கருணா ஸாகரம் - ஸ்ரீ லலிதாம்பிகை
வில்லெனும் புருவமும்
வேல் விழி கண்களும்
சொல்லெனும் அமுதமும்
சுடர்ஒளி பார்வையும்
அன்பெனும் ஞானமும்
அட்டமா சித்தியும்
தன்னுள்ளே கொண்ட
தாயவள் பொற்பாதம்பணிய
மின்னிடும் தேகம்
மிரன்டோடும் வினையாவும்
உன்னுள்ளே கண்களும்
உருகும் விழிநீர்கொண்டு
மெய்யுள்ளே அகந்தைஸ்ரீ லலிதாம்பிகை தாயவள் எப்படி இருப்பாள் ,அவளை எவ்வாறு தியானிக்கவேண்டும் என்பதை தத்தாத்ரேயர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள், தம் ஞானத்தால் அறிந்து,வியந்து ,அதை யாவரும் உணரும் வண்ணம், அவர் தம் அருளிய வார்த்தைகளால் மிளிரும் ஸ்லோகமே அருணாம் கருணாதரங்கிதாஷீம் என தொடங்கும் ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்லோகத்தில் வரும் தியான ஸ்லோகம்.இந்த ஸ்லோகம் நிறைய மகான்கள் பெற்ற ஞானத்தை அள்ளிவீசுகிறது.ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள் பாதம் போற்றிட,அவள் போட்ட பிச்சையால், யாமே எம்முள்ளே அழுது புரண்டு ,விம்மி ததும்பி , தாயவள் அருள் கருணை அலைகளை தேடி தேடி அலைந்து கொண்டிருக்கும் பயணத்தில் ,ஏற்பட்ட ஒரு விளைவே இக்கட்டுரை இது.எல்லாம் எம்முள்ளே யாமே எமக்கு அன்பர்களால் கிடைத்த விளக்கத்தோடு ஒரு உருவகபடுத்தி ,எம்மை யாமே எம் சூட்சும தேகத்தில் உணர்ந்து ,மகிழ்ந்த ஒரு இறை சார்ந்த கற்பனையால் விளைந்த ஒரு கட்டுரை.பிழை யாவும் எமது அரைகுறை ஞானமே.ஆகவே தயை கூர்ந்து பிழை பொருத்தருள்க !!
மெதுவாக சாகும் பாரீர்
பொய்யில்லை உண்மை
பொற்பாதம் பணிந்துபாரீர்
எல்லாம் வல்ல இறையே எங்கும் எங்கெங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது.எம்முள்ளே உயிராக ,மனமாக,பஞ்சபூதமாக இருக்கிறது.மனதினை பிடித்து உள்சென்று இறை உணர , இதுவரை உறைந்துகிடந்த பேரமைதி மெல்ல மெல்ல வெளிகிளம்புகிறது.பெரும்பாலும் தாம் இறை எனும் தன்மை மறந்த மனதே நம்மை ஆள்கிறது.எதில் மனம் இருக்கிறதோ அங்கே புரிதல் இருக்கிறது.எங்கே புரிதல் இருக்கிறதோ அங்கே எதை செய்தாலும் அதன் முழுமைவரை துல்லியமாக செய்ய இயலுகிறது.மனநாட்டமின்றி ஒரு வேலை செய்தல் ,அங்கே புரிதல் இல்லை எனவே முழுமைதன்மை துல்லியம் கிடைபதில்லை.இதற்கு எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் ,ஒரு சாதாரண யோகாசனம் முதல் ஆயிரம் நாமங்களை உச்சரிக்கும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் வரை , முழுமையாக அதில் வெற்றி கிட்டுவதற்கு மனம் எனும் இறையின் ஒரு அங்கம் இருந்தாகவேண்டியதாகிறது.மனம் அங்கேயே வைத்து ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொல்ல ,அங்கே சரஸ்வதி முதலில் வருவாள்,சரஸ்வதி வருவாள் என்றால் சொல்லும் சொற்களும் ,வார்த்தைகளுக்கு உரித்தான அதனதன் அதிர்வு அலைகளும் பெறப்பெற்று ,சும்மா அட்சரசுத்தமாக வார்த்தைகள் ஸ்படிகம் உருண்டோடுவது போல உருண்டோடும்.இதுவே முதல் முன்னேற்றம்.இதை பிடித்துக்கொண்டு மேலும் மேலும் முன்னேற்றம் காணவேண்டும்.
ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம பாராயணம் தொடர்ந்து செய்பவர் கோடிமக்களில் மிகசிலரே.எட்டு வாக்தேவிகள் அம்பாளின் பெருமை,தோன்றிய வரலாறு,அம்பாள் ஸ்வரூபம் ,மந்திர பரிவார தேவதைகள்,வழிபாட்டு முறைகள் ,மந்திரம்,தந்திரம் ,இவற்றை கூறுவதால் உண்டாகும் நன்மை , என அனைத்தையும் கூறுவதால் இது வேதத்திற்கு சமமானது.இதை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள தீய சக்தி விலகிவிடும்.கங்கையில் நீராடல் ,கோடி லிங்கங்ககளை பிரதிஸ்டை செய்தல்,அஸ்வமேத யாகம் செய்தல்,அன்னதானம் செய்தல் போன்ற இவை யாவையும் விட மேன்மையானது என்கிறார்கள்.
சூரியனிலிருந்து வெள்ளம் போல் வெளிவரும் அலைகள் ,கருணை அலைகளாய் ,எங்கும் எங்கெங்கும் வியாபிக்கின்றதாம்.அழகும் அறிவும் அன்பும் நிறைந்த கண்கள்.தாமரை இதழ் போன்ற கண்கள்.கருணை ததும்பும்விழிகள்.செக்கச்செவேல் எனும் நிறம்.ஸ்ரீ லலிதாம்பிகையின் கண்கள் ,சூரியனை போன்று, செக்கச்செவேல் எனும் கதிர் அலைகளை,கருணையோடு தமது விழிகள் வழியாக அள்ளி வீசிக்கொண்டிருக்கிறதாம்.எந்த பாரபட்சமும் இன்றி ,இவன் என்னுனைய பக்தனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ,இவன் மானுடன்,இவன் அசுரன்,இவன் தேவன்,இவன் மிருகம்,இவன் மரம்,செடி,கொடி,புற்கள் ,என யாருக்கும்,எதற்கும் எந்தவித பாகுபாடின்றி ,தமது விழி ததும்பி வழியும் கருணை பார்வையால் ,எங்கும் எங்கெங்கும் வியாபித்து கொண்டேயிருக்கிறாளாம். தமது கருணை கண்களால் ,அருள் அலைகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறாளாம்.நீ யாராக இருந்தாலும்,எதுவாகயிருந்தாலும் எமது கருணைபார்வை என்பது மாறாது அது எமது இயல்பு , அது எமது தன்மை, சாந்தம் ,அன்பு ,முழுமை,தெளிவு இவை எல்லாம் சேர்ந்த ஒரு பார்வை எமது பார்வை,கொடுத்துக்கொண்டேயிருப்பது என்பது எம்முள் உள்ள வற்றா ஜீவகொடை நதியின்தன்மை,அது ஷன பொழுதும் மாறாது , என தமது அருள் கருணையை அலைகளை அன்போடுஅள்ளிவீசிக்கொண்டிருக்கிறாள் சாந்த ஸ்வரூபி.
ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் என்பது மிகபெரும் ஸாகரம் .தேவியின் பொற்பாதம் பணிந்து ,அன்பின் அலைகளோடு ,அவள் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து ,அவள் பெருமையை உணர்த்தும் இந்த சகஸ்ரநாமம் சொல்ல ,எவ்வளவு பெரிய பிரச்சினையானாலும் ,அதற்கு நொடிபொழுதில் தீர்வினை அளித்துவிடுவாள் அன்னை என்பது எமது அனுபவ உண்மை.அன்புள்ளம் கொண்ட தாயால் ,தமது அன்பு வழியில் வரும் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களை தீர்ப்பது என்பது எல்லாம் அவளுக்கு ஒரு சிறு தூசி தட்டுவது போல மிக சாதாரண விஷயம்.
பிரபஞ்சத்தையே கவர்ந்ததிலுக்கும்அன்பு எனும் மாபெரும் ஆற்றலை ,தமது தாயன்பு உள்ளத்திலே ஸாகரம் போல் கொண்டவள், அவ்வாறு இருக்கும் தாய் ,அன்பால் நிறைந்து ,தாயன்பு மிகுந்து,சர்வகோடி ஜீவன்களையும் ஒரு தாய் எப்படி தமது குழந்தையை அன்பால் ஈர்க்கிறாலோ அவ்வாறு தமது ஸ்ருஸ்டியில் படைக்கப்பட்ட அனைத்தையும் ஈர்க்கிறாள்.ஒரு மனிதனின் பார்வை அல்லது எந்த ஒரு உயிரின் பார்வையும் ஒரு எல்லைக்கு உட்பட்டது.ஆனால் இவளின் பார்வை ஆடாது அசையாது ,தாம் படைத்த அணு முதல் அண்டம் வரை ,கோடான கோடி ஜீவன்களையும் ,ஜடத்தையும் ஒரு இம்மிகூட பிசகாமல், தமது கருணை வழியும் அன்பு அலைகளால் பார்க்கும் ஒரு பார்வை.
ஒரு சிலருக்கு நீல நிற பூக்கள் கவர்ந்து ஈர்க்கும் ,ஒரு சிலர்க்கு செந்நிற பூக்கள் கவந்து ஈர்க்கும். ஒரு சிலர்க்கு தூய வெண்மை நிற மலர்கள் கவர்ந்திழுக்கும்,ஒரு சிலருக்கு ,மஞ்சள் நிற மலர்கள் ஈர்க்கும்.நாம் சாதரணமாகவே செல்கிறோம் ,செல்லும் வழியில் ,இருக்கும் இது போன்ற பூக்கள் அது தாமாகவே ,தம்மை பார்ப்பவரை கவர்ந்திலுக்கிறது. இப்படி கவர்ந்து ஈர்க்க காரணம் ? அதன் நிறம் அல்லது அதன் வாசனை ,அல்லது அதன் அழகான தோற்றம் .அல்லது அதன் படைப்பு ,.இந்த நிறத்தால் ,இந்த நறுமணத்தால் ,இந்த தோற்றதால் ,இப்படி இருக்கும் குணத்தால் ,யாவற்றையும் ஈர்த்துக்கொண்டேஇருக்கிறது அல்லவா. காரணம், அதனுள்ளே உறைந்துகிடக்கும் இறை .உள்ளே இப்படி ஈர்க்கும் அளவிற்கு படைத்த இறைவனின் திருவுள்ளம் அங்கே இருக்கிறது எனும் உண்மையை உணர்த்தும் ஒரு கட்டம் (phase). எமது தோற்றமும் அதன் நிறமும் மனமும் ,இவை யாவற்றிக்கும் எம்முள்ளே உறைந்துகிடக்கும் இறை எனும் மூலம் ,இறை அது தாமாகவே தம்மை உருமாற்றி ,எம்முள்ளும் ,எம்மை ஒரு கருவியாய் படைத்து ,படைப்பின் பெருமை போற்றுகிறது என்பதை சொல்லாமல் உணர்த்துகிறது.
அதுபோல அம்பாளின் வதனம் விகஸித வதனம் ,அம்பாளின் திருமேனி கவர்ந்தது இழுக்கும் தன்மை நிறைந்ததாம்.அம்பாளின் திருமேனி தூய பொன்னிற தங்கம் போல தக தகவென ஜொலிக்கிறதாம் , கவர்ந்து இழுக்கும் திருமேனி..அழகே முழுவதும் நிறைந்தவள்,முகம் அழகு ,கண்கள் அழகு,உடுத்திஇருக்கும் ஆடை அழகு, அணிகலன்கள் என யாவும் அழகு,.அழகும் புன்னகையும் தாயன்பும் நிறைந்தவள். வாசனை மிகுந்த மஞ்சளும் குங்குமமும் சூடிய சர்வ மங்களம் நிறைந்தவள்.ஒரு ஒளி உருவ தேகம் ,அதில் வாசனை ,நறுமணம் வருகிறது.