Posts

Showing posts from March, 2018

கருணா ஸாகரம் - ஸ்ரீ லலிதாம்பிகை

Image
வில்லெனும் புருவமும்  வேல் விழி கண்களும் சொல்லெனும் அமுதமும்  சுடர்ஒளி பார்வையும் அன்பெனும் ஞானமும்   அட்டமா சித்தியும் தன்னுள்ளே கொண்ட  தாயவள் பொற்பாதம்பணிய மின்னிடும் தேகம்  மிரன்டோடும் வினையாவும் உன்னுள்ளே கண்களும்    உருகும் விழிநீர்கொண்டு மெய்யுள்ளே அகந்தை  மெதுவாக சாகும் பாரீர் பொய்யில்லை உண்மை   பொற்பாதம் பணிந்துபாரீர் ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள்  எப்படி   இருப்பாள் ,அவளை எவ்வாறு தியானிக்கவேண்டும் என்பதை தத்தாத்ரேயர், ஆதிசங்கரர் போன்ற மகான்கள், தம் ஞானத்தால்  அறிந்து,வியந்து ,அதை யாவரும்  உணரும் வண்ணம், அவர் தம் அருளிய வார்த்தைகளால் மிளிரும் ஸ்லோகமே அருணாம் கருணாதரங்கிதாஷீம்  என தொடங்கும் ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்லோகத்தில் வரும் தியான ஸ்லோகம்.இந்த ஸ்லோகம் நிறைய மகான்கள் பெற்ற ஞானத்தை அள்ளிவீசுகிறது.ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள்  பாதம் போற்றிட,அவள் போட்ட பிச்சையால்,   யாமே எம்முள்ளே அழுது புரண்டு ,விம்மி ததும்பி ,  தாயவள் அருள் கருணை அலைகளை தேடி தேடி அலைந்து கொண்டிருக்கும் பயணத்தில...