Posts

Showing posts from 2020

குருவடி சரணம் !!!

Image
நீல வெளியோனே  !! நீக்க மற நிறைந்தோனே  !! நின்றும்  இருந்தும்  கிடந்தும்  நடந்தும்  நாட்டியமாடும்  நான்மறை  நாயகனே  !! ஆடி அசைந்து  அடர்ந்து  படர்ந்து  திரிந்து  விரிந்து  நீ உருவாக்கும்  கோடான  கோடி பிரபஞ்ச இரகசியம் தான்  யார் அறிவார்  மாயோனே  !! தூயோனே மறையோனே  !! இந்த  விந்தையை  யார் அறிவார் !! ஈசனே  !!சர்வேஸ்வரனே !! எப்படியெல்லாம்  கூப்பிட இயலுமோ  அப்படியெல்லாம்  அழைத்துவிட்டேன் எம் பெருமானே நாயகனே  !!.சொல்ல இயலா  உணர இயலா  நிலையில்  இருக்கும்  பேராற்றலே !! நின்  ஆற்றல்  கொண்டு  விம்மி  பெருமையுடன் நின்னை போற்றுகின்றேன் ,இப்பிரபஞ்சத்தில்  நீ செய்யும்  ஒவ்வொன்றும்  அதிசயம்  ஒவ்வொரு  நிகழ்வும்  அற்புதம்.  ஒவ்வொரு நொடியும்  அதி அற்புதமே  !! என்றும்  என்றென்றும்  நின்  ஆற்றல் கண்டு  ஆனந்த கண்ணீர்  மல்கிறேன் !! வருவாய் !! வந்தமர்வாய்  எம்முள்ளே  பெருமானே !! பறந்து விரிந்த பால்வெளி ,கருமையும் நீல  வெளிச்சமும்  கலந்து ஆங்காங்கே அள்ளித்தெளித்த  ஒளிக்கற்றைகள் , கேட்பாரற்று  சோ  வென  கிடக்கும்  அண்ட  பேரண்ட  கோள்கள் நட்சத்திரங்கள் துகள்கள் எத்தனை  சூரியன்  எத்தனை உயிர்வாழ தகுதியுள்ள  கோள்கள்

உள்ளம் உருகுவதற்கே !!

Image
எங்கும்  நிறைந்து  எம்முள்  மறைந்து  எல்லாம்  ஆன  எம்பெருமானே !! எம் நாயகனே   !!பிறப்பும்  இறப்பும்  இடையே  மாய  வலை விரித்து மதி மயக்கவைத்து ஏதேதோ  செய்யவைத்து,  அடித்து , துவைத்து , பிழிந்து, கசக்கி இறுகவைத்து,  உறையவைத்து  கூடவே   உள்ளத்தையும்  உருகவைத்து சொல்லஇயலா  விந்தைபுரியும்  சுடரொளி  நாயகனே ..!!! எம் அப்பனே  ..!! சர்வேஸ்வரனே  !! எம் பெம்மானே   !! விண்ணோர்  தொழும்  வேந்தனே  !! பிறப்பை  அறுக்கும்  பெருமானே  !! தூய  ஒளி  சூழ்ந்த  ஜோதியாய்  ஜொலிக்கும்  பேரின்ப  ஊற்றே  !! வருவாயா  எம்முள்ளும்  ? நினை எண்ணியே  இந்த ஸ்தூல  உடல் நாள்தோறும்  அதன் ஆயுள்  நோக்கி  நகர்ந்துகொண்டிருக்கின்றது .எத்தனை  எத்தனை  மகான்கள்  நீ படைத்த  இந்த புண்ணிய பூமியிலே ,அத்தனை  மகான்களும்  ,நின்னை  எண்ணி  எண்ணி  தம் சிந்தை  முழுவதும் மெய்சிலிர்த்து ,அனுபவித்து   ஆனந்தம்  நிரப்பி   எழுதிய  பாடல்கள்  ஆயிரம் ஆயிரம்  !!பேரன்பு  அலை கொண்டே  நின்னை  எம்மால்  துதிக்க  இயலும் ,இந்த அன்பு  அலை ஏற்று  வருவாய்  பெருமானே  ..!!  நின்  பொற்பாதம்  பணிகின்றோம்..!!   எம் பணிவான  வேண்டுகோள் செவிமடுத்து வந்தமர்வாய்  எம் சிந்தை

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

Image
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி     புராந்தகி த்ரியம்பகி எழில்   புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள     புஷ்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத     நாதாந்த சத்திஎன்றுன்   நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே     நானுச்ச ரிக்கவசமோ ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ     அகிலாண்ட கோடிஈன்ற   அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்     ஆனந்த ரூபமயிலே வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்     வளமருவு தேவைஅரசே   வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை     வளர்காத லிப்பெண்உமையே.  தாயுமானவ  ஸ்வாமிகள்  ராமேஸ்வரம் அம்பாள்  பற்றி  எழுதிய  மிக அற்புதமான  பாடல் .அனைவரும்  படித்து  பொருள் உணர்ந்து பயன்பெறவேண்டிய  தெய்வீக   பாடல் . எங்கெங்கும்  நிறைந்திருப்பவளே !! சிருஷ்டிக்கு  முன்னே  தோன்றிய  மிக பழமையானவளே  !! சர்வ  மங்களம்  நிறைந்தவளே !! அனைத்தையும்   ஆளும்  சர்வேஸ்வரியே  !! முப்புரம்  எரித்தவளே  1!  மூன்று திருவிழிகளையுடையவளே  !!மிக  அற்புதமான  குணங்களை  கொண்ட சக்தியே  !! மனாதீத , குணாதீத ,    நாதாந்த சத்தியே !! இப்படி  இடைவிடாது  ஓதும்  உன் அடியார்களின்  திருநாமங்களை  நான்  உனது அருளால்  ஓதும் 

இறைவழி நல்வழி

Image
 எல்லாம்  வல்ல பரம்பொருளே !! உலகமெல்லாம்  காத்தருளும்  உமையவள்  நாயகனே  !! உன்னத அருள் கொண்ட பேராற்றலே !! பெரும்  வலிமைகொண்ட  கட்டுக்கடங்கா  ஷக்தியுடைய  பேரானந்தமே !!   எம் பெருமானே!! பேரின்ப வெள்ளமே !!  கோடான  கோடி ஜீவராசிகளுக்கு  க்ஷணப்பொழுதில்  தீர்வு தரும்  பெரியோனே !! தூயோனே !!மாயோனே !! உன் பொற்பாதம் சரணம்  ! தேவியின்   அற்புதங்கள்   ஆயிரம் ஆயிரம் ஒவ்வொரு ஜீவனுள்ளும் அவள்  உணர்த்திக்கொண்டிருக்கும்  தத்துவங்கள்  ஆயிரம் ஆயிரம் .ஆழ்ந்து  ஆழ்ந்து  பல லட்சங்கள்  தேவியின்  நாமங்களை  உச்சரித்து  ,அவளின்  திருப்பாதம்  பணிய  ,அலையாய்  பேரலையாய்  எழுவாள்.அதன் பிறகு தேவி  என்று  ஆழ்ந்து  நினைத்தாலே  ஒரு அற்புதம்  நிறைந்த  உலகிற்கு அழைத்துசெல்கிறாள் .என்றுமே  மகிழ்ச்சியும்  உற்சாகமும்  துள்ளலும்  ஆனந்தமும்  அருவி  போல  ஆர்ப்பரித்து  ஓடுகிறது அவள்  அருகில் .இன்னும்  கடந்து  செல்லவேண்டிய  தூரம்  அதிகம்  இருக்கின்றது .ஆனால்  தொலை தூரத்தில்  இருந்துகொண்டே  அவளிடம்  சரணாகதியடைய ,ஒரு அற்புதமான  செழுமை நிறைந்த  மென்மை  அலைகளை  வாரி வழங்குகிறாள் .எப்படிப்பட்ட  ஒரு அலை  இயக்கம்  இவள் அருகிலே .கவலையா ,

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே !!

Image
.இறையை  தேடி  உள்ளத்தில் உறைந்துகிடக்கும்  சிறு வெளியில்  மிதக்கின்றேன் . எம் பெருமானே ...வா!!..எம்முள்ளே வா ..!! எம் நாயகா  வா  !!.. எம் பெரும் நாயகா  வா !! ..நான் மறையே  வா ..!! எம்முள்  உயிர்  மூச்சாய் எழும் நாதமே  வா  !! எங்கிருந்து அழைத்தாலும்  க்ஷணப்பொழுதில்  துள்ளிவரும்  தெள்ளமுதமே வா !! திருமகனே...   வா  !! அலையாய்  பேரலையாய்  உள்ளத்தை  கவ்விக்கொள்ளப்போகும்  அரூப  ரூபமே   வா  !! நீ எவ்வாறு   இருப்பாய் யாம்  அறியோம்   ..நீ  எந்த வடிவம்  யாம் அறியோம்  ..நீ எப்படி இருப்பாய்  என யாம்  அறியோம்  .. ஆனால்  எம் உள்ளம்  நின்னை  மட்டுமே வாரிக்கொள்ள காத்துக்கிடக்கின்றது .ஆனந்தமாய்  கோடி கோடி பிரகாசமாய்  ஜோதி ஜோதி  பிரகாசமாய்  அலையாக  பேரலையாக ...அப்படியே  எம்முள்  எம் நெஞ்சத்துள்  வந்தமர்வாய்  எம்பிரானே ..நீ இருக்கும்  பொழுதெல்லாம்  யாம் எமை மறவோம் ..உடல் மறவோம்  உயிர்  மறவோம்  உணவு மறவோம் .நீ தரும்  சப்தமெல்லாம்  எமக்கு தேனினும்  தெவிட்டாத  அமுத  ஸ்வரமே .காரணமும்  நீயே  ..அதன்  மூல காரணமும்  நீயே .நீ ஆதியா  அந்தமா.. மூலமா...  காரணமா  ? தெரியாது பெருமானே !! ..நின்னை  எம்முள்  எம் உள்ளத்து