Friday, March 25, 2016

ஸ்ரீ ருத்ரம்..!!!நண்பர் ஒருவருக்கு ஒரு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.பொருளாதார பின்னடைவு,தொழில் வளர்ச்சி இல்லை, மன உலைச்சல்,உடல் நல குறைவு,ஏழரைநாட்டு சனி ,என அடுக்கடுக்கான நிறைய சிக்கல் .எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு வழி தென்படுமா ? என தேடி தேடி அலைந்து ஒரு வழியாகிவிட்டார்.எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.கர்மவினை கழிவது என்பது சாதரண விசயம் அல்ல. அதைஅனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி.இது போன்ற காலங்களில் முதலில் நமக்கு தேவைப்படுவது அசைக்கமுடியாத மனம் மற்றும் இறைவழிபாடு.(A Strong Solid Mind and Divine Worship).இல்லை எனில் வாழ்வு என்பது மிக கடினமாகிவிடும் .

நண்பருக்கு ஆறுதல் சொல்லி ,இறை வழியில் மனதை ஈடுபட செய்தோம்.ஒரு சில வழிகளில் அவர் மனதை கொஞ்சம்  கொஞ்சமாக மாற்ற முயற்சி செய்தோம்.ஸ்ரீ ருத்ரம் படிக்க சொன்னோம். அவர் செய்த புண்ணியம் அடுத்த நாளே பிரதோஷம்,ஒரு லிட்டர் பால் வாங்கி சென்று ,சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தில் கலந்து கொண்டோம்,அங்கேயே அமர்ந்து மனதை சிவ வழியிலேயே செலுத்தவிட்டோம்.நண்பர் மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்தது.ஏதோ ஒரு நம்பிக்கை தற்பொழுது அவர் மனதுள் எழுந்ததை உணர்ந்தோம்.பிரச்சினைகள் நிறைய இருக்கிறது அது சரியாக காலம் இருக்கிறது.ஆனால் அவற்றை எதிர்கொள்ள ஒரு சிறு நம்பிக்கை அவருள் பிறந்ததை உணர்ந்தோம்.அந்த நம்பிக்கையே அவருள் அவர் அறியாமல் இது நாள் வரை கிடந்த  பொருளாதார சிக்களுக்கு  ஒரு தீர்வை வழிகாட்டியது.இந்த நம்பிக்கையை கொடுத்தது சிவனின் அன்பு அலைகள்.சிவனின் அன்பெனும் அலை சற்றே உரசி செல்ல, யாம் ஆடும் ஆட்டத்தில் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை என தான் எமக்கு தோன்றியது.


எதற்கும் மூலம் சிவம் எனும் ஆற்றலே .சிவமெனும் சக்தியே.சிவமே யாவும்.எங்கும் சிவமே . எதிலும் சிவமே.சிவமே உம்முள்ளும்,சிவமே எம்முள்ளும்,நடக்கும் அனைத்தும் சிவனின் கருணையால், சிவத்தின் சிவ மூலத்தில் எழுதிவைக்கப்பட்ட சிவனின் அன்புஅலைகளால். ஆட்சிசெய்வது சிவனின் தார்மீக அலைகள்.சிவமின்றி எதுவும் இல்லை.வீடற்று , மொழியற்று ,ஆதியாய் ஆனாதியாய்  ,கேட்பாரட்று சப்தமாய் நிசப்தமாய்  எதற்கும் எந்த ஒரு வரைமுறை கொண்டும் வர்ணிக்க இயலாதவனாய் இருப்பவன் சிவனே.ஒவ்வொரு செயலிலும் அதற்கான மூலமும்,ஒவ்வொரு நிகழ்விலும் அதற்கான மூலமும் ,இன்பமும், துன்பமும், அழகும் ,அறிவும், தெளிவும்,ஞானமும்,ஞானத்தின் சூட்சமும் .விதியும் விதியின் மூலமும் ,மதியும் மதியின் மூலமும்,சுவையும் சுவையின் மூலமும்,பார்க்கும் கேட்கும்,தொடும் எல்லாவற்றிக்கும் மூலமாய் இருப்பவனும்,பார்க்க இயலாத தொட இயலாத , தன்மை முழுமையும் உணர இயலாத ,சூட்சுமத்தையும் அதன் மூலமாய் இருப்பவனும்,இப்படி எதற்கும் ஒரு மூலமாய் இருந்துகொண்டு இருப்பவனே சிவன் !


ஸ்ரீ ருத்ரம் யசூர் வேதத்தின் ஓர் அங்கம்.மிக சிறந்த வலிமைமிகுந்த அட்சரங்களால் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது.படித்து பயன் பெறுவது மட்டுமே நமது வேலை.கோடி கோடி நன்றிகள் இவைகளை உருவாக்கிகொடுத்த முன்னோர்களுக்கும் அவர்களுக்கு மூல காரணமாகிய இறைவனுக்கும்.மிக கடினமாக காலங்களில்,அதாவது ஒரு நாள் செல்வதே போதும் போதுமாகிறது ,ஏதேனும் ஒரு நல்ல வழி கிடைக்காதா ?...என மிகுந்த சிரமத்தில் உள்ளபவர்களுக்கு,  ஸ்ரீ ருத்ரம் சொல்வது வாழ்வை மிக மிக எளிதாக்கிவிடுகிறது.துயரங்கள் புறமுதுகிட்டு ஓடிவிடுகிறது.காலகாலமாக நாம் சேர்த்துவைத்த பாவங்கள் தானே நாம் இன்று எதிர்கொள்ளும் சோதனை,வேதனை,பொருள்குறைபாடு,உடல்நலமின்மை,தரித்தரம்.இவை யாவும் ஓடிவிட,பாவங்கள் தீர ,தரித்ரங்கள் அகழ,அதற்குன்டான பிராயச்சித்தங்களை செய்யவேண்டுமல்லவா ?.
ருத்ரம் படித்தால் பாவம் குறைகிறது.ருத்திர மந்திரங்களால்  தரித்ரங்கள் ஓட்டிவிரட்டப் படுகின்றது. பரிகாரம் அவை தாமாகவே  இந்த ருத்திர மந்திரங்களால்  செய்யப்படுகிறது.வாழ்வியல் தேவைகள் நிறைவேற வேண்டும் என்றால் அதனதற்குன்டான  தேவதைகள் திருப்தி அடையவேண்டும் .இங்கே ருத்ரம் படிப்பதால் அனைத்து தேவதைகளும் திருப்தி அடைகின்றனர்.வேண்டியவர் வேண்டியது கிடைக்க வழிவகை செய்கிறது.எல்லாவற்றிற்கும் மேலாக முக்திக்கு வழிவகுக்கின்றது.


ஸ்ரீ ருத்திரம், ருத்ரன், சிவனின் ஓர் அங்கம் .கோபம் நிறைந்தவன் .இவனின் கோபத்தை குறைக்க உள்ளம் நிறைந்த அன்பால் இவனை நமஸ்கரிக்க வேண்டும்.சிவனின் பல கோடி வடிவங்களில் ருத்ரனும் ஒன்று .ருத்ரன் என்பது சிவனின் ஆற்றல்.கோடான கோடி கோள்களையும் அதில் உள்ள எண்ணில்அடங்கா ஜீவராசிகளை  இயக்க ,சிவன் பயன்படுத்தும் , சிவனின் ஒரு  வடிவம் ஒரு அங்கம் ருத்திரன்.எத்தனை ஆயிரம் ஆயிரம் கோடி நுண்ணிய மற்றும் பிரமாண்ட அளவிளான  பிரபஞ்சமும்,அதில் உள்ள ஜீவனும், மண்ணும்,மரமும்,கொடியும்,செடியும், அதன் அழகும் ,அற்புதமும்.இத்தனை ஆயிரம் கோடி உயிர்களை,  நிகழ்வுகளை ஆட்சி செய்ய ,சிவனுள் இருந்து எழுந்த ஆயிரமாயிரம் சிவகணங்கள்.ருத்ரன் என்பவன் சிவனே.சிவனின் தீம்பிழம்பு போல உள்ள ,தகதகக்கும் ஆற்றலே.

எம்முள்ளும் ருத்ரனை காணமுற்பட,  எம்மை, எம்முள்  புதைந்து கிடக்கும் ஆற்றலை ,சிவ மந்திர மூலம் உரு ஏற்ற,ஏற்ற, எம்முள்ளும் ,தகதகக்கும் ஆற்றலாகிய சிவனின் ஒரு வடிவமாகிய,  ருத்ரனாக மாற்றம் பெறுவதை உணர்கிறோம்.இது சிவனின் பேராற்றலை உணர வழிவகை செய்கிறது.எங்கும் நிறைந்தவன் எல்லை அற்றவன் ,பெருங்கருணை உடையோன் ,கருணை என்ற வார்த்தை போதவில்லை இவனின் தன்மையை பெருந்தன்மையை வாரி வழங்கும் அற்புதத்தை விவரிக்க.
ஊற்றாகி  உள்ளம் பூரித்து எழுகிறது இவனின் கருணை அலைகள்.என்ன வென்று உரைப்போம் எம்முள் எழும் ,நீக்கமற நிறைந்த பெருமானின் அன்பு அலைகளுக்கு.அனைத்தும் சர்வேஸ்வரனே !! சதா சர்வ காலமும் நீயே! காலத்தின் நாயகனும் நீயே ! இருப்பவன் நீ ஒருவனே ! எம்மையும் எம்மை போன்ற உள்ளங்களையும் ,அவற்றின் இருப்பிடமாகிய இந்த உலகத்தையும், ,உன்னுள் நீயே படைத்து,காத்து,அன்பால் அரவணைத்து,பின்பு மூழ்க வைத்து  ஒன்றுமே இல்லாமல் செய்யும் அற்புதமும் நீயே ! பிரபஞ்ச நாயகனே ! பேரானந்தமே ! ஆனந்தத்தின் மூலமே ! ஆதியே ! அனாதியே ! பிறப்பு இறப்பு அற்றவனே ! ஒன்றுமில்லா பெரியோனே ! வெட்டவெளியே ! சோதியே ! நின் கருணையால் எம் உள்ளத்தில் பூரித்து எழும்  அன்பு அலைகளால் உன்னை உணர முயற்சிக்கின்றேன் முடியவில்லை.நின் தன்மையினை ,பெருமையினை நினைந்து  நினைந்து, ஆழ்ந்து  ஆழ்ந்து ,அமிழ்ந்து அமிழ்ந்து,உணர முற்பட  கண்கள் அது ஊற்றுபோல் நீரை வாரி இறைத்துவிடுகிறது,எம் நாயகனே ! எம்பெருமானே ! எந்த நிகழ்வும் உம்முடையதே ! உம்மை எம்முள் என்றும் காண வழிவகை செய்யுங்கள்இறைவனே !

...நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய 
மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய 
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
 நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய 
 ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

 ஸ்ரீ ருத்ரம் PDF and MP3   (ஸ்ரீ ருத்ரம்  PDF   and Audio MP3ஐ Download செய்ய இங்கே click செய்யவும்)


(நன்றி வலைத்தள அன்பர்கள்)

மேலே உள்ள ஸ்ரீ ருத்ரம்  Download செய்து நாள் தோறும் ஸ்ரீ ருத்ர மந்திரத்தைஉச்சரியுங்கள்.வாழ்வை எளிதாக மாற்றுங்கள்,சர்வேஸ்வரின் அருள் அலைகளை உணருங்கள்.!! வாழ்வில் எல்லா வளமும் பெற்றிட சிவ அலைகளை, ருத்ர அலைகளை ,அவன் தாள் பணிந்து அவன் அருளால் பெறுவோம் என வணங்கி வாழ்த்தி அகத்திய உள்ளங்களை மற்றொரு கட்டுரையில் விரைவில் சந்திக்கின்றோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹ!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ!
3 comments:

 1. அருமை. தமிழில் ருத்ரத்தின் சாரமான சிவபெருமானின் விஸ்வரூப தரிசனத்தை அப்பர்பெருமான் தனது நின்ற திருத்தாண்டகத்தில் அற்புதமாகப் பாடியுள்ளார். திருவாரூரில் இப்பாடல் பாடியபடி அவர் சிவஜோதியில் கலந்துவிட்டார். அத்தகைய பெரும்பேற்றை நல்கும் பாடலை இங்கு காணலாம் http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6094

  ReplyDelete
 2. அருமையான பதிவு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் எங்களுக்கு நல்ல வழியை காட்டியமைக்கு

  ReplyDelete
 3. dear sir,
  I was looking for Sri Rudram pdf. I found it here and downloaded
  thank you very much
  sundar

  ReplyDelete