட்டு தாண்டிவந்த பாதைகளும், அதனால் உண்டான காயமும்,சுவடற்று ஓடி மறைந்துவிடுகிறது.இருக்கும் பொழுது  தூய அன்பாகிவிடுகிறது ,இனிவரும் நிகழ்வுகளை எதிர்கொள்ள போதிய அளவு தைரியமும் தந்துவிடுகிறது  .அப்படிப்பட்ட உன்னதமான ஒரு  நொடி, இறைவன் தம்மை உணர மானுடஜீவன்களுக்கு தரும் நொடி.சில நாட்களில் வெகு வெகுவிரைவில் அந்த நொடி கிட்டிவிடுகிறது.சில நாட்கள் போராடி காலம் கனியும் வரை காத்திருக்கவேண்டியதாகிறது.இவன் தரும் இந்த உன்னத நொடியில் உள்ள அலைகளை  முழுமையாக உணரமுடியவே  இல்லை ,எவ்வளவு தான் முயன்றும் இயலவில்லை ,ஏனெனில் இந்த நொடி  அதில் இருக்கும் ஒரு சிறு துளி இறை ,இவன் இருக்கும் இடம் நோக்கி, இவன் தன்மை நோக்கி அலைத்துச்செல்கிறது.எல்லாம்ஒருவித ஹம்.....ஒலியுடன் ஓம் என்ற ஓங்கார ஒலியுடன் ,கேட்பாரற்று  கிடக்கிறது.அது அது ஆங்காங்கே .,தமக்கென ஒரு முழுமையும் ,தமக்கென ஒரு நுண்ணிய அலையுடனும் ,எங்கெங்கோ அதில் சுருக்கிஎழுதபட்ட நிகழ்வுகளை நடத்திக்கொண்டும் ,இன்னும் தொடரவும் செய்கிறது.ஒட்டிக்கொண்ட ஒரு சிறு தூசி போல எம் உள்ளத்தில் தைத்துக்கொண்டு எம்மை எங்கெங்கும் இவன் இருக்கும் தன்மையை மெல்ல மெல்ல உணரவைக்கிறது,இங்கே நடப்பது என்ன ! இவனின் முழுஆற்றல் தான் என்ன ! ,இனிமேல் இவன் செய்யபோகும் செயல் தான் என்ன ! எல்லாம் இவன் ஒருவனுக்கே தெரியும்.அன்பால் கரைந்து அன்பால் நெகிழ்ந்து அழவைக்கிறது.


ஒரு முறை தியானத்தில் அமர்ந்துகண்களை மூடி நன்கு ஆழ்ந்து உட்செல்லும் பொழுது சட்டென ஒரு சிவலிங்கம் தரிசனம் பெற்றோம் .அந்த சிவலிங்கம்  சுழன்றுகொண்டேயிருந்தது  நடுவில் உள்ள லிங்கம்  சுழன்றும்  அதன் ஆவுடையும்  சுழன்றுகொண்டேயிருந்தது.நன்கு கவனிக்க கவனிக்க சுழன்று சுழன்று அது தாம் இருக்கும் இடமெங்கும் அருள் அலைகளை பரப்பிப்கொண்டிருந்தது.சுழற்சி என்றால் ஒரு சாதாரண சுழற்சிபோல அல்லாமல் சற்றே மாறுபட்டு ,இந்த சுழல் எதையோ மிக அற்புதமாக யாரும் புரியஇயலாத அளவுக்கு ,, ஒரு  அற்புத இறைநிகழ்வை நிகழ்த்திகொண்டிருந்தது ..எங்கிருந்தோ ஒரு சக்தி இதை இயக்கி அதன் படி அதன் ஆணைக்குஇணங்க மிக அழகாக எதையோ ஒன்றை  சரிசெய்ய ,தேவையான சக்தி அலைகளை தம் சுழற்சி மூலம் பரப்பிகொண்டேயிருந்தது.மிக அற்புதமான இந்த நிகழ்வு எம்மை ஏதேனும் ஒரு சிவஆலயத்திற்கு  செல்ல வேண்டும் எனவும்  ஆணையிட்டு அதற்கான வழியையும் விரைந்து செல்ல நேரத்தை  ஒதுக்கியும் ,எம்மை அது தானாக அழைத்துச்சென்றது.


