இறைபிம்பம் மனம்
தூயோனே !! துவண்டமனதுள் துளிர் விடும் மாயோனே !! மாசற்ற மறையோனே !! எம் பெருமானே!! வேயோனே!! வெட்ட வெளி பெரியோனே!! சேயோனே!! சிரம்தாழ்கிறேன் நின்திருவடியில். ஒரே பிரம்மம் ,ஒரே வெளி, ஒரே ஒளிவெள்ளம், ஒரே பேரமைதி, எல்லாம் ஒன்றே.ஆயிரம்கோடி அண்டமிருந்தாலும் ஆளுவது ஒரே இறை.ஒன்றாய் இருக்கும் இறையே. அழுக்காய் அகந்தையாய் யாம் ,பெருவெளியாய் பேரமைதியாய் இறை, அகந்தையை இறையில் கரைக்க (கர்மாவால் பெற்ற அனுபவத்தை, ஒன்றிற்கும் ஆகாத கற்றறிந்த குப்பையை கரைக்க),ஒளியாய் அலையாய் இறையாய் மிளிர்கிறது மனமென்னும் மாயோனின் இந்த பொய்க்களம் .இறை அமர்ந்தலால் இதமான அமைதி அலையாய் சூழ்கிறது ,மாசற்ற ஒளியே விரிகிறது ,விரிந்து விரிந்து எங்கெங்கும் வெளியில் கரைகிறது. இலவம் பஞ்சுபோல மனம் எடையற்று போகிறது .யாவற்றையும் ஈர்த்து அரவணைக்கும் நாயகன் இருப்பால் சர்வ வல்லமையும் பெற்றது போல யாவற்றையும் ஈர்க்கிறது .யாவற்றுள்ளும் சூழ்ந்திருக்கும் உணர்வும் பெறுகிறது .இறைக்கு, பேரண்டநாயகனுக்கு என்ன தேவை இங்கே ?! பணமா... ?பாசமா...? பந்தமா ...? எதுவும்இல்லையே எல்லாமே இறையே.ஒன்றுமில்லா ஒன்றிலிருந்து உருவானயாவும் ஒன்றுமில்