உடலே போற்றி !! உள்ளமே போற்றி !!!
உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. -மாணிக்கவாசகர் உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும் .மனதால் நினைக்க இயலாத திருவருள் இறைவன் .இறைவன் ஒருவன் இப்படி தான் இருக்கின்றான் என்றால் மனதால் நினைத்துவிடாலாம் .ஆனால் உள்ளத்திற்கு தெரியாதே இறைவன் எப்படி இருப்பான் என்று ? எப்படி நினைப்பது இறைவனை ? . அடுத்த வரியில் மாணிக்க வாசகப்பெருமான் விடை தருகின்றார்கள் . கள்ளப் படாத களிவந்த வான்கருணை , இறைவன் எனும் பெரும்கருணை கொண்டோன் அவனை யாராலும் மறைக்க இயலாது எதைக்கொண்டும் அவனை தடுக்கமுடியாது. அன்பாய் கருணையாய் கசிந்துவிடுவான் .அவன் வருகிறான் என்றாலே அடுத்த நொடியே ,உள்ளம் பூரிக்கும், உணர்வுகள் பொங்கியோங்கும் .மகிழ்ச்சி தாண்டவமாடும் .அருள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் .இறைவன் எம்பெருமானை நினைத்தாலே போதும் ,கண்களுக்கு புலப்படாத நுண்ணிய கருணை அலைகள் தாண்டவமாடும் .க