Sunday, April 26, 2015

நெஞ்சமெனும் புதினம் ...!!!

எந்த அளவுக்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உள்ளத்தில் மனதில் தெளிவும் அமைதியும் சூழ்ந்துகொள்கிறது.எந்த அளவுக்கு தெளிவு இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கிறது.கர்ம வினையும் கோள்கள் ஆட்சியும்,புண்ணியத்தின் குறைபாடும் இந்த மனதினை சும்மா பந்தாடிவிடுகிறது.பெருத்த அளவில் சம்மட்டி அடி வாங்குவதும், இந்த உள்ளத்தில் தான், இந்த மனதில் தான்,அதே போல்,மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து தாண்டவம் ஆடுவதும் இந்த உள்ளத்தில் தான், இந்த மனதில் தான்.எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும் ,ஒரு சில அன்றாட நிகழ்வுகள்,செயல்கள்,தம் எண்ணஅலைகள், இவை யாவும் இந்த மனதினை துவம்சம் செய்துவிடுகிறது.இங்கே வெற்றிபெற்றால் அனைத்தும் சொர்க்கமே.இல்லை எனில் எண்ண சிக்கலில் நன்கு மாட்டவைத்து  பெற்ற சக்தியை இழந்துகொண்டே இருக்கவேண்டியதாகிறது.

தினந்தோறும் தூய்மை என்பது மிக மிகஅவசியமாகிறது.பாத்திரத்தில் உள்ள அழுக்குகளை கழுவுவது போக, உள்ளத்தில்  உள்ள  குப்பையான எண்ணத்தை தினந்தோறும் வெளியேற்றுதல் என்பது அவசியமாகிறது.இதற்கு நிறைய வழிகள் உள்ளது.எது நமக்குபிடிக்கிறதோ அதனை பின்பற்றி தூய்மை செய்தல் நல்லது.ஒருசில மனதிற்கு பிடித்த ஸ்லோகங்கள் ,மந்திரங்கள் எதுவாயுனும் அதனை நன்கு தெளிவான உச்சரிப்புடன் சொல்லி,அதன் அலைத்தன்மையினை பிடித்துக்கொள்ளவேண்டும் அதாவது அதன் ரிதம் புரிந்துகொண்டு ,நன்கு உள்வாங்க ,நல்ல ஒரு தெளிவான அலை இயக்கத்துக்கு அழைத்துசெல்லும்.உடல் கருவிகளை (கண்,தொண்டை போன்ற எதுவும்)  சிரமபடுத்தாமல் ,அதன் இயல்பு மாறாமல் உச்சரிக்க, மனமும் ஹிருதயமும் நன்கு மிக அழகான அதிர்வு அலைகளை அப்படியே உள்வாங்கும்.இன்னும் இப்படியே சொல்ல சொல்ல,நெஞ்சத்தில் நல்ல அதிர்வுள்ள அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து சூழ்ந்துகொள்ளும்,பிறகு நெஞ்சம் ஒரு கம்பீரம் பெரும்,நன்கு தெளிவுபெரும்.கர்மவினையின் தாக்கம் குறையும்.குப்பை எண்ணங்களெல்லாம் வேரறுக்கப்படும்,தெளிவான எண்ணங்கள் பிறக்கும்.தீய்மையான எண்ணங்கள் இல்லாது ,நல்ல அதிர்வுள்ள அலைகளை உணர்தல் என்பதே ஒரு புண்ணியம்.ஏனெனில் இந்த அலைஇயக்கம் அவர் தம்மை சுற்றியுள்ள பொருட்கள்,உயிர்கள் ஆகிய அனைத்திற்கும் நன்மைவிளைவிக்கும்.


