தென்கைலாயம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷி -ஜெயந்தி விழா -2015

அகத்திய உள்ளங்களே ஸ்ரீ அகஸ்திய மகரிஷி அய்யா அவர்களின் ஜெயந்தி விழா இந்த வருடம் 29.12.2015 செவ்வாய்கிழமை அன்று திண்டுக்கல் அருகே உள்ளே சிறுமலை ஸ்ரீ அகஸ்தியர் கோவிலில்  கோ பூஜையுடன் 1008 அஷ்ட அதிக சஹஸ்ர  கும்ப கலசாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது .பல்வேறு மூலிகை யாகமும் ஐயாவுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.அதன் ஒரு சில தொகுப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.(Exclusive to Agathieyam Viewers).

மலை மிக அழகாக  தோற்றத்தில் கைலாயம் போல  சிவன் வாழும் மலையாக காட்சியளிக்கிறது.மலை உச்சியில் எங்கும் நல்ல அதிர்வு ஆற்றல் உணரமுடிகிறது.தூயவெண்பனி போன்ற மின்னிடும் நுண் ஆற்றல்மிக்க இறை அலைதுகள்கள் மலையெங்கும் வியாபித்துள்ளது.இங்கு வந்து தவம் செய்யவேண்டிய அவசியமில்லை.சற்றே  அதன் ஆற்றல் அலையை உள்வாங்கி  அப்படியே அனுபவிக்க ஒரு இனம் புரியாத பாச அலைகள் நம்மை சூழ்ந்துகொள்கிறது,அதனை அவ்வாறே பிடித்து மேலும் தொடர நேரம் செல்வதே தெரியாமல் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.நகர வாழ்வில் தம்மை இணைத்துகொண்ட அன்பர்கள் ஒரு முறையாவது இங்கு வந்து, இது போன்ற சூழலில் உலாவும் மூலிகை காற்றையும்,இங்கே கொட்டிகுவிக்கவைக்கப்பட்டுள்ள அதிர்வு அலைகளையும் நன்கு உள்வாங்க ,தேகத்தில்,சூட்சும சரீரத்தில் உள்ள இடர்கள் களையப்பட்டு புத்துணர்வு பெரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மகான் தம் தோளிலேயே ஒரு சிவலிங்கத்தை தூக்கிவந்து மலையின் உச்சியிலே பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.மிக அற்புதமாக உள்ளது.சக்திமிகுந்து பார்க்கவே மிக ரம்மியமாக உள்ளது.மேலும் அகஸ்தியர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சியும் சிலையாக வடிக்கப்பட்டு உச்சிமலையில் கருநெல்லிமரத்தின் கீழ் சிவனுக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது.



















Comments

  1. அருமையான படங்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. I was also participated this great spiritual Agathiyar jeyanthi festival with my family from last year.
    We are very happy to enjoy with our souls.

    Thanks to Guru Agathiyar.

    Thanks,

    M Mohanraj
    Madurai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி