Posts

மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்

Image
                                                      மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பார்வை  ஒருவர் மீது விழுந்தால் அவருக்கு துரியாதீத நிலை உடனே கிட்டிவிடுமாம்.அத்தகைய ஆற்றல் நிறைந்தவர் அய்யா .மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக புனிதமானது. ஒரு முறை நீர் நிறைந்த  ஒரு தடாகத்தின் அருகில் சிவபெருமான் ,  பார்வதிதேவியிடம் உலகின் பிறப்பு இறப்பு ,உயிர்களின் உருவாக்கம் அழித்தல் என பலவற்றை பேசும் பொழுது ,பார்வதி தேவிக்கு உறக்கம் ஏற்பட்டு கண்அயர்ந்து விட்டார்களாம்,ஆனால் அங்கே உள்ள தடாகத்தில் நீந்திகொண்டிருந்த மீன் அதை கேட்க,அந்த  மீனின் வயிற்றில் உள்ள மீன் குஞ்சும் கேட்டு, பாலகனாய் உருமாறி எழுந்து சிவபார்வதியின் காலில் விழுந்து ஆசிவாங்கியதாம்.இப்படி மச்சமாய் இருந்து சிவ உபதேசங்களை கேட்டதால் அதற்கு மச்சேந்திரன் என்ற பெயர் வந்ததாம்.இப்படி மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக சிறப்பானது. மச்சமுனி சித்தர் மீனாக...

ஸ்ரீ பைரவ வாகனம் ..!!!

Image
பிரபஞ்ச நாயகனே!! பெம்மானே !! தூசியினும் தூசியாய் இருக்கும் ,எம்மால் எம் கற்பனையால் கூட ,நின் அருள் தாண்டவ அலைகள் நடத்தும் அற்புத அரங்கேற்றம் சிறு  துளி அளவுகூட  புரிந்துகொள்ளஇயலவில்லை.நித்தம் ஒரு புதுமை என எண்ணில் அடங்கா கோள்கள் உருவாக்கும்  பேராற்றல் கொண்ட நாயகனே ..!! கோடான கோடி ஜீவன்களையும் உருவாக்கி,காத்து,அரவணைத்து ,அழித்து ,புரிய இயலாத விந்தைபுரியும் ஆதி அந்தம் இல்லாத ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!தூயோனே ,,!! மறையோனே ..!!   நிறைந்தோனே ..!! நின் பெருமை எண்ணி ,செய்வதறியாது, நெக்குருகி நெஞ்சம் நிறைந்து ,உள்ளம் உறைந்து நின் தாள் பணிந்து போற்றி வீழ்ந்து வணங்குகின்றோம்,!!அருள் புரிவாய் அய்யனே .!! நின் பாதம் சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!! ஏழரைநாட்டு சனியே பாடாய் படுத்தும் .அதுவும் ஏழரைநாட்டு சனியில் ஜென்மசனி ஒருவருக்கு நடந்தால் ,சொல்லவே வேண்டாம்.அது உடம்பில் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தும்.ஒரு சாதாரண வேலையை கூட செய்யவிடாமல் சுத்த சோம்பேறியாக்கிவிடும்.எதுவும் புரியவிடாது .எங்கே எப்போ வெளிச்சம் வரு...

சிவாய எனும் அட்சரம்..!!!

Image
ஆயிரம் கோடி சூரிய ஜோதி, எங்கும் நிறைந்து ,எங்கெங்கும் நிறைந்து ,ஆதியாய் அனாதியாய் நிற்கும் அற்புதம்.இதுவே  கூனி குறுகி , எல்லோர் உள்ளங்களிலும் நான் எனும் அகந்தையாய் நின்று,இதன் தன்மை யாதென ஆழ்ந்து செல்ல,இந்த அகந்தையை உடைத்தெறிந்து ,எங்கெங்கும் நீண்டு விரிந்து,அடர்ந்து படர்ந்து, நீக்கமற நிறைந்து,யாவற்றையும் சூழ்ந்து அன்பால் அரவணைக்கும் எம்பெருமானின் நம் பெருமானின் அலைகள் நிறைந்த இருப்பிடம் நோக்கி ஈர்த்துச்செல்கிறது.எம்மால் எதுவும் இல்லை எல்லாம் அந்த எல்லைஇல்லா பேரொளியின் கருணையே என , உடம்பு ,மனம், இவற்றை கடந்து சென்றாலே,இறை அலைகள் முழுவதும் நிறைந்துகொள்ளும் அற்புதம் நிகழ்கிறது. எந்த தெய்வவழி சென்றாலும், அதன் முடிவு எல்லையில்லா பெருமானிடமே அழைத்துச்செல்கிறது.எம் பெருமானே வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு தெய்வங்களாக கோடி கோடி உயிர்களின் உள்ளம் கவர்ந்த தெய்வமாக ஏதேனும் ஒரு வடிவில் பொருளாகவோ,வடிவமாகவோ ,நம்பிக்கையாகவோ ஏதும் அற்ற சூட்சுமமாகவோ இருந்துகொண்டு அருள்ஆட்சி நடத்தும் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது,எளிதில் நம் மீது உரசிச்செல்லும் காற்றே மிக சிறந்த உதாரணம் .காற்று அனைத்திற...