நான் என்ற அகந்தை அகழ ,கிட்டத்தட்ட முக்கால் வாசி உள்ளம் தூய்மையாகிவிடுகிறது. இறைநிலையிலிருந்து வந்தது  தானே இந்த நான்.
 இடையில் உள்ள பரிணாம மாற்றத்தில் அனைத்தும் மறந்துபோய்விட்டது.ஒன்றுமில்லா ஒன்றாகிய இறைநிலை,பல்வேறு நிலைமாற்றம்பெற்று,ஆகாயம் ,காற்று,நெருப்பு,நீர்,நிலம் என மாறி பிறகு அதிலிருந்து ஒரு அறிவுடைய தாவரம் முதல் ,இரண்டறிவு,மூன்றறிவு,நான்கறிவு,  ஆகி பிறகு ஐந்தறிவு விலங்காகி,பிறகு கடைசியில் ஆறறிவு  உள்ள  உயிராக இன்று பல கோடி மனித உயிர்களாகி,இறைவன் தம் ஒன்றுமில்லா ஒன்றில் அடக்கிவைத்துள்ள ,அழகிய நுட்பத்தை,தம் தன்மையை ,தம் பெருமையை, மிக பிரம்மாண்டமாய்,மிக மிக பிரம்மாண்டமாய் விரித்துவைத்திருக்கும் அற்புதம்.இவைகளை எண்ணும் போதே ஒரு பிரம்மிப்பு வருகிறது.இத்தனை பிரமாண்ட மாற்றத்தினை செய்தவன் மனிதான ? இறைவனா ? இடையில் வந்தவன் தானே மனிதன் .இந்த பரிணாம மாற்றத்தை மறந்துவிடுவதால் ,எது செய்யினும் அதை தன் புத்தியை கொண்டு செய்ததால் தமக்கு உரிமைகொண்டாடி தான் என்ற சுயநலம் சூழ்ந்து,அகந்தையும் கர்வமும்,அழுக்கும்,குப்பையும் சூழ்ந்துகொள்கிறது.மனதினை இந்த  பரிணாமமாற்றத்தை நோக்கி திருப்ப, மனம் அமைதிபெறுகிறது.அகந்தை வெளியேருகிறது.அனைத்தும் இறைநிலையின் அங்கம் என பார்க்கும் ஒரு தன்மை பெறுகிறதுஅகண்ட பிரபஞ்சம் ,ஆழ்ந்து ஆழ்ந்து செல்லச் செல்ல சென்றுகொண்டேயிருக்கும் அண்ட வெளி,முடிவேயில்லாமல் சென்றுகொண்டேயிருக்கும் ஒரு புனித சூட்சும தூயவெளி.மனதால் எவ்வளவு பெரிய வடிவத்தையும் எடுக்கமுடியும்,ஆனால் அந்த அவ்வளவு பெரிய பிரம்மாண்ட வடிவமும் இந்த அண்டவெளியுள்,இந்த இறையுள் ,இந்த வெட்டவெளியுள் , தம் இருக்கும் இடம் தெரியாமல்  சுவடு தெரியாமல் மறைந்துவிடும் அற்புதம்.காரிருள் விரிகிறது ,கும்மிருட்டு சூழ்கிறது ,எந்த சலனமும் இன்றி நிசப்தமாக  இன்னும் இன்னும் விரிந்து சென்று கொண்டேஇருக்கிறது.இப்படி இந்த வெட்டவெளியாகிய காரிருளில் மூழ்க மூழ்க,ஒரு இனம் புரியாத அலைகள் சூழ்கிறது.ஒரு வித பாச அலைகள் கவர்கிறது .ஒரு தாய்க்கும் ஒரு குழந்தைக்கும் உள்ள ஈர்ப்பு அலைகள் போல, ஏக்கத்தால் ஏங்கித்தவிக்கும் குழந்தைக்கு யாருமே தரஇயலாத ஒரு
அரவணைப்பு தருகிறது.இந்த மாபெரும் பிரம்மாண்ட வெளியே ,தாய்போல ,தந்தை போல அனைத்திற்கும் தம் அன்பால் அரவணைத்து ,சூழ்ந்து கவ்விகொள்கிறது.இவ்வெளியை விட்டு  யாரும் எங்கும் செல்ல இயலுவதில்லை.இங்கே உணர்ந்தால் அது அனைத்திலும் பிரதிபளிக்கிறதே.சர்வமும் சூழ்ந்துகொள்கிறது.நிம்மதி சூழ்கிறது.ஆழ்ந்த அமைதி விரிகிறது.அன்பின் நிலை வருகிறது அது தானாக.அன்பால் எதையும் பார்க்கும் தன்மை வருகிறது.நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.இறைவனின் பெருமை,இறைவனின் அன்பு ,இறைவனின் தன்மையான இந்த அன்பில் ,இறைவன் பிணைத்துவைத்துள்ள இந்த அன்பு பசை,அன்பின் அலைகள் ,அன்பின்  சக்தி இவை எங்கும் பிண்ணிபிணைந்துள்ளது.இவனை இவனுள் (அன்பினுள்) உணர்தல் என்பது ஒரு மாபெரும் சிறப்பாகிறது, ஒரு மாபெரும் பெருமை பெறுகிறது யாருமே தர இயலாத ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்துவிடுகிறது.இவனை இவன் தந்த இந்த நெஞ்சத்துள் உணராத ஒரு நாளும் வீணாக தோன்றுகிறது.உணர்ந்த ஒவ்வொரு நாளும்  வாழ்வில் அர்த்தமுள்ள நாளாக ,பொன்னான நாளாக மிளிர்கிறது.
தந்தை எமக்கு அன்பின் ஆழம்  உணர்த்திய காலம்.(அன்பின் ஆழம் உணர ,மீண்டும் ஒருமுறை இது அன்பின் ஆழம் கட்டுரை வாசிக்கவும்). தந்தை தந்த பாடங்களை எல்லாம் நன்கு உணர்ந்து அனுபவித்து ,பிறகு அதனை எப்படி வார்த்தையாக கட்டுரையாக கொண்டுவருவது என  எண்ணி,நடந்த நிகழ்வுகளோடு எம்மை யாமே உட்செலுத்தி சிந்தனையில் இருந்த காலம்.தந்தையின் ஆசிகள் இருந்தால் மட்டுமே இவைகளை வெளிக்கொண்டுவரமுடியும் இல்லையெனில் ,அப்படியே  மறைந்து விடும்.

ஆனால் தந்தையின் ஆசிகள் பெற ,அதற்குரிய தகுதிகள் (புண் ணியம்)வேண்டுமே.தூய்மையான எண்ணம் வேண்டுமே,மிக பரந்த சிந்தனை வேண்டுமே.யாவரையும் அன்பால் பார்க்கும் நிலை வரவேண்டும்.அன்றாட நிகழ்வுகளை முடிந்தவரை முயற்சி செய்து பிறகு அதனால் வரும் விளைவுகளை எல்லாம் இறைவன் தந்த பரிசு என எடுத்துக்கொள்ளும் நிலை வரவேண்டும்.சுருக்கமாக சொல்லவேண்டுமானால் அன்பாக இருக்கவேண்டும்.இவ்வாறு இருக்க இயலுமாயின் கண்டிப்பாக ஒரு மெல்லிய அலையை பிடித்துக்கொள்ளும் ஒரு தகுதி வந்துவிடும்.அப்படி ஒரு மெல்லிய அலையை பிடித்தால்,அது ஒரு நல்ல அதிர்வுகுறைந்த அலைநீளத்திற்கு அழைத்துச்செல்லும்.மேலும் அங்கேயே இருக்க பழக ஒரு அமைதி வந்துவிடும்.பிறகு பார்க்கும்,கேட்கும்,நடக்கும்,அனைத்தும்  மிக ஆனந்தமாகிவிடும்.இந்த மனம் ஒரு பூத்துக்குலுங்கும் நந்தவன மாகிவிடும்.ஏனெனில் தந்தை தரும் பாடமெல்லாம் மிக மிக நுண்ணிய அலைநீளத்தில்.
தந்தை எமக்கு வைத்த பரீட்சையில் இது வரை ஒன்றில் கூட எம்மால் வெற்றிபெற இயலவில்லை.யாம் ஓர் கிரகஸ்தன் என்று சப்பை காரணம் சொல்லலாம் .ஆனால் என்ன பயன் ?கலிபோர்னியா மகாணத்தில் யாம் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலம்.எல்லா வேலையும் நாமே செய்யவேண்டும்.அந்த எல்லா வேலையும்  கிட்டத்தட்ட machineஜ வைத்துக்கொண்டே செய்யவேண்டும்.இங்கொன்றும் அங்கொன்றுமாக மனிதர்களை பார்க்கலாம். machine சொல்லுறதை புரிந்துகொண்டு  அதற்கு ஏற்றார்போல் இருந்தால் தான்  அன்றைய நாள்  சுலபமாக ஓடும்.இப்படி இந்த நிகழ்வுகளோடு ,அன்றாட வேலைகளையும் பார்க்கவேண்டுமல்லமா ? எனவேஅன்றைய நாள் எமது துணிமணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வாஷிங் ரூம் சென்று யாவற்றையும் அங்குள்ள ஒரு Washing Machine ல் போட்டு  ,laundry card ஜ அங்கே swipe செய்து துவைத்துவிட்டேன். பிறகு   யாவற்றையும் எடுத்து அருகில் உள்ள Dryer machineல்  வைத்து ,மீண்டும்  laundary card ஜ அங்கே swipe செய்தால் ,அந்த கார்டில் பணம் இல்லை. எல்லாம் காலியாகிவிட்டது.cardஜ swipe செய்தால் மட்டுமே machine துணியை உலர்த்தும்.


