யாமெனும் இறை II !!
ஆழ்ந்து ஆழ்ந்து எம்முள்ளே எம் உள்ளத்துள்ளே நீண்ட நெடிய பயணம் ஒன்றை மேற்கொண்டு பயணிக்கின்றோம் ,பிரம்மமாய் ஆதியாய் ஜோதியாய் இருக்கும் நின் அற்புத தரிசனம் காண வியல்கின்றோம் இறைவா .நிமிடங்களும்,நாட்களும் ,வருடங்களும் கடந்து ஓடுகிறது .இப்பிறவியே சென்றாலும் மீண்டும் மீண்டும் தொடருவேன் எம் பயணத்தினை ..நினை காண நின் தரிசனம் பெற நின் திருவடி ஒன்றே கதி எமக்கு .நின் சிறு பிம்பம் யாம் இதை உன்னில் கலக்க யாம் இருப்பதை பரிபூரணமாக உணருகின்றோம் எம்பெருமானே !! தூய ஒளியே !! மாபெரும் சர்வ வல்லமை கொண்டோனே !! அணு முதல் பேரண்டம் வரை ஊடுருவி இமைப்பொழுதில் எல்லாம் ஒன்றாய் அறியும் திறன் கொண்ட திவ்ய பிரம்மஸ்வரூபமே .!!! நின் கருணை இல்லா உயிர...