இறை தேடும் பயணத்தில் !!! ...(பகுதி 2)










எமது  ஆன்மீக ஆரம்ப காலகட்டம் ,மகான்களையும் ,சித்தர்களையும் அவர்  தம் ஜீவசமாதிகளையும்  தேடித்தேடி அலைந்த  காலம் அது.பொருள் இல்லாத  பொழுது  அருள்  தேடி  அலைந்த  காலம் .அவர் ஒரு பிரசித்தி பெற்ற மகான்,அன்பும்  கருணையும்  நிறைந்தவர் ,எம்மை போன்ற பல உள்ளங்களின்  நெஞ்சம்  கவர்ந்தவர் , நேரில்  பார்த்து அவர் அருளாசி  பெறவேண்டும் என்று  விரும்பி நெடுந்தூரபயணம்  செய்தோம்  அன்று .நேரில் சென்று  அருகில்   பார்த்தபோது  எந்த  ஒரு அனுபவமும் எமக்கு அகத்தியம் blog ஏற்படவில்லை .மகான்  எப்பொழுது  தம்மை  கூப்பிடுவார் என்ற  ஏக்கத்தோட இருக்கும் ,மக்கள்  கூட்டம்  அவர் முன்னே  எப்பொழுதும் காத்துக்கிடந்தார்கள் . எம்மையும்  அழைத்தால் யாம் பெரும் பாக்கியம்  செய்தவனாவேன் ஆனால்  யாமோ  சிறு தூசி .எப்படி  எம்மை  அழைப்பார் ?  எனவே யாமே  சென்று  வணங்கி விடைபெற வேண்டியது  தான் என்று  எண்ணி மகான்  அருகே  வணங்கி சென்றோம்.ஒளி பொருந்திய  கண்கள் ,எல்லாம்  உணர்ந்த  ஞானியாய் இருந்தும் தம்மை  என்றும் ஒரு பிச்சைக்காரன் என்றே சொல்லிக்கொண்டிருந்தார் .இறை தன்மை  நிறைய பெற்றவர் .போற்றுதலுக்குரியவர் .மிக எளிமையானவர் . அகத்தியம் blog மகான்  தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்.ஆனால்  அருகில்  சென்றபோது புகையிலையின் வாசம் கொஞ்சம் கூட  வரவில்லை .ஆச்சரியமாக  இருந்தது .

கால சக்கரம்  சுழல , பொருள்  தேடி  அலைந்து ,ஆண்டுகள்  பல  உருண்டோடின.மகானும் புவி வாழ்வை நிறைவு செய்து ,இறையில் கலந்துவிட்டார் .மேலும்  ஆண்டுகள்  பல  சென்றன .ஒரு நாள்  மகானின்  அலைகளால் அதிகம்  உந்தப்பட்டு ,அவரை  பற்றியே  சிந்தனை  தொடர்ந்தது .
அதிகாலையிலேயே அவர்  பற்றிய  எண்ணம் கிடைக்கப்பட்டு , விரைந்து ,எழுந்து ,குளித்து ,பேருந்தை  பிடித்து அவர்  வாழ்ந்த இடம்  நோக்கி பயணிக்க  ஆயத்த மானோம் .பேருந்தில்  உட்சென்று ,இருவருக்கு  இடையில்  ஒரு இருக்கை  கிடைத்து அதில் அமர்ந்தோம் .அந்த  இருவரில்  ஒருவர்  வயது முதிர்ந்த பெரியவர் .எந்த  மகானை  பார்க்க  சென்றுகொண்டிருக்கிறேனோ ,அவர்  போல  தோற்றம் கொண்டிருக்கிறார் .தலையெல்லாம்  முண்டாசு ,வெண்ணிற  தாடி ,வயதான  தோற்றம் .மகானை  போல  தோற்றம்  இருந்தாலும்  ,இன்னும்  நிறைய  வேறுபாடுகள் இருந்தன .இவர்  ஒரு  சாதாரண மனிதராக கூட  இருக்கலாம்  என்று  எண்ணி ,சரி  ஏதேனும்  ஒரு கேள்வி கேட்கலாம்  இவரிடம்  என்று  கேள்வியை  மனதால்  நினைக்க ,அடுத்த நொடியே ,உடனே வேறு ஒருவர்  அதற்கான  பதிலை  சொல்லிவிட்டார் .கேள்விக்கு  பதில்  வந்துவிட்டது . இனிமேல்  தேவையே  இல்லாமல்  கேள்வி கேட்க கூடாது  என்று  எண்ணிக்கொண்டேன்.அதுவும் இவர்  யாம் தேடி செல்லும்  மகானை போல  தோற்றம்  கொண்டிருக்கிறார் .வயது  முதிர்ந்த  பெரியவர்  வாழ்க  வளமுடன்  என்று  வாழ்த்தி  கண்களை  மூடி  சிந்திக்க ஆழ்ந்துவிட்டோம் .



அகத்தியம் blog 
இறை தேடும்  பயணத்தில் ,இறை  தன்மை  உணர்ந்து  ,இறை  ஆசி  பெற  ,மகான்கள்  முன்   வைக்கப்படும்  கோரிக்கைள் என்றோ  ஒரு நாள்   கண்டிப்பாக  நிறைவேற்றப்படும்  என்பதை  தந்தை   மாபெரும்  மகான்  யோகிராம்  சூரத்குமார்  எமக்கு  ஒரு  அற்புத நிகழ்வாக  நிகழ்த்திவிட்டார்கள்  ,மகானின் அருள் ஆசி அலைகளுடன்  அகத்திய  உள்ளங்களை  வேறு  ஒரு நிகழ்வில்  விரைவில்  சந்திக்கின்றோம் .

வாழ்க  வளமுடன்

ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா !!!
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா!!!
ஓம்  அகத்தீஸ்வராய  நமஹா!!!



Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்