இறை தேடும் பயணத்தில் !!! ...(பகுதி 2)
எமது ஆன்மீக ஆரம்ப காலகட்டம் ,மகான்களையும் ,சித்தர்களையும் அவர் தம் ஜீவசமாதிகளையும் தேடித்தேடி அலைந்த காலம் அது.பொருள் இல்லாத பொழுது அருள் தேடி அலைந்த காலம் .அவர் ஒரு பிரசித்தி பெற்ற மகான்,அன்பும் கருணையும் நிறைந்தவர் ,எம்மை போன்ற பல உள்ளங்களின் நெஞ்சம் கவர்ந்தவர் , நேரில் பார்த்து அவர் அருளாசி பெறவேண்டும் என்று விரும்பி நெடுந்தூரபயணம் செய்தோம் அன்று .நேரில் சென்று அருகில் பார்த்தபோது எந்த ஒரு அனுபவமும் எமக்கு அகத்தியம் blog ஏற்படவில்லை .மகான் எப்பொழுது தம்மை கூப்பிடுவார் என்ற ஏக்கத்தோட இருக்கும் ,மக்கள் கூட்டம் அவர் முன்னே எப்பொழுதும் காத்துக்கிடந்தார்கள் . எம்மையும் அழைத்தால் யாம் பெரும் பாக்கியம் செய்தவனாவேன் ஆனால் யாமோ சிறு தூசி .எப்படி எம்மை அழைப்பார் ? எனவே யாமே சென்று வணங்கி விடைபெற வேண்டியது தான் என்று எண்ணி மகான் அருகே வணங்கி சென்றோம்.ஒளி பொருந்திய கண்கள் ,எல்லாம் உணர்ந்த ஞானியாய் இருந்தும் தம்மை என்றும் ஒரு பிச்சைக்காரன் என்றே சொல்லிக்கொண்டிருந்தார் .இறை தன்மை நிறைய பெற்றவர் .போற்றுதலுக்குரியவர