சித்தனின் ஆசியில் ஒரு துளி ..!!!
கருநீல வண்ணனோ காரிருள் கண்ணனோ பெருஒளி பெருக்கிடும் பேரண்ட நாயகனோ கரும்கும்மிருட்டு சூழ்ந்தீர்த் தணைக்கும் பெருவெளி பிரம்மாண்ட நாயகனே ..!! என்றும் நின் புகழ் ஓங்குக ! வேதமோ வேதத்தின் சாரமோ யாமறியோம் நாதமோ நாதத்தின் மூலமோ யாமறியோம் பாதமோ பனிமலர் சூழ்ந்திடும் மேரோ யாமறியோம் அன்பெனும் தேகத்தில் கசிந்த தெள்ளியநீரே! எம் பெம்மானே!! என்றும் நின் புகழ் ஓங்குக ! அலையாய் ஆதியாய் ஜோதியாய் வெளியாய் கலையாய் காருண்ய வேதமாய் என்றும் நிலையாய் பெரும் அருள்ஒளிநிறைந்த பால்வெளி அலையாய் இருக்கும் பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக ! மெல்லிய அலையினும் மெல்லியது நின் திருவருள் வல்லிய அலையினும் வல்லியது நின்பேராற்றல் வல்லிய ஆணவம் நீக்க சட்டென நின்திருவருள் மெல்லிய தாண்டவமாடிடும் பெம்மானே !! என்றும் நின் புகழ் ஓங்குக! சித்தனின் அருள் பெறுவதெல்லாம் மிக சாதாரண விஷயம்இல்லை.சித்தர்களின் மார்க்கமே மிக கடினமானது தானே.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது.மீன் வடிவில் இருக்கும் மச்சமுனி சித்தரை பார்க்க செல்லவேண்டும் என்றால் ,திருப்பரங்குன்ற மலை மீது கிட்டத்தட்ட்ட 6