Posts

உடலே போற்றி !! உள்ளமே போற்றி !!!

Image
உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.                                                                                         -மாணிக்கவாசகர்   உள்ளப்படாத  திருவுருவை    உள்ளுதலும் .மனதால்  நினைக்க இயலாத  திருவருள்   இறைவன் .இறைவன்  ஒருவன்  இப்படி தான்  இருக்கின்றான் என்றால்  மனதால் நினைத்துவிடாலாம் .ஆனால் உள்ளத்திற்கு தெரியாதே  இறைவன்  எப்படி  இருப்பான்  என்று  ? எப்படி  நினைப்பது  இறைவனை ? . அடுத்த வரியில்  மாணிக்க வாசகப்பெருமான்  விடை  தருகின்றார்கள் . கள்ளப் படாத களிவந்த வான்கருணை ,  இறைவன்  எனும்  பெரும்கருணை  கொண்டோன் அவனை  யாராலும் மறைக்க இயலாது எதைக்கொண்டும்  அவனை  தடுக்கமுடியாது.   அன்பாய்  கருணையாய்  கசிந்துவிடுவான் .அவன்  வருகிறான்  என்றாலே  அடுத்த  நொடியே ,உள்ளம்  பூரிக்கும்,  உணர்வுகள்  பொங்கியோங்கும் .மகிழ்ச்சி  தாண்டவமாடும் .அருள் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடும் .இறைவன்  எம்பெருமானை   நினைத்தாலே  போதும்  ,கண்களுக்கு  புலப்படாத  நுண்ணிய   கருணை  அலைகள்   தாண்டவமாடும் .க

கருணை மிளிரட்டும் !!!

Image
  பிரம்மிக்கவைக்கும்  இறைவனின்  பிரபஞ்சம் .ஒவ்வொரு  படைப்பும்  அற்புதம் அதிஅற்புதம் .இந்த ஸ்ருஷ்டியில்  எதுவும்  தேவையில்லாமல்  படைக்கப்படவில்லை.இறையே  நாம். நம் போன்ற  உள்ளங்கள்.ஒவ்வொரு உயிரையும்  மதிக்க வேண்டியது  நம்  தலைசிறந்த  பண்பாகிறது .இறையின்  ஒவ்வொரு  அசைவும்  அதன் நுணுக்கமும்  ஆழ்ந்து  சிந்திக்க  சிந்திக்க  மனதை  எங்கோ  கொண்டு செல்கிறது .ஒவ்வொரு  உயிரும்  ஒவ்வொரு  பொருளும்  அசைவு  எனும்  ரகசிய  நுணுக்கம்  கொண்டு  ஒன்றோடு  ஒன்று  பேசிக்கொள்கிறது .இயற்கையில் நிகழும்  இந்த  நுணுக்கத்தை  அறிந்து கொள்பவன் மாபெரும்  மனிதனாகிறான்  மகான் என்று அழைக்கப்படுகிறான்.மரம்  பேசுகிறது செடிகள்  பேசுகிறது கொடிகள்பேசுகிறது  எவ்வாறு  ? அசைவு எனும்  நுட்பம்  அதில் ஒளிந்திருக்கின்றது .இந்த  அசைவினை  ஆழ்ந்து  கவனிக்க  அதன்  நுணுக்கம்  மேலும்  மேலும்  புலப்படுகின்றது .பறவைகள் ,நாய்  போன்றவை   எங்கோ நிகழும்  இயற்கையின்  அழிவினை,இயற்கை  சீற்றங்களை , பிரளயங்களை  முன்கூட்டியே  அறிந்து கொண்டு  ஓரிடம்  விட்டு  வேறிடம்  செல்கிறது  எவ்வாறு   ? அசைவின்  அதிர்வலைகள்  கொண்டு.இந்த  பிரபஞ்சத்தின் முதல்  அணு  அத

தந்தை அகத்தியர் திருவடிகள் சரணம் !!!

