வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க..!!!


சிவத்தை தவிர வேறு ஒருவர் இல்லை .சிவத்தை விட வேறு ஒரு வழியும் இல்லை .சிவமே கதி .சிவமே சரியான தீர்வு சொல்லும் ,சிவமே யாவற்றையும் தம்முள்ளே உள்ளடக்கி இருக்கிறது.சிவம் தரும் சோதனையை அனுபவித்து தான் ஆகவேண்டும் .முட்டி மோதி பார்த்தாலும் எங்கெங்கு சென்றாலும் சரணாகதி இங்கு தான் ,இந்த சிவத்தில் தான் கிடக்கிறது.வேண்டுபவன யாவும் தருவான் சிவன் ,சிவன்  பெருமை எண்ணி எண்ணி , சிவன் தாள் சிந்தை பணிய ,அவன் பாதம் பணிந்து சரணாகதி யடைய  சிவமே ஆற்றலாய் அலையாய் மாறி  தீர்வாய் வருவான் ,இன்னல் நீக்கி இன்பம் தருவான் சிவன் .!!!

சிவமே எங்கும் .சிவமே எங்கெங்கும் .!!! ஆழமாய் அகலமாய்  வெற்றிடமாய்  விரிந்து விரிந்து சென்றுகொண்டேயிருக்கும்  அடி நுனி காண இயலா தன்மை நிறைந்தோனே !! நின் திருவடிகள் வெல்க !!மெல்லியதாய் மிக மெல்லியதாய் அனுவிலுள்ளும்  மிக பிரம்மாண்டஆற்றல் கொண்ட மிக நுண்ணியனே !!தூயோனே !! நின் பெருமை என்றென்றும் வாழ்க !! வேந்தனே !! வேதமே !! வேதத்தின் சாரமே !! எம் நாயகனே !! எம் பெருமானே !! எமை ஆட்கொண்ட பெருமானே !!  என்றும் நீயே அறிவில் தெளிவில் முதன்மையாய் இருக்கிறாய் !!நின் வியக்கும் அதி நுட்ப தன்மை என்றென்றும் ஓங்குக !! அன்பாய் பேரன்பாய் கவர்ந்து சூழ்ந்து ஈர்க்கும் தாயோனே !! நின் எளிமை வாழ்க !!நின் கவர்ந்திலுக்கும் தன்மை வாழ்க !!அன்பு அது ஒன்று போதும் அது இருக்கும் இடத்தில் ,நீயே வருகிறாய் எல்லாம் இருந்தும் வியத்தகு ஆற்றல் யாவும் இருந்தும் ,ஏதும் அறியாதவன் போல கைகட்டி ஏதும் இயலதாவன் போல ,அன்பிற்கு இறங்கி வரும் மாசற்றவனே  மாபெரும் ஆற்றல் கொண்டோனே  !!  நின் எளிமைத்தன்மை வாழ்க !! இத்தகைய எளிமைத்தன்மையை உள்ளடக்கி  மானுட வடிவிலும் மகான்களாய் வாழ்ந்து காட்டிய  நின் பொற்பாதம் வாழ்க !! மகான்களாய் வாழ்ந்த நின்  திருவடிகள் என்றென்றும் வாழ்க !! நின் திருவடி பட்ட நிழல் போதும் அது தரும் எமக்கு ஆயிரம் ஆயிரம் கோடி சுகம் !!என்றும் நின் திருவடிபட்ட நிழலடியில் இருக்க அருள் தருவாய் !! எம் பெருமானே !!






வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க..!!!   எனும் மாணிக்கவாசக பெருமானின் திருவாசகம் அற்புதமான உண்மை உறைக்கிறது.விரைந்து விரைந்து சென்று அதி வேகமாக செல்லும் இந்த மனதினை அதன் வேகத்தை தடுத்தாண்டு ,அந்த மன ஓட்டத்தை தடுத்து, முடித்து ,வேறு வழியில் திருப்பி  எண்ணங்களை சீராக்க , எப்படி எனில்  எண்ணங்களை சீர் செய்ய அறிவு தெளிவு பெருகிறது,தெளிவான அறிவால் குதர்க்கமாக சிந்திக்க இயலாது  மாயையில் சிக்கி சிக்கி பிறவியை நீட்டிக்கொண்டேயிருக்க இயலாது . எனவே மன ஓட்டத்தை ,இறை நோக்கி திருப்ப, எண்ணம் சீர்பட்டு  அறிவு தெள்ளிய அறிவாய் மாற்றம் பெறுகிறது.அவ்வாறு எம்மை எம் மனதினை அதன் வேகத்தை தடுத்து ,முடித்து வேறு வழியில் இறைவழியில் திருப்பிய வேந்தனே நின் திருவடிகள் வாழ்க !!  என தொடர்கிறது திருவாசகம்.அற்புதம் அற்புதம் !! மாணிக்கவாசக பெருமானார் வாழ்க !! வாழ்க !!

