Posts

Showing posts from 2017

ஸ்ரீ தாயுமானவர் - திருச்சிராப்பள்ளி

Image
மார்கழி  மாதம்  இயற்கையிலேயே அதிக ஈதர் நிறைந்த, சுத்தமான காற்றினை அதிகாலை வேளையில் அள்ளி தூவும் காலம்.திருப்பாவையும் திருவெம்பாவையும் அதிகாலை வேளையில் கேட்பதே ஒரு தெய்வீக சுகம்.அதுவும் ஒருவர் கோவிலில் அழகிய மெட்டுகளில் பாடுவதும் அதை கேட்பதும் ஒரு தனி சுகம்.பனி ஒருபுறம் இருந்தாலும் அதிகாலை ஸ்நானம் செய்து பெருமாளையோ ,சிவபெருமானையோ வணங்குவது அதி உன்னதமானது. காவிரியில் நீராடி   நடந்தே  வடகரைக்கு அருகில் உள்ள ஸ்ரீரெங்கநாதரையும் , தென்கரைக்கு அருகே உள்ள மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமிகளையும் தரிசனம் செய்தார்கள் அந்த காலத்தில்.காவிரியில் நீர் வரும் பொழுது குளித்துவிட்டு , குறைந்தபட்சம் வாகனத்திலாவது சென்று பெருமானை வணங்க வேண்டும் இக்காலத்தில். சிராப்பள்ளியின் பரபரப்பான  பகுதியாகிய மெயின்கார்டு கேட் தாண்டி உள் செல்ல, மலைக்கோட்டை அடிவாரத்தில்   மாணிக்கவிநாயகர்  சன்னதி அற்புதமாக இருக்கிறது .ஒரு ஜீவ சமாதியிலிருந்து வரும் ஆற்றல் போல ,இறை அலைகள் சன்னதி முழுவதும் சூழ்ந்து தெய்வீக மனம் கமழ்கிறது.தொழில் ,பணம் ,வேலை சம்பந்தபட்ட பல பிரச்சனைகளை கோரிக்கைகளாக இங்கே வைக்கிறார்கள்.மாணிக்கவிந

ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ...!!!

Image
பிரபஞ்ச நாயகனே ..!! விஸ்வேஸ்வரனே ..!!! விரிந்து விரிந்து சென்றுகொண்டேயிருக்கும் வெட்டவெளியோனே..!!! காரிருளே !!! கரும்கும்மிருட்டே ..!!! யாவற்றையும் சூழ்ந்து சூழ்ந்து ஈர்க்கும் ஈர்ப்பு விசைக்கு மூலமான ஆதியே ..!!! அங்கிங்கெனாதபடி எங்கும், எங்கெங்கும் வியாபித்திருக்கும், ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!! எப்படி நின் தன்மை உரைப்போம்..எம்பெருமானே ..!! யாவற்றுள்ளும் பிண்ணி பிணைந்து ஊடுறுவி ,யாவற்றுக்கும் அருள் ஆட்சி நடத்தும் அண்டபேரண்ட நாயகனே ..!!!மனம் போன போக்கில் திரிந்து ,கண்களை மூடிக்கொண்டு இவை எல்லாம் நீ கவனிக்க போகிறாயா ? என்று தெரிந்தும் தெரியாமலும் செய்யும் செயல்கள் யாவற்றுக்கும் மூல காரணமான இருந்துகொண்டு ,இம்மிகூட பிசகாமல் ,பலன்களை வாரிவழங்கும் எம் நாயகனே ..!!! எம் பெருமானே ..!!! பேரொளியே ..!!! உள்ளும் புறமும் நீ ..!! எம் உணர்வும் நீ !! உடலும் நீ ..!!! உள்ஒளியும் நீ ..!!நீயே அனைத்தையும் ஆள்கிறாய் ..!! எதுவும் நினது ஆட்சிபுலத்தை விட்டு விலகுவதில்லை.நின்னை அறிந்திடல் கடினம் ,நின்னை அன்பெனும் தன்மையால்  உணர்ந்திடல் எளிது.அன்பாய் எளிதாய் ஆத்மரூபமாய் இருக்கிறாய்.நுணுகி நுணுகி

ஸ்ரீ மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்-II

Image
சித்தன் அழைத்தால் தான் சித்தனை பற்றிய அருள் அலைகளை உணரமுடியும்.என்னதான் மனம் விரும்பி வலுகட்டாயமாக சென்றாலும் சித்தன் அழைக்கவில்லை எனில் சித்தரின் தரிசனம் கிடைக்காது.அதிகாலை நேரம் ஒரு கனவு. அதில் ஒரு பெரிய மரம் அதன் அருகே ஒரு மூலிகை செடி அருகே ஒரு பெரிய மலைபாறை ,அதில் அழகிய சித்தர் உருவம் படமாக மிக அழகாக வரையப்பட்டுள்ளது.சித்தரின் பெயர் தெரியவில்லை.அருகிலேயே இருக்கும் மூலிகை அற்புதமான நறுமணம் கமழ்கிறது.சட்டென எழுந்துவிட்டோம் .இன்று ஏதோ ஒரு சித்தரின் அல்லது மகானின் தரிசனம் கிடைக்க போகிறது என்பது மட்டும் தெரிந்தது. ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்லலாம் என முடிவுஎடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகி கிட்டதட்ட ஒரு  மாலை நான்கு மணிக்கு மெதுவாக மலை அடிவாரம் வந்தோம் .சரியான கூட்டம் ,ஏன் என விசாரித்த  போது ,இன்று சஷ்டி ஆரம்பம் ,இன்று முதல் நாள்  ஆதலால் இதோ  இங்கே தெரிகிறதே சரவணபொய்கை அங்கே குளித்து முருகனை தரிசித்து காப்பு காட்டி விரதம் அனுஷ்டிப்பார்கள் என்றனர்.மெதுவாக கடந்து மேல் செல்ல ஆயத்தமானோம்.மலை எங்கும் அதிக அளவில் பாறைகள் தென்பட்

காருண்யவாராம் ...!!!

Image
மதுரையின் centre of attraction ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் ஒரே இடம் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலே.ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா.ஒவ்வொரு நாளும் ஒரு அழகான நிகழ்வுகள்,நிகழ்ச்சிகள்  என அம்பாளின் அருள் கருணையால் இவை யாவும்  தொடர்ந்தவண்ணம் இருந்துகொண்டு வருவோர் செல்வோர் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.மதுரையில் இருப்பவர்களே எத்தனை முறை அம்பாளை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது என எண்ணி பாருங்கள்.தினந்தோறும் கிடைத்தால் தலை எழுத்தே மாறிவிடும்.காருண்ய வாராம் நிதிம்.. கருணை கடல்....எல்லையே இல்லாத கருணை நிறைந்தவள்...மீனாட்சி அம்பாளின் தரிசனம் கிடைப்பது  என்பது மிக பெரிய பாக்கியம் அதுவும் அவள் நம்மை அவள் கருணை மழையில் நனையவைத்துவிட்டால் என்றால் அந்த நாள் மிக புனித நாளே அது ஒரு பூர்வ ஜென்ம புண்ணியமே.அம்பாளின் அருள் அலைகள் சூழ்ந்து கருவறையே மிக அற்புதமாக ஜொலிக்கிறது. கிட்டதட்ட இங்கு வருவோரின்  ஒரு சராசரி மனநிலை என்னவென்றால் அம்பாள் பார்த்து,சுந்தரேசுவரர் பார்த்து,பொற்தாமரை குளம் பார்த்து ,வல்லப சித்தர் ஜீவசமாதி பார்த்து என பல இடங்களை

ஸ்ரீ ராமமுனி அய்யா !!! - மதுரை.

Image
விஷ்வரூபமாகி மகா விஷ்வரூபமாகி விரிந்து விரிந்து   எங்கும்  எங்கெங்கும் வியாபித்திருக்கும்  அகண்டாகார  பேரொளி நாயகனே !! தாங்கள் ஒருவனே என்றும் இருக்கிறீர்கள் .தாங்கள் ஒருவனே காலத்தின் நாயகன் .கண்ணயர்ந்து தூங்கியது போல கடந்து சென்ற எமது  கடந்த கால தலைவனும் தாங்களே ..!! எமது நினைவு தெரிந்த ஆரம்ப நாள் முதல் யாம் தங்களிடமே ,எமது பல் வேறு  கோரிக்கைகளையும் ,வாழ்வின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளையும் அவைகளை எதிர்கொள்ள இயலாது துவன்றும், அழுதும்,வீழ்ந்தும் , விம்மியும் விழி பிதுங்கியும்  இருந்தோம் அப்போது தாங்களே எமக்கு தமது அருள் தந்து ,எம்மை தாங்கொணா துயரத்திலிருந்து  பல முறை விடுவித்தீர்கள். இன்றைய  நாள்  முடிந்தவரை நிம்மதியாக இருக்கவியல்கிறோம்,விதியால் அச்சு பிசகாமல் ,எதை எதைஎல்லாம்  எதிர்கொள்ளவேண்டுமோ அதையெல்லாம் எதிர்கொள்ளச்செய்து,  மிக அற்புதமாக  நிகழ்வை நிகழ்த்தி, இன்பம் துன்பம் பேரின்பம் அமைதி என  எம் மனதினை பல மாற்றங்களுக்கு உட்படுத்திஇருக்கீறீர்கள்.  தாங்களே இவை யாவற்றிற்கும்  காரண கர்த்தா ,தலைவன் என்பதை பலமுறை  மறந்திருக்கிறோம். ! பகவானே !! இனிவரும் காலமும் தாங்களே எமது நாயகன் !!

ஸ்ரீ லலிதம் .!!!

