குருவடி சரணம் !!!
நீல வெளியோனே !! நீக்க மற நிறைந்தோனே !! நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நாட்டியமாடும் நான்மறை நாயகனே !! ஆடி அசைந்து அடர்ந்து படர்ந்து திரிந்து விரிந்து நீ உருவாக்கும் கோடான கோடி பிரபஞ்ச இரகசியம் தான் யார் அறிவார் மாயோனே !! தூயோனே மறையோனே !! இந்த விந்தையை யார் அறிவார் !! ஈசனே !!சர்வேஸ்வரனே !! எப்படியெல்லாம் கூப்பிட இயலுமோ அப்படியெல்லாம் அழைத்துவிட்டேன் எம் பெருமானே நாயகனே !!.சொல்ல இயலா உணர இயலா நிலையில் இருக்கும் பேராற்றலே !! நின் ஆற்றல் கொண்டு விம்மி பெருமையுடன் நின்னை போற்றுகின்றேன் ,இப்பிரபஞ்சத்தில் நீ செய்யும் ஒவ்வொன்றும் அதிசயம் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதம். ஒவ்வொரு நொடியும் அதி அற்புதமே !! என்றும் என்றென்றும் நின் ஆற்றல் கண்டு ஆனந்த கண்ணீர் மல்கிறேன் !! வருவாய் !! வந்தமர்வாய் எம்முள்ளே பெருமானே !! பறந்து விரிந்த பால்வெளி ,கருமையும் நீல வெளிச்சமும் கலந்து ஆங்காங்கே அள்ளித்தெளித்த ஒளிக்கற்றைகள் , கேட்பாரற்று சோ வென கிடக்கும் அண்ட பேரண்ட கோள்கள் நட்சத்திரங்கள் துகள்கள் எத்தனை சூரியன் எத்தனை உயிர்வாழ தகுதியுள்ள கோள்கள்