Sunday, January 11, 2015

தென்பொதிகை கைலாயம் -அகஸ்தியர் கோவில் ஜெயந்தி விழா -2015 !

ஸ்ரீ அகத்தியமகான் பிறந்த நாள் விழா 8.1.2015 மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை அகத்தியர் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரத்தெட்டு அஷ்ட அதிக ஆழி வெண்  வலம்புரி சங்கினால் அய்யாவிற்கு  பன்னீர் அபிஷேகமும்,பல்வேறு மூலிகைகள் கொண்டு சித்தர் முறைப்படி மகாயாகமும் நடைபெற்றது .அதன் ஒரு சில தொகுப்புகளை இங்கே  கொடுத்துள்ளோம்.விழாவை ஏற்பாடு செய்த கமிட்டி அன்பர்களுக்கும், எவ்விதத்திலேனும் உதவிசெய்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த அகத்தியம் வலைத்தளம் மூலமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எப்பொழுதெல்லாம்  எந்த ஒரு  தெய்வத்தின் ஜெயந்தி விழா வருகிறதோ அல்லது எந்த ஒரு  மகானின் பிறந்தநாள்  விழா  வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அங்குள்ள ஜீவசமாதியிலோ அல்லது  அங்கே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள  விக்கிரகத்திலோ  அதீத தெய்வீக  சக்தி அலை மற்றும்  கருணை  அலைகளின் ஆதிக்கம் மிக அதிகம் இருக்கும் .ஏனெனில் தெய்வமும் ,மகான்களும் தாம் தம் நிலையிலிருந்து சற்று  கீழிறங்கி மக்களுக்காக  தாம் தம் கருணை அலைகளை வாரிவழங்கும் ஒரு உன்னத நாள்.பல முறை இது போல நாட்களில் இந்த அதீத கருணை அலைகளை உணர்ந்திருக்கிறோம்.அது போல தந்தையின் அன்பு  அலைகள் ,இங்கே அதிகம் நிறைந்திருந்தது.அதிகாலை  வேலை, மிதமான குளிர் ,தூய வெண்மையுடைய ஆயிரத்தெட்டு  ஆழி வெண்  வலம்புரி சங்கினுள்  பன்னீர், அய்யாவின் திருமேனி யில் அபிஷேகம் செய்ய காத்துக்கிடக்கிறது.கூடவே பல்வேறு மூலிகைகள் .பார்க்கவே மிக அழகாக இருந்தது. சந்தனகாப்பு அலங்காரந்தில் ஸ்ரீ அகத்திய மாமுனிவரும் ஸ்ரீ போகரும் மிக அழகாக காட்சிதருகிறார்கள்.உட்சென்று எம் கர்வம் அகன்று அன்போடு மனம் உருகி அய்யாவை வணங்க ,ஆத்மதிருப்தி.கற்சிலை மிக அழகாக உள்ளது.வெறும் கண்களுக்கு ஒரு கற்சிலை.ஆனால் எம் சூட்சும தேகம் உணர்ந்ததோ   உயிரோடு இருவர் அமர்ந்திருப்பதுபோல்.

சென்றவருடம் பார்த்த அதே மலை இன்னமும் கொஞ்சம் கூட அதிர்வலைகளுக்கு குறைவின்றி அப்படியே உள்ளது.நேற்று பார்த்தது போல் அப்படியே  உள்ளது .ஜீவ அலைகள் (energetic waves ) மலைஎங்கும் ததும்பி வழிகிறது.ஆச்சரியம் என்னவெனில் எந்த ஒரு முட்செடியோ அல்லது இன்னல் தரும் செடிகொடியோ  விலங்கோ இன்றி ,எங்கும் அமர்ந்து தவம் செய்யலாம் என்பதிர்கேற்ப  மிக அருமையாக  மலை இயற்கையாகவே அமைந்துள்ளது .எந்த ஒரு அச்சமோ பயமோ தேவையில்லை .ஏனெனில் எல்லாம் அய்யாவின் ஆட்சிப்புலத்தில். ஆழ்ந்து மனதினை உள்நோக்க  சிவலிங்க வடிவில் உள்ள  மலை  எங்கோ இழுக்கிறது.மலையைசுற்றி நான்கு புறமும் நீண்டு செல்லும் குகை ,மலையின் உச்சியில் ஒரு வயதுமுதிர்ந்த கருநெல்லி மரம்,அருகே சிவலிங்கம். மிக ரம்மியமாக ஏகாந்தத்தில் சிவன் காட்சியளிக்கிறார்.மலை உச்சிஎங்கும்   இதமான குளிர்,பசுமையும் குளுமையும் நிறைந்து உடலுக்கு,மனதிற்கு ஒரு தெம்பினை அளிக்கிறது.


அகத்திய மாமுனிவர் இங்குவந்து சிவனை பூஜித்ததால் இந்த இடம் அகஸ்தியர்புரம்  என பெயரிட்டுள்ளார்கள்.மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த மலை முழுவதும் வெள்ளியால் சூழப்பட்டிருந்ததாதகவும்,கலியுகத்தில் இது இவ்வாறு இருந்தால் மக்களால் சூறையாடப்படும் என்பதற்காக அய்யா தம் தவவலிமையால் இதனை கல்லாக உருமாறி சபித்ததாகவும் வரலாறு கூறுகிறது என்கிறார்கள்.


