ஷக்தி ஸ்வரூபிணி ..!!!
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே - அபிராமி அந்தாதி அழகெல்லாம் ஒருசேர பூத்தவளே !! ஆயிரம் கோடி சூரிய ஜோதி பிரகாசம் உடையவளே !! பிறவாமுக்தியளிக்கும் பிரபஞ்சநாயகனை பின்னிய கொடிபோல சூழ்ந்தவளே ..!! ஸர்வமங்களம் நிறைந்தவளே ..!! ஸாந்தஸ்வரூபியே ..!! அன்றுபூத்த மலர்போல என்றென்றும் உற்சாகம் கொண்டவளே ..!! ஒளிபிழம்பாம் ஓராயிரம் கோடி கோடி சூரியனின்தகதகவெனும் ஆற்றல் பெற்று என்றென்றும் சிவத்திலிருந்து ஒளிர்பவளே ..!! சிவத்தின் சாராம்சமே ..!! சிவத்தின் இயக்ககலமே ..!! சிந்தையெல்லாம் சிவத்திடம் வைத்தவளே..!!அனுக்ஷணமும் அன்பால் அகிலத்தை காத்தருள்பவளே..!! கருணா ஸாகரமே ..!! பாசமும் அங்குசமும் கைகளில் ஏந்தியவளே !! அபயம் வரம் அருள்பவளே !! கலைகளெல்லாம் கரம்கூப்பும் காருண்யம் நிறைந்தவளே !! வித்யாலஷ்மியே !! அன்னபூரணியே !! மகாலஷ்மியே !! நின் விழி அசைவால் விதியையே மாற்றியமைத்து , ஸர்வபா