ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை
என்றோ பூத்தவள் யாம் என்றும் புத்தம் புதிதாய் அன்று பூத்த மலர்போல் நறுமணம் என்றும் குறையாது , எம் பிரபஞ்ச உயிர்களை ,எமது கருணை கண்களால் ஆடாது அசையாது என்றும் புன்னகை தவழும் முகத்துடன் வாரிஅன்பால் அனைத்துக்கொண்டு , எவர் வரினும் அவர் எம் மக்களே,ஜடமும் ஜந்துக்களும் யாம் ஈன்ற எமது அன்புள்ளங்களே, அவை என்றும் எமது அருளாட்சிபுலத்திலிருந்து இம்மி கூட பிசகாது , என தம் கருணை கண்களால் ஆசிவழங்கி ,அழகிற்கே அழகு சேர்க்கும் கருணைத்தாயவள் அருள்ஆட்சிசெய்யும் இடமே இந்த மதுரையம்பதி. இன்று நாம் கண்டுவியக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் மண்டபவங்கள் எல்லாம் பல் வேறு மன்னர்களால் தோராயமாக அறுபத்திநான்கு மன்னர்களால் ,பல் வேறு காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கப்பட்டு ,தற்பொழுது மிகப்பிரம்மாண்டமாக உலக ஆன்மீக அன்பர்கள் யாவரையும் ஈர்த்துக்கொண்டேஇருக்கிறது.ஒவ்வொரு அழகிய சிற்பங்களும் ,எழில்மிகு உயர்ந்து அழகிய வேலைப்பாடுடன் நிமிர்ந்து நிற்கும் தூண்களும் இன்று நாம் காணும் தலைமுறைவரை நிமிர்ந்து நிற்கும் தரத்திற்கு உழைத்தோர் ஆயிரம் ஆயிரம் அன்புஉள்ளங்கள் .அவர்களின் கடும் உழைப்பு அதை உருவாக்