மெல்லிய அலைகளை தேடி ...II
ஆதி அநாதி வெட்டவெளி விரிந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம் ,விருப்பு வெறுப்பு ,கோபம் ,பாரபட்சம் என ஏதுமின்றி ,எந்த சலனமும் இன்றி ,நிசப்தமாக ,சோ ....ஹம் ...என ஒரு வித சூட்சும ஒலியில் எங்கும் எங்கெங்கும் வியாபித்து பரந்து விரிந்துகொண்டேசெல்லும் கேட்பாரட்ற்ற அநாதியின் ஆதி அந்தமில்லா அலைகள்.இந்த அதி சூட்சும அலைகளை ஒரே ஒரு முறை ,ஒரே ஒரு துளி மனதால் பருக ,மனதால் உள்வாங்க ,ஆழ்ந்த அன்பெனும் தன்மை நிறைந்த அலைகள் அது தாமாகவே ஈர்க்கப்பட்டு ,பேரானந்தம் தந்து ,மித மெல்லிய ஊடுருவிக்கொண்டேயிருக்கும் அலைகள் வழியே எங்கோ இழுத்துச்சென்று ,சொல்ல இயலா நிலைக்கு அழைத்துசென்று ,பேரமைதியில் மிதக்கவைக்கிறது. மெல்லிய அலை பிரபஞ்சமெங்கும் பரவும் அலை ,ஆயிரம் ஆயிரம் கோடி கோடி ஜீவராசிகளையும் அரவணைத்து கவர்ந்து,உடல்,மனம் ,உயிர் என யாவற்றையும் ஊடறுவிசென்றுகொண்டேயிருக்கும் புரிய இயலா விந்தை புரியும் அலை.மௌனமாய் ஆழ்ந்து கண்மூடி இந்த மெல்லிய அலைகளோடு நாம் புரியும் பயணம் .....சொல்ல இயலா சுகம் தரும் பேரானந்தம்... மனம் என்பது இறைவன் போல என்றும் பேரானந்தம் கருணை நிறைந்து இருந்தால் அன்பு அலைகள் வழிந்து ஓடுகிறது.அதன் மதிப