அன்றையதினம் பிரதோஷம் ஆக மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சிவஆலயம் செல்ல ஆயத்தமானது.ஒரு பழமையான சிவ ஆலயம்.கிட்டதட்ட  700 ஆண்டுகளுக்குமேல் பழமையான ஆலயம்.வியாக்ரபாதர் என்ற முனிவர் சிவ பூஜையில் மிகுந்த ஈடுபாடுகொண்டு தாம் எப்பொழுதும் சிவ அர்ச்சனை செய்ய,வில்வமரம் மீதேறி வில்வ இலைகளை பறிக்க , தம் கை மற்றும் கால்களை , புலிக்கால்களாகவும், புலி நகமாகவும் ஆக வரம் பெற்று ,சிவனை பூஜித்தார்களாம் இங்கே. முன்னொரு காலத்தில் இங்கே இந்த இடத்தில் மிக அதிக அளவில் வில்வ மரங்கள்  நிறைந்து சோலையாக இருந்ததாம்.மிக அற்புதமான சிவ ஆலயம் ,இங்குள்ள சிவன் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கபடுகிறார்.அன்றைய தினம் பிரதோஷம் ஆதலாம் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது.ஆனால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கருவறையிலிருந்து ஒரு ஜீவ அருள் அலை எம் நெஞ்சத்தை சூழ்ந்தது.கூட்டம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.ஏதோ மாற்றவர்கள் வரிசையில் நிற்க யாமும் நின்றோம்.சற்றுநேரத்தில் மிக அழகான ஸ்ரீ ஸ்ரீஆதிபுரீஸ்வரர் சிவ லிங்கத்தை தரிசனம் செய்தோம்.பல்வேறு அபிஷேகம நடந்தது.எமது தியானத்தில் வந்த லிங்கமும் இங்கே உள்ள லிங்கமும் ஒத்திருந்தது.எம்மையும் ஒரு பொருட்டென கருதி  உமை தரிசிக்க அதுவும்  தம் பிரதோஷ காலத்த்தில் வாய்ப்பு அளித்த எம் நாயகா !! உமக்கு கோடி கோடி நன்றிகள் சொல்லி ,எம் உள்ளம் எங்கும் நிறைந்த சிவ அலைகளோடு அங்கே கொஞ்சம் அமைதியாக அமர்ந்துவிட்டோம்.

ஸ்தூல தரிசனம் ஏதோ கண்களால் சிவனை நமஸ்கரித்து  தரிசனம் காண்பது ஒரு புறம் இருக்க.இதோ இங்கே எம்முள் இப்பொழுது ஏற்பட்ட இந்த பூத்துகுலுங்கும் நந்தவனம் எம் மனம் ,அது அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.நீரின்றி வாடிய ஒரு தாவரம் ,தமக்கு தேவையான நீர் கிடைத்தபோது, அதை நன்கு தம்முள் முழுமையாக உறிஞ்சி உப்பி பெருத்து,அப்பொழுது செழிப்புடன் காணப்படுமே ,அது போலவே இப்பொழுது எம் நிலைமையும்.தூய இயற்கையான crystal clearஆக உள்ள, ஒரு துளி கோள வடிவ நீர் ,பசுமையான ஒரு இலையில் பார்க்கும் பொது,அந்த துளி எவ்வளவு மிக அழகாக இருக்கும்,அதன் தன்மை,அதன் transparent நிறம்,அது தாங்கிஇருக்கும் இறையின் சக்தி,அது போலவே இப்பொழுது எம்மை ,எம் மனதுள் சூழ்ந்துள்ள ,தூய இயற்கையான ,மென்மையான  ஒரு துளி இறைஅலைகள்,சிவனின் அலைகள்,அன்பின் அலைகள்.எம்மையும் சூழ்கிறது,எம் நெஞ்சத்துள் ஆழ்ந்து செல்கிறது.எமது அருகில் உள்ள அனைவரையும் சூழ்கிறது.அப்பப்பா ....!! எத்தனை அமைதி இங்கே !! எம் உள்ளத்துள் ...! எம் நெஞ்சத்துள்..!! அமுத சுரபி போல இங்கே வரும் யாவருக்கும் அள்ளிஅள்ளி அருள் அலைகள் கொடுக்கப்படுகிறது..!! சிவனின் தார்மீக அலைகள் ஆட்சிசெய்கிறது !! பிரதோஷ காலங்களில்  ஆற்றல் மிகுந்துகாணப்படுகிறது.சிவம் ஒன்றே நிலையானது என்பதை உணர்த்துகிறது.எதனுள்ளும் சிவமே ! எங்கும் சிவமே ..எங்கெங்கும் சிவமே .அடிக்கடி பாலைவனமாகும் மனம் , இருக்கும் ஆற்றலை செலவழித்தே பழக்கப்படுத்தும் மனம்,இங்கே தற்பொழுது சோலைவனமாகவும் பூத்துகுலுங்கும் நந்தவனமாகவும் காட்சியளிக்கிறது.எல்லாம் இங்குள்ள சர்வேஸ்வரனின் அருள் !! .