ஒளி உருவ தேகம் அதில் எப்படி இது போன்ற நறுமணம் வருகிறது ,அப்படி என்றால் அங்கே இறை எனும் உயிர் இருக்கிறது,.உண்மை இருக்கிறது அம்பாளின் சூட்சும அருள் அலைகள் தவழ்கிறதே என்றே பொருள்.ஒரு முறை திருப்பரங்குன்ற மலையிலிருந்து மேலிருந்து,கீழே இறங்கிவரும் பொழுது ,ஒரு இடத்தில் தூய நெய்யை உருக்கினால் என்ன ஒரு வாசனை வருமோ அந்த வாசனையை எம்மோடு வந்த அன்பர்கள் யாவரும் உணர்ந்தோம்.அங்கே ஒரு எந்தஒரு ஸ்தூல தேகமும் தென்படவில்லை ,காற்றும் ,வெளியும் இருக்கிறது ,பாறை இருக்கிறது .அங்கே வந்த அய்யா இது சித்தர்கள் அம்பாளை வழிபடும் இடம் ,ஆக இங்கே தூய நெய்யின் நறுமணம் வரும் ,என்று சொல்லிவிட்டு அவர் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.யாமும் சுற்றுமுற்றிலும் பார்க்கிறோம் ,எந்த ஒரு உருவமும் தென்படவில்லை ,ஆனால் சிறிது நேரத்தில் இந்த உருக்கும் நெய்யின் நறுமணம் வந்துகொண்டேயிருந்தது .கமகமவெனும் நெய் வாசம் ஒரே பிரம்மிப்பில் ஆழ்த்தியது,அம்பாளின் உயிர் அலைகள் இருக்கும் இடம் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ளமுடிந்தது. அம்பாள் தமது நெற்றிதிலகத்திலே வைத்திருக்கும் குங்குமமும் மஞ்சளும் என்றும்ஒரு வித தெய்வீக நறுமணம் கமழ்ந்துகொண்டேஇருக்கிறதாம்.தேனீக்களை ஈர்க்கும் ஒரு வித கமகம நறுமணமும் ,அழகான மஞ்சள் நிறமும் உடைய குங்குமம் சூடியிருக்கிறாள்.
தமது பின்னிரு கைகளிலே பாசம் அங்குசத்தையும் ,முன்னிரு கைகளிலே கரும்பும் வில்லும் மலர் அம்புகளையும் வைத்திருக்கிறாள்.அணிமா ,மகிமா,கரிமா,லஹிமா, ப்ராப்தி,ப்ராகாம்யா,ஈசத்வ,வசித்வ எனும் அஷ்டமா சித்திகள் தன்னுள் சூழவைத்திருக்கும் தேவியே ,உயர்ந்த பேரின்பம் நிறைந்த ஒளிகற்றையே தாயே ஈசனின் நாயகியே !! பவானி ..யாம் நின்னை தியானிக்கிறோம்.பத்மத்தில் அமர்ந்திருப்பவள் ,பத்ம இதழ் போல தமது விழிகள் பெற்றவள்,தங்கம் போல தகதகவென ஜொலிக்கும் நிறத்தவள்,தங்க அணிகலன்கலை தமது ஆடையில் உடுத்தியவள்.ஒளி போன்ற உருவம் ,செக்கச்செவேல் எனும் நிறம் ,வாசனையுள்ள குங்குமமும் ,மஞ்சளும் சூடி,கருணையும் தாயன்பும் நிறைந்த ,கைகளிலே பாசம் அங்குசம் ,வில் ,மலர்களை வைத்து,யாவருக்கும் பாகுபாடற்று ,சரி சம பார்வை பார்ப்பவள்,சந்தன மாலையை தமது கழுத்தில் அணிந்தவள்,இப்படி செக்கச்செவேல் எனும் பூ போன்ற இருக்கும் நிறத்தவளை யாம் தியானிக்கிறோம்.
