பேரமைதி நாயகா போற்றி......!!!





இறையின் ஆசிகள் பெற்றவர்கள் தானே இங்கிருக்கும் யாவரும்.யாவருமே ஏதேனும் ஒரு விதத்தில் இறையோடு தொடர்புகள் கொண்டவர்கள் தானே.தன்னிச்சையாக செயல்படுவது போல ஒரு மாய வலையை நமக்கு நாமே வீசிக்கொண்டு ,சுயநலம் சேர்ந்துகொண்டு இறையின் மூல தொடர்புகளை மறந்துவிடுகின்றோம் அல்லவா.காலமெல்லாம் கர்ம வினையில் சுழல்கிறது.அனைவரும் இறையின் பிள்ளைகள் தானே.அன்பால் அடிபனியவேண்டும் .அன்பிற்கு உருகவேண்டும் இளகவேண்டும் .ஆனால் அடிமையாக இருக்ககூடாது.எந்த பழக்கத்திற்கும் எதற்கும்அடிமையாக இருக்கக்கூடாது.இறையோடு என்றும் அதன் தொடர்புகள் இருக்கட்டும்.இறைக்கும் நமக்கும் உண்டான அற்புத இணைப்பு என்றும் பெருகிக்கொண்டேயிருக்கட்டும் .ஒரு உயிரில் இறை அலைகள் உள்சென்றால் மட்டுமே அந்த நாட்கள் படைத்தவனுக்கு பெருமை சேர்க்கும் நாளாக மலர்கிறது .உயிரை இச்சையாக பெற்றவனுக்கும் பெருமை சேர்க்கும்.எத்தனையோ கோடான கோடி ஜீவராசிகளுக்கு கிடைக்காத ஒரு அற்புத பிறவி தானே இந்த மானுட பிறவி.சுழலில் சிக்கி யாவற்றையும் இழப்பதற்கா இந்த அதி அற்புத மானுட பிறவி.எது நடந்தாலும் ஈசனின் ஆணை துளிகூட பிறழாது நடந்தேறுகிறது.நடப்பவை நடக்கட்டும் .இறையோடு வாழ இறை சிந்தனைகளோடு வாழ பழகிக்கொள்வோம்.

இறை அலைகள் உணராத ஒவ்வொரு நாளும் வீனே.வெறுமனே அமர்ந்த இடத்திலே இருந்து கொண்டு, ஆழ்ந்து அமைதியாக உள்மூச்சினை கவனித்து நிதானமாக இறை அலைகளை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி,அன்பின் வடிவமாக  மாறி,அன்பால் ஆழ்ந்து அன்பால் கசிந்து,உள்ளம் பூரிப்படைந்து அமைதியால் ஆர்ப்பரித்து,யாவும் சுகமே எதுவும் இறையே எனும் உள்ளம்உணர் நிலைக்கு வரவேண்டும் .இறையே என்றும் நிரந்தரம் .இருக்கும் இந்த உடல் என்றாவது ஒருநாள்  போகபோகிறது.ஊரென்ன உறவென்ன சொந்தமென்ன பந்தமென்ன பாசமென்ன சொத்து சுகம் ஆஸ்தி அந்தஸ்து எல்லாம் சிவனுக்கே சொந்தம். யாவருமே  இறையின் கட்டளைகளை நிறைவேற்ற வந்திருக்கும் ஒரு மிகச்சிறிய இறை உணர்வுகொண்ட மானுட வடிவம் தானே.யாவருமே போற்றப்படவேண்டியவர்களே.செய்யும் செயலும் அதன் பலனும் எல்லாம் சிவனுக்கே.சிவன் ஒருவனே நிரந்தரமானவன் எனும் சிந்தனைகளை அசைபோட்டுக்கொண்டு ,இறை அலைகளை மெல்ல மெல்ல உள் வாங்க,மனம் லேசாக இலவம் பஞ்சுபோல  மாறுகிறது.எந்தவித commitmentம் இன்றி எந்தவித பாரமும் இன்றி ஒரு நாளில் ஒரு  நிமிடமாவது இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.அந்த ஒரு நிமிடம் இழந்த அத்தனை ஆற்றல்களையும் அது தாமாகவே  நிரப்பி , உள்ளத்தை தாமாகவே  ஜிவ்வென ஒரு புதிய ஈர்க்கும் ஆற்றல் கொண்டு நிரப்பும் அதி அற்புத நிகழ்வினை உணரலாம் .இறை ஆற்றலை கொண்டு நிறம்பிய  உள்ளம் அன்பின் அலையால் ததும்பும் தன்மையை உணரலாம்.மனதால் மிகபெரும் ஆற்றல் கொண்டு பரந்துவிரியும் தன்மைக்கு,இறைவன் ஒவ்வொரு மனித உள்ளங்களுக்கும்  தந்திருக்கின்றார்.இது யாராலேயும் எதுவும் செய்ய இயலாது.மிகப்பெரும் ராஜா போல இருக்கமுடியும் மனதளவில் அந்த அளவிற்கு இறை   ஒரு அசைக்கமுடியா நம்பிக்கையை தாமாகவே நிலை நிறுத்தும் அளவிற்கு மனதில் மிகப்பெரும் ஆற்றலை  படைத்திருக்கின்றது.