பிறகு roomற்கு வந்துவிட்டேன்.நண்பர்கள் யாரும் இல்லை .என்னுடைய கார்டில் பணம்  ஏற்ற கொஞ்சதூரம் நடந்து சென்று ,பிறகு அங்குள்ள ஒரு cash machineல் ,cashஜ போட்டு ,எமது  laundary card ல் charge செய்யவேண்டும்.அவ்வளவு தூரம் நடந்து செல்லவேண்டுமா ?!  என்ற ஒரு சோம்பேறித்தனம்.இங்கே இருக்கும் நண்பரின் charge கார்டுஜ எடுத்தால் என்ன ?  என்று எண்ணம் வந்தது. ஆனால் அந்த எண்ணம் தவறு அடுத்தவர் charge கார்டை  அவர் அறியாமல் எடுப்பது தவறு என்ற ஒரு எண்ணம் ?நண்பர் வந்தவுடன் இதை கொஞ்சம் பயன்படுத்திவிட்டேன் என்று சொல்லிவிடலாம் அல்லவா ? இதில்எவ்வளவு swipe செய்தோமோ அதை திருப்பி கொடுத்துவிட்டால் தவறு ஒன்றுமில்லையே என்ற எண்ணம்  வேறு.சிறிது நேரம் கொஞ்சம் குழப்பம் வந்தது.

பிறகு சரி நேரடியாக சென்று நமது கார்டில் charge செய்து அதை பயன்படுத்துவதே சிறந்த முடிவு  என எண்ணத்தில் உறுதிகொண்டு ,கொஞ்ச தூரம் நடந்து சென்று ,எமது laundary cardஜ  chargeசெய்தேன்.பிறகு நேரடியாக laundary area சென்று அங்கே எமது துணிகள் உள்ள machine ல் swipe பன்ன பார்க்க, machine சுழன்றுகொண்டிருந்தது ,எமக்கு ஒரே ஆச்சரியம் எப்படி இது சாத்தியம் ? பிறகு ஒரு வேலை வேறு யாருடைய துணிகளாக இருக்குமா ? என உற்று பார்க்க  சிறிது கூட ஐயமின்றி எமது துணிகளே தான்.எப்படி இது நிகழ்ந்திருக்கும் என எண்ணிக்கொண்டிருக்கும் போதே ,சட்டென ஒரு அமெரிக்க பெண்மணியின் குரல்" Excuse me ... Sorry I swiped my card wrongly to this machine where your cloths  there .thought of swiping to my machine but  went wrongly .....Very sorry ..!!" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அவரது machineல் cardஜ swipe பன்னுவதற்கு பதில் எம்முடைய machineல் swipe செய்து விட்டார்,பதிலுக்கு எமது card ஜ கொடுத்தேன் ,வேண்டாம் என்று பெருந்தன்மையோடு சென்றுவிட்டார்.

