மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்

                                                     

மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பார்வை  ஒருவர் மீது விழுந்தால் அவருக்கு துரியாதீத நிலை உடனே கிட்டிவிடுமாம்.அத்தகைய ஆற்றல் நிறைந்தவர் அய்யா .மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக புனிதமானது. ஒரு முறை நீர் நிறைந்த  ஒரு தடாகத்தின் அருகில் சிவபெருமான் ,  பார்வதிதேவியிடம் உலகின் பிறப்பு இறப்பு ,உயிர்களின் உருவாக்கம் அழித்தல் என பலவற்றை பேசும் பொழுது ,பார்வதி தேவிக்கு உறக்கம் ஏற்பட்டு கண்அயர்ந்து விட்டார்களாம்,ஆனால் அங்கே உள்ள தடாகத்தில் நீந்திகொண்டிருந்த மீன் அதை கேட்க,அந்த  மீனின் வயிற்றில் உள்ள மீன் குஞ்சும் கேட்டு, பாலகனாய் உருமாறி எழுந்து சிவபார்வதியின் காலில் விழுந்து ஆசிவாங்கியதாம்.இப்படி மச்சமாய் இருந்து சிவ உபதேசங்களை கேட்டதால் அதற்கு மச்சேந்திரன் என்ற பெயர் வந்ததாம்.இப்படி மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக சிறப்பானது.




மச்சமுனி சித்தர் மீனாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சுனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.திருப்பரங்குன்றம் முருகனை வணங்கிவிட்டு அதன் அருகில் உள்ள மலை மீது ஏறும் பாதையில் மேல் சென்றால் ,கொஞ்சதூரத்தில்ஒரு புறம் தர்காவிற்கு செல்லும் வழி வரும்,அதன் அருகிலேயே மறு புறம்  உள்ள காசி விஸ்வநாதர் சிவன் கோவிலுக்கு செல்லும் வழி வரும்.இது ஒரு வழி. இன்னொரு வழி திருப்பரங்குன்றம் கிழக்கு புறம் ,நீண்ட நெடிய படிகட்டுகள் இருக்கும் ,அதன் வழியே சென்றால் நேரடியாகவே காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச்சென்றுவிடும்.மிக அழகான காசி விஸ்வநாதரை  சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து,அதன் அருகிலே உள்ள சுனைக்கு வர ,அந்த இடமே மிக அற்புதமாக உள்ளது.பச்சை நிறத்தில் சுனை முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது.காசிக்கு நிகரான தீர்த்தம் என்கிறார்கள் ,முருகபெருமானால் நக்கீரருக்காக உருவாக்கபட்டது என்கிறார்கள்,சுனையோடு ஒட்டியுள்ள மலையிலே சிவலிங்கம் அருகிலே விநாயகர், முருகன்,மற்றும் பைரவர் சிலை மலையோடு மிக அழகாக ஒட்டிசெதுக்கப்பட்டு காட்சிதருகிறது.சுனையில் மீன் வடிவில் மச்சமுனி சித்தர் ஐயா இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
வாங்கிவந்த தயிரை மச்சமுனி ஐயாவை ஆழ்ந்து வணங்கி அந்த சுனை நீரில் ஊற்ற ,சிறிது நேரத்தில் தண்ணீரை வட்டமிடும் நீற்குமிழ்கள் தெரிகிறது,இப்படி வந்தாலே மீன் வரப்போவதற்கான அறிகுறி .கண்இமைப்பதற்குள் அங்கே ஒரு அழகான மீன்வருகிறது.வந்து நீரிலே விடப்பட்ட தயிரினை சாப்பிடுகிறது.மீன் வடிவில் இருக்கும்
 மச்சமுனி சித்தர் அய்யா தயிரை சாப்பிட்டார் என்றால், அய்யா நமது கர்மவினை தாக்கத்தை குறைத்து நமக்கு அருள் ஆசி வழங்கிவிட்டார் என்பதே பொருள் என்கிறார்கள்.




சற்றே ஆழ்ந்து உட்செல்ல,இந்த மலை உச்சியில் இருக்கும் இந்த பச்சை நிற சுனையும் ,அருகிலே இருக்கும் மரமும் ,இந்த மலையோடு ஒட்டிஉள்ள பகுதியும் சொல்லாமல் நிறைய விசயங்கள் சொல்கின்றன.இங்கு நிலவும் இந்த சூழல் மிக அற்புதமாக உள்ளது.மாசற்ற காற்றும் ,மனித அடர்த்தி அதிகம் இல்லாததால் இருக்கும் அலைஇயக்கம் எந்தவித குழப்பமும் இல்லாமல் பளிச்சென அதன் தன்மை மிளிர்கிறது.அதோடு ஏதோ ஒன்று இங்கே சூழ்ந்து உள்ளத்தை,நெஞ்சத்தை கவர்ந்து இழுக்கிறது.ஒரு அற்புதமான அலை இயக்கம்.எதனால் இங்கே இப்படி ஒரு அமைதி அலைஇயக்கம் என்ற சிந்தனை வந்தாலே அது அடுத்த கட்டத்திற்கு தானாகவே அலைத்துச்சென்றுவிடும்.சித்தர் பெருமக்களை நேரடியாக பார்க்க இயலவில்லை என்றாலும் ,அவர்களின் அற்புத அலைஇயக்கம் இங்கே இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.மல்லிகை பூவை மறைத்து வைத்தாலும் பூவை பார்க்காமலே  அதன் வாசம் மட்டும் எவ்வாறு உணர்கிறோமோ அவ்வாறு ,ஒரு சில அலை இயக்கங்கள்  இங்கே நறுமணம் மிகுந்து தவழ்கிறது.அன்பு மட்டும் போதும் ,அன்பால் நிறைந்து ,இமை மூட  அய்யாவின் அருள் அலைகளை உணரலாம்.இங்கே நிலவும் அமைதியில் மூழ்கலாம்.எந்த ஒரு இடத்திலும் இந்த அமைதியும் ,அன்பும் நிறைந்து காணப்பட்டால் அது தெய்வீகம் நோக்கியே அழைத்துச்செல்கிறது.



ஒம்கார தத்துவம் உணர்ந்து கீழ் உள்ள குண்டலினி சக்தியை மேலே ஏற்றி
காயத்தை கற்பமாக ஆக்கும் வித்தையை தினந்தோறும் பழகு .அது விரைவில் உடம்பை கற்பமாக்கி சாக கல்விக்கு அழைத்துசெல்லும் என்கிறார் ஐயா மச்சமுனி சித்தர் அவர்கள்.நாள் தோறும் அதிகாலையில் உடல் சுத்தம் செய்து ,ஒம் நமசிவாய சொல்ல பழகி ,மூலாதாரத்திலே உறைந்துபோய் கிடக்கும் சக்தியை மேலே ஏற்றி ,உச்சியில் கிடைக்கும் ஆனந்தத்தை உணர்ந்துகொள் அதுவே சாகாகலை நோக்கி செல்லவைக்கும் என்கிறார்.உள்ளே இருக்கும் மூச்சை கற்பமாக மாற்றும் வித்தை எளிதில் உணரவைக்கும் என்கிறார்கள்.

மச்சமுனி சித்தர் அய்யா அவர்கள் ஆசிஅலைகளோடு அகத்திய உள்ளங்களை வேறு ஒரு கட்டுரையில் விரைவில் சந்திக்கின்றோம்

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்