ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே !!
.இறையை தேடி உள்ளத்தில் உறைந்துகிடக்கும் சிறு வெளியில் மிதக்கின்றேன் . எம் பெருமானே ...வா!!..எம்முள்ளே வா ..!! எம் நாயகா வா !!.. எம் பெரும் நாயகா வா !! ..நான் மறையே வா ..!! எம்முள் உயிர் மூச்சாய் எழும் நாதமே வா !! எங்கிருந்து அழைத்தாலும் க்ஷணப்பொழுதில் துள்ளிவரும் தெள்ளமுதமே வா !! திருமகனே... வா !! அலையாய் பேரலையாய் உள்ளத்தை கவ்விக்கொள்ளப்போகும் அரூப ரூபமே வா !! நீ எவ்வாறு இருப்பாய் யாம் அறியோம் ..நீ எந்த வடிவம் யாம் அறியோம் ..நீ எப்படி இருப்பாய் என யாம் அறியோம் .. ஆனால் எம் உள்ளம் நின்னை மட்டுமே வாரிக்கொள்ள காத்துக்கிடக்கின்றது .ஆனந்தமாய் கோடி கோடி பிரகாசமாய் ஜோதி ஜோதி பிரகாசமாய் அலையாக பேரலையாக ...அப்படியே எம்முள் எம் நெஞ்சத்துள் வந்தமர்வாய் எம்பிரானே ..நீ இருக்கும் பொழுதெல்லாம் யாம் எமை மறவோம் ..உடல் மறவோம் உயிர் மறவோம் உணவு மறவோம் .நீ தரும் சப்தமெல்லாம் எமக்கு தேனினும் தெவிட்டாத அமுத ஸ்வரமே .காரணமும் நீயே ..அதன் மூல காரணமும் நீயே .நீ ஆதியா அந்தமா.. மூலமா... காரணமா ? தெரியாது பெருமானே !! ..நின்னை எம்முள் எம் உள்ளத்து