இது ஒரு சாதாரண நிகழ்வு போல தோன்றினாலும் ,இவை என்னவோ எம் எண்ணத்தை சோதிக்க வந்த நிகழ்வு போல தான்  எமக்கு இருந்தது.சிறிது நேரத்திற்கு பிறகு ,அமர்ந்து தந்தை எம்முள் உணர்த்திய நிகழ்வுகளை எழுத ஆரம்பிக்க வார்த்தை அருவி போல கொட்டஆரம்பித்துவிட்டது.அதன் விளைவு தான் "இது அன்பின் ஆழம் " கட்டுரை.தந்தை தரும் பாடங்களை பிடிக்க வேண்டுமாயின் ,எள் அளவும் நுனி பிசகாமல்,தூய்மையாக இருத்தல் அவசியமாகிறது.எண்ணம் தெள்ளிய கண்ணாடி போன்று,தூய்மையான தெள்ளிய நீர் போன்று,பளிச்சென்ற தும்பைப்பூ போன்று தெளிவாக இருத்தல் என்பது மிக மிக அவசியமாகிறது. அதுவும் எள் அளவும் தீங்கோ ,பிழையோ இருந்தால் கூட,  தந்தையின் அருள்அலைகளை  நம்முள் உணர்ந்து கொள்ளும் தன்மை பாதிக்கப்படுகிறது.அந்த அளவு மிக நுண்ணிய அலை நீளத்தில் தந்தையின் அருள் அலைகள். தூய  அலைகள் ,என்றும் புனிதம் தரும் அலைகள் ,நறுமனம் வீசும் அலைகள் ,ஆனந்தம் தரும் அலைகள்.அந்த அலைகளை உணர நம்மை  நாமே தகுதியாக வைத்துக்கொள்ளுதல் என்பது மிக அவசியமாகிறது.

ஒரு முறை ஸ்ரீ ராமதேவர் சித்தர் அய்யா அவர்கள் ஜீவ சமாதி சென்று திரும்பி வந்தபொழுது , மலை ஏறி ,அய்யாவின் ஜீவ சமாதி இடத்தினை சுத்தம் செய்து ,வணங்கி ,கீழ்இறங்க தயாரானோம்.அப்பொழுது அன்பர்கள் யாவரும் அங்கே கொண்டுவந்த ,பூஜை சாமான்கள் ,தண்ணீர் கேன்கள்,ஒரு சில சுத்தபடுத்தும் சாமான்கள் இவைகளை  எல்லாம் முடிந்தவரை தத்தம் தோள்களில்  மூட்டையாக சுமந்து கொண்டு இறங்க தயாரானார்கள் .இவைகளை கொஞ்சம் யாமும் சுமந்துகொண்டுவந்திருக்கலாம் ஆனால் எம் எண்ணமோ சுயநலத்தோடு இருந்தது, இவைகளை சுமந்து சென்றால் மலை இறங்குவது கடினமாகி விடுமே,எனவே கொஞ்சம் escape ஆகி விடுவோம் என்று வந்துவிட்டோம்.மற்ற அன்பர்கள் எல்லாம் அவர்களால் முடிந்த வரை சுமந்துகொண்டு கீழே முன்னும் பின்னும் இறங்கிக்கொண்டிருந்தனர் ,அவர்களோடு யாமும் இறங்கினோம்.ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் ,எம்முடன் வந்தவர்களை காணவில்லை .யாமோ கொஞ்சம் கொஞ்சமாக  பாதை மாறி வேறு எங்கோ சென்றுகொண்டிருக்கிறோம் .ஒரு அளவிற்கு மேல் சென்ற பாதை முடிந்துவிட்டது.அதற்கு மேல் அங்கே பாதை இல்லை.புதரும் முள்ளும் ,செடிகொடியும் நிறைந்து காணப்பட்டது.திரும்பி பார்த்தால் யாரையுமே காணவில்லை.கொஞ்சம் பயம் வேறு இங்கே இந்த வனத்தில் மிருகங்கள் இருக்குமோ ?! தனியாக வேறு மாட்டிக்கொண்டோம் .உதவிக்கும் யாருமில்லை .என்ன செய்வது என தெரியவில்லை.இந்த பாதை மாற்றதிற்கு யார் காரணம் என எண்ணத் தொடங்கினோம் ? யார் எம்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இப்படி அடர்ந்த வனத்திற்குள் கொண்டுவந்தது ,யாம் என்ன பிழை செய்தோம் ? எமக்கு எந்த ஒரு காயமோ வலியோ இடரோ இதுவரை நிகழவில்லை .ஆனால் மனமோ பயத்திலும் குழப்பத்திலும் உள்ளது ? இது physical painஜ விட அதிகமாகஇருக்கிறதே.

நன்கு ஆழ்ந்து எண்ண ,எம் தவறினை உணர்ந்தோம்.எம் ஒரு சிறு தவறான எண்ணம் ,அந்த பூஜை சாமான்கள் அடங்கிய சிறு மூட்டையை  சுமக்க வேண்டாம் என நினைத்தது. இங்கே இப்போது இந்த பாதையைமாற்றி எம் மனநிலையையும் ஒரு வித வேதனையில் வைத்ததுவிட்டது .இவை அனைத்திற்கும் யாமே காரணம் என எம் தவறை உணர்ந்தோம். இவை எல்லாம் இவ்வாறு செய்ய ஒரு அதீத சக்தி அலைகள் அல்லவா செய்திருக்கவேண்டும்.?  அய்யா  ஸ்ரீ ராமதேவர்  அலைகள் அல்லவா  எம்மை இப்படி சிரமத்தில் ஆழ்த்தியது.மனதிற்கு இடர் தரினும்  இவை சித்தனின் அலைகள்  அல்லவா ! இழுத்து எம்மை அடித்தாலும் சித்தனின் அடி அல்லவா ! எம் கர்மவினைக்கேற்ப ஏதோ ஒரு வகையில் ஐயாவின் அலைகளை அல்லவா உணர்ந்திருக்கிறோம் ! அமர்ந்து ....ஆழ்ந்து.... உட்சென்றுவிட்டோம் .....

எம் உடம்பெல்லாம் புல்லரிக்க மெய் சிலிர்க்க ,எம்முள் யாமே மூழ்கி ,அய்யாவின் கருணை அலைகளை உணர்கிறோம்,கண்களில் கண்ணீர்  மழ்கி
 "அய்யா   ..!!  மாபெரும்  சித்தரே !!  ஸ்ரீ ராமதேவரே!!! எம்மை மன்னியுங்கள் ..எமது பிழையினை மன்னியுங்கள்  !! என  ஆத்மார்த்தமாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய ... மலை உச்சியில் இரட்டைக்கல் கோபுரத்தில் ,அய்யா ஸ்ரீ ராமதேவர் தத்ரூபமாக வெண்ணிற நிழல் அலைகளை போல ஒரு அலைகளால் ஆன உருவம் சிரிப்பது போல்  எம்முள் உணர்கிறோம் !!!!  உச்சிமலை முதல் அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வட்டமாக\ அய்யாவின் ஜீவ அலைகள் விரிந்துகொண்டேஇருக்கிறது .இம் மலையில் எங்கு எவை நட்பினும் அது  அய்யாவின் ஆட்சிப்புலத்தில் ,அலைகளை உணரும் தகுதி உள்ளவர்கள் என்றும் உணரலாம்..தூய அன்பின் அலைகள் ! வெண்ணிற ஒளி அலைகள் . வற்றாத ஜீவ அலைகள் ..வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும் அலைகள் !!