சிவமெனும் அற்புதம் !!!

Image
சிவமென்னும் அற்புதம்.சிவம் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே,கண்களை மூடிக்கொண்டு சிந்தித்தாலே  மனதின் அலை ஓட்டத்தை சற்றே குறைத்து ,குளுமை அலைகளால் சூழ்ந்து ,கவ்வி இழுக்கும் ஒரு அற்புதம் நிகழ்கிறது.எல்லாவற்றையும் சுருக்கி அணுவாக ,இன்னும் உள்ளே செல்ல அதன் மிக சிறிய அலைவடிவாக ,இன்னும் இன்னும் உள்ளே செல்லச்செல்ல எதுவுமே இல்லாத, ஆனால் எல்லாம் ஆன, ஒன்றும் இல்லாத ஒன்றாக இருக்கும் அற்புதம்.அலை பாயும் மனதிற்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்து ,அதன் ஆதிமூலம் உணரவைக்கும் உண்மையின் உறைவிடம் சிவம்.சிவத்தை உணர்ந்தால் ஞானம்.சிவத்தை மறந்தால் ஊனம்.சிவமே எல்லாம் .சிவமே எங்கும் .சிவமே எங்கெங்கும்.சிவம் அறிய இப்பிறவி முயற்சி தோற்றாலும்  இனிவரும் ஒரு பிறவியில் சிவத்தோடு சிவமாக ஆகும் ஒரு பொன்னான காலம் வரும் என்பது உண்மை.நாள் தோறும் அழிந்துகொண்டிருக்கும் இந்த பூதஉடலுள்ளே ஒரு தற்காலிக பயணம் செய்துகொண்டிருக்கும் பேராற்றல் நாயகனின் இந்த உயிர் என்ற தூசியும் ஒரு சிவமே. ஒன்றை மற்றொண்டாய் மாற்றுவதும் சிவமே.அப்படி ஒன்றை மற்றொண்டாய் மாற்றிக்கொண்டே முழுவீச்சில் இயங்கிகொண்டிருக்கும்  நிலை சக்தி எனும் நிலை.ச...

ஸ்ரீ லலிதாம்பிகை பாதம் போற்றி !!!

Image
வில் எனும் புருவங்களும் வேல்விழி கண்களும்,கொவ்வை செவ்விதழ்களும்,கொன்றைவார் சடைமேல் குளுமைநிறை  மதியும் ,அமுதெனும் தேன்மழை மொழியால் அகிலத்தையே ஈர்த்தவளும்,அழகே யாவும் சேர்ந்து அழகுபார்க்கும் நின் எழில் அழகும்,அதி நுண்பார்வையும்,ஆழ்ந்து அடர்ந்து நீண்டு எங்கும் எங்கெங்குமாய் தமது அன்பெனும் கருணை அலைகளை பரப்பி ,அன்பால் அனைத்தையும் வாரி அரவணைத்து,காத்து ,எதுவும் எம்மை விட்டுவிலகுவதில்லை,எல்லாம் எமது ஆட்சிபுலத்தில் என அருளாட்சி செய்யும் ,திரிபுவன நாயகியே,சக்தி ஸ்வரூபிணியே,சாந்த ஸ்வரூபிணியே சகல கலைகளுக்கும் அதிபதியே,சர்வேஸ்வரரின் நாயகியே,ஆயிரம் நாமங்களுக்கு சொந்தக்காரியே ,ஸ்ரீ லலிதாம்பிகையே ! நின் பொற்பாதம் பட்ட மண்ணின் திருவடிதடத்தைகூட தரிசிக்க அருகதை அற்றவனாகிய இருக்கும் எம்மை ,நின் பார்வைபடும் கோடானகோடி தூசிகளின் ஒரு சிறு தூசிக்கும் கீழ் உள்ள அடியேனின்,எம் நிலை கண்டு இறங்கிவந்து,அருள்ஆசி அலைகள் வழங்குங்கள் அன்னையே !!நின் திருவருள் என்றும் எம்முள் இருக்க வழிவகை செய்யுங்கள் மஹாதேவியே!!கருணைகடலே !! கருணைத்தாயே !!!  சரணாகதி !! சரணாகதி !!!சரணாகதி !!! சக்தியும் சிவமும்எங்...

சிவமும் பைரவமும்..!!!

Image
இருக்கும் இடத்திலிருந்து,  இருக்கும் இந்த மனதினை,உள்ளத்தை வைத்துக்கொண்டு, எங்கும் நிறைந்திருக்கும் ஈசனின் அலைகளை ,நாம் இருக்கும் இடம் முழுவதும், நிறைந்து வழிந்தோடசெய்யும் ஒரு அற்புத சக்தியை ,நம்முள் ஏற்படுத்தும் ஒரு நுட்பம்  யாதெனில் பைரவ மந்திரம்,அவை  தொடர்ந்து சொல்வதால் யாவும் வசப்படும் என்பது சத்தியமான உண்மை.சிவத்தின் அலைகள் உணர,அது தரும் மனதிற்கு எதையும் எதிர்கொள்ளத்தேவையான வலிமை,ஒரு அமைதி,ஒரு நிறைவு மற்றும் ஆனந்தம்.எங்கும் நீக்கமற நிறைந்த சர்வேஸ்வரரின் அலைகள் உணர்வது என்பது இன்றைய  வாழ்வியலின் ஒரு தேவை.என்றோ செய்த பாவ,புண்ணியத்தின் சாராம்சமாகிய கர்மவினையும் ,அச்சுபிசகாமல் ஆட்டிபடைக்கும் அதன் தாக்கத்தையும்,இன்று உணரும், இந்த நொடிபொழுது உணரும், சிவ அலைகள்  அதன் தன்மையை நீர்த்துவிடசெய்கிறது என்பதும் உண்மை. அமைதியும் ,நிறைவும்,ஆனந்தமும் வேண்டுமெனில் ,சிவ அலைகளை உணர்வது அவசியமாகிறது.சிவ அலைகளை ஒரு துளி உணர்வதால் ,உணர்பவரின் உள்ளம் கட்டுங்கடங்கா பேராற்றல் பெற்ற நாயகனின் சுடரொளியால் சூழப்படுகிறது.உணர்பவரையும் உணர்பவரின் அருகில் இருப்போரையும்,புல் ...

திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

Image
எங்கும் சிவம் , எதிலும் சிவம் .சிவமின்றி எதுவும் இல்லை .எல்லாம் சிவமே.எதை பிடித்து அதன் மூலம் நோக்கினும் சிவமே முடிவாய் வருகிறது.எம் தந்தையின் முகம் நோக்கினும் சிவமே , அன்பால் கசிந்து எவை நோக்கினும் சிவமே.சிவத்தோடு இருந்த காலம் , வாழ்வின் அர்த்தமுள்ள முறையில் நேரங்களை   செலவழிக்கப்பட்ட ஒரு   பொற்காலம் , சிவமாய் இனி இருக்க போகும்   காலமும் பொன்னான காலமே , சிவம் பற்றிய அலைகள் நினைத்தாலே , உலகின் எந்த மூலையில் எங்கு இருந்தாலும் , எந்த நிலையில் இருந்தாலும் , ஆற்றல் மிக்க , அதிர்வு மிக்க அலைகளை நொடிப்பொழுதில்   உணரவைத்து , இருக்கும் ஆன்மாவின் நிலையினை மேலும் மேலும் அதீத உயரத்திற்கு இழுத்துச்செல்லும் அற்புதம் நிகழ்கிறது.   சிவம் பற்றிய சிந்தனை , சிவம் பற்றிய கனவுகள் , சிவம் பற்றிய நிகழ்வுகள் , சிவம் பற்றிய தொண்டு , சிவனுக்கு ஆலயம் அமைத்தல் , போன்ற சிந்தனை , செயல் , இவை யாவுமே ஏதோ சும்மாவருவதில்லை .அதற்குரிய ப்ராப்தம் (கொடுப்பினை) இருந்தால் மட்டுமே நிகழ்கிறது.இதுவே பழமை , இதுவே புதுமை , பழைமைக்கும் பழைமை , புதுமைக்கும் புதுமை.சிவனை நினைத்தால்...