இயங்கிகொண்டேஇருக்கும்  இந்த மனதினை எம்பெருமானின் திருவடிகள் நோக்கி திருப்பவில்லை எனில் தாங்கொணா துயரத்தில் சிக்கி பிறவி நீண்டுகொண்டேயல்லவா இருக்கும் . மனம் இயங்கி இயங்கி மாயையில் சிக்கி ,தமது மாபெரும் ஆற்றல் இழந்து ,துவண்டு கூனி குறுகி ,பிறவியாய் எடுத்து எடுத்து ,அறியாமையால் சிக்கலை உருவாக்கி ,பிறகு அதற்கு தீர்விற்காக  ஏங்கி ஏங்கி ,கடைசியில் அலுத்துபோய், சோர்வுற்று இன்னலில் சிக்கி சிதைத்து ,தமது நிலை மறந்து
கிட்டத்தட்ட பிச்சை எடுக்கும் நிலையில் அது தாமே மாற்றிகொள்கிறது இந்த மனம் .
எப்பேர்பட்ட மனம் ?!  எவ்வளவு வலிமை மிகுந்த மனம் ?! ,எத்தனை நற்செயல் புரியும் அளவிற்கு தகுதிஉள்ள அற்புத மனம் ?! ,தமது ஆற்றலால் இந்த பிரபஞ்சத்தையே நொடிபொழுதில் வளம் வரும் திறமை வாய்ந்த மனம். தமது ஆழ்ந்த மதி நுட்ப திறமையால்  ஆயிரம் ஆயிரம் நுட்பங்களை அறிந்து அதை பலர் பயன்பெற்று ஆக்கதுறையில் தம்மை ஈடுபடுத்தி யாவர்க்கும் பயனளிக்கும் திறமை வாய்ந்த உன்னத மனம்.தாம் யார் ? தமது தன்மை என்ன ? தமது முன் நிலை யாது ? தமக்கும் இறைக்கும் யாது தொடர்பு ? தாமும் சிவமும் எங்கனம் தொடர்புடையோம் ? தாம் மன அலை சுழல் அடங்கி உள் நோக்கி ஆழச்செல்ல ,கிடப்பது சிவமா ? சிவத்தின் தன்மை புரியுமா ? சிவத்தை அதன் அருகில் செல்ல குறுகிய மனம் உப்பி பெருத்து முன்னிலும் மிக்க ஆற்றல் பெறுமா  ?  சிவத்தை உள் வை .சிவத்தோடு சிவமாக இருக்க பழகு.சிவமே தீர்வு தரும்.



கிடைக்கும் ஒரு அமைதியான இடத்தினை தேர்வு செய்து ,சற்றே எல்லா கவலைகளையும் ,எல்லா செய்யபோகும் செயல்பாடுகளையும் தள்ளி வைத்துவிட்டு ,கண்களை மூடி இருக்கும் மனதினை சற்றே அமைதி படுத்தி ,மனதினை வெளியில் கொஞ்சம் கொஞ்சமாக கரைய வைக்க ,மனதினை சிவத்துள் மூழ்கடிக்க .மனதினை மனதால் தம்மை மறக்கசெய்ய ,கண்களை மூடிவிட்டாலே சிந்தனை வேகமாக செல்லும்  ,கொஞ்சம் சாந்தபடுத்தி மனதினை பற்றி ,மனம் என்பது ஒரு அலையா அல்லது காந்தமா ? அது எங்கே இருக்கிறது .உடம்பில் எந்த இடத்தில் இருக்கிறது ? அலையாக இருக்கும் ஆற்றலை செலவு செய்துகொண்டேயிருக்கிறதே ? என்று வரும் வினாவெல்லாம்  கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்று  ,தம்மை மறக்க பழக ,தாம் தான் எனும் நிலை கரைய ,மனது கரைந்து தம்மை மறக்க ,வெளி சூழ்ந்துகொள்கிறது.வெளியாய் இருக்கும் சிவம் மெல்ல மெல்ல சூழ்கிறது.ஒண்டி ஒடுங்கிப்போன நான் , இந்த ஆன்மா ,இந்த சூட்சும உயிர் இவை யாவும் முன்னிலும் வலுபெறுகிறது.எம் பெருமானின் அலைகளால் சூழப்படுகிறது.இறை சூழ்கிறது.காரிருள் சூழ்கிறது.கரும் கும்மிருட்டு சூழ்ந்துகொள்கிறது.வெட்டவெளி சூழ்ந்துகொள்கிறது.இதுவரை  இருக்கும் ஆற்றலை மனதில் காட்சியாக பிம்பமாக ஒளியாக ஒலியாக செலவழித்துவந்த வேலையெல்லாம் சுத்தமாக நின்றுபோகிறது.இருக்கும் உயிர்தேகத்திற்கு ஒரு அற்புதமான வலிமை சேர்க்கிறது.சிவத்தோடு இருப்பதால் ஒரு மிகப்பெரிய ஆற்றலையும் நல்ல மிகபெரிய பலத்தினையும் பெறுகிறது.எதுவும் நன்மைக்கே நடப்பவை யாவும் சிவத்தாலே .சிவனின் தார்மீக அலைகளே யாவற்றையும் ஆட்சிசெய்கிறது .சிவமே யாவற்றுள்ளும் அறிவாய் விளைவாய் வெளிவருகிறது எனும் நிலையை புரிந்துகொள்ளச்செய்கிறது.




இந்த மாபெரும் சிவம் சேர்ந்ததால் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உயிரை உள்ளத்தை கவ்விகொள்கிறது என்பதை உணரமுடிகிறது.சிவம் இப்பொழுது எம்மோடு இருக்கிறது அல்லது சிவத்துள் யாம் எனும் சிறு அகந்தை கரைந்து புனிதம் பெற்று மிக அற்புதமான அலையின் அரவணைப்பில் இருக்கிறோம்.சிவ அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்கிறது.சிவம் எனும் காரிருள் பேரண்ட நாயகனின் அருள் அலைகள் எம்மோடு சேர்ந்ததால் ஒரு நிறைவு கிடைக்கிறது.சிவத்தோடு இந்த மனது இப்பொழுது முற்றிலும் கரைந்துவிட்டதால் ,எல்லையில்லா பேரொளி நாயகன் தமது தன்மையின் ஒரு துளியினை இந்த உயிருக்கு உள்ளத்திற்கு வாரிவழங்கியதால் பேரின்பநிலையில் துள்ளிகுதிக்கிறது.எந்த நொடிபொழுதும் சிவத்தோடு இருக்கும் தொடர்பு ஆனந்தம் தருகிறது.சிவத்தை விட்டு ஒரு நொடி விலக ,துன்பகடலில் சிக்கி துவண்டுபோகிறது இந்த மனம்.ஆக கரும்கும்மிருட்டு நாயகன் ,கற்பனைக்கே எட்டாத எல்லையில் இருக்கும் எம்பெருமான் அலையாக வெளியாக சூட்சுமமாக அதி நுண்சூட்சுமமாக இருக்கும் தனமையினை புரிந்துகொண்டாலே உணர்ந்துகொண்டாலே மீண்டும் ஒரு இணைப்பு நான் எனும் சிரியோனுக்கும் யாம் எனும் பெரியோனுக்கும் ஏற்படுகிறது.சிவத்துள் சிக்கி சிவமாய் கிடந்தது இருக்க பழக யாவும் அமைதியே !!பேரின்பமே !!ஆனந்தமே!!



கண்களை மூடினாலே ...சும்மா இங்குமங்கும் புகுந்து ஓடுகிறது  மனம். இந்த தறிகெட்டு ஓடும் மனதை அமைதியாக இருக்கப் பழக மூச்சுப்பயிற்சி நாடிசுத்தி ஒன்று இருக்கிறது அதை தெளிவாக கற்றுக் கொண்டால் அதை செய்து பழகிக் கொண்டால் இந்த மனம் என்பது முதலில் கொஞ்சம் கொஞ்சமாக அதன் ஓட்டத்தை குறைத்து  மெல்ல மெல்ல அமைதிக்கு திரும்பும் .யாம் செய்து அனுபவத்தால் கண்ட உண்மை ,எனவே செய்து பழகி பயன்பெறுங்கள்


இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் நமது வலது கையின் கட்டை விரலை எடுத்து மூக்கின் வலது மூக்கில்  வைத்து அடைத்துக் கொண்டு  இடது மூக்கில் வழியாக  ஒரு எட்டு முறை  (, ஒன்று இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து,ஆறு ,ஏழு,எட்டு  என்று மனதால் எண்ணிக்கை ) மூச்சை இழுக்கவும் .பிறகு உடனே வலது கையின் ஆட்காட்டிவிரலால் இடது மூக்கினை அடைத்துக்கொண்டு வலது மூக்கிலிருந்து கட்டைவிரலை எடுத்துவிட்டு ,வலது மூக்கில் வழியாக மூச்சினை  ( ஒன்று இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து,ஆறு ,ஏழு,எட்டு,ஒன்பது,பத்து ,11,12,13,14,15,16 எண்ணிக்கை முறையில் ),வெளியில் விடவேண்டும் .பிறகு அதே வலது மூக்கின் வழியே எட்டு எண்ணிக்கை  மூச்சினை இழுத்து,பிறகு கட்டைவிரலால் வலது மூக்கினை அடைத்துக்கொண்டு .இடது மூக்கின் வழியாக பதினாறு எண்ணிக்கை முறை மூச்சினை வெளிவிடவும் .இப்படி செய்வது ஒரு தடவை (அதாவது  இடது மூக்கின் வழியாக 8 எண்ணிக்கை முறை இழுத்து ,வலது மூக்கின் வழியாக 16 எண்ணிக்கை முறை வெளிவிட்டு, பிறகு  வலது மூக்கின் வழியாக 8 எண்ணிக்கை முறை இழுத்து,பிறகு இடது மூக்கின் வழியாக 16 எண்ணிக்கை முறை வெளிவிடுதல் என்பது  ஒரு தடவை )
இதுபோல் 20 தடவை செய்ய வேண்டும் . இது மிக எளிமையானது இதில் எங்கேயும் மூச்சினை அடக்குதல் இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்.காலை ,அதிகாலை மிகவும் உகந்தது .காலை மாலை இரு வேலையும் செய்ய பழக மனம் அலைபாய்தல் குறைந்து ,சிந்தை ஊக்கம் பெரும் .சிவத்தோடு மெல்ல மெல்ல தொடர்பு பெற வழிவகை செய்யும்.


மூச்சினை சுவாசத்தை அறிய முற்பட மனம் விரைவில் ஒடுங்கும்.
இழுப்பது ஒரு மூச்சு (O2) ,  உடலிலேயே கோடிக்கணக்கான செல்கள் இயங்கி இயங்கி அது வெளிவிடும் காற்று கழிவினை வெளிஏற்றுதல்,   வேறு ஒரு வகை மூச்சு (CO2) .இழுத்த காற்றினை அப்படியே விடவில்லை இறைவன் .அதை நொடி பொழுதில் இயக்கி மாற்றி ஆற்றல் கழிவினை வேறு முறையில் வெளிவர வைத்திருக்கிறான் இறைவன் .

மீண்டும் ஒரு முறை வலியுறுத்துதுகிறோம் ,தீர்வு கான இயலா பிரச்சனைகளுக்கும் ,வேண்டுவன பெறுவதற்கும் சிவமே இறுதியானது.சிவத்தை தவிர வேறுஒன்றுமில்லை.சிவத்தால் ஆகமுடியாதது என்று உலகில் எதுவுமில்லை.கறைபட்ட வலிமிகுந்த கர்மவினை யாதாகினும் எம்பெருமானை தொழ ,அவன் திருவடி பணிய ,சிவமே தீர்வாய் வந்து வினை தீர்ப்பான்.சிவம் அன்பிற்கு ஓடோடி வருவான் ,அன்பால் மிகுந்து நெகிழ்ந்து சிவத்தின் அடி பணிவோம் ,வாழ்வில் நன்மை பெற்று பிறவிப்பிணி நீந்தி இறைவன் அருள்பெருவோம் என அகத்திய உள்ளங்களை வாழ்த்தி வேறு ஒரு நிகழ்வில் வேறு ஒரு கட்டுரையில் சந்திக்கின்றோம்.

வாழ்க வளமுடன்

ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

சூட்சுமங்கள் நிறைந்த ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் !!!