இருளும் ஒளியும் !!
எமைஆளும் ஈசனே !! சர்வேஸ்வரனே !! ஆதி மூலமே !! ஒளியாய் பேரொளியாய் எங்கும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் சுத்த பரப்பிரம்மமே !!மகாதேவனே !!நினதருளால் காலசக்கரம் சுழல்கிறது .யுகங்கள் ஆயிரம் ஆயிரம் பிறழ்கிறது ...எத்தனை எத்தனை கோடி கோடி ஜீவராசிகள் அதன் குணாதிசயங்கள் அழகு, திறமை, மதி நுட்பம் ..அப்பப்பா..... யுகம் யுகமாய் ஆயிரம் ஆயிரம் ,கோடி கோடி, அண்ட பேரண்ட ஜீவராசிகளை பிறப்பெடுக்கவைத்து காத்து அமுதுபடைத்து ,அரவணைக்கும் , சிந்திக்க ,கணிக்க, இயலாத எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பேரொளியே !! என்னவென்று சொல்வேன் நின் மாபெரும் தன்மையினை !! எப்படி உரைப்பேன் நின் கருணை அலைகள் எம்முள் அலையாய் ஏற்படுத்திய தாக்கங்களை !! கண்டு வியந்தேன் பலமுறை எம்முள்ளும் காட்சியாய் எம் நெற்றியுள் புருவ மத்தியுள் ஒளியாய், என்றும் சுடரொளிபோல ,அமைதியாய் ஆடாது அசையாது இதமான பௌர்ணமி நிலவைப்போல ஒவ்வொரு மனித உயிருள்ளும் நெற்றியில் நெற்றிகண்ணில் ஒளியாய் சுடர்விடும் வற்றா பேரொளியே ! ..எங்கள் நாயகனே !! பேரின்ப ஒளியே !! ஆற்றலே !! சத்குருவே !! சுத்த பரப்பிரம்மமே !! என்றும் நின் திருவடியில் சரணாகதி !!
இருள் சூழ்கிறது ...ஒளி மறைகிறது .பிறகு ஒளி விரிகிறது இருள் கவ்வுகிறது ..இருளும் ஒளியும் ஒன்றோடு ஒன்று கட்டிஅரவணைக்கிறது .ஒரு கட்டத்தில் இருள் முற்றிலும் ஆக்கிரமிக்க முயல்கிறது .இருள் ஒளியை கண்டவுடன் ஈர்ப்பு பெற்று ,பரவசமாகி அதில் மூழ்க தம்மை தாமே, தம்மை அறியாமல் மூழ்கி,இறுதியில் கரைகிறது.இருளும் ஒளியும் மாறி மாறி ஒன்றை ஒன்று ஆட்கொள்ளநினைக்கிறது.இறுதியில் ஒன்றில் ஒன்று மூழ்கி ,ஒளிவெல்கிறது.
இருளை வென்று தம்மை ஒளியாய் ஒளிபிழம்பாய் மாற்றியபோது அவன் சித்தனாகிறான் மகானாகிறான் பிறப்பில்லா நிலை பெற்று மரணமில்லா பெருவாழ்வை அடைகிறான்.இருளால் சூழ்ந்தவன் பிறவிச்சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கின்றான்.ஒவ்வொரு நாளும் நம் தேகத்தில் இந்த இருளும் ஒளியும் ஒன்றோடு ஒன்று கலந்து மூழ்கும் அர்த்தநாரீஸ்வரர் திருவிளையாடல்கள் நடந்தேறுகிறது.இது உண்மை .உணர்ந்து பாருங்கள் இருள் என்பது சக்தி .ஒளி என்பது சிவம். இருள் உடலின் இடது புறம் உச்சி முதல் உள்ளங்கால் வரை இருக்கும் உடம்பின் சரி பாதி.அதே போல உடலின் வலது பகுதி, உச்சி முதல் உள்ளங்கால் வரை இருக்கும் உடம்பின் இன்னொரு பாதி ஒளி அது சிவம்.இருள் சூழ பயம் சூழ்கிறது .ஒளி சூழ பயம் விலகுகிறது..திடம் பெறுகிறது,ஆற்றல் பெறுகிறது.
இருளும் ஒளியும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுவது போல தெரிந்தாலும் ,இறுதியில் ஒன்றில் ஒன்று மூழ்கி சமநிலை பெறுகிறது.கண்களை மூடிக்கொண்டு இந்த உடளுள் நிகழும் அற்புதங்களை ஆழ்ந்து கவனிக்க மனம் அமைதிபெரும் ஆற்றல் பெரும் நிறைவு பெரும் .சூட்சும உடல் அற்புதமாய் சுழலும் .இது ஒரு அற்புதமான மாபெரும் தவம் . உடலுள்ளே இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் இயங்கும் தன்மையை உணரமுற்பட ஆழ்ந்து கவனிக்க கருணையுடைய பெரியோனின் இப்படைப்பு எத்தனை நுட்பம் நிறைந்தது என்பது புரியவரும்.ஆழ்ந்து கவனிக்க கவனிக்க ஒவ்வொரு உறுப்பும் ஆனந்தம் கொள்ளும்.மனமும் அமைதிபெறும்.வாழ்வும் பயனுள்ளதாய் மாறும் .!!
குருவின் பாதம் தொட அகலும் கோடி இன்னல்கள் .குருவே இறையை காணவழிசெய்வார்.குரு சொல்லும் சொற்கள் வேதம் போன்றது......சத்குருவே சரணம் !! அகத்திய மாமுனியே சரணம் !! எம் தந்தையே சரணம் !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஓம் அகத்தீஸ்வராய நமஹா !!
Comments
Post a Comment