Thursday, July 28, 2016

தாய் சக்தி
அண்டசராசரங்களை ஈர்த்து ஆள்பவள்.கருணையே வடிவானவள்.எல்லையில்லா  கருணை  நிறைந்த கண்களால் ,தமை பார்க்கும்  எதையும் எவரையும்  அவர் தம் சூட்சும தேகம் வரை  ஆழ்ந்து உட்சென்று ,அதில் உறைந்த அன்பின் தன்மையை  உணர்ந்து ,ஆத்ம ஒளியை பெருக்கி அருள் ஆசி செய்பவள்..திரிகால ஞானம்  கொண்டவள்.பிரபஞ்சத்தில் மிக பிரமாண்ட  கோள்களானாலும் சரி ,மிகச்சிறிய அனுவானாலும் சரி எதுவும் இவள் ஆட்சிபுலத்தில் இருந்து தப்புவதில்லை.நுணுக்கமும் தெளிவும் நிறைந்த பேரொளியாள் அனைத்தையும் ஈர்த்துப்பிடித்து அருள் ஆட்சிசெய்பவள்.அன்பு நிறைந்தவள்.சாந்த ஸ்வரூபி.சகலவித்தைகளுக்கும் அதிபதி.பிரமாண்ட விஸ்வரூபம் கொண்டவள் ஆதி சக்தி ,அன்பின் நாயகி ,அம்பாள் , அகிலாண்டபரமேஸ்வரி , ராஜராஜேஸ்வரி ,திரிபுபன நாயகி  என பல நாமங்களுக்கு சொந்தம் கொண்டவள் .!தாய் எனும்  பெரிய  ஸ்தானதிற்கு  இவளே மூலம்.இவள் கருணையாலே மற்ற எந்த ஒரு உயிரும் தாய் எனும் அங்கீகாரம் பெறுகிறது.


சிவனை பற்றி  அறிந்து கொள்ளுதல் எவ்வளவு தெளிவை நம் வாழ்வில் ஏற்படுத்துமோ அந்த அளவிற்கு சிவனின் மற்றொரு வடிவமாகிய சக்தியை பற்றியும் அறிந்து கொள்ளல் நம் வாழ்வை தெளிவுபடுத்தி  வாழ்கையை மிக பயனுள்ளதாக மாற்றுகிறது.ஒன்றுமில்லா ஒன்று உருத்திரண்டு ,தமது ஆற்றலை தாமே உணரும் ஒரு பயணத்தில் ,இடையில் எத்தனையோ பல ஆயிரம் ஆயிரம் கோடி ஜீவராசிகளை உருவாக்கி காத்து அரவணைத்து அழித்து, பரிணாம மாற்றங்கள் செய்யும் அற்புதம் . சிந்தைக்கு எட்டிய வரை  உணரும் பார்க்கும்,ரசிக்கும், ஆகிய  எதுவும்  ஒரு நிரந்தரமற்ற இடைப்பட்ட ஒரு  phase ஒரு கட்டமே .ஒன்றுமில்லா ஒன்று அது தன் பயணத்தில், சதுராட்டதில் ,தமது காய்களை மிக துல்லியமாக மிக அற்புதமாக நகர்த்திக்கொண்டே செல்கிறது.ஹம் என்ற சப்தமும் ஒம் என்ற சப்தமும் கோடான கோடி கோள்களையும் ,அதில் உள்ள கோடானகோடி ஜீவராசிகளையும்  தமது வெட்ட வெளியில் ஆழ்த்தி அமிழ்த்தி  சப்தமில்லாமல்  ஒரு பயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறது .ராஜ்ஜியங்களை  ஆண்டவர்,.வாழ்ந்தவர்,மீண்டவர்,அமிழ்ந்தவர்,ஆழ்ந்தவர் ,என,யாவரும்  ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரையும்  இந்த  இறைபயணத்தில்   உருவாக்கி ,காத்து,அழித்து பின்பு ஒன்றுமே இல்லாமல் செய்யும் அற்புதம் செய்கிறது .தாமே தம்மை அறியும் ஒரு பிரம்மாண்ட விஸ்வரூப பயணம்.

கற்பனைக்கு எட்டியவரை சக்திகளம் என்பது இயக்கு களம்  தானே.இங்கே இறைவெளியால் தொடர்ந்து  அழுத்தம் கொடுக்கப்பட்டு,தொடர்ந்து இயக்கவைக்க படுவதால் ஒரு சக்தி உருவாகிக்கொண்டேயிருக்கிறதாம்.இங்கே பல ஆயிரம் கோடி கோள்கள் இயங்கி இயங்கி ஒரு ஈர்க்கும் விசையையும் அதனால் ஒன்றோடு ஒன்று ஈர்த்து பிடித்தும், ஒரு  விலக்கும் விசையையும்  அதனால் ஒன்றை மற்றொன்று தள்ளி நிறுத்தியும் . ஒரு சமநிலையை உருவாக்கி தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருக்கும் ஒரு  அற்புதம் இங்கே நிகழ்ந்துகொண்டேயிருக்கிறதாம் .இங்கேஇருந்து தான் அனைத்து  ஜீவராசிகளுக்கும் அனைத்து ஜடபொருளுக்கும்  ஆற்றல் செல்கிறது. மூல சக்தியாக உள்ள சக்திகளம் ஒரு  வற்றா ஊற்றாக உள்ள  பிரமாண்ட சக்திஅலைகள்  நிறைந்துவழிந்தோடும்  ஒரு தாய்களம்.சிவனின் மரு வடிவம் .ஒன்றுமில்லா ஒன்று தான் இப்பொழுது சக்தியாக ஆற்றல் பெட்டகமாக  மிகுந்தஅன்பும் அரவணைப்பும் உள்ள சக்தியாக உருமாற்றம்  பெற்று சிவனின் படைப்புக்களை  தமது சக்தியால் காத்து அரவணைத்து மேலும் மேலும் செம்மைபடுத்தும் பணி செய்கிறது. 
 இந்த இறையின் பயணத்தில்,மரமானாலும் ,புழுவானாலும் , பூச்சியானாலும் ,மனிதஉயிரானாலும் தாய் எனும் அங்கீரம் மிகுந்த போற்றுதலுக்கு உரியதாகிறது. மகத்துவம் பொருந்திய தாய்  எனும் ஸ்தானம் கிடைப்பது மிகப்பெரும்  புண்ணியமாகிறது. கோடான கோடி தாய் உயிர்களை  இந்த  மாபெரும்தாய் சக்தி அரவணைத்து தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்குகிறது. எந்த இடர் வரினும் அதை எதிர்கொள்ள தேவையான ஆற்றலையும்  தாய்க்கு வாரி வழங்குகிறது.தாயின் அன்பும்அரவனைப்பும்  என்றும் குறையாமல்  பார்த்துக்கொள்கிறது.தமது சிசுவுக்கு தேவையான அனைத்தையும் இந்த தாய்சக்தியே வழங்குகிறது.தாய் சக்தியோடு உள்ளவர்கள் இதனை நன்கு புரிந்துகொள்வார்கள் .இன்னும் கொஞ்சம் உள்சென்று இதன் மூல சக்தி யார் என தேட பிரமாண்டமாய் மிக பிரமாண்டமாய் விஸ்வரூபம் எடுக்கும் இந்த தாய்சக்தியின் உன்னத ஆற்றல் மெல்லமெல்ல  புலப்படும்.இந்த தாய் சக்தியை உணர முற்பட ,அது ஒரு தெளிவினைதந்துவிடுகிறது.அதன் ஆற்றல்உணரும் தாயின் சூட்சுமசரீரத்தில் ஒரு  ஆற்றலை சேர்த்துவிடுகிறது.நடக்கும்,நடக்கபோகும் நிகழ்வுகள் என அனைத்து தேவையான மாற்றத்தினை அனுமானம் செய்யும் அளவிற்கு ஒரு அற்புத ஆற்றலினை வழங்கி உயிரை மேலும் மேலும் ஊக்கப்படுத்துகிறது.தாயின் சூட்சும சரீரத்தை கம்பீரமாக்குகிறது..அது ஒரு நிறைவுத்தன்மையையையும் ஒரு வித வல்லமையையும் தந்துவிடுகிறது.சிசுவிற்கு ஏற்படும் எந்த வித காய்ச்சலும்,தாயின் அரவணைப்பால்  மெல்ல மெல்ல சரியாகும்  என்பார்களே ,அது போல ,அதற்கு  தேவையான சரியான ஆற்றலினை தாய் சக்தி வாரிவழங்கிக்கொண்டேஇருக்கிறது.
தாய்க்கும் சிசுவிற்கும்  என்றும் உயிரோடு ஒரு தொடர்பினை உருவாக்கிவைக்கிறது .தாயும் சிசுவும் வேறு வேறு உடலானாலும் இந்த உயிர்தொடர்பு மட்டும் என்றும் தொடர்பை விட்டு விலகுவதில்லை.தாயின் உயிர்க்கு ஒரு சிக்கல் உருவானால் இந்த சிசுவின் உயிர்க்கும் ஒரு சிக்கல் உருவாகிறது.இருவரையும் நீண்ட உயிர்அலைநீளத்தில் பிணைத்துவைக்கிறது.

போற்றுதலுக்கு உரியது தாய் எனும் ஸ்தானம் மற்றும் அதன் சக்தி அலைகள் .இந்த பிரபஞ்சத்தில் மிகப்பெரும் செயல் ஒரு உயிரை உருவாக்குவது..ஆணித்தனமாக கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்  ,மிக தூய்மையானது ,தியாகம் நிறைந்தது,இந்த  இயற்கையின் அற்புத பணி.,இதற்கு ஈடுஇணை எதுவுமே இல்லை.எதனோடும் இதனை compare பன்னஇயலாது. தம்மையே வருத்தி ,தம்முள்ளே   இறைவனின் ஆணையை  ஏற்று ஒரு   உயிரை வளரவைத்து ,உருவாக்கி , ஈன்றெடுத்து,அமுதுஊற்றி ,ஒரு குறிப்பிட்ட காலம் வரை ,அந்த உயிர் தன்னிச்சையாக வளரும் வரை பாதுகாத்து,எல்லாவற்றிற்கும் மேலாக அன்பால் அரவணைத்து, ஒரு ஈர்ப்புத்தன்மையோடு,  பாசம்  நிறைந்து,தமது தாய்சக்தி அலைகளால்  ஒரு தன்னலமற்ற சேவை புரிகிறாலே ...!!! இது யாரால் இயலும் ?  இந்த ஒரு இறையின் செயலை செய்யும் பாக்கியம் யாருக்கு கிடைக்கும் ? அப்படி கிடைத்த தாய்   எவ்வளவு பெருமை மிக்கவள்.?..அவளுக்கு எவ்வாறு கைம்மாறு  செய்வது ...அவள் எதையும் எதிர்பார்க்கவில்லையே இறைநிலையை போல , எவ்வாறு போற்றுவது அவளை..... அப்பப்பா....!!! கண்ணீர்மல்கிறது தாயவள் கருணையும் அன்பையும் நினைக்கும்  போது...!!!.
பாசம்  மிகுந்த  அன்பு அலைகளால் நிறைந்தவள் தாய்.அவள்  எப்பொழுதும் தாய் எனும் சக்தி களத்தோடு தொடர்புகொண்டுள்ளாள்.ஒரு இமைப்பொழுதுகூட தமது தாய் சக்தியை விட்டு விலகுவதில்லை.மாபெரும் தாய் சக்தியும் தாய் உயிர்களை என்றும் தமது ஆட்சிப்புலத்தில் வைத்துள்ளது.போற்றபட வேண்டியவள் தாய்.ஒரு கருவுற்ற  பெண்ணின் ஏழு எட்டு மாதம் முதல் அக்குழந்தை இரண்டு மூன்றுவயது வளரும் வரையில்தாய் சக்தியின் தொடர்பும் அரவணைப்பும் மிக மிகுந்து காணப்படுகிறது.பிறகு மெல்ல மெல்ல சக்திஅலைகளின் தொடர்பு அலைகள் குறைகிறது.ஆனால் என்றும் மாபெரும்  தாய்சக்திஅலைகள் முற்றிலுமாக விலகுவதில்லை.

தாய் சக்தி என்பது அன்பு நிறைந்தது .அன்பும் பாசமும் நிறைந்த ஒரு விதமான அருள் அலைகள் .என்றும் தமது சிசுகளுக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்துகொண்டேயிருகிறது.இன்றைய காலகட்டத்திலும்  இந்த மாபெரும் தாய்சக்தியை  அவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ இது 
அவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ ,ஆனால்அவர்கள் யாவரும் ஒரு மாபெரும் சக்தியோடு தொடர்புவைத்துள்ளார்கள் என்பது உண்மை .அந்த சக்தியால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.அந்த சக்திக்கு  போகமீதம் உள்ளது தான் அனைத்து மற்ற உயிர்களுக்கும்.தாய் என்பவள் என்றும் மகிழ்ச்சியில் வைத்து போற்றப்படவேண்டியவள் .அது நமது கடமையாகிறது.தம்மால் முடிந்தவரை கிடைக்கும் காலகட்டத்தில் இறைவெளியால் உருவாக்கப்பட்டபந்தத்தில் எவ்வளவு நன்மைதரும் வகையில் தாய்க்கு சேவை புரியுமோ அந்த அளவுக்கு சேவை புரிந்துவிடுங்கள் .இது ஒரு மிகபெரும் புண்ணியம்.தாய் என்பவள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே. .மீண்டும் இது போல் வருவதில்லை. "...இல்லை, இல்லை அவள் எனக்கு இவ்வாறு செய்துவிட்டால்..? எப்படி எம்மால் மட்டும் அவளுக்கு  நன்மை செய்ய முடியும் என்ற கர்மவினை கேள்விகளை எல்லாம் தூக்கிஎரிந்துவிட்டு , அவளோடு வாழும் பொன்னான காலங்கள் என்றும் நமக்கு புண்ணியமும் பெருமையும் சேர்க்கும் என்பதை நினைவில் கொண்டு, தொண்டு செய்யுங்கள் ,வாழ்வு பயனுள்ளதாகும்.தாய்மகிழ்சியாக இருந்தால்  அதன் சிசுவும் வாழ்வில் மகிழ்ச்சியோடு இருக்கும் .இல்லை எனில் சிசுவின் வாழ்வு கடினபாதையாக மாறிவிடும்.


ஒரு முறை எமது IT Team ல் உள்ள ஒரு  பெண் அன்பர் ஒருவர் தினமும் 20km  பயணம் செய்து அலுவலகத்திற்கு வந்து வேலை செய்து பிறகு மீண்டும் வீடு திரும்புவது வழக்கம் .காலம் செல்ல திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது.எனவே தாம் தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்ய இயலாது எனவும் ,எனவே தமக்கு  இதே அலுவலகத்தின் தமது வீட்டிற்கு அருகில் உள்ள வேறு ஒரு கிளை அலுவலகத்தில்  இடமாற்றம் செய்ய அனுமதி வேண்டி என்னிடம் கேட்டார்.,ஏற்கனவே சில அன்பர் ஒருவர் இவ்வாறு இடமாற்றம் செய்து ,அவரை தொடர்ந்து கண்காணிப்பது,கொடுத்தவேலையை முடிக்க  அவரை monitor செய்ய, எமக்கு  போதும் போதும் என்றாகிவிட்டது.ஆதால்அந்த பெண்ணிடம் உனது shiftஜ flexible ஆக வேண்டுமானால் மாற்றிக்கொள்ள மட்டும் அனுமதி கொடுத்தேன்.ஆனால் அது தமக்கு சரிபட்டு வராது என ப்ராஜெக்ட் ரிலீஸ் வாங்கிவிட்டு சென்றுவிட்டார். சரியாக ஒரு மாதம் சென்றது .யாம் பணிபுரிந்த கிளை முழுவதும்  சுத்தமாககாலி செய்து ,அந்த பெண் பணிபுரியும்கிளை அலுவலகத்திற்கே செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது..தாய் சக்திக்கு மிஞ்சியது எதுவுமில்லை இந்த உலகில்!!

எமை ஈன்ற தாயவள் பொற்பாதங்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறோம். தாயவள்  பெருமை உணர்ந்து ,அதன்  மூலமாகிய பிரமாண்ட தாய் சக்தி அலைகளை உணர்ந்து  அதன் அருள் ஆசிகள் பெறுவோம்..தாய் எனும் மாபெரும் சக்திஅலைகளோடு,அகத்திய  உள்ளங்களை மீண்டும் ஒரு நிகழ்வில் சந்திக்கிறோம் .

ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!
No comments:

Post a Comment