கருணை மிளிரட்டும் !!!
பிரம்மிக்கவைக்கும் இறைவனின் பிரபஞ்சம் .ஒவ்வொரு படைப்பும் அற்புதம் அதிஅற்புதம் .இந்த ஸ்ருஷ்டியில் எதுவும் தேவையில்லாமல் படைக்கப்படவில்லை.இறையே நாம். நம் போன்ற உள்ளங்கள்.ஒவ்வொரு உயிரையும் மதிக்க வேண்டியது நம் தலைசிறந்த பண்பாகிறது .இறையின் ஒவ்வொரு அசைவும் அதன் நுணுக்கமும் ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க மனதை எங்கோ கொண்டு செல்கிறது .ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பொருளும் அசைவு எனும் ரகசிய நுணுக்கம் கொண்டு ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கிறது .இயற்கையில் நிகழும் இந்த நுணுக்கத்தை அறிந்து கொள்பவன் மாபெரும் மனிதனாகிறான் மகான் என்று அழைக்கப்படுகிறான்.மரம் பேசுகிறது செடிகள் பேசுகிறது கொடிகள்பேசுகிறது எவ்வாறு ? அசைவு எனும் நுட்பம் அதில் ஒளிந்திருக்கின்றது .இந்த அசைவினை ஆழ்ந்து கவனிக்க அதன் நுணுக்கம் மேலும் மேலும் புலப்படுகின்றது .பறவைகள் ,நாய் போன்றவை எங்கோ நிகழும் இயற்கையின் அழிவினை,இயற்கை சீற்றங்களை , பிரளயங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஓரிடம் விட்டு வேறிடம் செல்கிறது எவ்வாறு ? அசைவின் அதிர்வலைகள் கொண்டு.இந்த பிரபஞ்சத்தின் முதல் அணு அத