அதிர்வு அலைகள்
வெறும் வெளி இது எல்லாவற்றுள்ளும் இருக்கிறது.இது இல்லாத இடமே இல்லை.இதனுள் கோடான கோடி இரகசியங்கள் புதைந்துகிடக்கிறது.எங்கெங்கும் விரிந்தும் பரந்தும் ,அடர்ந்தும் ஆழ்ந்தும் கிடக்கிறது இந்த வெறும் வெளி எனும் வெட்டவெளி.ஆழ்ந்து நோக்கி உணர்ந்தவர்க்கே இது ஒரு அன்பின் பெட்டகமாய் மாறி அன்பால் மிளிர்கிறது.அன்பின் ஆற்றலை டன் கணக்கில் சேமித்து வைத்திருக்கிறது,இந்த ஒன்றுமில்லா ஒன்றில் ,வெற்றிடமாகிய வெட்டவெளியில் இருக்கும் தன்மையை,இறைத்தன்மையை உணர உணர உடல் உயிர் மனம் என யாவையும் ஒன்றுபடுத்தி ஒரு பிடிப்பினை ஏற்படுத்தி ,உயிரின் அடர்த்தியை அதிகபடுத்தி எல்லையில்லா பேரின்பத்தில் ஆழ்த்துகிறது. எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் விரயத்தை நிறுத்தி,பிறகு முன்னிலும் வலுபெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை நிரப்பிக்கொள்கிறது.மனதின் மூலம் என்ன என்றால் உயிர் ,அதன் மூலம் என்ன என்றால் இறை , என்று ஒரு வரியில் எளிதாக சொல்லிவிடலாம்.ஆனால் இதை உணர்தல் என்பதில் தான் ஒருவரின் திறமையே