Image
தனுர் மாதம் மார்கழி மாதம்  அதிகாலை பிரம்மமுகூர்த்தம் அதி உன்னதமானது .ஓசோன் படலம் பூமிக்கு இக அருகில் வரும் மாதம் என்கிறார்கள். அதி காலை எழுவது அதி உன்னதம்.உடலில் பிராண சக்தியை  அதிகரிக்கும் முயற்சியினை  தொடர்ந்து செய்யவேண்டியது அவசியமாகிறது. நாடி சுத்தி ,பிரணாயமம் செய்து  கொஞ்சம் கொஞ்சமாக பிராண சக்தியினை அதிகபடுத்த வேண்டும்.இந்த மாதத்தில் பிராண சக்தியினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல் அது  வரும் ஒரு வருடகாலத்திற்கு இந்த உடலை பாதுகாத்து, பல நோய்களிலிருந்து விடுவித்து ,உடலினை ஆரோக்யத்தோடு வைக்க உதவும் ஒரு அற்புத மாதம் இது.  அடிக்கும் குளிருக்கு ஏதாவது ஸ்வட்டர் போட்டுக்கொண்டாவது நம்மை நாமே பாதுகாத்து கொண்டு ,எளிய யோகாசனம் ,பிரணாயமம் செய்வது மிக அவசியமாகிறது.இயற்கையே மிக அதிக அளவில் இறை சக்தியை கொடுக்கும் அதி அற்புத மாதம் .ஏதேனும் ஒரு வழியில் இறை தேடுதல் மிகநன்மை பயக்கும்.இறையை உணர அதி அற்புத மாதம்.இறை மானுடர்களுக்கு உதவும் அதி அற்புத மாதம்.அந்த அளவிற்கு மிக உன்னதமான மாதம் இது. தந்தையின்  அருள் ஆசிகள் பெறுவது எவ்வாறு ..? யாம் உணர்ந்த அனுபவம் இங்கே . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம் இருக்கலாம்

ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..!! (பாகம் இரண்டு )

Image
. காலம்  சுழல்கிறது .ஒன்று  மற்றொன்றாய்  மாறுகிறது .மாற்றமே  புத்துயிர்  தருகிறது .ஒன்றுமில்லா  ஒன்றிலிருந்து  ஐம் பெரும்  பூதங்கள்  பிறக்கிறது.மழை  பெய்கிறது .சூழல்  மாறுகிறது  .உயிர்  பிறக்கிறது. புல்லாகிறது  பூடாகிறது  புழுவாகிறது   மரமாகிறது  பல் மிருகமாகிறது  பறவையாகிறது   பாம்பாகிறது  கல்லாகிறது மனிதராகிறது  பேயாகிறது  கணங்களாய் வல் அசுரர் ஆகிறது , முனிவராகிறது  தேவராகிறது  இப்படி  ஒவ்வொன்றாய்  எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்றுவீடு உற்றேன் என்கிறார்  மாணிக்கவாசப்பெருமான் .கால சுழற்சிக்கேற்ப  இறை தம்  உணர்வுகள்  அடங்கிய  கருத்துக்கள்  பாடல்களாய்   வரிகளாய்  ,மெல்லிய  இசையாய்  ,சொல்வதறியா  உணர்வுகளாய்   வந்துகொண்டேயிருக்கின்றது .எவர்  வந்தாலும்  சென்றாலும்  மறைந்தாலும்  இருந்தாலும்  இதுவே எமது  இயல்பு  எம் பாச அரவணைப்பு  எம்முள்  இருந்த  வற்றா ஊற்று யாம் கொடுத்துக்கொண்டேயிருப்போம்  என  காலம்  காலமாய்      இறை  அறிமுகப்படுத்திய  மகான்கள்,  ஞானிகள்,  மகரிஷிகள்  ஆயிரம்  ஆயிரம்  .அவ்வப்போது  எம்மையும்  எம்மைப்போன்ற  உள்ளங்களையும் ஒரு   ச