அப்பன் வேங்கடேச பெருமாள் கோவில் - திருமுக்கூடல்
உள்ளம் இறையின் உறைவிடம் . உள்ளம் எனும் அகம் எப்பொழுதும் தூய்மையுடன் வைத்திருத்தல் என்பது மிக அவசியமாகிறது.உள்ளம், அகம், நெஞ்சம் எல்லாம் ஒன்றே .எல்லாம் ஒன்றை மட்டுமே வைத்திருக்க தகுதிபெற்றிருக்கிறது.இறை எனும் ஆற்றல் மட்டுமே அகத்தினை ,உள்ளத்தினை உயர்வுறசெய்கிறது. இறை எனும் ஜோதி, இறை எனும் உயிர் ,ஜோதியாய் ,உயிராய், உள்ளே மிளிர்கிறது.உடம்பும் யாம் இல்லை உயிரும் யாம் இல்லை மனமும் யாம் இல்லை ,உண்ட உணவினை செரிக்கும் வேலையும் யாம் செய்யவில்லை,கோடிக்கணக்கான செல்களை இயக்கி கண்களை இயக்கி எதையும் பார்க்கவைக்கும் வேலையையும் யாம் செய்யவில்லை,செவியை இயக்கி கேட்கவைக்கும் வேலையும் யாம் செய்யவில்லை..இவை யாவும் யார் எம்முள் செய்யவைக்கிறார்கள்..யார் அந்த அற்புத சக்தியின் மூலகாரணம் ..? என என்னும் போதே இறை சூழ்கிறது. எதுவுமே யாம் இல்லை ,எம்மால் எதுவும் ஆனதில்லை இனியும் ஆகபோவதில்லை.எம்முள்ளே இயங்கும் கோடான கோடி செல்களை உருவாக்கியும் ,பஞ்சபூத ஆற்றலை அவைகளுக்கு வழங்கியும் ,காத்தும் அரவணைத்தும் இயக்கிகொண்டிருக்கும் ஒரு அற்புத பேராற்றலின் ஒரு அங்கமே யாம்.இப்படி ஒரு நிலைக்கு,யாம் எனும் அகந்தை ஒழிந