ஏகாந்தம் அமைதி தருகிறது.ஏகாந்தம்  கடல் போல எங்கெங்கும் கொட்டிக்கிடக்கின்றது இங்கே .அதுவும்  நாம் வாழும் தென்தமிழகத்திலே.பயன் படுத்தாமல் இருப்பது நாமே. சதுரகிரி போன்ற மலை தனிமை, அமைதி, இரகசியம், ஆன்மிகம் ,இறை எனும் இறைதேடல்களுக்கு  இதமான சூழல் இயற்கையிலேயே  தக்கவைத்து அதி அற்புத இரகசியங்களையெல்லாம் ஆங்காங்கே  மலை முழுதும் இயற்கையாக  கொட்டிவைத்திருக்கின்றது .மலை ஏறுவதால் உடல்சோர்வு பெறுகிறது .இதில் எங்கே ஏகாந்தம் ..எப்படி தனிமையில் இறையை உணர்வது என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும். எவர் ஒருவர் இந்தகைய சூழலிலும் இறையை மனதுள் அறிய முற்படுகிறார்களோ அவர்களுக்கு இறை இரங்கி வந்து உதவுகிறது.எளிமையாக எதுவும் இந்த உலகில் கிடைப்பதில்லை. எல்லாம் அதீத முயற்சி தேவை தான்.முயற்சி இல்லை என்றால்  அது வீண் பொழுதே.உடல் சோர்வுற்று அப்பா போதும் இனி என்று மகாலிங்கம் சன்னதியின் பின் புறம் கிடைத்த ஒரு இடத்தில் அமர்ந்து விட்டேன்.நான்கு புறமும் பார்க்கின்றேன்.அழகிய மலை.மலையின் உச்சியில் அழகும் இளமையும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த மரங்கள் செடிகள் கொடிகள் என பசுமை போர்த்தி இருக்கின்றது.இதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் .கண்களிருந்து நமது ஜீவ காந்தம் அலையாக புறப்பட்டு மலை உச்சிவரை சென்று அங்கே படும் மூலிகை மரங்களில் பட்டு மூலிகையை அலையோடு கலந்து அதி அற்புத  energy கொண்ட அலையாக மீண்டும் நமது கண்களில் வந்து குளுமையாக்கி காட்சியாக பிம்பமாக மாறி கண்களுக்கு ஒரு இதம் தருகிறது .வெறுமனே சுற்றி உள்ள இயற்கை அழகினை பார்த்தாலே போதும்.வேறு எதுவும் தேவைஇல்லை இங்கே. மலை மேகங்கள் ஆங்காங்கே தவழ்ந்து அம்பிகையின் அருளால்  மழை சாரலாக தூவுகின்றது.மழை தவழ்ந்து ஊர்ந்து செடி கொடி வேர் என அனைத்தையும் படர்ந்து ஓடையாக சிற்றருவியாக சிறு அருவியாக சலசலவென சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு அருகிலே ஓடுகிறது.சதுரகிரி காற்று மூலிகை மனம் நிறைந்தது.உலகத்தில் இருக்கும் எந்த வியாதியையும் குணப்படுத்தும் மூலிகை வளம் நிறைந்தது இந்த சதுரகிரி.
ஒம் சுந்தர மகாலிங்காயா..!!
ஒம் சுந்தர மகாலிங்காயா..!!
ஒம் சுந்தர மகாலிங்காயா..!!
என்று தினந்தோறும் மனமுருகி சுந்தரமகாலிங்கத்தை போற்றுங்கள் எந்த வியாதியும் அதன் தாக்கம் குறையும் மேலும் அவரே சதுரகிரி நோக்கி விரைவில் அழைப்பார் அதற்கான வழிவகையினையும் செய்வார் விரைவில்.



நான்கு புறமும் காற்று ,இதை சதுரகிரி காற்றே என்று பெயர் சூட்டவேண்டும்.ஏனெனில் இது தூய்மையானது அதிக  ஈதர் கொண்ட O2  நிறைந்தது.நன்கு சுத்தமானது .அதை நன்கு இழுத்து சுவாசித்து பயன் பெற பழகிக்கொள்ளவேண்டும் .அடிக்கடி திட உணவையே நிரப்பும் பழக்கத்தை அரவே நிறுத்தவேண்டும் அதுவும் இது போன்ற இயற்கை வாழும் மலையில் முடிந்த அளவு தேவைபட்டால்,பழங்களோ அல்லது  திரவஉணவினை எடுத்துக்கொள்ளவேண்டும்.திட உணவு நிறைந்தால் அது மற்ற சூட்சும ரகசியங்களை அறிய உதவாது.





இங்கே சுந்தரமகாலிங்கம் அனைவருக்கும் அதி அற்புத பிரசாதம் தந்துகொண்டேயிருக்கின்றார்.அது என்ன  என்ன தெரியுமா ? சுத்தமான நீரும் அதி உன்னதம் தரும் காற்றும். ஆம் மலை ஏறுவதற்கு இதை இரண்டையும் எடுத்துக்கொண்டால்  கிடு கிடுவென ஏறிவிடலாம்.இங்கு கொட்டிக்கிடக்கும் தண்ணீரையும் காற்றையும் இந்த இரண்டையும் எவன் ஒருவன் நல்ல முறையில் பயன்படுதிக்கொள்கிறானோ அவன் ஆயுள் நீடிக்கப்டுகிறது.தண்ணீரும் காற்றும் தேவையான ஆற்றலை தந்து இது வரை மங்கிப்போன உடல் கருவிகளை சுத்தம் செய்து புதுப்பிக்கிறது.இதற்கும் மேலாக புண்ணியம் நிறைந்திருந்தால் சுந்தரமாகலிங்கம் தம் அடியவர் மூலம் தொடுசிகிச்சையும்  செய்வார் ...மேலும் மேலும் அதி அற்புதம் செய்வார்.



ஒரு புறம் அருவி சத்தம் மறு புறம் மூலிகை காற்று.மிதக்கும் மனம்,ஜில்லென்ற காற்றினை நன்கு சுவாசித்துக்கொண்டே ஒரு கட்டத்தில் அமர்ந்து ஆழ்ந்து உறங்கிவிட்டேன்.உறக்கத்தில் ஒரு கனவு.இது கனவா அல்லது சூட்சும பயணமா எதுவும் தெரியவில்லை.ஆனால் ஒரு அற்புதமான காட்சிகள்.உள்ளம் நிறைந்தது.ஒரு அழகான கோவில் அங்கே ஒரு ஜீவ சமாதி.சிறிய நுழைவு வாயில் கொண்ட சின்ன பீடம் போன்று கோபுரம் கட்டப்பட்ட ஒரு சிறிய கோவில்.அங்கே உள்ளே பீடத்தில் சிவன் . சிவன் போல ஒரு சித்தர் சிலை.இவர் சித்தரா அல்ல சிவனா .பார்க்க சிலை.சிலைவடிவில் ஒருவர் அமர்ந்தது போல தோற்றம்.சித்தர் அமர்ந்திருக்கும் இடத்தில் சிவனா ...எதையும் யூகிக்க முடியவில்லை.சிலையாக தானே இருக்கமுடியும் .சித்தர் எங்கே எமக்கு காட்சி தருவார் அதுவும் இந்த கலி காலத்தில்.இந்தத் சிலை அருகில் நிறைய பழங்கள் சிறிய அளவுள்ள பழங்கள் நிறைய சிதறிக்கிடக்கின்றது.ஒருவர் மட்டுமே அமர்ந்து உள்ளே சென்று, சித்தரை போன்ற உள்ள சிவனை வணங்கி உள்ளே சுற்றிவரமுடியும் அந்த அளவிற்கு மிக மிக சிறிய இடம்.குறுகிய அந்த ஜீவ சமாதிக்குள் உள்ளே செல்கிறோம்.உள்ளே சென்று அமர்ந்து அமர்ந்து  மெல்ல மெல்ல சுற்றிவருகிறோம்.நன்கு ஆழ்ந்து வணங்கி சுற்றுகிறோம் .பிறகு மெதுவாகவெளி வர ஆயத்தமாகும் போது சிலையில் மேல் சிதறிகிடக்கும் பழங்கள் எமக்கும் கிடைக்கின்றது.கைகளில் வாங்கிக்கொண்டு அந்த குறுகிய வளைவில் வெளிவருகிறோம்,வெளி வரும் போது எம்மை அறியாமலேயே அந்த சிலையை லேசாக உறசி வெளிவரும்படி ஆகிவிட்டது.வெளியில் வந்தபின்பு தான் எண்ணுகிறோம் .உறசியது சிலை போல உணரவில்லையே ஒரு கல்லை உறசியது போல உணரவில்லையே ,ஒரு மனித தோள்பட்டையை உறசி வெளிவந்தால் எப்படி இருக்கும் அது போல அல்லவா  இருந்தது.ஆக இது சித்தர் தானே என்று மீண்டும் நினைவை உள்நோக்கி வெற்றுக்கண்களால் பார்க்க ஒரு சிலை மட்டுமே இருக்கின்றது.ஒரே ஆச்சர்யம் எமக்கு  .மேலும் கைகளில் பழங்களை கொடுத்தது யார் என்பதையும் யூகிக்க முடியவில்லை.
விழித்து எழுகின்றேன் .யாவும் சுகமான அனுபவமே ..!! 





காற்றினை நன்கு உள்வாங்கிகொண்டதால் உடல் நன்கு எடையற்று மென்மையாக மனமும் லேசாக இருந்தது.நகரவாழ்வில் தொலைத்த நிம்மதிஎல்லாம் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு செல்களும் அது தாமே ஆற்றல் கவர்ந்து தம்மை தாமே புதுப்பித்து சுகமாக  நிம்மதியாக இருக்கின்றது.உடலில் உள்ள கோடான கோடி செல்களெல்லாம் சும்மா பூத்து குலுங்குகிறது.துள்ளி குதிக்கின்றது.ஆழ்ந்து அமர்ந்து அனுபவித்தால் தானே இவை யாவும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.உடலும் உள்ளமும் ஆனந்தம் பெறுவதும் மனம் துள்ளிக்குதிக்கும் அருவி போல இருப்பதும் எது வந்தாலும் அதை இருக்கும் ஆற்றல் கொண்டு எதிர்கொள்ளவேண்டும் என்ற துணிவு தருவதும்  இந்த இறையோடு இயைந்த வாழ்வு தானே . எவ்வளவு ஒரு சுகமான அனுபவம் .கோடிரூபாய் கொடுத்தாலும் எங்கும் பெற இயலாது. இந்த உடல் கருவிகளை சுத்தம் செய்து இழந்த ஆற்றல்களை எல்லாம் பெறச்செய்து ,உடலை உள்ளத்தை நன்கு பொழிவுபெறச்செய்து நன்கு வலிமைஆக்குகிறது.ஒரு எளிமையான பயணம் இல்லை என்றாலும் அதன் தாக்கம் உடலில் உள்ளத்தில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.



வாழ்வில் ஒருமுறை சதுரகிரி பயணம்  தரும் அதி அற்புத மன அமைதி, உடல் கருவிகள் சீரமைப்பு பழுதுபார்ப்பு  ,எல்லாவற்றிகும் மேலாக சுந்தரமகாலிங்கத்தின் அதி அற்புத சூட்சும ஆற்றல்.எவர் வந்தாலும் வாரி அனைத்துக்கொள்வார்.எந்தவித பேதமும் இல்லை .ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் இங்கு வரும் அடியவர்களுக்கு அனைவருக்கும் ஆறுதல் தந்து அற்புதங்கள் செய்கிறார் எம் தந்தை எம் சித்தர் எம் இறைவர் சுந்தரமகாலிங்க ருபத்தில்.  இது சித்தர்கள் வாழும் பூமி.சுந்தரமகாலிங்கத்தின் பூமி.முடிந்தவரை அசுத்தம் செய்யாமல் எந்த அளவிற்கு பயன்படுத்திகொள்ளவேண்டுமோ அந்த அளவிற்கு பயன்படுத்திக்கொண்டு அடுத்துவர்களுக்கு வழிவிடவேண்டும்.ஆயிரம் ஆயிரம்  தம் அடியவர்களுக்கு அருள் புரிய காத்துக்கொண்டிருக்கின்றார் சுந்தரமகாலிங்கம் .சுந்தரம் என்றால் அழகு .அழகில் இங்கே ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றது.இயற்கை மலை அழகு அதன் பசுமை அழகு அதில் தவழும் மூலிகை காற்று அழகு .இயற்கை முகில் அழகு.கண்ணாடி போன்று ஓடும் அருவி தண்ணீர் அழகு .பார்க்கும் யாவும் அழகு கேட்கும் யாவும் அழகு இங்கே.இந்த லிங்கமும் ஒரு புறம் சாய்ந்து அருள் தருவதும் அழகே.இங்கிருக்கும் யாவுமே அழகு.சுந்தர மகாலிங்கத்தை மனதால் வாரி அனைத்து அவர் பொற்பாதம் பணிவதும் அழகே ..!! சதுரகிரி அலைகளோடு இறை உள்ளங்கள்  அனைவருக்கும் சுந்தர அலைகள் கொண்டு வாழ்த்துகின்றோம்.

வாழ்க வளமுடன் !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா ..!!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்