இவை போன்ற சிவ தரிசனம் எமக்கு நிம்மதி தருகிறது .அன்போடு இருக்கும் மகான்களிடம் அழைத்துச்செல்ல வழிவகுக்கிறது.அவர்களின் ஆசிகளை பெற்றுதர உதவுகிறது.அன்பின் ஆழத்தில் எழுதிய யாம் சந்தித்த அந்த  பெரியவரின்  கண்கள் ,கருணை நிறைந்த  கண்கள். அந்த நிகழ்வுகளை என்றும் எம்மால்  மறக்க இயலாது .யாம் அவர் அருகில் இருந்த தருணம் நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.வானவெளி நோக்கி பார்த்துகொண்டிருந்த கருணை கண்கள் ,அந்த கண்களில் ஒருவித ஆழ்ந்த அமைதி,ஒரு உலகையே அரவணைக்கும் அன்பின் ஆழம் ,யார் பார்த்தாலும் ,அவர்களுக்கு ஒரு மோட்சம் தரும் ஆற்றல்,  யார் தம்மை வணங்கினாலும்,பார்த்தாலும் , அவர்களுக்கு ஆழமான ஒரு அமைதி கிட்டும் திறம் .அங்கே யாரும் எதையும் வேண்டுதல் கூட வைக்கவேண்டிய அவசியமில்லை ,ஏனெனில்  அப்பெரியவரின் ஆற்றல் ,தன்னை சூழ்ந்துள்ள இடங்களில் உள்ள அனைத்து உயிரைரும்  பாரபட்சமின்றி ஊடுறுவி,உள்ளத்திற்கு ஒரு நிறைவையும் ,அமைதியையும் அளித்துக்கொண்டிருந்தது.அய்யாவின் அருள் அலைகளோடு இக்கட்டுரையை நிறைவுசெய்கிறோம்,மேலும் ஒரு கட்டுரையில் விரைவில் சந்திக்கிறோம் , வேளச்சேரி- தாம்பரம் சாலையில் உள்ளது பள்ளிக்கரணை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் ஆலயம்.வாய்ப்புகிடைத்தவர்கள் சென்றுவாருங்கள் !!பிரதோஷகாலத்தில் ஈசனின் அருள் அலைகளை உணருங்கள்.!!வாழ்வில் கர்மவினையை வேரறுக்க சிவனைதவிர வேறு ஒருவர் இல்லை.வாழ்வில் தொடக்கமும் முடிவும்,எதற்கும் ஓர் மூலமும் சிவனே...சிவனின் தார்மீக அருள் ஆட்சிஅலைகளே!!!

ஒம் அகத்தீஸ்வராய நமஹ!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!


.