ஓம் சுந்தர மஹாலிங்காயா போற்றி !!
சதுரகிரி ஒரு அற்புத மலை.சித்தர்களின் சாம்ராஜ்யம் .சதுரகிரி என்றாலே பசுமையும் ,துள்ளலும் துடிப்பும் நிறைந்த சிற்றோடைகளும் ,ஆங்காங்கே சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளும், வானுயர்ந்து பசுமை போர்த்திய மரங்களும் மலைகளும் ,இயற்கை அன்னையின் தூய 100% தூய காற்றும் ,கண்ணாடி போன்ற தண்ணீரும்,வியக்க வைக்கும் மூலிகைகளும் அதன் தாத்பர்யங்களும்,அடர்ந்து விரிந்த பல்வேறு மலைகளும் காடுகளும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாரம்பரிய வரலாற்று நிகழ்வுகளும் என தொடர்கிறது..இந்த மலையை பற்றி நினைக்க நினைக்க மனதை ஈர்த்து இனம் புரியா அலைகளை அள்ளி வீசுகிறது மனதுள்.குளுமையும் குளிர்ச்சியும் வாரி அள்ளி வீசுகிறது.எம் முதல் முதல் பயணம் இந்த மலையோடு எம் மனதோடு ஒட்டி உறவாடிய நிகழ்வுகள், எண்ணங்கள், தருணங்கள்,ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் எண்ணிட ,எண்ணிட , எம் மனதுள் ஒரு புத்தம் புது நறுமண மலர் பூத்துக்குலுங்கி நறுமணம் வீசுவது போல என்றும் ஒரு அற்புத சுகம் தருகிறது. பத்து வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகள் ஒரு சித்தர் அய்யாவை பார்த்த நிகழ்வுகள் ,அவராலே இட்ட பிச்சை தான் இந்த எழுதும் தகுதிகள் .எம்மை அழைத்து அருள்வாக்கு சொல்லி , அகத