Posts

Showing posts from November, 2021

ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..!! (பாகம் இரண்டு )

Image
. காலம்  சுழல்கிறது .ஒன்று  மற்றொன்றாய்  மாறுகிறது .மாற்றமே  புத்துயிர்  தருகிறது .ஒன்றுமில்லா  ஒன்றிலிருந்து  ஐம் பெரும்  பூதங்கள்  பிறக்கிறது.மழை  பெய்கிறது .சூழல்  மாறுகிறது  .உயிர்  பிறக்கிறது. புல்லாகிறது  பூடாகிறது  புழுவாகிறது   மரமாகிறது  பல் மிருகமாகிறது  பறவையாகிறது   பாம்பாகிறது  கல்லாகிறது மனிதராகிறது  பேயாகிறது  கணங்களாய் வல் அசுரர் ஆகிறது , முனிவராகிறது  தேவராகிறது  இப்படி  ஒவ்வொன்றாய்  எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்,எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்றுவீடு உற்றேன் என்கிறார்  மாணிக்கவாசப்பெருமான் .கால சுழற்சிக்கேற்ப  இறை தம்  உணர்வுகள்  அடங்கிய  கருத்துக்கள்  பாடல்களாய்   வரிகளாய்  ,மெல்லிய  இசையாய்  ,சொல்வதறியா  உணர்வுகளாய்   வந்துகொண்டேயிருக்கின்றது .எவர்  வந்தாலும்  சென்றாலும்  மறைந்தாலும்  இருந்தாலும்  இதுவே எமது  இயல்...