Posts

Showing posts from October, 2021

உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்....!!!

Image
உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் கள்ளப் படாத களிவந்த வான்கருணை வெள்ளப் பிரான்எம் பிரான்என்னை வேறேஆட் கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.  இறை அமிர்தம் பொங்குகிறது மாணிக்க வாசக பெருமானாரின் திருவாசகத்தில் .ஒரு வரியில் மறைபொருளாக மறைந்து அமிர்தத்துளி போல தெறித்து ஓடி அருள் மழை  பெய்யவைத்து  பேரானந்தம் கொள்ளவைக்கிறது.ஏதேனும் மனம் விரும்பும் ஒருவழியில் பாடலாகவோ  உணர்ந்து படித்தல், ஆழ்ந்து சிறிதே அதில் தம்மை  ஈடுபடுத்தி கலந்தால் பெருஒளியின் கருணை ததும்பும் பேரானந்தத்தை  உணரலாம் .மனதால்  எதை வேண்டுமானாலும்  நினைக்க  இயலும்.  ஆனால்   எதற்குமே  புலப்படாத ஒன்று ,உருவமா  அருவமா  சின்னஞ்சிறிய தோற்றமா இல்லை  மாபெரும் வடிவமா என்று  எதுவுமே  தெரியாதே எம் பெருமானை பற்றி  .. துளி அளவும் தெரியாதே  .உள்ளத்திலே நினைக்க இயலாத திருவுருவமாகிய எம்பெருமானை எப்படி  நினைக்க இயலும் ? உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும் ---மனத்தால் நினைக்க இயலாத ஒரு மாபெரும் பேராற்றலை எப்படி நினைக்க முடியும் ,உருகி உர...