கண்களை மூடி இந்த மலையை சிறிது நேரம் ஆழ்ந்து எண்ண, ஐயாவின் திருமுகம் பளிச்சென தெரிகிறது,இமயமலையில் உள்ள பணி உருகும் மலைபோல தோன்றுகிறது.ஆங்காங்கே வெள்ளி கீற்று போல வெண்பனி உருகி மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி செல்கிறது.இவை ஒருபுறம் இருந்தாலும் வெறும் ஸ்தூல கண்ணால் பார்க்கவே மிக அழகாக இருக்கிறது.
சென்றமுறை ஒரு மரத்தினை பார்த்தபோது  மரம் ரொம்ப அழகாக  இருந்தது.நன்கு  ஈர்த்தது .ஏதோ ஒன்று இதனுள்  அனைத்தையும் ஈர்க்கும் சக்தி இருக்கிறது .எம்மையும் சேர்த்து நண்பரும் அதற்கான விடைகூற இயலவில்லை.ஆனால் அதற்கான விடை இந்த வருடம் கிடைத்தது.
மிக உயர்ந்த நீண்டுவிரிந்த கிளைகளுடன் ,அகன்று நிழல் பரப்பி பார்க்கவே மிக ஆனந்தமாக உள்ளது.அன்னாந்து பார்த்தாலும் மிக தூரத்தில் இதன் இலைகள் கிளைகள் அடர்ந்து படர்ந்துள்ளது. இந்த புனித மரத்தின் பெயர் திரிசூல ருத்திராட்சம் .மிக அரிதாக காணப்படும் ருத்திராட்ச மரங்களில் இதுவும் ஒன்று.பூ பூத்து காய் காய்த்து பழம் பழுத்து பிறகு அதில் உள்ள விதைகள் மிக புனிதமாக போற்றப்படும் ருத்திராட்ச விதைகளாக மாறுகிறது .பொதுவாக நேபாளம் மற்றும்   இமயமலைகளில் இந்த மரங்கள் மிக அதிகமாக இருக்கிறதாம்.இந்த மரம் இருக்கும் இடமெல்லாம் புனிதமாக இருக்கிறது .எல்லாம் இறைவனின் கருணை ,ஸ்ரீ அகத்திய மகாமுனிவரின் கருணை.அன்போடு தந்தையை வணங்கி ,அருகில் உள்ள அம்பாளையும் வணங்கி எமக்கு கொஞ்சம் ருத்திராட்சம் வேண்டும் என்றோம் .மரத்தின் அருகே சென்றுகாண  கைநிறைய ருத்திராட்சம் கிடைத்தது .

சிவனின்  ஆனந்த தாண்டவத்தின்போது தமது நெற்றிகண்ணிலிருந்து வெளிகிளம்பிய  அதீத ஒளி பொறியிலிருந்து உருவானது இந்த ருத்திராட்சம் என்கிறார்கள்.இந்த ருத்திராட்ச விதைகளுக்கென ஒரு சில ஆச்சார அனுஷ்டானம் உள்ளது.எனவே இது இருக்கும் இடம் மிக தூய்மையாக இருக்கவேண்டும்.கிரகஸ்தர்கள் ஒழுக்கமுடன் தீட்டு அண்டாது முடிந்தவரை தூய்மையுடன் இருக்க வேண்டும். ருத்திராட்ச  விதைகளில் உள்ள கோடுகளை வைத்து ,ஒரு முகம், இருமுகம் முதல் பன்முகம்  ருத்திராட்சம் வரை இதன் பலன் சொல்கிறார்கள்.ஆனால் பொதுவாக இவைகள்  எந்த இடத்தில் இருக்கிறதோ அங்கே அண்டவெளியில் உள்ள cosmic energy யை இழுத்து தம் அருகில் எப்பொழுதும் ஒரு நல்ல அலைஇயக்கத்தை உருவாக்கி உடலிலே ,மனதிலே ஒரு நல்ல அதிர்வுஅலைகளை உணரவைத்து , குறிப்பாக எந்த ஒரு தீய சக்தியையும் (negative Force) அருகிலே அண்டவிடாமல் தடுத்து ,இடைவிடாமல் ஒரு அன்னபாத்திரம் போல எப்பொழுதும்  இறைசக்தியை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் ஒரு அற்புத நிகழ்வு தரும் விதைகள் இவைகள்.இதன் மகிமை தெரியாமல் சும்மா வைத்திருந்தால் ஒரு சாதரண ஜடப்பொருளாகவே தெரியும்.ஆக இதன் மகிமை உணர்ந்து இதன் இயல்பு அறிந்து ,இதன் மகத்துவத்தை ,இது தரும் வேதியல் மாற்றங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.மரத்தின் அருகே ஒரு பெரிய பாம்பு புற்று உள்ளது .ஆங்காங்கே பாம்பு சட்டை உள்ளது.ஆக நோக்கம் மிக புனிதமாக இருக்கவேண்டும் .மேலும் தந்தையின் அருளும் வேண்டும்.பிறகு இங்குள்ள ருத்திராட்சம் அது தானாகவே  யார் யார் வேண்டுகிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் .நிறைய அன்பர்கள் வெறும் கையோடு சென்றார்கள் .அன்போடு வந்தவர்கள் ,அவர்கள் கண்களுக்கு இதன் விதைகள் அழகாக தெரிகிறது. எமக்கு கிடைத்த யாவையினையும் எடுத்து எமது பூஜை அறையில் வைத்து நாள்தோறும் சொல்லும் பைரவ மந்திர அதிர்வுஅலைகளை இதுனுள் நன்கு சேமிக்கப்போகிறோம்.பிறகு இதனை தகுதியான தேடுதல் உள்ள அகத்திய உள்ளங்களுக்கு கொடுக்கப்போகிறோம்


ஒம் அகத்தீஸ்வராய நமக..!!!

No comments:

Post a Comment