ஸ்ரீ லலிதம் .!!!





ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் 
தாரநாயக-சேகராம்  ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் 
பாணிப்யாம்-அளிபூர்ண-ரத்ன-சஷகம்-ரக்தோத்பலம் பிப்ரதீம் 
சௌம்யாம் ரத்ன-கடஸ்த-ரக்தசரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம் .....


லலிதம் என்றால் அழகு. லலிதம் என்றால் சாந்தம். லலிதம் என்றால் மென்மை. லலிதம் என்றால் அன்பு .லலிதம் என்றால்  ஆனந்தம்.லலிதம் என்ற வார்த்தையே அழகு.  அழகே நிறைந்தவள் அழகு மட்டுமா ? அறிவும் நிறைந்தவள் .அறிவு என்றால் நம்மிடம் உள்ள அறிவா இல்லை .ஞானம்,எதையும் கணிக்கும் நுட்பம் ,ஆழ்ந்த அகன்ற நீண்ட நெடிய விசால பார்வை ,எதையும் அதன் நுனி ஆழம் வரை சென்று ,நீ யார் ? உனக்கு என்ன தேவை ? உன் மூலம் என்ன ? உன் சூட்சும உடலில்  உறைந்துகிடக்கும் தன்மை என்ன ? உமது இடரின் மூலகாரணமும் அதன் தீர்வும் ஷன பொழுதில் அறிந்தவள் ! உனக்கும்  உனது நீண்ட நெடிய இறைக்கும் உள்ள ஆதி மூலம்  நோக்கும் திறம் தெரிந்தவள் ! அதிநுட்பம் நிறைந்த  எதையும் கணிக்கும் ஒரு ஞானப்பார்வை உடையவள்! .அன்பால் கருணையால் அகிலத்தையே ஆழ்ந்து ,யாவற்றையும் தம் சூட்சும பார்வையால் ஊடுறுவி அரசாட்சி செய்பவள்.!!! எம்பெருமானின் நாயகி !! எல்லையில்லா கருணை நிறைந்த ஸ்ரீ லலிதா எனும் நாமத்திற்கு சொந்தக்காரி !!


                                   



அண்டசராசர ஜீவன்களையும் ஷன பொழுதில் அதன் நிலை அறியும் தன்மை நிறைந்த ஸ்ரீ மஹாராஜ்ஞீ.அழகே முழுவதும் நிறைந்தவள் .தகதகவென ஜொலிக்கும் செந்தீ பிம்பம் போன்ற தேகம்,  செக்கச்செவேல் என சூரியனை மிஞ்சும் சிவப்பு நிறம் உடைவள்.கண் கூசும் பிரகாசம் உடையவள்,என்றும் அழகிய புன்னகை முகத்துடன் அருள் ஆட்சி செய்பவள் .எந்தவித பாரபட்சமும் இன்றி ,யாவருக்கும் அருள் தந்து,அவர்களுக்கு முக்தி அளிப்பவள்.அழகான முகம் ,அற்புதமான ஒளி நிறைந்த தேகம். புன்னகை என்றும் நிறைந்தவள்.கருணா ஸாகரம் ,கருணை கடல் போல நிறைந்து ,அது  அணு அளவு கூட குறையாமல் ,தம்மை வணங்கும் யாவருக்கும் ,எந்தவித பாரபட்சமும் இன்றி ,அவர் தம் சூட்சும தேகத்துள் உள்நோக்கி ,இன்றைய மானுட ஜென்ம கர்ம வினையை மட்டும் நீக்காமல் ,இன்னும் உட்சென்று அவருக்கு முக்தி அளிப்பவள் ,பிறவா நிலை அருள்பவள். இப்படி ஒரு விக்ரஹம் ,ஒரு ஒளி உருவ தேகம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடியுமா உங்களால் ?  கற்பனை தான் செய்து பாருங்களேன் .அம்பாளின் அருள் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்து ,மெல்ல மெல்ல ஒரு இனம் புரியா சாந்த அலைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும் ,இது போன்ற தெய்வீக கற்பனை, முதலில் மனதினை அதன் வெற்றிடங்களை அது தானே சாந்த அலைகளால் நிரப்பி நிறைவு செய்யும், நம்முள் இருக்கும் சின்ன சின்ன இடர் யாவும் ஏதோ எங்கோ மறைந்து  கொஞ்சம் கொஞ்சமாக , அருள் அலைகள் நெஞ்சம் எங்கும் சூழ்ந்து ,ஆழ்ந்து ,இந்த ஆயிரம் ஆயிரம் சூரிய கோடி கதிர் அலைகள் நிறைந்த ஜோதியை நோக்கி அழைத்துச்சென்று அவள் அருள் ஆசிகள் பெற்றுத்தரும் என்பது அசைக்கமுடியா நம்பிக்கை.




ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் என்பது மிகப்பெரிய ஸாகரம். எத்தனையோ கோடி கோடி நுணுக்கங்கள் ,நிகழ்வுகள்,சூட்சுமங்கள் நிறைந்தது .அதன் தாத்பர்யம் உணர்தல் என்பது ஒரு பிறவியில் முடியாது .அம்பாளின் அழகும் ,அவளின் ஒவ்வொரு நாமங்களுக்கு உண்டான அர்த்தங்களும் ,சரியான உச்சரிப்பும் அது  நம் மனதுள் ,உடலுள்,சூட்சும தேகத்துள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் ,அதன் அற்புதமான விளைவுகளும் விவரிக்க இந்த மானுட ஜென்மம் போதாது.தந்தையின் அருள் ஆசியால் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பற்றிய சிந்தனையும்,அதை பாராயணம் செய்யும் பாக்கியமும் எமக்கு கிட்டியது .ஏதோ ஓரிரு முறை மட்டும் சொல்வோம் என ஆரம்பித்து தான் ,ஆனால் இதை இன்றுவரை எம்மால் முடிந்தவரை பாராயணம் செய்துகொண்டிருக்கிறோம்.இதை சொல்வதால் ,எமக்குள் உண்டான மாற்றங்கள் ஏராளம் ஏராளம்.எல்லாம் முக்தியை நோக்கியே அழைத்துச்செல்கிறது.இது வேண்டும் ,இந்த பிரச்சனை சரியாக வேண்டும்,இன்னும் இது போல வேண்டுகோள்  நிறைய இருக்கிறது ,இவை எல்லாம் இந்த ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் வெகு விரைவில் அது சரியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இதை பாராயணம் செய்பவர்களுக்கு எதுவும் நடக்காது. எந்த பிரச்சனையும் தீர்க்க வரமாட்டாள்.அவர்கள் எல்லாம்  சும்மா பேசாமல் இருப்பது நல்லது.ஏனெனில்  முக்தியை ஏற்க அவ்வளவு எளிதில் யாரும் வர இயலாது,
                                 



எந்த எதிர்பார்ப்பும் இன்றி,என் கடன் பணி செய்து கிடப்பது போல ,பாராயணம் செய்ய  செய்ய ,காரணமே இல்லாமல்,வந்து அருள் ஆசி வழங்குவாள்.தெளிந்த சிந்தனையோடு ஆராய அவளின் ஆசி அலைகள் நம்மை  ஒரு பாதுகாப்பு வளையம் காப்பது போல காத்து,அரவணைத்து அருள் தந்து,நம்மை திவ்யமாக, ஆனந்தமாக வைத்து ,அவள் தம் சூட்சும பார்வையால் நம்மை திக்கு முக்காட செய்துவிடுவாள்.அணு ஷனமும் சிவனை விட்டு பிரியாத சிவாங்கினி .மூவுலகை ஆள்பவள் .தூய அன்பு அலைகள் சூழ்ந்து யாவற்றையும் ஈர்ப்பவள்.அளவிட முடியா சக்தி நிறைந்தவள்.

அடி மட்டநிலையில் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் இது போன்ற ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமங்களை சொல்வானேயானால்  (அர்த்தம்  தெரிந்தோ தெரியாமலோ ) ,சொல்பனின் நிலை அடிமட்ட நிலையிலிருந்து ,அவன் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு உயரும்.அந்த அளவிற்கு அருள் அலைகளை தாண்டவம் ஆட செய்து அசரவைத்துவிடுவாள்.

click below link  to download the PDF
  ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்ரம்





மதுரை மீனாஷி அம்மன் கோவிலும் அதன் சுற்றியுள்ள பகுதியும் என்றும் மக்கள் கூட்டம் நிறைந்தும் ,ஒரு வித பரபரப்புடன் காணப்படும்.ஆனால் இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் அம்பாளின் அருள் அலை மிக அற்புதமாக அருள் ஆட்சிநடத்திக்கொண்டிருக்கிறது. மகான்களும் சித்தர்களும் ஆங்காங்கே அருள் ஆசிதருகிறார்கள்.ஸ்ரீ மீனாஷி அம்பாளின் தரிசனம் முடித்து வெளியே வந்து பிறகு  சுந்தரேஸ்வரர் தரிசனமும் பெற்று ஒரு நீண்ட வலம்வரளாம் என எண்ணி ,முக்குருணி விநாயர் தரிசனம் பெற்று அதன் வழியே பிரகாரம் தொடர்ந்து   மெதுவாக வந்தோம்.மேலும் அதன் வழியே செல்ல ஒரு மூலையில்  ஒரு சிவலிங்கம் இருக்கிறது.(அது ஒரு ஐயாவின் ஜீவ சமாதி என்கிறார்கள்.) அதன் அருகிலேயே சென்று வணங்கி ,கொஞ்சம் பத்துஅடி தூரத்தில் அமர்ந்துகொண்டோம். ஏனெனில் ஜீவ சமாதி அருகே அய்யாவின் அன்பர்கள் தொடர்ந்து தியானம் செய்கிறார்கள்.எனவே சமாதி நேர் எதிரே கொஞ்ச தூரம் தள்ளி ,சமாதியை பார்த்தவண்ணம் ,யாமும் அமர்ந்து ஸ்ரீ லலிதாசகஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்து ,கொஞ்சம் கொஞ்சமாக அம்பாளின் அருள்அலைகளால் ,அதை நாம் உச்சரிப்பதால் உடலில் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் உணர ஆரம்பித்தோம்.ஆயிரத்தெட்டு நாமங்களையும் சொல்லி முடித்து ,சிறிதே கண் மூடி ஆழ்ந்து செல்ல ,ஒரு அதிசயம்  அங்கே நிகழ்ந்தது..சூட்சும தேகத்தில் நிறைய மாற்றங்கள் உணர்ந்திருக்கிறோம். ஸ்தூல கண்களால் பார்த்து பிரமித்தது இதுவே முதல் முறை.எதன் எதிரில் அமர்ந்தேனோ அதிலிருந்து  ,அதாதவது ஜீவசமாதியிலிருந்து ஒரு ஜோதி ஒன்று எழுந்து நேராக எமது நெற்றிக்கு மிக அருகில் நின்று ,யாம் சொல்லும் இந்த ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமங்களை மிக அற்புதமாக கேட்டுக்கொண்டிருந்தது.ஜோதி என்றால் பார்க்கவே மிக ரம்மியமாக இருக்கிறது.பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டேயிருக்கலாம்  போலிருந்தது.சாதரண ஒளி சுடர்  எல்லோரும்  பார்த்திருக்கிறோம், அது ஒளி தந்து இருள் அகற்றும். இதுவும் ஜோதி தான் ,ஆனால் உயிர் ஈர்ப்புதன்மை அதிகம் நிறைந்திருக்கிறது.ஒரு வித நீலநிறமும்,சிவப்பு நிறமும்,மஞ்சள் நிறமும் கலந்து ஒரு சின்ன பந்துபோல மிக அற்புதமாக  சுழன்று சுழன்று எம் முன்னே நின்று ,அடியேன் சொல்லும் சகஸ்ரநாமங்களை உன்னிப்பாக சுழன்ற வண்ணம் கவனித்துக்கொண்டிருந்தது.யாம் முழுவதும் சொல்லும் வரை இருந்திருக்கிறது,ஆனால் ஒரு சில வினாடிகள் மட்டுமே எம்மால் உணரமுடிந்தது.இந்த சகஸ்ரநாமங்கள் சொல்வதால் அம்பாள் மகிழ்ச்சி அடைகிறாள்.அத்தகைய சக்திமிக்க அதிர்வு அலைகள் கொண்டது.இதை கேட்க மகான்கள் வருகிறார்கள்.வந்து அம்பாளின் நாமங்களுக்கு salute செய்கிறார்கள்.மகான்களை ஈர்க்கிறது.அருள் ஆசி தருகிறார்கள்.இந்த ஜோதி தரிசனம், அது எம்முள் ஏற்படுத்திய மாற்றம் அதன் ஈர்ப்பு தன்மை ,ஏதோ ஒரு ஜீவ அலை எம்மை சூழ்ந்து ,எம்மை எம் உள்ளத்தை தெய்வீகத்தால் பிசைந்து,அன்றைய  நாள் முழுவதும் ஒரு வித சக்திஅலைகள் நிரப்பி, எம்மை  விட்டு விலகாமல் நாள் முழுவதும், ஆனந்தமாக வைத்திருந்தது.ஒரு மாபெரும் மகான் அவர்.ஒரு சில மகான்களே ஜோதியாக தரிசனம் தரும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.அப்படி ஜோதிவடிவில் உள்ள ஒரு உன்னத மகான் அய்யா அவர்கள்.சந்தரர் சன்னதி இருக்கும் வெளிப்புறகாரத்தில் (முக்குருணி விநாயகர் சன்னதியிலிருந்து இடப்புறம் செல்லவேண்டும்) ஜீவ சமாதியில் இருக்கிறார்.ஐயா யார் அவர் பெயர் என்ன ? என்பதெல்லாம் எமக்கு தெரியாது  ஏனெனில் இதுவரை எமக்கு கிடைத்த அனுபவத்தில்  எந்த ஒரு மகானும் தான் மகான் என்று கூட சொல்லவிரும்பவில்லை ,அவ்வளவு எளிமையாக இறைநிலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள் .இந்த ஐயாவும் இறைநிலையில் என்றும் ஆழ்ந்து ,ஜீவ ஜோதியாக இருக்கிறார்கள். கீழே உள்ள படத்தில் உள்ள சிவலிங்கத்தின் அடியில் ஜீவ ஒளியாக ஜீவ சமாதியில்இருக்கிறார் .





 மதுரை  ஸ்ரீமீனாஷி அம்பாள் கோவிலுக்கு வருபவர்கள் இங்கே சென்று ஐயாவையும் வணங்கி அருள் ஆசி பெற்று செல்லுங்கள் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.இதற்கு அருகிலேயே இருக்கும்  இன்னொரு கோவிலில் இருக்கும் ஒரு மகான் ,அவர் ஒரு அம்பாள் உபாசகர் ,இன்றும் ஜீவ சமாதியில் இருந்துகொண்டு ஆசி வழங்குகிறார். அவர் எப்படி எமக்கு காட்சியளித்தார் என்பதை அடுத்த கட்டுரையில்  அகத்திய உள்ளங்களுக்கு விவரிக்கிறோம் ,ஆடி மாதம் என்றாலே அம்பாளின் அருள் அலைகள் வீசும் காலம்,அவள் தாமே ஒரு படி இறங்கி வந்து அருள் ஆசி அலைகளை வீசி செல்வாள் என்பது யாவரும் அறிந்த உண்மை.அற்புதமான இந்த ஆடி மாத பொழுதினை ,சாந்த ஸ்வரூபியான ,ஸ்மிதமுகீயான ,ஸிந்தூர நிறமான ,இளம் சிகப்பு சூரிய கதிர் நிறம் உடையவளை ,ஷன பொழுதும் பெருமானை விட்டு பிரியாத அன்பு நிறைந்தவளை, சம்பகம்,புன்னாகம்,அசோகம்,செங்கழுநீர் பூக்களை தம் கூந்தலில் சூடிய மாபெரும் தெய்வீக மனம் கமழும் சாந்த ஸ்வரூபிணியை ,மனதால் ,தூய அன்பால்  நெஞ்சமெங்கும் நிறைந்து ,அவள் பொற்பாதம் பணிந்து ,தாயவள் அருள் பெறுவோம் என அகத்திய உள்ளங்களை வேறொரு நிகழ்வில் சந்திக்கிறோம்


ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!
ஒம் அகத்தீஸ்வராய நமஹா !!

Comments

  1. அற்புமான தரிசனம் உங்களுக்கு நன்றி கட்டுரை நாங்கள் நேரில் தரிசனம் பார்த்தது போல் இருக்கிறது வாழ்க வழமுடன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்