ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள புஷ்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்திஎன்றுன் நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே நானுச்ச ரிக்கவசமோ ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ அகிலாண்ட கோடிஈன்ற அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும் ஆனந்த ரூபமயிலே வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ் வளமருவு தேவைஅரசே வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை வளர்காத லிப்பெண்உமையே. தாயுமானவ ஸ்வாமிகள் ராமேஸ்வரம் அம்பாள் பற்றி எழுதிய மிக அற்புதமான பாடல் .அனைவரும் படித்து பொருள் உணர்ந்து பயன்பெறவேண்டிய தெய்வீக பாடல் . எங்கெங்கும் நிறைந்திருப்பவளே !! சிருஷ்டிக்கு முன்னே தோன்றிய மிக பழமையானவளே !! சர்வ மங்களம் நிறைந்தவளே !! அனைத்தையும் ஆளும் சர்வேஸ்வரியே !! முப்புரம் எரித்தவளே 1! மூன்று திருவிழிகளையுடையவளே !!மிக அற்புதமான குணங்களை கொண்ட சக்தியே !! மனாதீத , குணாதீத , நாதாந்த சத்தியே !! இப்படி இடைவிடாது ஓதும் உன் அடியார்களின் திருநாமங்களை நான் உனது அருளால் ஓதும்