Image
ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத்  தாரநாயக-சேகராம்  ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம்  பாணிப்யாம்-அளிபூர்ண-ரத்ன-சஷகம்-ரக்தோத்பலம் பிப்ரதீம்  சௌம்யாம் ரத்ன-கடஸ்த-ரக்தசரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம்  ..... லலிதம் என்றால் அழகு. லலிதம் என்றால் சாந்தம். லலிதம் என்றால் மென்மை. லலிதம் என்றால் அன்பு .லலிதம் என்றால்  ஆனந்தம்.லலிதம் என்ற வார்த்தையே அழகு.  அழகே நிறைந்தவள் அழகு மட்டுமா ? அறிவும் நிறைந்தவள் .அறிவு என்றால் நம்மிடம் உள்ள அறிவா இல்லை .ஞானம்,எதையும் கணிக்கும் நுட்பம் ,ஆழ்ந்த அகன்ற நீண்ட நெடிய விசால பார்வை ,எதையும் அதன் நுனி ஆழம் வரை சென்று ,நீ யார் ? உனக்கு என்ன தேவை ? உன் மூலம் என்ன ? உன் சூட்சும உடலில்  உறைந்துகிடக்கும் தன்மை என்ன ? உமது இடரின் மூலகாரணமும் அதன் தீர்வும் ஷன பொழுதில் அறிந்தவள் ! உனக்கும்  உனது நீண்ட நெடிய இறைக்கும் உள்ள ஆதி மூலம்  நோக்கும் திறம் தெரிந்தவள் ! அதிநுட்பம் நிறைந்த  எதையும் கணிக்கும் ஒரு ஞானப்பார்வை உடையவள்! .அன்பால் கருணையால் அகிலத்தையே ஆழ்ந்து ,யாவற்றையும் தம் சூட்சும பார்வையால் ஊடுறுவி அரசாட்சி செய்பவள்.!!! எம்பெருமானின் நாயகி

மச்சமுனி சித்தர் அய்யா - திருப்பரங்குன்றம்

Image
                                                      மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பார்வை  ஒருவர் மீது விழுந்தால் அவருக்கு துரியாதீத நிலை உடனே கிட்டிவிடுமாம்.அத்தகைய ஆற்றல் நிறைந்தவர் அய்யா .மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக புனிதமானது. ஒரு முறை நீர் நிறைந்த  ஒரு தடாகத்தின் அருகில் சிவபெருமான் ,  பார்வதிதேவியிடம் உலகின் பிறப்பு இறப்பு ,உயிர்களின் உருவாக்கம் அழித்தல் என பலவற்றை பேசும் பொழுது ,பார்வதி தேவிக்கு உறக்கம் ஏற்பட்டு கண்அயர்ந்து விட்டார்களாம்,ஆனால் அங்கே உள்ள தடாகத்தில் நீந்திகொண்டிருந்த மீன் அதை கேட்க,அந்த  மீனின் வயிற்றில் உள்ள மீன் குஞ்சும் கேட்டு, பாலகனாய் உருமாறி எழுந்து சிவபார்வதியின் காலில் விழுந்து ஆசிவாங்கியதாம்.இப்படி மச்சமாய் இருந்து சிவ உபதேசங்களை கேட்டதால் அதற்கு மச்சேந்திரன் என்ற பெயர் வந்ததாம்.இப்படி மச்சமுனி சித்தர் அய்யா அவர்களின் பிறப்பே மிக சிறப்பானது. மச்சமுனி சித்தர் மீனாக திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சுனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.திருப்பரங்குன்றம் முருகனை வணங்கிவிட்டு அதன் அருகில் உள்ள மலை மீது ஏறும் பாதையில் மேல் சென

ஸ்ரீ பைரவ வாகனம் ..!!!

Image
பிரபஞ்ச நாயகனே!! பெம்மானே !! தூசியினும் தூசியாய் இருக்கும் ,எம்மால் எம் கற்பனையால் கூட ,நின் அருள் தாண்டவ அலைகள் நடத்தும் அற்புத அரங்கேற்றம் சிறு  துளி அளவுகூட  புரிந்துகொள்ளஇயலவில்லை.நித்தம் ஒரு புதுமை என எண்ணில் அடங்கா கோள்கள் உருவாக்கும்  பேராற்றல் கொண்ட நாயகனே ..!! கோடான கோடி ஜீவன்களையும் உருவாக்கி,காத்து,அரவணைத்து ,அழித்து ,புரிய இயலாத விந்தைபுரியும் ஆதி அந்தம் இல்லாத ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!தூயோனே ,,!! மறையோனே ..!!   நிறைந்தோனே ..!! நின் பெருமை எண்ணி ,செய்வதறியாது, நெக்குருகி நெஞ்சம் நிறைந்து ,உள்ளம் உறைந்து நின் தாள் பணிந்து போற்றி வீழ்ந்து வணங்குகின்றோம்,!!அருள் புரிவாய் அய்யனே .!! நின் பாதம் சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!! ஏழரைநாட்டு சனியே பாடாய் படுத்தும் .அதுவும் ஏழரைநாட்டு சனியில் ஜென்மசனி ஒருவருக்கு நடந்தால் ,சொல்லவே வேண்டாம்.அது உடம்பில் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தும்.ஒரு சாதாரண வேலையை கூட செய்யவிடாமல் சுத்த சோம்பேறியாக்கிவிடும்.எதுவும் புரியவிடாது .எங்கே எப்போ வெளிச்சம் வரும் என தெரியாது.எரும