இப்படி ஒரு பார்வை ,சர்வ ஞானமும் நிறைந்த ஒரு பார்வையால் .தாம் படைத்த ஸ்ருஸ்டியில் ,இத்தனை அழகோடும் ,அன்போடும் ,கருணை கண்களோடும் இருந்துகொண்டு ,ஸ்மிதமுகீம் ,அழகான புன்னகை பூத்துகொண்டிருக்கிறாள் .இது போன்ற ஒரு ஒளிதேகம் ,ஒரு சர்வ ஞானம் நிறைந்த ,உருவத்தை ,ஒளியை,நம்மால் கற்பனையாவது செய்ய இயலுமா ?தாயெனும் ஒளி வெள்ளம் ,ஒளி தேகம்,சர்வலோகத்தையும் அன்பால் ,கருணையோடு அரவணைத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு முறை இப்படி ஒரு எண்ணத்தை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் அருகில் இருக்கும் சுற்றுபிரகாரத்தில் அமர்ந்து முயன்று பார்த்தோம்.இப்படி அருள் அலை வீசும் ,ஞான ஒளி வீசும் ,அம்பாளின் கருணை கண்கள் எப்படி இருக்கும் என எண்ணிய பொழுதே ,விழி யாவும் விம்மி அழுது ,நீர் மழையில் நனைந்தது.காரிருள் கருணை எம்மை சூழ்ந்தது.உலகையே அரவணைக்கும் அன்பெனும் அலை சூழ்ந்தது.அன்பால் விரிகிறோம்,விரிந்துகொண்டேயிருக்கிறோம்.நெஞ்சம் நிறைந்தது ,நெகிழ்ந்தது,ஒரு துளி கருணை பார்வை எப்படி இருக்கும் என என்னும் பொழுதே ,விழிகள் நீர் சூழ்ந்து ,கருணை நிறைந்து ,அன்பின் தன்மை மிகுந்து ,யாம் எம்மை மறக்கும் நிலைக்கு சென்றோம்.அப்படி எனில் அவள் பொற்பாதமே கதி என கிடக்கும் மகான்கள் தன்மை எப்படி இருக்கும் என கற்பனை கூட செய்ய இயலவில்லை.
சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு பின் புறம்,நிறைய சிவலிங்கங்கள் இருக்கிறது
.இவை யாவும் ஜீவசமாதி என்பது யாவரும் அறிந்ததே.அதில் ஒரு சிவலிங்கம் கிழக்கே பார்த்திருக்கிறது.அதன் அருகிலே இன்னும் ஒரு சிவலிங்கம் தெற்கே பார்த்திருக்கிறது.இப்படி இரண்டுக்கும் நடுவில் சென்று அமர்ந்தோம்.ஏற்கனவே அம்பாளின் அருள் அலை நெஞ்சத்தை ஒரு மாதிரியாக ஆழ்ந்த நிலைக்கு கொண்டுசென்றது.அதோடு இங்கே இந்த சிவலிங்கத்திற்கு அருகில் அமர்ந்து ,சற்றே கண்களை மூட,எமை ஈர்த்தது
இந்த கிழக்கு நோக்கி பார்த்திருக்கும் சிவலிங்கம். குளிர்ந்த காற்று .இதமாக ,தென்றல் போல ,மெல்ல எம்மை சூழ்ந்தது.சூட்சுமமாக ஒரு தேகம் ,தமது கைகளால் ,எம்மை ஆசிசெய்தது.கைகள் மட்டுமே எமக்கு தெரிகிறது .அந்த கைகள் எதனுள்ளும் ஊடுறுவுகிறது.ஒளி தேகம் .மெல்ல வருட,எம் சூட்சும தேகம் ஆற்றல் அதிகம் பெறுகிறது.உப்பி பெருக்கிறது.உப்பி பெருத்து ,மேலே கிளம்பும் அளவிற்கு சக்தி பெறுகிறது.நொடி பொழுதில் ஒரு மைல் தூரத்தை ,ஒரு தம் கட்டினால் எப்படி தாண்டி பரப்போமோ அந்த அளவிற்கு ஆற்றல் ,இருப்பதை உணர்கிறோம்.அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை,மெதுவாக எழுந்து வணங்கி விடை பெற்றோம் அய்யாவிடம்.இந்த அய்யா யார் ?அவர் பெயர் என்ன ? என்பதெல்லாம் தெரியவில்லை ,அய்யா அங்கே இருக்கிறார்.வாய்ப்பு கிட்டியவர்கள் சென்று ஐயாவை வணங்கி அருள் ஆசி பெறுங்கள் .
click below link to download the PDF
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்ரம்
இந்த விரிவான போற்றுதளுக்குரிய தாயவள் அருள் அலைகளோடு அகத்திய உள்ளங்களை மீண்டும் ஒரு பதிவில் நிகழ்வில் சந்திக்கிறோம்
வாழ்க வளமுடன்
ஒம் அகத்தீஸ்வராய நமஹா
ஒம் அகத்தீஸ்வராய நமஹா
ஒம் அகத்தீஸ்வராய நமஹா
Comments
Post a Comment