அப்பப்பா....என்ன ஒரு auto refresh ...!! நம்மை நாமே  கண்களை மூடி இது போல  அலைகளை  உட்செலுத்த ,பிறகு அது செய்யும் அற்புதங்களை உள் உணர, மனம் மிக மிக புனிதமடைகிறது .இலவம் பஞ்சுபோல லேசாகிறது...எண்ணங்களை தூய்மை செய்கிறது ,அப்பளுக்கற்ற தூய வெண்மை போன்ற மிக உயர்ந்த நிலை தருகிறது ..ஒரு கம்பீரம் தருகிறது..
நெஞ்சத்தின் மைய பகுதியில் உள்ள ஒரு சில நெல்முனை அளவினும் மிக சிறிய இடத்தில் அடிக்கடி அமர்ந்துகொண்டு நம்மை ஆட்டிபடைக்கும் ஒரு சில  குப்பையான எண்ணங்களை தூக்கி எறிகிறது.இந்நெஞ்சம் இது போல புனித அலைகள் மட்டுமே  நிரம்பி இருத்தல் அவசியமாகிறது .இல்லை எனில் எந்தெந்த அலைகள்இங்கு இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல நம்மை ஆட்டிப்படைக்கிறது.இதற்கு கர்மவினையும் கோள்கள் ஆட்சிபுலமும் மிக பெரும் பங்கு வகித்து ,கர்மவினையின் தாக்கத்திற்கேற்ப நம்மை  நாமே விரும்பி ஒரு சில அலைகளை இங்கே உள்நிரப்பி ,ஆட்டிப்படைக்க வைக்கிறது .

நெஞ்சமெனும் மையத்தில் அன்பின்அலைகள் இருந்தால் ...அவைசுற்றியுள்ள இடமெங்கும் ஒருசுகமே ..ஒருஆனந்தமே !! ஒரு பூத்துக்குலுங்கும் நந்தவனமே..!! அன்பால் யாவற்றையும் பிடித்து ஈர்க்கிறது..அன்பு தானே இறைவன் ...அன்பின் அலை தானே இறைவன் ..அன்பின் அலை கொண்டு மாட்டும் தானே இவனை ...இறைவனை உணர இயலும்.வேறு எந்த வித்தைகளுக்கும் இவன் இரங்கிவர மாட்டானே..!! அன்பு ஒரு தூய ஜீவ இறை அலைகளின் மறு முனை.இங்கே ஒரு முனை நாம்  ,மறு முனை அவனே .
ஒரு முனையிலிருந்து ,கொஞ்சம் கொஞ்சமாக  அன்பின் அலைக் கொண்டு உட்செல்ல , பரம் பொருள், பிரம்மம், வெட்டவெளி,சர்வ வல்லமைபெற்றவன்,சிவன்,ஆதி..அனாதி ...ஏதோ பெயர் சொல்ல இயலாத ஒரு மாபெரும்  யாவற்றையும் ஈர்த்துபிடித்து அன்பால் அரவணைக்கும் ஒரு மிக பெரும் பிரமாண்ட சக்தியை நோக்கி செல்கிறது.....சென்றுகொண்டேஇருக்கிறது.....!இப்படியே ஆழ்ந்து ஆழ்ந்து செல்ல செல்ல ... இதன் அருகில் சென்றவர்கள் ,தொட்டவர்கள் எல்லாம் தம் நிலை மறந்துசெய்வதறியாது அவர் தம்நிலைக்கேற்ப ஆங்காங்கே மூழ்கினர்..இவை உணர்ந்தாலோ அல்லது இது பற்றி சிந்தித்தாலோ அல்லது,படித்தாலோ ஒரு வித அமைதி நிலவும் என்பதும் உண்மை...இந்த  அமைதி அலைகளோடு\ அகத்திய உள்ளங்களை வேறு ஒரு நிகழ்வில் விரைவில் சந்திக்கிறோம் ...

ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !
ஒம் அகத்தீஸ்வராய நமக !

,

2 comments: