Thursday, November 12, 2015

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி

உள்ளம்  இறைவன் வாழும் ஆலயம்.சிவன் வாழும் ஆலயம். எதுவும் இங்கே சாத்தியம்.அனைவரையும் வாழ்த்தவும் முடியும் இல்லை வேறொரு வழியில் சபிக்கவும் முடியும்.அந்த அளவுக்கு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டது.கர்மவினை அதன் தன்மைக்கேற்ப ஆட்டிபடைக்கும் கோள்கள் ,அதன் காரணமாக வேலைபளு,அதனால்  நாட்போக்கில் உண்டான  மனகசப்பு,ஒரு இறுக்கம் ,இவை யாவும் உள்ளத்தை இறைவன் வாழும் ஆலயத்தை கலங்கப்படுத்திவிடுகிறது.இந்த கலங்கத்தை சரிபடுத்த தூய்மை இங்கே அவசியமாகிறது.இதற்கு நிறைய வழிகள் உள்ளது.ஏதேனும் ஒரு வகையில் சிவதொண்டில் ஈடுபடுவது,சிவதரிசனம் காண்பது, தவம் செய்து இறைவன் ஆசிகளை பெறுவது, ஜீவ சமாதி சென்று சித்தர் ஆசிகளை பெறுவது,அன்பால் உள்ளம் உருகி ஆழ்ந்து அனைவரையும் வாழ்த்துவது என நிறையவழிகள் உள்ளது.ஏதேனும் ஒரு வகையில் இறைநிலையை உணர்தல் அவசியமாகிறது. இல்லை எனில் ஆன்மீக வாழ்வில் இருந்துகொண்டு இந்த பொருள் தேடும் வாழ்கை வாழ்வது என்பது கடினமாகிவிடுகிறது.

வாருங்கள் கன்னிவாடி எனும் ஒரு இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கு செல்வோம்.இங்கே செல்வதற்கு நிறைய வழி  இருக்கிறது.ஓட்டன்சத்திரத்திலிருந்தும்,திண்டுக்கல்லிருந்தும் வரலாம்.யாம் சென்ற வழி ,மதுரை to திண்டுக்கல் NH7 Bye-pass Road வழியே டோல்கேட் தாண்டி    ரொம்ப தூரம் சென்று இடது புறம் திரும்பி SH 37 road ஜ பிடித்து செம்பட்டி வழியே சென்றால் கன்னிவாடி வரும்.,பிறகு அங்கிருந்து  ஒரு இரண்டு கிலோமீட்டர் சென்றால் கன்னிவாடி ஊர் எல்லை தாண்டி,   பிறகு அங்கிருந்து ஒரு இரண்டு km சென்றால் இடது புறமாக (சோமலிங்கேஸ்வரர் கோவில் செல்லும் வழி என்று ஒரு அறிவிப்பு பலகை வரும் அதன் வழியே அவ்வாறு செல்ல சோமலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மெய் கண்ட சித்தர் குகைக்கு  நேரடியாக அழைத்து செல்லும்.குகை மற்றும் சோமலிங்கேஸ்வரர் கோவில் அனைவரும் தரிசிக்கலாம் நீண்ட  நெடியமலை ஏற வேண்டிய அவசியம் இல்லை.மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது.
ஒரு முறை சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆகாய மார்க்கமாக செல்லும் போது ,தேவியார் இங்குள்ள மலையின் அழகை பார்த்து வியந்து நின்றுவிட்டார்களாம்.பிறகு சிவபெருமான் , இம் மலையின் அழகில் சொக்கிபோய்நிற்கும் தேவியாரை பார்த்து, கன்னி வாடி என்றழைக்க ,இந்த ஊர்  கன்னிவாடி என்று பெயர் பெற்றது என்கிறார்கள் . சிவபெருமான் நின்ற வடிவிலும் மகாவிஷ்ணு சயன கோலத்திலும் இருந்ததை கண்டு, கோரக்க  சித்தர்  திருவாய் மலர்ந்து அருளிய அரிகேசவ பருவத மலை என்கிறார்கள் (கோரக்கர் மலை வாகடம்). மெய்கண்ட சித்தர் ,குண்டலினி சித்தர் ,வாலையானந்தர்,முத்தானந்தர் மடாதிபதிகளும்இன்றும் இங்கே வணங்கிக்கொண்டிருக்கும் அற்புத திருத்தலம் இந்தமலை என்கிறார்கள் (போகர்  மலை வாகடம்).
போகர் சித்தர் சாபம்நீக்கப்பட்டு, தவம் செய்துகொண்டிருக்கும் தருவாயில் தமது சீடர்களான கொங்கணர்,புலிப்பாணி ,கருவூரர்  சித்தர்களை
 அழைத்து நவபாசானங்களை அறைப்பதற்கு பத்மினி ரக பெண் தேவை என கூற,சீடர்கள் அனைவரும் எங்கெங்கு தேடியும் பத்மினி ரக பெண் கிடைக்காத காரணத்தால் ,ஒரு கல் மண்டபவத்தில் உள்ள கற்சிலையை உயிர் கொடுத்து அழைத்துவர, போகர் தம்  தவபலத்தால் வந்தது பத்மினி ரக பெண் அல்ல இது ஒரு கற் சிலை என உணர்ந்து "கல் நீ வாடி "என அழைத்தாராம் (கருவூரார் ஜாலத்திரட்டு) இதுவே மருவி  நாளடைவில் கன்னிவாடிஎன அழைக்கப்பட்டது என்கிறார்கள்.
 

உண்மையிலேயே மலை அவ்வளவு அழகாக உள்ளது.நீண்ட சிவலிங்கம் போல் இருக்கும் இந்த மலையின் அழகை பார்த்து ரசிக்க நேரம் போவதே தெரியவில்லை.அவ்வளவு அழகாக உள்ளது.லிங்கம் போல் உயர்ந்து நீண்டு நெடிய மலையாகவும் அதில்ஆங்காங்கே உள்ள  பசுமையான மரமும் செடியும்  அதன் அழகும் பார்க்கும் யாவரையும் கவர்ந்திலுக்கிறது.நீண்டு நெடியஉச்சி அந்த உச்சிக்கு எவ்வாறு செல்வது என எண்ணிக்கொண்டிருக்க ஒருவர் எமக்கு தெரியும் ,அங்கே சென்று வர இரண்டு நாட்கள் ஆகும் ,ஆங்கே போகர் தவம் செய்தகுகை ,கோரக்கர் தவம் செய்த குகை இன்னும் பல அரிய் மூலிகை உள்ளது எனவும் சொன்னார்.கண்டிப்பாக இரண்டு முழு நாட்கள் ஒதுக்கி தக்க பாதுகாப்புடன் அனுமதி பெற்று செல்வது உசிதம்.

இங்கே ஒருபழமையான வில்வமரம் ஒன்று உள்ளது.நீண்டு தவண்டு விநாயகருக்கும் ,சோமலிங்ககேஸ்வரருக்கும் நிழல் பரப்பி, சேவை செய்துவருகிறது.எட்டி பிடித்து ஒருகை நிறைய வில்வஇலைகளை பறித்து சிவனின் பாதங்களில் வைத்தோம்.இது போல ஒரு வாய்ப்பு கிடைத்தால் சிரமம் பாராது முழுவதும் திறம்பட பயன்படுத்திக்கொள்ளுங்கள்.ஏனெனில் வில்வஇலைகளால் சிவனுக்கு நாமே அர்ச்சனை செய்வது  நமது கர்மவினைபதிவுகளை  வேரறுக்கும் .சிவ அதிர்வோடுள்ள வில்வஇலைகள் நம் உடலோடு ஒன்றுகலக்க ,உடலில் உள்ள செல்களுக்கு அமிர்தங்களை ஊட்டும் பணி ,அதாவது சிதைவடைந்த செல்களை புதுப்பிப்பது செல்களை நன்றாக இயங்கவைப்பது  என்பது ஒரு புறம் இருக்க ,மறுபுறம் கோடிகோடி புண்ணியம்,சிவலயம் ,சிவத்தில் ஒன்றுகலந்து நம்மை சிவனின் அருகில் அழைத்துச்செல்லும்பாக்கியம் கிட்டும் விரைவில்.அதன் அருகே குகை .குகைக்கு அருகிலே ஒரு சிறிய நீர்வீழ்ச்சி , நீர்பருகி,பிறகு மீண்டும் குகை வந்தோம்.குகை மிக அழகாக உள்ளது.தீபஒளி சுடர் போல அமைப்பு உள்ளே  முற்றிலும் லிங்க வடிவில் hollow space ,மெய்கண்ட சித்தர் தவம் செய்த குகை என்கிறார்கள்.மிக அதீத சக்தி நிறைந்துள்ளது இக்குகையில் .உள்ளே செல்ல அனுமதி இல்லை .அருகிலே கொஞ்ச நேரம் நின்று கவனிக்க ,உள்ளே லிங்க வடிவில் நிறமற்ற கண்களுக்கு தெரியாத  நிரம்பி வழியும் அரூப சக்தியின் ஆற்றல் உணரமுடிகிறது. ஒரு மூச்சில் நன்கு ஆழ்ந்து முடிந்தவரை எவ்வளவு சுவாசம் இழுக்க முடியுமோ அதுபோல அவ்வளவு சக்திஅலைகளை  நன்கு உணரமுற்படும் போது ,உடல் ,உள்ளம் யாவும் முழுவதும் நிறைந்துவிடுகிறது .அதற்கு மேல் அங்கே நிற்க இயலவில்லை எனவே  அருகிலே வந்து அமர்ந்துவிட்டோம் . கண்கள் மூடி  அமர்ந்து ,இவை என்ன என சிந்திக்க ஆழ்ந்து உள்நோக்க ,எம்முள் இதற்கு முன் நின்ற முறையில் பெறப்பட்ட சக்தியே , உடல் முழுவதும் நிரம்பி இருக்கிறது.அதே மீண்டும் மீண்டும் சக்திஅலைகளை உண்டால் எப்படி இருக்கும் அதுபோலவே இருந்தது.ஆழ்ந்து உட்செல்ல கல்நெஞ்சமும் கரைகிறது.அன்பின் அலைகளை உணர முடிகிறது.இக்குகையில் சிவலிங்கம் தெரிகிறது ,ஒரு சித்தரும் தெரிகிறார் ,சிவலிங்க வடிவில் சித்தரா அல்லது  சித்தர் வடிவில் சிவ லிங்கமாக எனும் காட்சி  எம் எண்ணத்துள் மருவுகிறது .எல்லாம் ஓரிரு நொடித்துளிகளே .அன்பின் அலைகளை பிடிக்க தெரிந்தவர்கள்  கொஞ்சம்,  ஆழ்ந்து இங்கே இந்த படத்தில் உள்ள குகையை நன்கு ஆழ்ந்து உட்சென்று ,பிறகு கண்களை மூடி இது எப்படி இருக்கும்  என கண்களை மூடி தியானித்து பாருங்கள்.இங்குள்ள சித்தனின் அருள் ஆசிகள் உங்கள் உள்ளங்களை  நொடிப்பொழுதில் நீங்கள் இருக்கும் இடம் வந்து அரவணைக்கும் . நேரே இங்கு வந்து தரிசனம் செய்வது  போல ஒரு  சூட்சும அருள் தரிசனம் இந்த லிங்க வடிவ குகையில் இருக்கிறது. இந்த அற்புத குகை சித்தர் மற்றும் இங்குள்ள சிவ தரிசனம் கண்டிப்பாக ஆத்மாவை அதன்   கர்மவினை களைந்து புனிதப்படுத்தும் என்பது உண்மை.

இக்குகைக்கு அருகிலே கீழேஇறங்கி சென்றால் ஒரு வில்வமரம் உள்ளது .அதன் சிறப்பு என்னவெனில் அதில் பதிமூன்று இதழ்கள் உள்ளது.மிக விஷேமானது என்கிறார்கள்.முதலில் ஒரு வித்தியாசமான சுவையும் பிறகுகொஞ்சம் கசப்பு தன்மையும் நிறைந்துள்ளது.யாம் இதுவரை பார்த்தது இல்லை .இதற்கு முன் பார்த்ததெல்லாம் மூன்று இதழ்கள் கொண்ட வில்வம் .இறைவன் அன்பால் தம் கருணையால் மனிதர்களுக்கு அளித்த வரப்பிரசாதங்களில் இந்த வில்வமும் ஒன்று. 


அகத்திய உள்ளங்களை  மீண்டும் வேறொரு நிகழ்வில் விரைவில் சந்திக்கிறோம்

ஒம் அகத்தீஸ்வராய நமஹ!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ!!

3 comments: